> என் ராஜபாட்டை : tamil cinima

.....

.
Showing posts with label tamil cinima. Show all posts
Showing posts with label tamil cinima. Show all posts

Monday, October 7, 2013

ஆரம்பம்




இப்போ நாம பதிவில் பார்க்க போவது நம்ம தல நடித்து திபாவளி அன்று   வெளிவர இருக்கும் ஆரம்பம் படம் பற்றிய செய்திகள் அல்ல .(இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பா !!) . நமது ராஜபாட்டை வலைத்தளம் 500 பின்தொடர்பவர்களை நெருங்குகிறது (நல்ல எழுதுற ஆளுங்களை யாரும் கண்டுகிறது இல்லை . உன்னை போல வென்னையதான் தொடர்கிறார்கள் என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கவில்லை ). அத்துடன் 6,00,000 ஹிட்ஸ் தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது .

இந்த சந்தோஷமான நேரத்தில் இன்னொரு சந்தோஷமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் .ராஜபாட்டை மூலம் நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள் . பல ஊருகளில் ,முகம் தெரியாதவர்கள் கூட நண்பர்களாக கிடைத்ததில் மிக்க மகிஷ்சி . ஆனால் அடுத்த படியாக என்ன செய்யலாம் என்று ஒன்றும் தோன்றவில்லை . இந்நிலையில் நண்பர் அப்துல் பாசித் ஆங்கில வலைத்தளம் ஆரம்பியுங்கள் விளம்பரம் மூலம் கொஞ்சம் பணம் கிடைக்க  உண்டு என்றார் .


தமிழே நமக்கு தத்துகுத்து , இதுல இங்கிலீஷ் வேறயா என்று தோன்றியது . இங்கிலீஷ் மீடியத்தில் வேலைபார்ப்பதால் இங்கிலீஷ் "மீடியமாகதான் " வரும் . இருந்தாலும் எதோ ஒரு தைரியத்தில் (உங்களை நம்பி ) ஆரம்பித்துவிட்டேன் .(அப்பாடி தலைப்பு வந்துட்டு ).

எனவே நல்ல உள்ளங்கள் , நண்பன் நல்ல இருக்கணும் என நினைப்பவர்கள் (எப்பூடி !!!) கண்டிப்பாக (தயவு செய்து ) உங்கள் ஆதரவை தரவும் . இந்த தளத்தில் இனைததுபோல அதிலும் இணையவும் .

உங்கள் ஆதரவால் கொஞ்சம் நல்ல பதிவுகள் போட முயற்சிக்கிறேன் .(அப்பவும் முயர்ச்சிதானா ???). ஆட்சென்ஸ் கிடைத்ததும் வரும் விளம்பரங்களை கண்டிப்பாக நீங்கள் கிளிக் செய்வீர்கள் என எனக்கு தெரியும் . ஏனென்றால் பதிவுலகில் நல்லவர்களே அதிகம் .(யாருப்பா அது ஐஸ் ...ஐஸ் ..ன்னு கத்துறது .)




அந்த தளத்தின் லிங்க் :






தல ரசிகர்கள் மன்னிச்சு :



Tuesday, October 9, 2012

அஜித் , சிம்பு இணையும் தர்மத்தின் தலைவன் ரீ - மேக்




தமிழ் சினிமாவில் சில நடிகர்களை மட்டும் தான் பிற நடிகர்கள் தங்கள் படங்களில் அவர்களின் ரசிகர்கள் என சொல்லி கொண்டாடுவார்கள் . அவர்களில் முதன்மையானவர் ரஜினி . அடுத்த இடத்தை பிடிப்பவர் நமது தா அஜித் தான் . பல படங்களில் பல நடிகர்கள் அஜித் ரசிகராக நடித்துள்ளனர் , இதில் பலர் நிஜமாகவே அவர் ரசிகர்கள் கூட . இப்படிபட்ட நடிகர்களில் முக்கியமானவர் , முதன்மையானவர் சிம்பு . இவர் அஜித்தின் ரசிகர் என்பதை விட வெறியர் என சொல்லலாம் . நண்பன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை அஜித் ரசிகர்களுக்காக வேண்டாம் என உதறிதள்ளியவர் .








இவர் அஜித்துடன் இணைந்து ஒரு படம் நடிக்க போகிறார் என்பதுதான் இப்போதைய ஹாட் நியூஸ் . அஜித் தற்பொழுது விஷ்ணு வர்த்தனுடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார் . அது முடிந்த உடன் இந்த படத்தில் நடிக்கலாம் என தெரிகிறது .

ஏற்கனவே ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீ மேக் இல் அஜித் நடித்து அது பெறும் வெற்றி பெற்றதால் மீண்டும் ஒரு ரஜினி படத்தை ரீ மேக்  பண்ணலாம் என சிம்பு நினைப்பதாக தகவல் . இதனால் ரஜினி பிரபு இணைந்து நடித்து பெறும் வெற்றி பெற்ற தர்மத்தின் தலைவன் படத்தை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளதாக கேள்வி.







சிம்பு கூட தனது டுவிட்டரில் நாங்கள் இணைந்து நடிப்போம் என சொல்லியுள்ளார் . இப்படத்தை சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்க உள்ளார் என புதிய தலைமுறை செய்தி சேனல சொல்லியுள்ளது .
இன்னும் சில நாட்களில் முழு விவரம் வரும் என எதிர்பார்க்கிறோம் .





டிஸ்கி : பி . வாசு இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க அஜித்துடன் பேச்சு வார்த்தை நடப்பதாக ஆனந்த விகடன் செய்தி வெளியிட்டு உள்ளது .


 இதையும் படிக்கலாமே :


இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?



Wednesday, August 15, 2012

TOP 10


கடந்த மாதத்தில் அதிகம் வாசிக்க பட்ட பதிவுகள் உங்கள் பார்வைக்கு ..
இவை அனைத்தும் மே 7 முதல் ஜூன் 5 வரை வாங்கிய ஹிட்ஸ் அடிப்படையில் தொகுக்கபட்டது .












 டிஸ்கி : அப்பாடி ஒரு பதிவு தேத்தியாசு ...

Wednesday, May 23, 2012

இலவசமாக தமிழ் படங்கள் வேண்டுமா ?


இன்று டிக்கெட் விற்கின்ற விலையில் திரையரங்கம் சென்று படம் பார்ப்பது என்பது இயலாத காரியம் . இப்போதெல்லாம் பலர் வீட்டில் கணினியும் , இனைய வசதியும் உள்ளது .( இல்லையனில் வேலைபார்க்கும் இடத்தில் இருக்கும் . அதுவும் நம்ம வீடு போலதானே ..) . 

எந்த படம் ரீலிஸ் ஆனாலும் அடுத்தநாளே இணையத்தில் வந்துவிடுகின்றது . நாம் கஷ்டப்பட்டு , தியட்டர் போய் படம்பார்த்துவிட்டு வந்தால் நண்பர்கள் இணையத்தில் தரவிறக்கம் செய்து எளிதாக பார்த்துவிடுகின்றனர் . நாமும் பார்க்கணும் , தரவிறக்கம் செய்யணும் என ஆசைபடும் நன்பார்களுக்காக இந்த பதிவு . 

இப்படி செய்வது தவறுதான் இருந்தாலும் ஒரு G.K  


     
    இங்கு அனைத்து தமிழ் படங்களும் நல்ல தரத்துடன் கிடைக்கும் .
   
    தரவிறக்கம் செய்ய : Click Here


        வலைதளத்தின் பெயரே ஒரு வெப் சைட் தான் . இங்கு படங்கள் மட்டும் இன்றி தொலைகாட்சி நிகஷ்சிகளும் கிடைக்கும் .

    தரவிறக்கம் செய்ய : Click Here 



      இங்கு அனைத்து தமிழ் மறம் டப்பின்க் படங்களும் கிடைக்கும் . அதுபோல தொலைகாட்சி தொடர்களும் கிடைக்கும் . ஆண் லைனில் பார்க்கும் வசதியும் உண்டு .

    தரவிறக்கம் செய்ய : Click Here 


       பெயரை பார்த்து ஏமாறாதிர்கள் . இங்கு அனைத்து விதமான படம் மறம் மென்பொருள்கள் கிடைக்கும் லிங்க் பற்றிய தூக்கு உள்ளது .

    தரவிறக்கம் செய்ய : Click Here 



     அனைத்து புதிய படங்களும் கிடைக்கும் .

    தரவிறக்கம் செய்ய : Click Here 


டிஸ்கி : காசு குடுத்து படம் பார்ப்பதுதான் நல்ல புள்ளைக்கு அழகு .                   ( நாங்கலாம் நல்ல புள்ளைன்னு எவன் சொன்னான் ?)

இதையும்  படிக்கலாமே :


மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

யார் தெய்வம் ?


சீரியசான பிரச்சனை ..

 

 

Saturday, March 24, 2012

ரஜினியை முந்தும் சூர்யா


சூர்யா, காஜல் அகர்வால் நடித்து வரும் படம் 'மாற்றான்'. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தினை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.

முதன் முறையாக 'மாற்றான்' படத்திற்கு தொடர்ச்சியாக 8 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி, தீவிரமாக உழைத்து வருகிறார் சூர்யா.

'மாற்றான்' படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தையும் சூர்யா - காஜல் அகர்வாலை வைத்து ரஷ்யாவில் படமாக்கி இருக்கிறார்கள். கதைப்படி, காஜல் ரஷ்ய மொழியில் பேச வேண்டிய காட்சிகள் இருந்ததால்,  ரஷ்ய மொழி வார்த்தைகள் பலவற்றை கற்றாராம் காஜல்.

இந்திய திரையுலகில் முதன் முறையாக இப்படத்திற்கு PERFORMANCE CAPTURE TECHNOLOGY மூலம் சூர்யாவின் முகபாவனைகளையும் மட்டும் பதிவு செய்திருக்கிறார்கள்.

'எந்திரன்', ' 7ம் அறிவு ' போன்ற பெரும் பட்ஜெட் படங்களின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் மோகன் PERFORMANCE CAPTURE TECHONOLOGY-யை பயன்படுத்தி, சூர்யாவை வைத்து 2 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்.


'கோச்சடையான்' படமும் இதே மாதிரி தான் தயாராக இருக்கிறது. கோச்சடையான் படத்திற்கு முன்பே மாற்றானில் இந்த TECHONOLOGYஐ பயன்படுத்தி இருக்கிறார்கள்.
 இந்த PERFORMANCE CAPTURE TECHONOLOGY- பற்றி மேலும் அறிய ..

Wednesday, March 7, 2012

துப்பாக்கி Vs பில்லா 2





விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜம்வால், சத்யன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்காக தற்போது ஆக்ஷன் காட்சிகளை மும்பையில் படமாக்கி வருகிறார்கள். இச்சண்டை காட்சிக்காக புதுவிதமாக நிறைய விஷயங்களை கையாண்டு வருகிறாராம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

கெளதம் மேனன், இயக்குனர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூவரின் படங்கள் என்றாலே படத்தின் எடிட்டர் ஆண்டனியாக தான் இருக்கும். ஆனால் '7ம் அறிவு' படத்தின் எடிட்டிங்கின் போது ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ஆண்டனிக்கும் இடையே சிறு பிரச்னையாம்.

ஆகையால் 'துப்பாக்கி' படத்தின் எடிட்டராக பணியாற்ற ஸ்ரீகர் பிரசாத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் முருகதாஸ்.  மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து', 'ராவணன்' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் ஸ்ரீகர் பிரசாத்.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக தேசிய விருதினை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் பில்லா 2 இசை!



அஜீத் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் பில்லா 2. சக்ரி டோல்ட்டி இயக்க, யுவன் இசையமைத்து வருகிறார்.

படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இன்னும் இப்படத்தின் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இந்நிலையில் பில்லா 2 படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான Sunir Kheterpal கூறியிருப்பது :

" இசை வெளியீடு மார்ச் மாத கடைசியில் இருக்கும். டிரெய்லர்கள் தயாராகி வருகின்றன. மார்ச் 15க்குப் பிறகு தியேட்டர்களில் டிரெய்லர்கள் வெளியிடப்படும்.

மார்ச் மாதம் முதல் படத்திற்கான விளம்பரப் பணிகளை துவக்க இருக்கிறோம்."

நன்றி : விகடன்

இதையும் படிக்கலாமே :


தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...




பிரபுதேவாவுக்கு அடுத்து யார் ? நயன்தாரா பதில்

Friday, April 22, 2011

சொத்துக்களை இழந்து வீதிக்கு வந்தார்; பழைய நடிகை காஞ்சனா - கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு வாழ் நாளை கழிப்பு


தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் காஞ்சனா. தெலுங்கு,மலையாளம்கன்னட மொழிகளிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன் போன்றோருடன் நடித்து இருக்கிறார்.
 
சிவாஜியுடன் சிவந்த மண்படத்தில் “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” என அவர் பாடி ஆடியது ரசிகர்களை ஈர்த்தது. “சாந்தி நிலையம்”, “நான் ஏன் பிறந்தேன்”, “அதே கண்கள்”, “காதலிக்க நேரமில்லை” என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வசீகர அழகால் ரசிகர்களை உற்சாகப்படுத்திய காஞ்சனாவின் இன்னொரு புற வாழ்க்கை சோகம் நிறைந்தது.
 
அவர் நடித்து சம்பாதித்த சொத்துக்களை உறவினர்கள் ஏமாற்றி பிடுங்கி விட்டனர். எல்லாவற்றையும் இழந்து வறுமைப் பிடியில் சிக்கினார். கர்நாடகாவில் ஒரு கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு வாழ் நாளை கழிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தன. கோர்ட்டு மூலம் சமீபத்தில் சில சொத்துக்களை மீட்டு திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்தார். விமான பணிப்பெண்ணாக இருந்து நடிகையாகி தற்போது ஏழ்மையில் கஷ்டப்படும் காஞ்சனாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது.
 
இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார். இவர் ராஜ்கிரண் நடித்த “பகடை” படத்தை டைரக்டு செய்தவர். “மௌனம் பேசியதே”, “காதல் கிசுகிசு”, “குண்டக்க மண்டக்க” படங்களை தயாரித்த கேசவன் இப்படத்தை தயாரிப்பார் என தெரிகிறது. காஞ்சனா வேடத்தில் நடிக்க பிரபல நடிகைகளுடன் பேசி வருகின்றனர். சோனியா அகர்வாலிடமும் பேச்சு வார்த்தை நடக்கிறது.
Thanks : kingtamil