விஜய் , சூர்யா , அஜித் முவரும் இப்போது facebook இல் அதிகம் ஒட்டப்படும் நடிகர்கள் . அவர்களை கிண்டல் செய்து பல புகைப்படங்கள் வருகின்றது . அவற்றில் சில உங்களுக்காக ... இவையனைத்தும் ஜாலிக்காக மட்டுமே , யாரும் கமெண்டில் இந்த அப்பாவியை காய்ச்சி எடுக்கவேண்டாம் .
டிஸ்கி : மூவர் ரசிகர்களையும் திருப்தி படுத்திவிட்டேன் என நினைக்கிறன் .
டிஸ்கி : இது பழைய பதிவை கொஞ்சம் பட்டி டிங்கரின்க் பார்த்தது .
இவர்களாம் போடும்போது ஒரு” உலகமகாபிரபல பதிவரகிய “ நீங்கள் ஒன்றும் போடவில்லையா என கேடி சாரி கோடிகணக்கான வாசகர்கள் கேட்டதால் இந்த பதிவு
.
பாத்திரம் கழுவுவது எப்படி ?
வெந்நீர் போட்டாலும்
, டீ போட்டாலும் , முட்டை அவிச்சாலும் கடைசியில் கண்டிப்பாக பாத்திரம் கழுவ
வேண்டும் . பேச்சுலராக இருந்தாலும் , திருமண ஆனா ஆளாக இருந்தாலும் கண்டிப்பாக
பாத்திரம் கழுவனும் (இல்லைனா சோறு கிடையாது ).
தேவையா
பொருள்கள் :
அழுக்கான
பாத்திரங்கள் , (இதுதான் ரொம்ப முக்கியம் )
விம் ,பிரில் , சபீனா
அல்லது தேங்கா நாறு
செய்முறை
:
முதலில் ஆண்களாக
இருந்தால் கைலியை மடித்துகட்டவும் .(பெண்களாக இருந்தால் என யாராது கேட்டிங்க
உம்மாச்சி கண்ணா குத்தும் )
அழுக்கு இரண்டுவகைப்படும் ஒன்னு பவர் ஸ்டார் போல , இரண்டாவது
சிவாஜி போல .அழுக்கான பாத்திரத்தை எடுக்கவும் . சில
அழுக்கு உடனே போய்விடும் அது பவர் ஸ்டார் போல . சில அழுக்கு பாத்திரத்துடன் ரொம்ப
ஒன்றிபோய்விடும் அது சிவாஜி போல .
பாத்திரத்தை அழுக்கு
போகும் வரை நன்றாக தேய்க்கவும் . உங்களுக்கு பிடிக்காத ஒருவரை அல்லது உங்கள் மனைவி
/ கணவன் முதுக்குக்கு சோப்பு போடுவதாக நினைத்து கொள்ளவும் . அப்போதுதான் ரொம்ப
வேகமாக அழுத்தி தேய்க்க முடியும் .
பாத்திரத்தை நன்றாக
கழுவிய பின் வெய்யிலில் காயவைக்கலாம் , சீனு , ஆவி , தமிழ்வாசி வீட்டுக்கு அருகில்
இருப்பவர்கள் பாத்திரத்தை உங்கள் வீட்டுக்குள்ளேயே காயவைப்பது நல்லது .
டிஸ்கி : இதை விட எளிய வழி ஒரு வேலைக்காரியை வைத்துகொள்வது
.(பாத்திரம் கழுவ மட்டும் ). அவளால் குடும்பத்தில் பிரச்சனை வந்தால் சங்கம்
பொறுப்பல்ல .
டிஸ்கி : அடுத்து தீவிரவாதி “வீடு
கூட்டுவது எப்படி ?” என்றும் அரசன் “துணி
துவைப்பது எப்படி என்றும் ?”வரலாற்று
சுவடுகள் “ ஒட்டகம் மேய்ப்பது எப்படினும் “ பதிவு போடுவார்கள் .
சமிபத்தில் எனது முகபுத்தகத்தில் (facebook ) போட்ட STATUSகளின் தொகுப்பே இந்த பதிவு . இவையனைத்து நகைசுவை என எண்ணி எழுதபட்டது . சிரிப்பு வரவில்லை என்றால் சங்கம் பொறுப்பல்ல ..
ஒரு அரசியல்வாதி பள்ளியில் பேச போனார். அங்கு கூடி இருந்த மாணவர்களிடம்
"மாணவர்களே தினமும் 2 திருகுறள் படியுங்கள். அப்படி படித்தால் வாரம் 14
குறள் படிக்கலாம், மாதம் 60 குறள் படிக்கலாம், வருடத்திற்க்கு 730 குறள்
படிக்கலாம். இப்படியே படித்தால் உங்கள் வாழ்நாளில் பல "லட்ச கணக்கான"
திருகுறள் படிக்கலாம் என முடித்தார்.
#சும்மாவே கட்டு கட்டுனு கட்பண்ணுவாங்க, இப்போ மழை, காற்று வேற கேட்கவா வேனும்??
===================================================================== எச்சில்
துப்பாதீர்கள், குப்பை போடாதீர்கள், புகை பிடிக்காதீர்கள் என பஸ்
ஸ்டாண்டில் பயணிகளுக்கு சொல்லும் முன் நடத்துனர், ஓட்டுனர்களுக்கு சொல்ல
வேண்டும் போல. . .
குறும்படங்கள் பலவகை படும் . குறைந்த நேரத்தில் சிறிய கதையை எல்லாரும் ரசிக்கும் படி எடுப்பது என்பது சவாலானது . அதிலும் காமெடி கதை என்பது ரொம்ப கஷ்டம் . ஒருவரை அழ கூட வைத்துவிடலாம் . ஆனால் மனம் விட்டு சிரிக்க வைப்பது மிகக்கடினம் . அப்படி பட்ட கடின வேலையை மிக அழகாக செய்த சில குறும்படங்கள் உங்கள் பார்வைக்கு . இவையனைத்தும் நான் ரசித்தவை உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் வழங்குகிறேன் .
1. மாமா டவுசர் கிழிச்சுடு !!!
ஒரு கவுன்சிலர் பெண்ணை ரூட் விடும் மூன்று ஐடி கம்பெனி ஆண்கள் அவர்களுடன் ஒரு மலையாளி டிரைவர் . இவரிகளில் யார் காதல் செய்தது , கவுன்சிலர் யாரை அடிபின்னினார் என நீங்களே பாருங்கள் .
2. முகபுத்தகம்
இன்றைய சினிமா நாயகம் சிவகார்த்திகேயன் நடித்த குறும்படம் . அனைவராலும் பாராட்டபட்ட , ரசிக்கபட்ட படம் இது .நீங்களும் ரசியுங்கள் .
3 . சொம்பு :
நான் மிகவும் ரசித்த படம் இது . இணையத்தில் 2,00000 ஹிட்ஸ் அடித்த இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும் பாருங்கள் .
4. ஓபன் பண்ணினா ..
சூது கவ்வும் புகழ் நடிகர் நடித்த படம் . இதுவும் இணையத்தில் சக்கைபோடு போட்டது . இதுவரை 4,00,000 ஹிட்ஸ் அடித்த குறும்படம் இது . கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒரு படம் எடுக்க கடை ரெடி செய்யும் கதை தான் இது .
கீழே நீங்கள் படிக்க போவது அனைத்தும் எனது முக நூலில் நான் பகிர்ந்தவை . அவற்றில் பல நான் சொந்தமாக யோசித்தது (ஏய் !! யாருப்பா அது சிரிக்கிறது ?? பிச்சுபுடுவேன் பிச்சு ...) . சில படித்ததில் ரசித்தது . உங்களுக்காக அந்த தொகுப்பு இதோ ..
சுட்டகதை
படம் முடிவில் இயக்குனர் படம்பார்த்த நமக்கு, பட தயாரிப்பாளருக்கு, நடித்த
நடிகர்களுக்கு என அணைவருக்கும் ஒரு அருமையான வசனம் வைத்துள்ளார். அது . . . . "வெளங்கிரும். . ."
ஒருவர்
இன்று எங்கள் கடைக்கு சாப்பாடு ஆர்டர் கொடுக்க வந்தார். 2 இட்லி, ஒரு
கரண்டி பொங்கல், ஒரு கரண்டி கேசரி, 2 போண்டா, ஒரு கப் காப்பி, 2 பூரி
இப்படி ஒரு செட் என்ன விலை வரும் என்றார். 50 ரூபாய் ஆகும் என்றோம். அவர்
இது ரொம்ப அந்நியாயம் ஒரு 25 ரூபாய் போட்டுகுங்க என்றார். கடைசியில் 45
ரூபாய்க்கு ஒத்துகொன்டார். 1000 அட்வான்ஸ் கொடுத்துவிட்டு அவர் சொன்னதுதான்
ஹைலைட். "50 பேர்க்குனா சரியா 50 பேர்சாப்பிடுவது போல செய்யாதிங்க. ஒரு 100 பேராவது சாப்பிடிவது போல செய்யுங்க"