உலகிலேயே மிக எளிமையான செயல் அட்வைஸ் செய்றது ,
மிகவும் கடினமானது அதை கேட்பது மற்றும் பின்பற்றுவது. கீழே உள்ள கதைகள் சிறியவையாக
இருந்தாலும் அதில் மிகபெரியகருத்து அடங்கயுள்ளது . அட்வைசை விரும்பாதவர்கள்
மேற்கொண்டு படிக்க வேண்டாம் .(ஆனா ஓட்டு , கமென்ட் போட்டுடனும் இல்ல , நக்ஸ் சார் கிட்ட
சொல்லி போன் பன்ன சொல்லிடுவேன் )
சின்ன விஷயங்களுக்குக்கூடப் பெரிதாய் அலட்டிக் கொள்ளும் பிரச்சினையிலிருந்து மீள மனவியல் நிபுணரை சந்திக்கச் சென்றார் ஒரு மனிதர். சிறிது நேரம் கண்களை மூடச் செய்துவிட்டு பெரிய கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் இருந
்த பழத்தைக் காண்பித்து “இது என்ன பழம்” என்றார்.
“சாத்துக்குடி” என்று பதில் வந்தது. கண்ணாடிச் சட்டத்தை அகற்றிவிட்டு “இப்போது சொல்லுங்கள்” என்றதும் “எலுமிச்சை” எனறார் . “இடையில் வைக்கப்பட்டிருக்கும் லென்ஸ்தான் உங்கள் மனம். எல்லாவற்றையும் பெரிதாக்கிக் காட்டுகிறது. பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்” என்று அறிவுரை சொன்னார் மருத்துவர்.
#########################################
“சாத்துக்குடி” என்று பதில் வந்தது. கண்ணாடிச் சட்டத்தை அகற்றிவிட்டு “இப்போது சொல்லுங்கள்” என்றதும் “எலுமிச்சை” எனறார் . “இடையில் வைக்கப்பட்டிருக்கும் லென்ஸ்தான் உங்கள் மனம். எல்லாவற்றையும் பெரிதாக்கிக் காட்டுகிறது. பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்” என்று அறிவுரை சொன்னார் மருத்துவர்.
#########################################
ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார் இளைஞர்.புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய் என்றெல்லாம்தான் சொல்லப்போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு. நேர நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார்…… “உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்” என்று.
################################################
வனங்களில் விறகு சேகரித்து வயிற்றைக் கழுவி வந்த அந்த மனிதனின் எதிரே ஒரு முனிவர் வந்தார். “இன்னும் முன்னால் போ” என்றார். போன இடத்தில் நிறைய சந்தனக் கட்டைகள் கிடைத்தன. அவற்றை விற்றதில் காசு நிறைய கிடைத்தது.
மீண்டும் அந்த முனிவர் எதிரே வந்தார். “இன்னும் முன்னால் போ” என்றார். இப்போது நிறைய சுரங்கங்கள் தட்டுப்பட்டன. அவற்றை அள்ளிச் சென்று பெரும் செல்வந்தனாக மாறினான். நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி! உங்களை முன்னேற்றப் போகிற முத்திரை வாசகம்….. “இன்னும் முன்னால் போ”என்பதுதான்!!
############################################
அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள் இணைந்தே திரியும்.
பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும். நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். இரண்டு
குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது. கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர்
கட்டிப்போடவில்லை. இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார். ஆனால் மிக வித்தியாசமாக ஒன்றைச் செய்தார்.
கண்தெரிகிற குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டியிருந்தார். மணிச்சத்தம்
கேட்டு ஊனமுற்ற குதிரை, அடுத்ததைத்
தொடரும். அந்த உரிமையாளர் செய்ததைத்தான் கடவுளும் செய்கிறார். ஒவ்வொரு
குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை மறக்காமல் செய்துள்ளார்.
டிஸ்கி : இது மெயிலில் வந்த அட்வைஸ் .
இதையும் படிக்கலாமே :
ரசித்து படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 1
இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?
Tweet |
மருத்துவர் சொன்ன நல்ல அறிவுரை...
ReplyDeleteஉரிமையாளர் செய்ததை பல பேர் உணர்வதில்லை...
அப்போ "கொஞ்சம் முன்னால போங்க "நீங்க போனால்தானே இப்படி அருமையான யோசனைகளை எமக்கும் அள்ளி வழங்கலாம் !..மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
ReplyDeleteநல்ல அட்வைஸ்கள். வாழ்க்கையில கடைப்பிடிச்சா ரொம்ப நல்லா வரலாம்.
ReplyDeleteraightu.....
ReplyDeleteneenga nadaththunga...
பதிவு சூப்பர். கமெண்ட் போட்டாச்சு. இனி நக்ஸ் போன் பண்ண மட்டாருல்ல!!! :-)))
ReplyDeleteமருத்துவர் அறிவுரை அருமை!
ReplyDeleteஆஹா ஆஹா
ReplyDeleteஅப்பாடா....நக்ஸ் போன்.... தப்பித்து விட்டேன்
குட்டிக்கதைகள் மூலம் சிறப்பான அட்வைஸ்! நல்ல பயனுள்ள பதிவு நண்பரே! நன்றி!
ReplyDeleteஅன்புள்ள ராஜா,
ReplyDeleteஉங்களின் இந்தப் பதிவை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_13.html
வருகை தருக!
நன்றி!