> என் ராஜபாட்டை : பதிவர்

.....

.
Showing posts with label பதிவர். Show all posts
Showing posts with label பதிவர். Show all posts

Thursday, September 17, 2015

"பதிவர்"களுக்காக ஒரு அருமையான திரட்டி






           பதிவர்களாகிய நாம் நமது பதிவுகள் அதிகமான நபர்களை சென்று அடைய வேண்டும் என ஆசைபடுவோம். அதற்காக நமது பதிவுகளை பல திரட்டிகளில் இணைப்போம். உதாரணமாக இன்ட்லி, தமிழ்மணம்,  தமிழ்களஞ்சியம் , கூவம், தேன்கூடு என பல உள்ளது . இந்த வரிசையில் தற்போது புதிதாக (பழைய திரட்டிதான் ஆனால் புதிய தோன்றம் மற்றும் வசதிகளுடன்) வந்துள்ளது.

திரட்டியின் பெயர் : பதிவர்

தளத்திற்கு செல்ல : CLICK HERE   

உங்கள் வலைப்பூவை இணைக்க
:

* முதலில் இங்கே கிளிக்  செய்யவும்

* அதில் உங்கள் பயனாளர் பெயர், கடவுச்சொல் , வலைமுகவரி கொடுக்கவும்.


* CREATE USER  பட்டனை கிளிக் செய்யவும்.

உங்கள் பதிவுகளை இணைக்க :

* உங்கள் கணக்கில் முதலில் நுழையவும்.

* மேலே "இணைக்க " என்று உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

* உங்கள் பதிவின் URL கொடுக்கவும்.

* பதிவின்  வகைகள் பற்றி கொடுக்கவும்( தொழில்நுட்பம், சினிமா, கவிதை ...)

* SUBMIT பட்டனை கிளிக் செய்யவும்.


நன்மைகள் :

# உங்கள் பதிவு பலரை எளிதில் சென்றடைகிறது .

# நமக்கு தெரியாத புதிய வாசகர்களை நமது தளத்துக்கு வரவழைக்க முடிகிறது.

#பல புதிய தளங்களை நாம் அறிய உதவுகிறது .

# பதிவுகளை இணைப்பது மிக எளிது .

உங்கள் தளத்துடன் திரட்டியின் இணைப்பை கொடுக்க விரும்பினால் :



Friday, February 28, 2014

பதிவர்கள் அறிமுகம்





புதியபதிவர்களை அறிமுகம் செய்வதில் முதலிடத்தில் உள்ளது வலைசரம் . நம்மையும் யாராவது அறிமுகம் செய்ய மாட்டார்களா என ஏங்கிய நாட்கள் உண்டு . பல நல்லபதிவுகள் வெளியே தெரியாமலே போய்விடுகிறது . எனவே இனி அடிகடி இது போல சில புதிய பதிவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யலாம் என எண்ணுகிறேன் .



1. நீடூர் சீசன் 


              முகமது அலி என்ற பதிவரால் எழுதபட்டு வருகிறது .இவர் இந்த வலைத்தளம் மட்டுமல்லாமல் பல தளங்கள் நடத்திவருகிறார் . மிக எளிய நடையில் எழுதுவது இவர் சிறப்பு . 

சில பதிவுகள் :

1. லேனா ஓர் ஆச்சரியம்

2. காதல் தோழி !

3. கணினியும் கன்னியும் வைரஸ்!



==========================================================================

2.  நினைத்து பார்க்கிறேன் .

            திரு வே .நடனசபாபதி என்ற பதிவரால் நடத்தபடுகிறது . ஒரு வங்கியில் வேலை பார்ப்பவர் எழுதிய பதிவுகள் என்று சொல்ல முடியாத அளவு வார்த்தை பிரயோகம் அருமையாக உள்ளது . தொடர் பதிவுகள் இவரின் சிறப்புதன்மையாகும் .

சில பதிவுகள் :

 1. மீண்டும் சந்தித்தோம்! 19

2. நினைவோட்டம் 75

3.  வாடிக்கையாளர்களும் நானும் 39


========================================================================


3. நில் ... கவனி .. செல் 

        ஆனந்தராஜ் என்பவர் எழுதும் வலைபூ இது . மிக சில பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளார் . ஆனால் அனைத்தும் அருமையான பதிவுகள் . போய் படித்து பாருங்கள் .

 சில பதிவுகள் :

1. சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது..!

2. விசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..!

==================================================
4. நாம் நண்பர்கள்  ஜானி

            சமுக அக்கறையுடன் , சமுகத்தில் நடக்கும் அவலங்களை தன பதிவில் சுட்டிகாடும் பதிவர் இவர் . மிக சில பதிவுகள் தான் எழுதியுள்ளார் . ஆனால் அனைத்தும் அருமையாக உள்ளது படித்து பாருங்கள் .

சில பதிவுகள் :

1.  யார் குற்றவாளி

2. மலை மனிதன் தசரத் மான்ஜி

3. மனித உறவுகள் மேம்பட


 
தொடரும் !!!!!!!!!!!!!!

Monday, February 20, 2012

பிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவரும் வருக.





அன்பு காணமல் போன கனவுகள் பிளாக் சகோதரி ராஜீ அவர்கள் எனக்கு ஒரு விருது தந்துள்ளார். இதை கேள்விபட்டதும் பலபதிவர்களுக்கு ஒரு சந்தேகம் , இந்த விருது இவருக்கு எதுக்கு வழங்கப்பட்டது.( எனக்கும் அதே சந்தேகம்தான்). காரணத்தை கண்டறிய மூன்று குழுக்கள் அமைக்கபட்டது.( கூடன்குளத்துக்கு அமைக்கபட்ட குழுபோல இது பொய் சொல்லாது). இவர்கள் தாங்கள் கண்டறிந்த காரணத்தை வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்த போகின்றனர்.


குழு 1 : ராஜாவின் எழுத்து நடையே இந்த விருதுக்கு காரணம் .

     இதில் எனது குரு கரண் , அகில உலக ஷகிலா ரசிகர்மன்ற தலைவர் சி.பி , அதிரடி நாயகன் மனோ பேச்சாளர்களாக உள்ளனர் .

குழு 2 : ராஜாவின் தொழில்நுட்ப அறிவே இந்த விருதுக்கு காரணம் .

இந்த அணியில் தொழில்நுட்ப காண்டாமிருகம் (எத்தனை நாளுக்குத்தான் புலினு சொல்றது?) அண்ணன் சசி , ஆனந்த விகடனில் சமிபத்திய ஓனர் ( என் விகடன்னு தானே சொன்னார் ..) தமிழ்வாசி , அமைதி புயல் பிளாக்கர்  நண்பன் அப்துல் பாசித் ஆகியோர் பேச்சாளர்களாக உள்ளனர் .

குழு 3 : ராஜாவின் நகைசுவை உணர்வே இந்த விருதுக்கு காரணம் .

இந்த அணியில் தமிழ்மணம் கொன்றான் , நகைசுவை வள்ளல் bio-data புகழ் பண்ணிகுட்டி அவர்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தின் வருங்கால துணை வேந்தர் நாய் நக்ஸ் நக்கீரன் , மண்ணின் மைந்தன் காடு சாரி வீடு சுரேஷ் ஆகியோர் பேச்சாளர்களாக உள்ளனர் .

நடுவர் : நாட்டாமை விக்கியுலகம்

நாள் : 30 2 2012

இடம் : நாயுடு ஹால் சாரி நாயகர் ஹால் மதுரை.


டிஸ்கி ; இந்த விருதை இன்னும் சிலருக்கு அளிக்க விரும்புகின்றேன் .

  1. வடகரை தாரிக் செலவில்லாமல் அனைத்து புத்தகங்களையும் தருவதால்

  1. S.ராமன் வேலூர் உழியர்களுக்காக குரல் குடுபவர் இவர்

  1. வினோ என்வழி என்னும் வலைத்தளம் முலம் கலக்கும் ரஜினி ரசிகர் .

  1. கவிதை வீதி சௌந்தர் இவர் என் இனம் ( ஆசிரியர்னு சொல்லவந்தேன்) கவிதை மன்னன்.

  1. தமிழ்த்தோட்டம் வித்தியாசமான வலைத்தளம் நடத்துகின்றார் .
  2. எனத் தி வேர்ல்ட் என்னும் தளம் முலம் பல அறிய தகவல் தரும் ஸ்டாலின் வெஸ்லி  

Wednesday, October 12, 2011

கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா



நம்து பதிவர்கள் அனைவரும் இனைந்து ஒரு கட்சி துவங்களாம் என முடிவு செய்கின்றனர். அதற்க்கான ஆலோசனை கூட்டம் சென்னை லீ மெரிடியன் ஹோட்டல் அருகே உள்ள கைஏந்தி பவனில் நடைபெறுகின்றது.

மனோ : அனைவரும் வருக !

விக்கி : ஏன் நீ கூப்பிடலனா எல்லரும் போய்டுவங்களா?

மனோ: சரி வந்ததும் பல்பு கொடுக்காதே. நாம எல்லரும் சேர்ந்து ஒரு கட்சி ஆராம்பிக்கலாம்னு இருக்கோம். அந்த கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்.

பிலாசபி பிரபாகரன் : டாஃஸ்மார்க் முன்னேற்ற கழகம்னு வைக்கலாம்.

சி.பி : பெயர் தாய்குலங்களை கவர்ந்து இழுப்பதுபோல இருக்கனும்.

மனோ : டேய் அண்ணா ! அடங்கு ..

நிரூபன் : கிளுகிளு கில்பான்ஸ் கழகம்னு வைகலாம்

ஐடியாமணி : வேண்டாம் சாமி . ஏற்கனவே எவனோ அனானியா வந்து திட்டுறான். இப்படி பேரு வச்சா, நேர்ல வந்து அடிப்பானுங்க.

ராஜா : Blogger Patry னு வைக்கலாம், சுருக்கமா B . P

கருன் : சரி.. நம்ம கட்சியாலா மக்களுக்கு B.P தான் ஏறபோகுது.

நாய்-நக்ஸ் : கட்சி சின்னம் என்ன ?

மனோ : லேப்-டாப் தான் வைக்கனும்.

விக்கி : இல்லை.. விடியோ பெட்டியதான் வைக்கனும்.

சசிகுமார் : அதெல்லாம் முடியாது. கம்பியூட்டர் தான் சின்னமா இருக்கனும்.

ரமேஷ் : டெர்ரரா மண்டை ஓடு படம் தான் இருக்கனும்.

ஆபிசர் எல்லாரையும் பார்த்துகொண்டே பெல்டை உறுவுகின்றார். அனைவரும் அமைதியாகின்றனர்.

மனோ ; சரி .. தேர்தல் வாக்குறுதியாக என்ன குடுக்களாம்?

அபிமன்யு : என்ன வேனாலும் குடுக்கலாம், எந்த அரசியல்வாதி சொன்னத நிறைவேற்றியிருக்கான்?
சி.பி : நாம ஜெயிச்சா வாரன் ஒரு கில்மா படம் ரீலிஸ் செய்யபடும்னு சொல்லலாம்.

பன்னிகுட்டி : வீட்டுக்குவீடு பிரியா பண்னிகுட்டிதரலாம்.

இம்சை அரசன் : எல்லருக்கும் அருவா தரலாம்

தமிழ்வாசி : ஆளுக்கு ஓரு Auto Cad Book freeனு சொல்லலாம்.

கோகுல் : எல்லருக்கும் நமீதா போட்டோ Free

எல்லருக்கும் டீ வந்துகுக்கு கூடவே பிஃஸ்கட்டும் வந்துருக்கு என அறிவிப்பு வர அனைவரும் பிஸியாகிட்டங்க.. அவர்கள் வந்த பின்  தொடரும்










Monday, October 10, 2011

இந்த மாத SUPER BLOGGER விருது


பதிவுலகில் அடியடுத்து வைத்த நாள் முதல் இன்று வரை தனது எழுத்துகளால் அனைவரையும் கட்டி போடும் அருமையான பதிவர் இவர் . இவரது எழுத்து நடை , நகைசுவை உணர்வு , சமுகத்தின் மேல் இவருக்கு உள்ள அக்கறை இவற்றால் இவர் தொடர்ந்து தமிழ்மணத்தில் முதலிடத்தில் இருக்கிறார் . 

தனது பதிவுகள் மட்டுமே அதிக வாக்கு பெற்று முன்னிலை பெறுவதை விரும்பாமல் , 18 வாக்குக்கு மேல் தமிழ்மணத்தில் போடவேண்டாம் என தானே விரும்பி ஓட்டை வேண்டாம் என்றது பலரின் பாராட்டை பெற்றது .

சில பதிவுகள் ஆபாசமாக இருகின்றன என குற்றாட்டுகள் இருந்தாலும் இவருக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு அதிகம் . பதிவுலகில் நண்பர்களும் அதிகம் . அப்படி பட்ட பதிவர்தான்          "   நாற்று  "  நிரூன்.

அவருக்கு இந்த விருதை அளிப்பதில் ராஜபாட்டை பெருமை அடைகிறது .