இன்றைய காலகட்டத்தில் ஆண்ட்ராய்ட் போன் பயபடுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. சாதரணமாக பேச மட்டும் பயன்பட்ட போன் இப்போது சகலவிதங்களிலும் பயன்படுகிறது. போட்டோ வீடியோ என தினமும் எடுத்து மகிழ்கிறோம்.
ஏதாவது ஒரு காரணத்தால் (வைரஸ், தவறாக அழித்தல் , உடைத்தல் ) நீங்கள் எடுத்த அறிய புகைப்படங்கள் அழிய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் அந்த புகைப்படங்களை திரும்ப பெற பல அப்ளிகேஷன்கள் நமக்கு உதவுகின்றது. அத்தகைய அப்ளிகேஷங்களில் சிறந்த சிலவற்றை இப்போது பார்ப்போம் .
1. Deleted Photo Recovery 2017
வெறும் 7 MB அளவுள்ள அப்ளிகேஷன் இது. இதன் மூலம் உங்கள் அழிந்த போட்டோகளை திரும்ப பெற முடியும். இது ரூட் செய்யாத போனில் கூட பயன்படுத்தும் வகையில் உள்ளது .
Version: 1.1 (1) for Android 2.3.2+ (Gingerbread, API 9)
தரவிறக்கம் செய்ய : download here
2. Android Cellphone Photo Video Music Recovery APK
இது I-CARE DATA RECOVERY நிறுவனத்தின் மிக சிறந்த படைப்பாகும். இதை உங்கள் போன் மற்றும் கணினி மூலம் இயக்க முடியும். அழிந்து போன அனைத்து போட்டோகளையும் இது எளிதில் மீட்டு எடுக்கும்.
தரவிறக்கம் செய்ய : download here
3. DiskDigger Photo Recovery
மிக எளிதான , நம்பிக்கையான ரெகவர் அப்ளிகேஷன் இது . மிக சிறிய நினைவகம் மட்டுமே தேவை . நீங்கள் அழித்த அனைத்து போட்டோகளையும் எடுத்துவிடும். மிகவேகமாக செயல்படுவது இதன் சிறப்பு. இதுவும் ரூட் செய்யாத போனில் கூட செயல்படும்.
தரவிறக்கம் செய்ய : download here
4. Dumpster Image & Video Restore
இதில் அனைத்துவகையான கோப்புகளையும், பாடல் , இசை, போட்டோ, வீடியோ என அனைத்தையும் மீட்டு எடுக்கலாம் என்பது தனி சிறப்பு. இதுவும் ரூட் செய்யாத போனில் செயல்படும். மிக வேகமாக செயல்படும்.
தரவிறக்கம் செய்ய : download here