கவிதைவீதி செளந்தர் மட்டும் தான் கவிதை எழுதவேண்டுமா? நடுவீதியில் நிற்க்கும் நான் எழுதமாட்டேனா?
அவரும் வாத்தியார் நானும் வாத்தியார்( நம்புங்கப்பா !)
அவரும் நல்லவர், நானும் ரொம்ப ரொம்ப நல்லவன்.(ஹி..ஹி..)
கருன் : ஆமா அவரும் ஆம்பளை நீயும் ஆம்பளை.. போடங்க்…
சரி.. சரி . உங்கள் ஆர்வம் புரியுது, இதோ என் கவிதா சாரி கவிதை.
அருகம்புல் போல வளர்ந்த என் காதலை
அவள் அப்பன் எருமை மாடுபோல்
மேய்ந்துவிட்டான்.
ஏன் மனோ மயக்கம்போட்டு விழுறார்?
காதல் என்பது ஒரு காட்டாறு- அதை
கடந்து போக நீதாண்டி என் மோட்டாரு.
சி.பி ஏன் ஒடுறிங்க ?
இரண்டெழுத்தில் ஒரு கவிதை கேட்டார்கள்
“ தாய் “ என்றான்.
என் தாயிடம் இரண்டெழுத்தில் ஒரு கவிதை கேட்டார்கள்
“ராஜா” என்றார்.
தமிழ்வாசி கயிற எடுத்துகிட்டு எங்கே போறிங்க?
டிஸ்கி ; இதை படித்துவிட்டு செளந்தர் என்னை கொலைவெறியுடன் தேடுவதாக கேள்விப்பட்டேன். நான் அமலா பால் வீட்டுல பதுங்கி இருப்பதை யாரும் சொல்லிடாதிங்க.


