> என் ராஜபாட்டை

.....

.

Sunday, July 26, 2009

நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!!

கஷ்டப்பட்டு படிச்சு டாக்டர் பட்டம் வாங்கினது எல்லாம் அந்தக் காலம். வர்றவன் போறவன்.. கிழிஞ்சது கிழியாதது... பட்டன் வச்சது வைக்காதது.. தோலான் துருத்திக்கு எல்லாம் தேடிப் பிடிச்சு டாக்டர் பட்டம் கொடுக்குறதுதான் இப்போதைய லேட்டஸ்ட் பேஷன். சாதாரண ஆளுங்களே டாக்டர் பட்டம் வாங்கறப்போ, நம்ம நடிகர்கள்.. நாளைக்கு நம்ம நாட்டை ஆளப் போற புண்ணியாத்மாக்கள்..(அந்த நெனப்புல தாண்ணே பல பேரு ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்காய்ங்க.. ) அவங்க டாக்டர் பட்டம் வாங்க வேண்டாமா? ஒரு நடிகர் எப்படி பிரபலமாகி டாக்டர் பட்டம் வாங்கலாம்னு சொல்லத்தான் இந்த இடுகை..
-->உங்க அப்பா ஒரு இயக்குனராவோ, தயாரிப்பாளராவோ இருந்தா ரொம்ப நல்லது. அப்பத்தான் உங்களோட அத்தனை படமும் தொடர்ச்சியா ஊத்தினாலும் மறுபடியும் உங்களை வச்சு படம் எடுப்பாங்க. அப்படி இயக்குனர் அப்பா இல்லாதவங்க யாராவது ஒரு இளிச்சவாயனா பார்த்து தத்து எடுத்துக்கோங்க..
-->கதை இருக்கோ இல்லையோ.. கதாநாயகிய பார்த்து செலக்ட் பண்ணுங்க. ஏன்னா கண்டிப்பா உங்களுக்காக ஓடலைன்னாலும் படம் நாயகியோட கவர்ச்சிக்காகவாவது ஓடும்.
-->படத்துல நீங்களே ஒரு பாட்டு பாடுறது ரொம்ப அவசியம். கொத்து புரோட்டா, சால்னா, கோடு, ரோடு, பூரி, பிஸ்கோத்துன்னு எல்லாம் தமிழ் இலக்கிய வார்த்தைகளா போட்டு பாடுங்க. பாட்டுக்கு நடுவுல "இந்தப் பாடலை பாடிக் கொண்டிருப்பது.." அப்படின்னு விளம்பரம் பண்ணனும். (விளம்பரம் முக்கியம் அமைச்சரே..)
-->நீங்க தொடர்ந்து முயற்சி பண்ணினா, கண்டிப்பா நடுவில யாராவது ஒரு நல்ல இயக்குனர் கிட்ட தெரியாத்தனமா சிக்கி, ஏதாவது ஒரு நல்ல படத்துல நடிச்சுருவீங்க. இனிமேல்தான் ரொம்ப முக்கியமான நேரம். வளர்ந்து வர இன்னொரு நடிகன் எவனையாவது செலக்ட் பண்ணி இவன்தாண்டா எனக்கு போட்டின்னு சொல்லிறனும். உங்களோட எல்லாப் படத்துலயும் அவனத் திட்டி வசனமும், பாட்டும் இருக்கணும்.
-->உங்களுக்குன்னு ஒரு ரசிகர் க்ரூப்ப செட் பண்ணிக்கோங்க. உங்களோட படம் பாடாவதியா இருந்தாலும் ரிலீஸ் ஆகுற தியேட்டர்ல எல்லாம் போய் பாட்டுக்கு ஒன்ஸ்மோர் கேக்குறது, திரைய கிழிக்கிறது.. இதுதான் இவங்க வேலையே. அப்படியே உங்களோட எதிரியோட படம் வந்தா, முதல் ரோவுல உக்கார்ந்துக்கிட்டு, இது வெளங்காது.. படம் தேறாதுன்னு எல்லாம் பரப்பணும். ரசிகர்கள் அடிச்சிக்கிட்டு சாவாய்ங்க. நீங்க ஜாலியா வேடிக்கை பார்க்கலாம்.
-->வேற யாராவது ஒரு நடிகர் வளர்ந்து வர மாதிரி தெரிஞ்சா.. இருக்கவே இருக்காரு உங்க அப்பா இயக்குனரு. அவரை விட்டு வளரும் நடிகனுக்கு ஒரு படம் எடுக்க சொல்லுங்க. நீங்களும் கெஸ்ட் ரோல் பண்ணலாம். அதுக்கு அப்புறமும் அவன் சினி பீல்டுல இருக்க முடியுமா என்ன?
-->கெட்டப் மாத்துறேன்னு எல்லாம் சிரமப்பட்டு நடிக்கக் கூடாது. ஏன்னு கேட்டா மக்களுக்கு அதுதான் பிடிச்சு இருக்குன்னு சொல்லணும். அதிகபட்சம் சுண்டு விரல் பக்கத்துல ஒரு சின்ன விரல ஒட்ட வச்சுக்கோங்க. அதுக்கே மக்கள் பின்னாடி "தீ" வச்ச மாதிரி தெறிச்சு ஓடுவாய்ங்க..
-->நாம ரொம்ப நல்லவரு, அமைதி.. அப்படின்னு எல்லாம் சீன போடணும். அதனால்.. முடிஞ்ச அளவுக்கு நிருபர்கள் கூட்டுற பிரஸ் கான்பெரன்ஸ்ல கலந்துக்காதீங்க.. அப்புறம்.. சைலன்ஸ்.. பேசிக்கிட்டு இருக்கோம்ல.. இதுதான் நடக்கும்..
-->படம் சரியா ஓட மாட்டேங்குதா.. இருக்கவே இருக்கு.. அரசியல். வருவேன்.. ஆனா வர மாட்டேன்னு சொல்லிக்கிட்டே.. இளிச்சவா ரசிகர்களை ஏமாத்துங்க. உண்ணாவிரதம், நற்பணி இயக்கம்னு எதையாவது கொளுத்திப் போட்டுகிஇடே இருந்தாப் போதும். ரசிகனும் ஆன்னு வாயப் பொளந்துக்கிட்டு உங்களுக்காக தோரணம் கட்டுறது, ஆடுறது, பாடுறது எல்லாம் செய்வான்.

ஆத்தாடி ஆத்தா.. இவ்ளோ செஞ்ச பின்னாடி உங்களுக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமலா போய்டும்..? எவனாவது ஒரு கேனப்பய யுனிவர்சிடி உங்களைக் கூப்பிட்டு குடுப்பான்.. என்சாய்....
டிஸ்கி: இந்தப் இடுகை யாரையும் குறிப்பிடுவது அல்ல.. யார் மனசையும் நோகடிக்கிரதுக்காக கிடையாது.. அப்படின்னு சொன்னா என்ன நம்பவா போறீங்க..

Thanks: ponniyinselvan-mkp.blogspot.com

Tuesday, June 2, 2009

செல்போன் காது கேட்கும் திறனைப் பாதிக்குமா?

செல்போன் காது கேட்கும் திறனைப் பாதிக்குமா?
டாக்டர் ரவி ராமலிங்கம்.

காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர், சென்னை

''செல்போன் பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது. காரணம் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால், நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகளை வைத்து, செல்போனால் சில பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள்.காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களை கேட்கலாம்.. ஒரு நாளுக்கு அதிக பட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை.

அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாக கேட்கக் கூடாது. அப்படி கேட்பதால் காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.ஆனால், செல்போன் உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சாதாரணமாகவே செல்போன் வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத் தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக் கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம். அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது.

செல்போனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஆனால், தொடர்ச்சியாக அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்.தவிர, செல்போனில் இருந்து வெப்பமும் வெப்ப கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. நாம் செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால், இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்கு உள்ளே இருக்கும் மிக நுண்ணிய நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது.

அதேபோல செல்போனில் விட்டு விட்டு சிக்னல் கிடைப்பதால், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். நாளடைவில் தூரத்தில் ஹாரன் ஒலிப்பது, காற்றில் காலண்டர் அசைவது, பேனா கீழே விழுவது போன்ற சிறிய சத்தங்களைக் கூட கேட்க முடியாமல் போய்விடலாம்.செல்போனை நேரடியாக காதுக்கு அருகில் வைத்துப் பேசாமல் ஹேண்ட்ஸ் ஃப்ரீ உபயோகித்துப் பேசுவதன் மூலம் பாதிப்பை ஓரளவு தவிர்க்கலாம்.''

Monday, June 1, 2009

Just Fun........

*என் உடைந்த வளையல் துண்டுகளையும், வாடிய கூந்தல் பூக்களையும், குடித்தெறிந்த வாட்டர் பாக்கெட்டுகளையும் நீ சேமிக்கிறாய் என்று கேள்விப்பட்டேன். இத்தனை நாட்களாக என்னிடம் மறைத்துவிட்டாயே, என்னுடன் படித்துக்கொண்டே, பார்ட் டைமாகக் குப்பை பொறுக்கும் தொழில் செய்வதை!

************************************************************ *

நண்பா... நீ புத்திசாலிடா! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சுட்டியேடா... ஊர்ல கடன்காரங்க தொல்லையில இருந்து தப்பிச்ச மாதிரியும் ஆச்சு, உன் காதலிக்கு வாழ்வு கொடுத்த மாதிரியும் ஆச்சு! நீ நாளைக்கு அவகூட ஓடப்போறதைச் சொல்றேண்டா... ************************************************************ *

கஜினி முகமது பதினேழு முறை படையெடுத்ததால இந்தியாவே காலியாயிடுச்சு. நீ நேத்து நாயர் கடையில பதினெட்டு முறை வடை எடுத்ததால, என்னோட பர்ஸே காலியாயிடுச்சுடா! ************************************************************ *

அறிவுக்கொழுந்தே... உனக்கெல்லாம் எவண்டா செல்போன் வாங்கிக் கொடுத்தான்? உடனடியாக மீண்டும் சார்ஜ் செய்யவும்Õனு போன்ல வாய்ஸ் கேட்டதும், ரீசார்ஜ் கூப்பன் வாங்காம... சார்ஜரை எடுக்கிறியேடா?! ************************************************************

‘‘ஒடி வர்ற... நிக்கற...

நெளியிற... புன்னகை பூக்கற...

இத்தனை நவரசம் காட்றியேடா சிங்கிள் டீக்கு! ************************************************************* *

புது செல்லு...

புது நம்பரு...

கொழப்பறே சந்துரு!

அடிக்கடி நம்பர் மாத்தி, இம்சை கொடுக்கறதை நிறுத்துடா! ************************************************************ *

பங்காளி... நீ உன் மனைவியை 'நின்னா குத்துவிளக்கு... உட்கார்ந்தா நெய்விளக்கு... அசைஞ்சா அகல்விளக்கு... அண்ணாந்தா காமாட்சி விளக்கு... பார்த்தா விடிவிளக்கு'னு புகழறியாமே... ஏன் சொல்ல மாட்டே? உன் மாமனார், நீ கேட்டதெல்லாம் கொடுக்கிற அலாவுதீன் விளக்காச்சே! ************************************************************

‘‘டியர்,

என்னை உன்னுடைய உதடுகளை முத்தமிட விடு...

உன்னுடைய பற்களைத் தொட விடு...

உன்னுடைய நாக்கைச் சுவைக்க விடு...

நான்தாண்டா உன் நண்பன் டூத் பேஸ்ட்!” ************************************************************

"காலைல பசியே எடுக்கலைடா செல்லம்... உன்னோட நெனைப்பு தான்டா... மத்தியான சாப்பாடு சுத்தமா இறங்கலைப்பா..! உன் நெனைப்புதான்... ராத்திரி முழுக்கத் தூக்கமே வரலைப்பா..! காரணம் உன் நெனைப்பில்லே... அகோரப்பசி." *************************************************************************************"மாமூல்னா கப்பம் மதியவெயிலோ வெப்பம் மகாபலிபுரத்திலே சிற்பம் ஆத்துலே மிதக்கும் தெப்பம் இளமைக்கு காயகல்பம் எலேய்... நீ அக்மார்க் அல்பம்!" *************************************************************************************‘‘உன்கிட்டே ஒரே ஒரு வேண்டுகோள்... நீ என்னோட பழகுற மாதிரியே என் எதிரி பிரகாஷ்கிட்டேயும் பழகணும்... அவனைப் பழிவாங்க வேறே வழியே தெரியலைடா, அறுவை மன்னா!" *************************************************************************************"அளவு குறைஞ்சா ரேஷன் ஆடை குறைஞ்சா பேஷன் எதை எதையோ குறைச்சு எசகுபிசகாய் உன்னையும் படைச்சானே... ஈசன்" *************************************************************************************"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே. பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே!"