> என் ராஜபாட்டை : அண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை?

.....

.

Monday, December 5, 2011

அண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை?
முன்பு காந்தி சிறைக்கு சென்று வந்தால் அல்லது நாட்டுக்காக போராடி, நாட்டு மக்களூக்காக போராடி அல்லது ஒரு கெட்ட அரசாங்கத்தை எதிர்த்து அல்லது மக்கள் உரிமைக்காக போரடி சிறை சென்று திரும்புபவர்களை தடபுடலாக , ஆடம்பரமாக வரவேற்பார்கள்.

நம்ம கனிமொழி அப்படி என்ன நல்ல விஷயம் செய்து சிறை சென்றார் என தெரியவில்லை. தமிழ்னாட்டுக்கு காவிரி நீர் தரசொல்லி போராடி அல்லது அன்னிய முதலிட்டை எதிர்த்து போராடி அல்லது குறைந்த பட்சம் பஸ் கட்டணத்தை குறைக்க சொல்லி போராடியாது சிறை சென்றாரா? 200 கோடி ஊழல் செய்த குற்றதிர்க்காக பல முறை ஜாமீன் மறுக்கப்பட்டு , அதிகாரத்தை பயன்படுத்தி அல்லது கெஞ்சி கூத்தாடி பெறப்பட்டது.

500 லஞ்சம் வாங்கி ஜெயிலுக்கு போனவன் வெளியவந்ததும் மற்றவர்களை பார்க்க வெட்கபடுகிறான், அவன் குடும்பத்தினர் மற்றவர்களின் சுக, துக்கங்களில் பங்கேற்க்க வெட்க படுகின்றனர். ஆனால் இவருக்கு தடபுடல் வரவேற்ப்பு( இதற்க்கு ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல). அவருக்கும் வெட்கம் இல்லை, தன் பணத்தை திருடிவிட்டு ஜாமீனில் வந்திருக்கும் ஒருவரை காத்திருந்து வரவேற்ற கட்சிகாரர்களுக்கும்.. விடுங்க என்னத்த சொல்ல..


டொகோமோ(Docomo) பயன் படுத்துபவர்களுக்கு..

உங்கள் மொபைலில் இருந்து TICKET என டைப் செய்து 52121 என்ற என்னிற்க்கு SMS செய்யுங்கள்.( SMS Free தான்). நீங்கள் கார் அல்லது பைக் , 50, 100 என 5000 ருபாய் வரை TALK TIME வெல்ல வாய்ப்பு உண்டு. SMS அனுப்பும் அனைவர்கும் 150 ரூபாய் TOP UP செய்தால் 160 ரூபாய் ஏறும். உங்களுக்கு அதிஷ்டம் இருந்தால் கார் விழலாம். எனக்கு 50 ருபாய் TALK TIME பரிசாக விழுந்தது.


பொது அறிவு :

லூயிஸ் பிரவுன்-  இந்த பெயர் மருத்துவ துறையின் பெருமை. காரணம் உலகின் முதல் சோதனை குழாய் குழந்தையின் பெயர் இது.  1978 ஜீலை 25 ல் இங்கிலாந்தில் லெஸ்லி ஜான் பிரவுன் தம்பதியினர்க்கு பிறந்தார்.
26 comments:

 1. //அண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை?//

  கிலோ என்ன விலை என்பதை விட அப்படி ஒன்று இருக்கிறதா என்று கேட்டாலும் கேட்பார்கள்

  இதையேல்லாம் பார்த்தா இன்னைக்கு யாரும் அரசியல் பன்ன முடியாது ராசா

  ReplyDelete
 2. அதிகாரத்துல இருந்தா என்ன வேணா பண்ணலாங்கோ..... இப்போ ஜெயிலுக்கு போனதையே வெச்சு அவங்களுக்கு இன்னும் என்னென்ன கெடைக்க போவுது பாருங்க.....

  ReplyDelete
 3. அண்ணே இந்த வரவேற்ப்பு கொடுத்தது யாரு தி மு க - அப்படின்னா யாரு உங்களுக்கே தெரியும் - காட்டிகொடுக்காமல் காப்பாற்றி உள்ளாரே 20% 60% த்தை அதான் அதேதான்

  ReplyDelete
 4. அண்ணே என்ன அப்படி சொல்லிட்டீங்க, பாருங்க யக்கா போற இடத்தை, இதை வைத்தே ஒரு அமைச்சர் பதிவிக்கு அடி போடுவாங்க.

  ReplyDelete
 5. அவிங்க...பருத்திவீரன் பரம்பரை...அக்காவோட லட்சியமே..இண்டர்நேசனல் ஜெயில் வரைக்கும் போகனும்கறது...இதெல்லாம் ஜூ..ஜூபி

  ReplyDelete
 6. இவிங்களை போவாண்டாமோ சிறையில் போட்டாலும் திருந்த மாட்டார்கள் என்னத்தை சொல்ல மானம் ரோஷம் இருந்தாதானே..?

  ReplyDelete
 7. @MANO நாஞ்சில் மனோ
  போவாண்டாமோ சிறை close ஆகிடும்

  ReplyDelete
 8. மவுண்ட் ரோடு முழுக்க பேனர்கள். இப்படியொரு வரவேற்பு தேவையா? நீங்க எழுதினது வரிக்கு வரி சரி ராஜா சார்... சூப்பர்!

  ReplyDelete
 9. "MANO நாஞ்சில் மனோ said...
  இவிங்களை போவாண்டாமோ சிறையில் போட்டாலும் திருந்த மாட்டார்கள் என்னத்தை சொல்ல மானம் ரோஷம் இருந்தாதானே..?"

  >>>>>>>>>>>>

  எலேய் அதெல்லாம் மனுசங்களுக்கு(!)...தெய்வங்களுக்கு இல்லை!

  ReplyDelete
 10. அருமையான தகவலுக்கு (TATA DOCOMO) நன்றி நண்பரே!

  நம்ம தளத்தில்:
  "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

  ReplyDelete
 11. ////அண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை?////

  ஹா.ஹா.ஹா.ஹா.சரியாகச்சொன்னீங்க பாஸ்

  ReplyDelete
 12. மாப்ள பான்ட் சைஸ் போதுமா?

  ReplyDelete
 13. தன் பணத்தை திருடிவிட்டு ஜாமீனில் வந்திருக்கும் ஒருவரை காத்திருந்து வரவேற்ற கட்சிகாரர்களுக்கும்….. விடுங்க என்னத்த சொல்ல..
  ///அதே..

  ReplyDelete
 14. பொது அறிவு பகுதியில் அந்த அப்பாடக்கருக்கு என்னைவிட வயது அதிகம் என்று இன்றுதான் தெரிந்தது...

  ReplyDelete
 15. இன்றுதான் உங்கள் புளொக் பார்த்தேன் தோழர்..நன்றாக உள்ளது..பாராட்டுக்கள்..தொடருங்கள்..

  ReplyDelete
 16. தங்களின் முதல் பகிர்வு மிக சிறப்பு , உங்க உணர்வை போற்றுகிறேன்.

  ஆனால் இரண்டாவதாக பகிர்ந்துகொண்டது தேவையற்றதாக படுகிறது... இப்படிதான் ஆரம்பிக்கும்... பிறகு எங்கேயாவது தொல்லையில் முடியும் அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும்... சற்று சிந்தியுங்கள்.... இலவசமும் வேண்டாம்... அதை ஆதரிக்கவும் வேண்டாம்.

  நன்றி.

  ReplyDelete
 17. அண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை?
  >>>
  அது தெரிந்தால் நாம் ஏன் இப்படி இருக்கோம் சகோ

  ReplyDelete
 18. கடமை, கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் காற்றில் பறக்கவிட்டவர்களுக்கு இதெல்லாம் ஏது?

  ReplyDelete
 19. ஹா....ஹா...வெட்கம்! மானம்!! அதெல்லாம் அவங்களுக்கு தெரியாத செய்தி.

  ReplyDelete
 20. எஹஹ ஹே ,.அரசியல்வா(வியா)தின்னாலே தியாகிகள் தானே..

  ReplyDelete
 21. சிறை- சென்ற தியாகிகள்... அதோட முடிச்சுக்கணும். ஏன் எதுக்குன்னு கேக்கப்புடாது.

  ReplyDelete
 22. வுடு தல!அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...