> என் ராஜபாட்டை : ரசித்து படிக்க வேண்டிய புத்தகங்கள் பகுதி -4

.....

.

Friday, November 9, 2012

ரசித்து படிக்க வேண்டிய புத்தகங்கள் பகுதி -4

ஆன்மிக பணியில் உள்ள பலர் பல நூல்களை எழுதி உள்ளனர் . அது கடவுளை பற்றி அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றி இருக்காலாம் . அல்லது முக்தி அடைவது எப்படி என்பது போல இருக்கலாம் . ஆனால் சிலர் ஆன்மிகத்துடன் அன்றாட வாழ்வியலை கலந்து ஒரு அழகான கருத்து மிக்க நூலை சிலர் தான் படைக்கின்றனர் . அப்படி பட்ட ஒருவர்தான் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் .

இவர் நிறைய நூல்கள் எழுதி உள்ளார் . அதில் ஒன்றுதான் அத்தனைக்கும் ஆசை படு . என்னடா புத்தர் ஆசையை துற என சொல்கிறார் ஆனால் இவர் அத்தனைக்கும் ஆசை படு என உல்டாவாக கூறுகிறார் என என்னுகின்ரிரகளா , இது தான் இவர் ஸ்பெஷல் .


புத்தகத்தில் இருந்து சில வரிகள் :

ஆசை இல்லாமல் இந்த பிரபஞ்சம் இல்லை , இந்த உடலும் இல்லை


ஆசையினால் செய்யாமல் , அவசியத்துக்காக எது செய்தாலும் அது முழு சந்தோஷத்தை தராது .

இந்த உலகமே உங்களுதாக ஏற்று கொண்டால் அதில் உள்ள அனைவரும் உங்கள் சொந்தகளாக மாறிவிடுவார்கள்

உங்களுக்கு சந்தோஷமானது என எதை என்று கொண்டாலும் அதனுடன் சில சவால்கள் இலவச இணைப்பாக வந்து சேரும்


கடினமான சந்தர்பங்கள் உண்மையில் சாபங்கள் அல்ல அது உங்களுக்கு வழங்கப்படும் வரங்கள்


நீங்கள் கவனமாக உழைக்க வேண்டுமே தவிர , கடுமையாக இல்லை


முடிவை பற்றி கவலை படாதே , முழுமையான ஈடுபாட்டுடன் செயலை செய்யுங்கள் வெற்றி நிச்சயம்

வாழ்கையின் சுவராசியமே அதன் வேறுபாடுகளில் தான் உள்ளது

இந்த புத்தகத்தை தரவிறக்க :டிஸ்கி : இந்த புத்தகத்தை DOWNLOAD செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் rrajja.mlr@gmail.com க்கு  Mail பண்ணவும். .E-Book  விரைவில் அனுப்பப்படும்
 


8 comments:

 1. நல்லது ராஜா...
  படிக்க தகுந்த புத்தம் இவருடையது...

  நன்றி

  ReplyDelete
 2. நல்ல புத்தகம் டவுன்லோட் செய்யவில்லை ஆனால் படித்து விட்டேன்

  ReplyDelete
 3. நல்லதொரு புத்தகப் பகிர்வு! இது விகடனில் தொடராக வந்தது என்று நினைக்கிறேன்! சில அத்தியாயங்கள் படித்துள்ளேன்! அருமையான புத்தகம்! நன்றி!

  ReplyDelete
 4. நல்ல புத்தகம்... படித்ததுண்டு...

  நண்பர்களிடம் பகிர்கிறேன்...

  நன்றி...

  ReplyDelete
 5. தரவிறக்கப் பகிர்விற்கு நன்றிகள் பல நண்பரே.
  நல்ல புத்தகம் நல்ல நண்பன் அல்லவா.

  ReplyDelete
 6. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
 7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. நல்ல பகிர்வு . ஏற்கெனவே படித்து விட்டேன்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...