> என் ராஜபாட்டை : அப்பா !!

.....

.

Wednesday, February 20, 2013

அப்பா !!



அப்பாவை பிடிக்கும் ,மதிக்கும் நபர்களுக்கும் , அப்பாவை கண்டுகொள்ளாத நபர்களுக்கும் ...


உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.

இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.

அதில்...வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.

தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.

பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.

பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.

ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.

ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.

மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.

எனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும்.

பெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும். மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன? அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளனர்.

எனவே நாமும் நமது முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்போம். 

நன்றி : FACEBOOK

8 comments:

  1. இன்றைக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தாலே ஆச்சரியம் என்றாகி விட்டது...!

    சிறப்பான தொகுப்பிற்கு நன்றி... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. /அகராசியின்/ அகராதி !

    அப்பாவை கண்டு கொள்ளாததின் காரணம் பாசம் விட்டு போனது அல்லது தந்தைக்கு பாசத்தை வெளிப்படுத்த தெரியாமையாக இருக்கலாம்.

    அப்பா வாழும் காலத்தில் புரிந்து கொள்வதில்லை சிலர், பின்னால்.. அப்பாவை புரிந்து கொண்டு என்ன செய்வது.

    தந்தைமீது அதிக பாசம் வைப்பவர்கள் பெண்பிள்ளைகளே.


    ReplyDelete
  3. அப்பப்பா...!!!!! அருமை..!

    ReplyDelete
  4. அருமையான உதாரணப் பதிவு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு

    ReplyDelete
  6. அம்மாவை புரிந்து கொள்ளும் அளவிற்க்கு அப்பாவை புரிந்துக் கொள்ளுதல் என்பது கொஞ்சம் கடினமே

    ReplyDelete
  7. வழிகாட்டுதல் இருப்பின் அது ஒரு ஒரு போனஸ்!இல்லாவிடில் அதுவே மேலும் உத்வேகம் அளிக்கும்!

    ReplyDelete
  8. \\பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.\\ ஹிட்லர் பிறப்பதற்கு முன்னாடி [அய்யய்யோ, தப்பு.தப்பு.........கருத்தரிப்பதற்கு முன்னாடி ] ஏதாவது கட்டும்போது தலையில் செங்கல் விழுந்து செத்திருக்கலாம்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...