> என் ராஜபாட்டை : அஜித் +விஜய் +முருகதாஸ் +பாலா = சினிமா ,சினிமா

.....

.

Wednesday, February 27, 2013

அஜித் +விஜய் +முருகதாஸ் +பாலா = சினிமா ,சினிமாதல போல வருமா !!!
"ஆஞ்சநேயா" படப்பிடிப்பின் போது ரோடு போடும் வேலை செய்யும் பெண்மணி ஒருவர் தனது குழந்தையுடன் அஜித்தை சந்தித்து, தனது குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்றார். அந்தப் பெண் குழந்தைக்கு அஜித் தனது அம்மாவின் பெயரையோ, வேறு ஏதாவது பெயரையோ வைத்திருக்கலாம் . ஆனால் அஜித் அப்படி செய்யவில்லை. அம்மா... இது உங்க குழந்தை. இந்தக் குழந்தைக்கு பெயர் வைக்கிற உரிமை உங்களுக்குதான் இருக்கு. உங்க பாட்டி பெயரையோ, அம்மா பெயரையோ ஏதாவது கடவுள் பெயரையே இல்லை உங்களுக்குப் பிடித்தவேறு ஏதாவது பெயரையோ வையுங்கள்.உங்க குழந்தைக்கு பெயர் வைக்கிற உரிமையை மட்டும் வேறு யாருக்கும் தராதீங்க. நான் வெறும் நடிகன்தான் என்று அந்த பெண்மணியை அனுப்பி வைத்தார்.

ஆசையோடு பெயர் வைக்க வருகிறவர்களுக்க ு மனம் நோகாமல் பெயர் வைப்பது ஒருவகை என்றால், அவர்களின் தன்னமானத்தை, உரிமையை அவர்களுக்கே புரிய வைப்பது இன்னொருவகை. தனிமனித வழிபாடு மிகுந்த சமூகத்தில் முன்னதைவிட பின்னதுதான் அதிகமாக தேவைப்படுகிறது.
 மீண்டும் இணையும் விஜய்-முருகதாஸ்!
'துப்பாக்கி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல், 100 நாள் ஓடியும் 100கோடிக்கும் மேலேயும் வசூல் செய்தது. அதைத் தொடர்ந்து முருகதாஸ் அஜித்துடன் இணைகிறார் என பல செய்திகள் தொடர்ச்சியாய் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் முருகதாஸ் 'துப்பாக்கி' ஹிந்தி ரீமேக்கான 'பிஸ்டல்' திரைப்படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதைத் தொடர்ந்து மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி இணையவிருக்கிறார்கள்.

இந்தப்படத்தினை 'ஐங்கரன் இண்டர்நேஷனல்' தயாரிக்கிறது. விஜய் இப்போது 'தலைவா' படத்தில் நடித்து வருகிறார். இந்த பட ஷூட் முடிந்தவுடன், நேசன் இயக்கும் 'ஜில்லா' படத்தை முடித்த பிறகு மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணைவார்கள் எனத் தெரிகிறது. வெகு விரைவில் அக்சய் குமார் நடிக்கும் 'பிஸ்டல்' படம் முடிந்த பின் இந்தப்படத்தின் வேலைகள் தொடங்கும் எனத் தெரிகிறது.
மார்ச் 15ல் ‘பரதேசி’!

‘பரதேசி’ திரைப்படம் பாலாவின் இத்தனை படங்களிலும் மிகச் சிறந்த திரைப்படம் என பாலுமகேந்திராவும், அனுராக் காஷ்யப்பும் கூறியதிலிருந்தே ‘பரதேசி’ பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகத்தான் இருக்கிறது. இடையில் கேன்ஸில் திரையிடப்படப் போகிறது எனும் செய்தியும் வந்ததால் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கி விட்டிருக்கிறது. அப்போது ரிலீஸ், இப்போது ரிலீஸ் என இழுபறியடித்த நிலையில் மார்ச் 15ல் ‘பரதேசி’ ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மேலும் இந்தப் படத்தில் அதர்வா, தன்ஷிகா, வேதிகா எனப் பலர் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தை ‘JSK பிலிம்ஸ்’ நிறுவனம் வாங்கி வெளியிடவுள்ளது. பாலாவின் ‘B ஸ்டூடியோஸ்’ இந்தத் திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது ‘பரதேசி
 
 இதையும் படிக்கலாமே :

ஆச்சர்யம் ஆனால் உண்மை 

நீங்கள் பிரபலமாக வேண்டுமா ? 

ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...

4 comments:

 1. சுவையான தகவல்கள்! நன்றி!

  ReplyDelete
 2. முதல் கவளத்தை ரசித்து புசித்தேன்...


  பாலாவின் அடுத்த படைப்பை காண ஆவலுடன்....

  ReplyDelete
 3. பாலாவின் படமா........!! வயித்தைக் கலக்குதே...>!! நல்ல தகவல்கள், அழகாய் பகிர்ந்திருக்கிறீர்கள் நன்றி!!!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...