> என் ராஜபாட்டை : நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?

.....

.

Wednesday, February 6, 2013

நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?




உலகம் முழுவதும் மொழி வித்துயாசமில்லாமல் அனைவராலும் போற்றப்படும் புகழ்பெற்ற ஒருவருடைய கதை இது.

அவரது அம்மாவுக்கு தீராத நோய்

அப்பா, அம்மாவை விட்டுவிட்டுப் போய்விட்டார்.

வீட்டில் எப்பொழுதும் பசி, பட்டினி, பஞ்சம்.

சில சமயங்களில் குப்பை தொட்டியில் வாசம்.

வீதியோரமாக பாடி காசு திரட்டியிருகிறார்.

சாப்பாட்டுகாக சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுப்பட்டார்.

அவர் செய்த வேலைகள் :

-          பேப்பர் போடும் ஆள்
-          டாக்டர்க்கு உதவியாளர்
-          முடிவெட்டுபவர்
-          பிரிண்டிங் பிரஸில் உதவியாளர்
-          பழய துணியை ஏலம்விடுபவர்.

இவை அனைத்தையும் செய்துவிட்டு இறுதியில் சினிமாவுக்கு வந்தார். அவர் வாழ்கை திசை மாறிப்போனது. கோடி கோடியாக கொட்டியது. அவர் தான்
சார்லி சாப்ளின்.


குறைபாடுகள், தோல்விகள், பிரச்சனைகள் இவை ஒவ்வொன்றும் அற்புதமான வாய்ப்புகள்.

நம்மால் முடியும் என்பதை முதலில் நம்ப வேண்டும். அந்த எண்ணம் எதையும் சாதிக்க வைக்கும். ஒரு புன்னகை போதும் சுடும் நெருப்பையும் தாங்கலாம், கடும் குளிரையும் தாங்கலாம். ஐயோ, அதெல்லாம் முடியாது என்று சொல்பவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. காரணம் அவர்களும் சாதிக்க மாட்டார்கள், பிறரையும் சாதிக்க விடமாட்டார்கள்.

பாஸிட்டிவ் நபர்கள் நம் திறமைக்கு பெரிய ப்ளஸ். அப்படிப் பட்ட நபர்களை தேடிப்பிடித்து நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.  பாஸிட்டிவ் மனிதர்கள் பாஸிட்டிவ் எனர்ஜியை வெளிபடுத்துவார்கள். பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல அவர்கள் எனர்ஜி நமக்கும் தொற்றிகொள்ளும். என்றும் பாஸிட்டிவ்வாக இருங்கள், அப்படி இருந்தால் நீங்கள் தான் வாழ்கையின் வெற்றியாளர்.( வாழ்கையில் மட்டும் அல்ல, பதிவுலகிலும் நீங்கள் தான் வெற்றியாளர்தான்)

இன்றைய சிந்தனை :



11 comments:

  1. அன்பின் ராஜா - உண்மை உண்மை - ஆக்க பூர்வ சிந்தனையாளர்களுடன் நாம் சேர்ந்தால் நாமும் ஆக்க பூர்வமாகச் சிந்திக்கத் துவங்குவோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. It is a tonic post... keep it up... Congrats...

    ReplyDelete
  3. அருமையான தன்னம்பிக்கை பதிவு! பூஸ்ட் கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. எல்லோரும் சாப்ளின் ஆகிவிட முடியாது! இருந்தாலும் சுவாரஸ்யமான பதிவு!!

    ReplyDelete
  5. ஆக்க பூர்வமான சிந்தனை அவசியம்.அதைத்தான் நார்மன் வின்சட் பீல் தன் புத்தகத்தில் அருமையாக சொல்லியிருக்கிறார்!

    ReplyDelete
  6. ///அதெல்லாம் முடியாது என்று சொல்பவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.///

    100%

    ReplyDelete
  7. பாஸிட்டிவ் நபர்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும் ---மிகவும் உண்மைங்க ...இந்த உண்மை ரொம்ப நாள் எனக்கு தெரியாம இருந்துச்சு...

    ReplyDelete
  8. உழைத்தால் உயர்வு நிச்சயம்...

    ReplyDelete
  9. நன்றாக படிக்க இங்கே போங்க
    ராமனின் குருவான வசிஷ்டர், ஞானம் பெற ஆர்வம் கொண்டு பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவரது விருப்பத்தை அறிந்த பிரம்மன், ஒரே ஒரு தர்மம் செய்தால், பலன் பத்தாக பெருகும் தலம் பூலோகத்தில் உள்ளது. அங்கு சென்றால் ஞானம் கிடைக்கும் என்றார். அந்தத் தலமே மயிலாடுதுறை அருகிலுள்ள தலைஞாயிறு. பிரம்மாவின்
    http://www.tamilkadal.com/?p=1821

    ReplyDelete
  10. தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
    அனைத்தும் ஒரே இணையத்தில்....
    www.tamilkadal.com

    ReplyDelete
  11. சாதிப்பவர்கள் எப்படியும் சாதிப்பார்கள், யாராலும் தடுக்க முடியாது.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...