> என் ராஜபாட்டை : தேவதையை கரம்பிடித்து இரண்டு வருடம் ஓடிவிட்டதா !!!

.....

.

Wednesday, August 22, 2012

தேவதையை கரம்பிடித்து இரண்டு வருடம் ஓடிவிட்டதா !!!
22-08-2010 அன்று தான் அந்த சம்பவம் நடந்தது. ஆம் இந்த அப்பாவியின் பிரமசாரி பட்டம் தொலைந்து சம்சாரி ஆனா நாள் அது. என் அழகான தேவதையை திருச்சியில் கண்டுபிடித்தேன். அங்குதான் அவர் கரம் பிடித்தேன் .

இந்த இரண்டு வருடத்தில் இதுவரை நாங்கள் சண்டையே போட்டதில்லை .(வீட்டு செலவு , விசேஷத்திற்கு துணி எடுப்பது , உறவினர் இல்லத்திற்கு செல்வது , குடும்பத்தில் முக்கிய முடிவை எடுப்பது போன்ற சின்ன விஷயத்தை எல்லாம் அவள் பார்த்து கொள்ளுவாள் . இந்தியா பாகிஸ்தான் பிரச்னை , ஈழ பிரச்னை , விக்கிலிக்ஸ் பிரச்னை போன்ற பெரிய விஷயங்களை நான் பார்த்துகொள்ளுவேன்)


என்னை மாற்றினாள் :

சரியான நேரத்தில் உணவு , செல்லும் இடத்திற்கு ஏற்ப உடை அணியும் பழக்கத்தை கற்றுகொடுத்தாள் .

வீட்டுக்கு தேவையானதை செய்ய கற்றுகொடுத்தாள் .

செலவு செய்தால் அதை குறித்து வைத்துக்கொள்ள , அதில் எது வீண் செலவு என கண்டுபிடிக்க கற்றுகொடுத்தாள் .

பதிவுகளை எழுதி முடித்தபின் அதை திருத்தும் , வாசிக்கும் பழக்கத்தையும் , பிழைகளை திருத்தவும் கற்றுகொடுத்தாள் .

வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை வாசலில் செருப்புடன் விட்டு விட்டு வர வேண்டும் என கற்றுகொடுத்தாள் .

நான் ஊருக்கு தான் ஆசிரியர் அவள் தான் எனக்கு  ஆசிரியர் .


இந்த ஜென்மம் மற்றும் அல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொடரவேண்டும் இந்த உறவு ..


உங்கள் வாழ்த்துகளை எதிர்நோக்கும் ..

K.ராஜா சக்தி பிரியதர்ஷினி
செல்வன் R.S.சரண்

40 comments:

 1. மண நாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. இன்று போல் என்றும் வாழ்க...

  பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் ! மனப் பொருத்தமுடைய மணமே சிறந்தது - நிலையானது !!! அப்படியான வாழ்க்கைத் துணைவர் கிடைப்பது அரிதான ஒன்று !!! உங்களுக்கு அதுக் கிட்டியுள்ளது ... !!!

  பாப்பா அழகாக இருக்கின்றார் .. உங்கள் அனைவருக்கும் எனது அன்புகள் என்றென்றும் !

  ReplyDelete
 4. மச்சி...

  அந்த பழைய காதல் பற்றி அப்புறம்
  நந்தினி காதல் பற்றி...

  அப்புறம் அந்த கதையெல்லாம்

  வீட்டம்மாவுக்கு தெரியுமா...?


  (அம்மாடி ஏதோ நம்மால முடிஞ்சது...)

  ReplyDelete
 5. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ராஜா...

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் அன்பரே மணவாழ்வு சிறக்கட்டும்

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 8. ////.(வீட்டு செலவு , விசேஷத்திற்கு துணி எடுப்பது , உறவினர் இல்லத்திற்கு செல்வது , குடும்பத்தில் முக்கிய முடிவை எடுப்பது போன்ற சின்ன விஷயத்தை எல்லாம் அவள் பார்த்து கொள்ளுவாள் . இந்தியா பாகிஸ்தான் பிரச்னை , ஈழ பிரச்னை , விக்கிலிக்ஸ் பிரச்னை போன்ற பெரிய விஷயங்களை நான் பார்த்துகொள்ளுவேன்)////

  என்னை மாதிரி பசங்களுக்கு நல்ல அட்வைஸ் பாஸ் எதிர்காலத்தில் திருமணபந்தத்தில் இணையும் போது நாங்களும் இதை பாலோ பண்ணுறம்

  ReplyDelete
 9. நான் ஊருக்கு தான் ஆசிரியர் அவள் தான் எனக்கு ஆசிரியர் .

  இனிய வாழ்த்துகள் !

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் சார்... இன்ற போல் என்றும் வாழ வாழ்த்துகிறோம்

  ReplyDelete
 11. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பாஸ்.
  ஒரு ஆச்சிரியம் பாருங்க. எனக்கும் 22-08-2010 தேதி தான் திருமணம் நடந்திச்சு :)

  ReplyDelete
 12. இனிய திருமணநாள் வாழ்த்துகள்...!
  வீட்டு வேலையெல்லாம் நான்தான் பார்க்கிறேன் அதைப் போடலை....அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 13. திருமண நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. மண நாள் வாழ்த்துக்கள் Mr.K.ராஜா Mrs.சக்தி பிரியதர்ஷினிராஜா

  ReplyDelete
 15. இன்று போல் என்றும் வாழ்க...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. பதுமையான முக அழகைத் தன்பால் கொண்ட
  தேவதை இவளே தங்களுக்கு ஜென்ம ஜென்மமாய்
  ஆசிரியராகவும் அன்பு மனைவியாகவும் தொடர
  இன்றைய இனிய நன்னாளில் வாழ்த்துகின்றோம் சகோ கடவுள் உங்கள் இருவரையும் இன்றுபோல் என்றும் வாழ நல்லாசி வழங்கட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 17. உங்கள் மகனின் initial ஒன்றே போதும்...
  வாழ்த்துக்கள் சார்...

  ReplyDelete
 18. திருமண நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சேன்னு ஆச்சர்யத்துல நீங்களும், எனக்கு கல்யாணம் இவரோடு ஆகிடுச்சேன்னு நொந்து போய் உங்க மனைவியும் ஃபீல் பண்ற மாதிரி இருக்கு உங்க கல்யாண போட்டோ.

  ReplyDelete
 20. Happy anniversary sir..! Hats off for the open confessions..:P

  ReplyDelete
 21. இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் தல!

  ReplyDelete
 22. மணநாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 23. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரா! நீண்ட காலம் இதே இனிமையான சொந்தம் தொட‌ரட்டும்

  ReplyDelete
 24. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் நண்பரே...
  நல்ல மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். தங்களுக்கு அந்த வரம் கொடுத்து விட்டார் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள் நண்பரே! நகைச்சுவை போர்வையில் சீரியஸான பதிவு! வாழ்க்கை துணை நம் வாழ்க்கை சிறக்க வைக்கிறாள்! அருமை!

  இன்று என் தளத்தில்
  கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
  ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

  ReplyDelete
 26. மணநாள் வாழ்த்துக்கள்! நீடூழி இன்புற்று வாழ்க!

  ReplyDelete
 27. வாழ்த்துகள் சார்..

  ReplyDelete
 28. அப்பாடா, நீங்கதாங்க எனக்கு நம்பிக்கையை குடுத்துருக்கிங்க..
  வாழ்த்துக்கள்...
  என் வாழ்க்கைல நான் சந்திக்கற எல்லாரும் ஏதாவது சொல்லி கல்யாணம்னாலே பயமுடுத்தறாங்க..

  ReplyDelete
 29. பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் வாத்தி...!

  ReplyDelete
 30. இந்தியா பாகிஸ்தான் பிரச்னை , ஈழ பிரச்னை , விக்கிலிக்ஸ் பிரச்னை போன்ற பெரிய விஷயங்களை நான் பார்த்துகொள்ளுவேன்//

  எலேய் கொலைவெறி உண்டாக்காதேலேய் கொண்டேபுடுவேன்.

  ReplyDelete
 31. கொடுத்துவைத்தவள் உங்களின் தேவதை. நல்ல கணவர் நீங்கள். எந்த கணவன் இப்படி ஒரு அங்கிகாரம் கொடுப்பார் சொல்லுங்க..ம்ம் ..இந்த ஜென்மத்தில் நடக்காது. ஆனாலும் உங்களின் //இந்தியா பாகிஸ்தான் பிரச்னை , ஈழ பிரச்னை , விக்கிலிக்ஸ் பிரச்னை போன்ற பெரிய விஷயங்களை நான் பார்த்துகொள்ளுவேன்// லொள்ளுதான். ஹஹஹ

  ReplyDelete
 32. raja sir...... akkata adivanguvingale atha solalaya????????????????????

  ReplyDelete
 33. இதேபோல பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 34. அட நீங்க நம்ம ஊரா வாத்தியரே

  ReplyDelete
 35. வாழ்த்துக்கள் சகோதரரே.

  ReplyDelete
 36. இன்று போல் என்றும் வாழ‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைய‌ருள் நிலைக்க‌ட்டும்!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...