> என் ராஜபாட்டை : இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா ?(E-BOOK இல்லை ...)

.....

.

Thursday, November 13, 2014

இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா ?(E-BOOK இல்லை ...)

நல்ல நூல்கள் மிக சிறந்த நண்பர்களுக்கு சமம் என சொல்வார்கள். நம்ம தலைவர் சுஜாத்தா கூட "தினமும் குறைந்தது 20 பக்கங்கள் படிப்பதை வாடிக்கையாக கொள்ளுங்கள் , அது எந்த நூலாக இருந்தாலும் பரவாயில்லை " என சொல்லுவர் . ஆனால் இன்று நூல்கள் விற்கும் நிலையில் காசு கொடுத்து நூல் வாங்குவது சிலருக்கு கஷ்டமாக உள்ளது .(விலைவாசி அப்படி ...)

படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும், படித்த நூலை பற்றி விரிவாக விவாதிக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு இலவசமாக நூல்கள் வழங்க ஒரு பதிப்பகம் முடிவுசெய்துநூல்களை இலவசமாக வழங்கிவருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா ?

ஆம் , கிழக்கு பதிப்பகம் தான் அந்த வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது . இது ஒரு தரமான பதிப்பகம் என்றும் , பல ஆயிரகணக்கான நூல்களை வெளியிட்ட பெரிய பதிப்பகம் என்பதும் அனைவருக்கும் தெரியும் .இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைதான் இந்த இலவச நூல்கள் .

எப்படி பெறுவது ?


 • முதலில்  இங்கு  கிளிக் செய்து கிழக்கு பதிப்பகத்தின் அபிஷியல் வலைத்தளம் செல்லவும் .

 •  இங்கு பல நூல்களின் விவரங்கள் இருக்கும் . அதில் உங்களுக்கு பிடித்த புத்தகத்தை தெரிவு செய்யவும் .

 • அதன் கிழே ஒரு படிவம் இருக்கும் . அதனை கவனமாக நிரப்பவும் .
 • "submit" பட்டனை அழுத்தவும் .
 •  அவ்வளவுதான் .நான்குநாட்களில்நீங்கள்கேட்டபுத்தகம்உங்கள்இல்லம்வந்துசேரும் .

நிபந்தனை :

 • இலவசமாக வாங்கும் புத்தகத்தை படித்து அதை பற்றி 400 - 1000 வார்த்தைகளுகுள் ஒரு மதிப்புரை எழுத வேண்டும் .
 • நீங்கள் எழுதும் மதிப்புரை அவர்கள் தளத்தில் வெளியிடப்படும் .

டிஸ்கி : ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தகங்கள் வாங்கலாம் . ( நான் இதுவரை இரண்டு வாங்கியுள்ளேன் )

8 comments:

 1. புத்தகப்பிரியர்களுக்கு இது ஒரு அருமையான உதவி! அன்பு நன்றி உங்களுக்கு!!

  ReplyDelete
 2. இது என் மாதிரியான புத்தகப் பிரியர்களுக்கு உவப்பான செய்தி!

  ஆனால் நான், வெளி நாட்டில் இருக்கிறேன்.

  அதனால், இப்போது பயன்படுத்த இயலாது.

  தாய் நாடு வரும்போது முயற்சிக்கிறேன்.

  தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 3. முன்பே வாத்தியார் சொல்லியிருந்தாலும் உங்க 'வில்லாதி வில்லன்' விமர்சனத்தை பார்த்துட்டு நானும் ஒரு புக் ஆர்டர் செய்து வாங்கிட்டேன். (செங்கிஸ்கான்)

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 5. நல்ல தகவல்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 6. நீங்கள் கூறும் அந்த படிவம் எனக்கு வரவில்லை ......உதவவும்.

  ReplyDelete
 7. நண்ப்ரே 1 தங்களுகு ஒரு அழைப்பு விடுத்துள்ளோம் எங்கள் வ்லைத்தளத்தில்! விருப்பம் இருப்பின் ஏற்றுக் கொள்ளவும்! மிக்க நன்றி!

  ReplyDelete
 8. கனவில் வந்த காந்தி

  மிக்க நன்றி!
  திரு பி.ஜம்புலிங்கம்
  திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

  புதுவைவேலு/யாதவன் நம்பி
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...