> என் ராஜபாட்டை : கவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு

.....

.

Saturday, November 19, 2011

கவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு





கவிதைவீதி செளந்தர் மட்டும் தான் கவிதை எழுதவேண்டுமா? நடுவீதியில் நிற்க்கும் நான் எழுதமாட்டேனா?
அவரும் வாத்தியார் நானும் வாத்தியார்( நம்புங்கப்பா !)
அவரும் நல்லவர், நானும் ரொம்ப ரொம்ப நல்லவன்.(ஹி..ஹி..)

கருன் : ஆமா அவரும் ஆம்பளை நீயும் ஆம்பளை.. போடங்க்

சரி.. சரி . உங்கள் ஆர்வம் புரியுது, இதோ என் கவிதா சாரி கவிதை.


அருகம்புல் போல வளர்ந்த என் காதலை
அவள் அப்பன் எருமை மாடுபோல்
மேய்ந்துவிட்டான்.



ஏன் மனோ மயக்கம்போட்டு விழுறார்?

காதல் என்பது ஒரு காட்டாறு- அதை
கடந்து போக நீதாண்டி என் மோட்டாரு.



சி.பி ஏன் ஒடுறிங்க ?


இரண்டெழுத்தில் ஒரு கவிதை கேட்டார்கள்

தாய் “ என்றான்.

என் தாயிடம் இரண்டெழுத்தில் ஒரு கவிதை கேட்டார்கள்

ராஜா” என்றார்.

தமிழ்வாசி கயிற எடுத்துகிட்டு எங்கே போறிங்க?


டிஸ்கி ; இதை படித்துவிட்டு செளந்தர் என்னை கொலைவெறியுடன் தேடுவதாக கேள்விப்பட்டேன். நான் அமலா பால் வீட்டுல பதுங்கி இருப்பதை யாரும் சொல்லிடாதிங்க.


38 comments:

  1. //கவிதைவீதி செளந்தர் மட்டும் தான் கவிதை எழுதவேண்டுமா? நடுவீதியில் நிற்க்கும் நான் எழுதமாட்டேனா?//

    சபாஷ் சரியான போட்டி

    ReplyDelete
  2. தமிழ்வாசி கயிற எடுத்துகிட்டு எங்கே போறிங்க?//

    ஹா..ஹா... உன் கழுத்துல மாட்ட தான் வரேன். ரெடியா இரு...

    ReplyDelete
  3. நீங்க அமலா பால் வீட்டுல இருக்ரத நா யாருகிட்டயும் சொல்லமாட்டேன்...

    ReplyDelete
  4. @cool
    ரொம்ப நன்றிங்க .. (அமலா பால் சொல்ல சொன்னா ..)

    ReplyDelete
  5. அய்யா ராசா இத்தனை நாளா எங்கஇருந்தீர்கள்?
    இரண்டெழுத்து கவிதை டச்சிங்
    அமலா என்கின்ற பால்காரம்மா வீட்டுல...ராசா இருக்காருங்க பாட்டிக்கு 90 வயசு ஆகுது

    ReplyDelete
  6. அந்த அமலாபால் வீட்டு அட்ரஸ் ப்ளீஸ் எனக்கு மட்டும் சொல்லுங்களேன்

    கலக்குங்க..

    ReplyDelete
  7. //என் தாயிடம் இரண்டெழுத்தில் ஒரு கவிதை கேட்டார்கள்

    “ராஜா” என்றார்.
    //

    இது தான் நச்!!!

    சும்மாவா சொன்னாங்க, கவிதைக்கு பொய் அழகுன்னு?

    :) :) :)

    ReplyDelete
  8. இந்த கவிதைகளை படித்துவிட்டு, இனி கவிதைவீதி சௌந்தர் கவிதை எழுதுவாரா?

    ReplyDelete
  9. கவிதை சூப்பர் அப்பு

    எல்லாரையும் ஏன்யா வம்புக்கு? என்ன ஒரு வில்லத்தனம்

    ReplyDelete
  10. சிரிப்பு கவிதை..!

    ReplyDelete
  11. சிரித்துக் கொண்டு இருக்கிறேன்

    ReplyDelete
  12. பால் விலை ஏறிகிடக்கு அதனால் தானோ அமலா பால் வீட்டில்....!!!!!!???????

    ReplyDelete
  13. அருகம்புல் போல வளர்ந்த என் காதலை
    அவள் அப்பன் எருமை மாடுபோல்
    மேய்ந்துவிட்டான்.//

    கொலை கொலையா முந்திரிக்கா நரிய நரிய சுத்தி வா அடிங்.....

    ReplyDelete
  14. ஏன் மனோ மயக்கம்போட்டு விழுறார்?///

    உயிரோடு இருக்குரவனை அப்பிடியே மண்ணுக்குள்ளே புதைக்குரதை நேரில் பார்த்தா மயக்கம் வராதா பின்னே ஹி ஹி...

    ReplyDelete
  15. அடிச்சிக் கேட்டாலும் சொல்லக் கூடாதா?

    ReplyDelete
  16. என்றும் மறக்க இயலா நற்கவிதை!
    இயற்றிநீர் இராசாவே பொற்கவிதை!
    நன்று! நன்றி! உம் கவிதை!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. ராஜா,

    கவி(தா)தை எழுதுங்க.

    அதுக்கு ஏன்யா பாவம் சௌந்தர் அண்ணனை சந்தியில நிக்கவெச்சி பஞ்சாயத்தைக் கூட்டறீங்க.

    ReplyDelete
  18. அறுகம்புல் அவன் அப்பன் எருமைமாடு சூப்பர் ஐடியா ஏன் தமிழ்வாசி கயிறு கொண்டுவாரர் என்று புரியுது!ஹீ ஹீ

    ReplyDelete
  19. நான் இனி கவிதை எழுதக் கூடாது போலிருக்கே...

    ReplyDelete
  20. அண்ணாத்தே!
    கவிதெ அப்டியே பொங்குதுபா.
    நான் எம் பொஞ்சாதிகிட்டே பட்சி காட்னேம்பா, என்ன மொறக்குதுபா அது. சரி வுடு. ஃபீல் பண்ணாதே.
    எருமெக்கு பொரந்தது தானே அந்த அருகம்புலி! (காதல் = அருகம்புல்...அப்படின்னா
    காதலி = அருகம்புலி....ரைட்டா?)
    ஆனா உந்தாய் சொல்ச்சி பார்பா அது கவிதெ கெடயாது நைனா...தத்துவம்பா தத்துவம்

    ReplyDelete
  21. வலை தளத்தின் புது வடிவம் அருமை கவிஞரே

    ReplyDelete
  22. ரோட்டரி சங்க பள்ளி என்றதும் நான் உங்களை ஓர் மயிலாடுதுறைவாசி என்று மட்டுமே அறிமுகம் கொண்டு விட்டேன்...
    இன்றுதான் தங்களின் புகைப்படம் கண்டேன்..(என்ன அழகு...? அவ்வ்வ்வவ்வ்வ் )...அப்போதுதான் தாங்கள் ராஜ் மெட்ரிக்கில் பணியாற்றிய ராஜா சார் என்பது தெரிந்தது...
    நீங்கள் என்னை மறந்திருக்க கூடும்...நீங்கள் கதை வசனம் எழுதிய ஒரு நாடகத்தில் நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் நடித்திருக்கிறேன்..நீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் பெறவேண்டிய அங்கீகாரம் பெற்று வலைப்பூவில் ஒரு வெற்றியாளராய் காணுகையில் உண்மையில் உங்களின் பழைய இரசிகனுக்கு ஒரு மகிழ்ச்சி...
    தொடரட்டும் உங்கள் வேட்டை சார்...

    ReplyDelete
  23. தமிழ் சினிமாவுக்கு ஒரு அருமையான பாடலாசிரியர் கிடைத்து விட்டார்

    ReplyDelete
  24. அடடே.. அச‌த்துறீங்க. கலக்கல். :))

    ReplyDelete
  25. // இரண்டெழுத்தில் ஒரு கவிதை கேட்டார்கள்

    “ தாய் “ என்றான்.

    என் தாயிடம் இரண்டெழுத்தில் ஒரு கவிதை கேட்டார்கள்

    “ராஜா” என்றார்//

    இது சூப்பர்.................

    ReplyDelete
  26. ஓ! இதுதான் கவிதையா.சூப்பர்.கலக்கல்.

    ReplyDelete
  27. நண்பா... ரசித்தேன்.. சுவையுடன்(நகைச்சுவையுடன்) அருமையான பதிவு...

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...