கடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்படம் வெளியிடப்பட்டது.
பிரபல பதிவர் , கவிதை மன்னன் அரசன் , கன்னி பெண்களின் அண்ணன் சாரி கண்ணன் “கோவை ஆவி” மற்றும் பதிவுலக மார்கேண்டயன் துளசிதரன் அய்யா நடித்துள்ளனர் . இயக்கம் குடந்தை மண்ணின் மைந்தர் R.V.சரவணன் அவர்கள் .
கதை :
கதை மிக சிறியதுதான் . (சின்ன கதைய எடுத்தாதாம் அது குறும்படம் , பெரிய கதைனா அது பெரும்படம் !!!). ஆட்டோவில் ஒனன்றாக வரும் இருவர் ஐந்து ரூபாய் சில்லறை பாக்கியில் நண்பர்களாகின்றனர். உறவினர் காரில் வந்ததால் தான் நண்பனையும் அழைத்து செல்ல தேடும் ஒருவரும் , பஸ்ஸில் கஷ்டபட்டு ஏறி நண்பருக்காக சீட்டு போட்டு காத்திருக்கும் ஒருவர் என சில நொடிகளில் ஏற்பட்ட நட்பு எப்படி ஆழமாக மாறியது என்பதுதான் கதை .
+ பாயிண்ட்ஸ்
இயக்கம் மிக அருமை , முதல் படம் போலவே இல்லை .
அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் / கடக்கும் சம்பவத்தை எடுத்தது
மிக குறைவான கதாபாத்திரங்கள் .
மூவரின் அருமையான நடிப்பு .
மிக இயல்பான வசனங்கள் .
- பாயின்ட் :
குழந்தை எழுந்து நடக்க ஆரம்பித்த உடனே அது ரஜினிபோல நடக்கவில்லை என குறை கூற கூடாது எனவே முதல் முயற்சி என்பதால் எந்த குறையையும் சொல்ல மனமில்லை .
ஆச்சரியம் :
ஆவி ஓடும் பஸ்ஸில் ஏறியது .
டிஸ்கி : திரைப்படத்தில் இயக்குனர்கள் ஒரு காட்சியில் தலையை காட்டுவார்கள் அதுபோல இதிலும் இயக்குனர் சரவணன் ஒரு காட்சியில் வருகிறார் .
Tweet |
நண்பர் ஆர். வி. சரவணன் இயக்கிய 'சில நொடி சிநேகம்' என்கிற குறும்படத்தின் சிறையல்புகளையும் பெருமைகளையும் அழகாக தொகுத்தளித்தீர்கள்.
ReplyDeleteநானும் படத்தை இணையத்தில் பார்த்து மிக இரசித்தேன்.
தங்கள் விமர்சனத்தில், //ஆச்சரியம்// என்ற தலைப்பின்கீழ்
கொடுத்த விளக்கம் படித்து சிரித்தேன்.
ரொம்ப அழகான விமர்சனம். எந்த பதிவிலும் வராத புதுமையான விமர்சனம். !!! நகைச்சுவையுடனும்! மிகவும் ரசித்தோம்! உங்கள் விமர்சனத்தை! + மட்டும் (மே) எழுதியதற்காக!!!(அஹ்ஹாஅ)-துளசி, கீதா.
ReplyDeleteகீதா: தலைமுடிக்கு டை அடிச்சுட்டு உலா வரதுனாலயா, எங்க துளசிக்கு பதிவுலக மார்கண்டேயர் பட்டம்?!!!! அரைக் கிழம்க..ஹஹ்ஹஹ்ஹஹ்
ஹா ஹா ஹா
ReplyDeleteமிகுந்த நன்றிகள் வாத்தியாரே ...
ReplyDeleteவிமர்சனம் சிறப்பு! படம் சிறப்பாக இருந்தது! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி ராஜா.
ReplyDelete//ஆவி ஓடும் பஸ்ஸில் ஏறியது// :) :)
ReplyDelete//ஆச்சரியம் :
ReplyDeleteஆவி ஓடும் பஸ்ஸில் ஏறியது .// ஹா ஹா
வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
ReplyDeleteவாழ்த்துக்கள்
அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
link is here click now!