இன்றைய நிலையில் நாம் அனைவரும் பைகளை எடுத்துசெல்ல அதிகமாக பயன்படுத்துவது பெண் டிரைவ் தான். எடுத்து செல்ல எளிதாகவும், வசதியாகவும் இருப்பதால் இதனை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். பல கணினியில் இதை பயன்படுத்தும் போது பெண் டிரைவ் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் அதில் வைத்திருந்த முக்கிய பைகளை எப்படி மீட்பது என பாப்போம் .
பிரச்சனை :
1. பைகள் அனைத்தும் SHORTCUT ஆக மாறியிருக்கும்.
2. பைல்கள் 1 KB சைஸ்க்கு மாறியிருக்கலாம் .
3. பைல்கள் மறைந்திருக்கலாம். பெண் டிரைவில் பைல் இருப்பதாக கணக்கு காட்டும் ஆனால் பைல் தெரியாது .
தீர்வு :
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணனியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும்.
6) நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
7) சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து
பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.
இதையும் படிக்கலாமே ?
Tweet |
மிகவும் உபயோகமான தகவல். சரி எந்த விண்டோஸ் வெர்ஷனில்..
ReplyDeleteநீங்கள் டை செய்யச் சொல்லுவது எங்கு? அதுதான் புரியவில்லை...
Useful information sir..thanks for providing this technique..
ReplyDelete