> என் ராஜபாட்டை : MLA

.....

.
Showing posts with label MLA. Show all posts
Showing posts with label MLA. Show all posts

Friday, April 18, 2014

மயிலாடுதுறை M.L.A வும் FACEBOOK க்கும் ...







கடந்த வருடம் நடந்தசம்பவம் இது . மயிலாடுதுறையின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தே .மு .தி .கவைசேர்ந்த திரு . அருள்செல்வம் அவர்கள் .  அவரும் முகநூளில் இருக்கிறார். இருவரும் நண்பர்களாக இருக்கிறோம் (முகநூலில் தான் ).

அப்போது அவர் தனது பக்கத்தில் டெங்கு காய்ச்சல் பற்றி ஒரு கட்டுரையை பகிர்ந்து இருந்தார் . வழக்கம் போல காலை பள்ளி வந்ததும் முகநூலை நோண்டும் போது அதை பார்த்தேன் . அப்போது பள்ளிக்கு அருகே ஒரு நாய் செத்து கிடந்ததால் செம நாற்றம் .

என் கை சும்மா இருக்காமல் அவர் கட்டுரையில் "இங்கு ஒரு நாய் இறந்து போய் நாறுகிறது , நகராட்சியில் யாரும் கண்டுகொள்ளவில்லை . இப்படி இருந்தால் எப்படி டெங்குவை கட்டுபடுத்தமுடியும் ?" என கமென்ட் போட்டேன் . பின்பு இருந்த வேளையில் அதை மறந்துவிட்டேன் .

மாலை 5 மணி இருக்கும் போது , நான் மாடியில்இருந்தேன் . "யார் இங்க ராஜா"னு யாரோ கேட்பது காதில் விழ , எட்டி பார்த்தால் தே .மு .தி .க கட்சி வெட்டிய கட்டிய சிலரும் , கூட டிப்டாபாக்க சிலரும் . போச்சுடா இன்னைக்கு எதோ பிரச்சனைதான் வரபோகுது , நாம வேற வெள்ளை கர்சிப் எடுத்துவரலை என்ற எண்ணம் மனதில் ஓடியது .

பார்ப்போம் ரொம்ப பிரச்சனை வந்தால் பொத்துன்னு காலில்விழுதுடலாம் என தைரியத்தை (!!!) வரவழைத்து கொண்டு கிழே சென்றேன் . 

"நான்தான் ராஜா , நீங்க ??"


"நீங்கதான் FACEBOOK இல் எழுதியதா ?"- ஒரு கரைவேட்டி .

"ஆமாம் "

" இதோ MLA உங்ககிட்ட பேசணுமாம் ", என சொல்லி செல்போன்னை நீட்டினார் .

"வணக்கம் சார் .."- நான் 

"வணக்கம் சார் , எதோ நாய் செத்துகிடக்குனு போட்டுருந்திங்க , நான் இப்போ திருப்பதியில் இருக்கேன் . அதான் நகராட்சி ஆபீசர்களுக்கு சொன்னேன் . அவர்கள் இடன் தெரியாம தேடுறாங்க . எங்கே செத்துகிடக்குனு சொன்ன சுத்தம் பண்ண வசதியா இருக்கும் .." - MLA

"சாரி சார் , நாத்தம் அதிகமா வந்ததால எங்க வாட்ச்மேன்கொஞ்ச நேரத்துக்கு முன்தான் புதைத்தார் "

"ஓ !!.. நல்ல விஷயம் பன்னிருகிங்க .."- MLA

"சாரி FACEBOOK ல போட்டேன்னு தப்ப நெனைக்காதிங்க "- நான் 

"அய்யயோ , அதுலாம் தப்பில்லை சார் , இப்படி நீங்கலாம் சொன்னாதான் எங்களுக்கு தெரியும் . உங்கள் குறையை போக்கதானே என்னை தெரிவு செய்திர்கள் , இதுபோல எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க " என்றார் .

  • ஒரு சாதாரண முகநூல் கமேண்ட்க்காக திருப்பதியில் இருந்து மயிலைக்கு போன் செய்து நகராட்சி ஊழியரை பணிசெய்யவைத்தது 
 
  • ஊழியரை மட்டும் அனுப்பினால் வேலை நடக்காதோ என எண்ணி தன் கட்சி ஆட்களை கூட அனுப்பி வேலை முடியும் வரை பார்த்துக்கொள்ள சொன்னது .
 
  • மேல்தட்டு மக்கள் மட்டும்தான் அணுகமுடியும் என பல MLA கள் இருக்க சாமானியனின் குறைகளையும் கேட்பேன் என இருப்பது ,
 
  • ஐந்து நிமிட சாகும்வரை உண்ணாவிருதம் , அரைமணி நேர உன்னைருதம் என அரசியல் ஸ்டான்ட் அடிக்காமல் மக்களுக்காக போராடுவது 
 
  • கட்சிக்காரன் , சாதிக்காரன் என பார்க்காமல் இருப்பது .
 
இவை அனைத்தும் திரு அருன்செல்வன் பிடித்து போக காரணங்கள் .



இவரின் முகநூல் பக்கம் :   https://www.facebook.com/arulselvanarasur


Saturday, March 5, 2011

நான் M.L.A ஆனால்...

நான் M.L.A ஆனால்...

1. பதிவர் அனைவருக்கும் இலவச மடி கணினி
2. பதிவர் நல வாரியம் (தலைவர் நான்தான்)
3.  தேர்வு முறையில் சில மாற்றம் (100 mark question na)

     - OC students எல்லா QUESTION ம் ATTEND பண்ணனும் 
    - MBC students பாதி QUESTION ATTEND பண்ணனும் 
   -BC students 5 QUESTION  ATTEND பண்ணனும் 
   - SC students QUESTION பேப்பர் அ பாதல் போதும்  
   - ST STUDENTS HALL TICKET வாங்கின  போதும்  
4. 2G ராசா கு  வருமான வரி துறை அளிக்கப்படும் 
5 . விஜயகாந்த்துக்கு  ராணுவ துறை 
6 . கனிமொழி கு தொலை பேசி துறை
7 . ராமதாஸ்  கு விலங்குகள் (குறிப்பா குரங்கு  ) நலவாரிய தலைவர் பதவி