> என் ராஜபாட்டை : anna hazarey

.....

.
Showing posts with label anna hazarey. Show all posts
Showing posts with label anna hazarey. Show all posts

Friday, August 19, 2011

மனசாட்சிய தொட்டு சொல்லுங்கள். நீங்கள் நல்லவரா?




நீங்கள் ஒரு ஆபத்தில் மாட்டியுள்ளிர்கள் யாரும் காப்பாற்ற வராத நிலையில் ஒருவர் வருகிரார். அவர் நல்லவரா , கெட்டவரா என உங்களுக்கு தெரியவில்லை. பலர் நல்லவர் என்றும் சிலர் கெட்டவர் என்றும் சொல்லுகின்றனர். அந்த நிலையில் நீங்கள் என்ன செய்விற்கள்?
அவர் உதவியை ஏற்று கொள்விற்களா? அல்லது அவரை பற்றி ஆராய்ந்து கொண்டு இருப்பிர்களா?

அப்படி ஆபத்தில் உள்ளது இந்தியா. காப்பாற்ற பாடுபடுபவர் அன்ணா ஹசாரே. ஊழலுக்கு அதிராக அவர் போராட துவங்கியதும் அவரை பற்றிய சர்ச்சைகளும் துவங்கிவிட்டது. அவரை பற்றி குறை மற்றும் குற்றம் சுமத்தும் சிலருக்கும் , அவர் போராட்டதை தடுக்க நினைக்கும் அரசுக்கும் என் மனதில் தோன்றிய சில கேள்விகள்…

  1. அவர் 20 வருடமாக தனது இயக்கத்தின் வரவு செலவு கணக்கை காட்டவில்லை.

- நாதாரிகளா.. 20 வருடமாக என்ன புடுங்கிகொண்டா இருந்திங்க? அவர் போராட்டம் நடத்த போகிறார் என்றதும் தான் நியாபகம் வந்ததா?

  1. உண்ணாவிரதம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறார்.

-          தங்கபாலுக்கும் அந்த கட்சியில உள்ள ஒருத்தருக்கும் சண்டைனா ரோட்டுல வந்து சாலைய மறைக்கிறனுங்க, நில அபகரிப்புனு கைது பன்னினா அதுக்கு மறியல், அப்பலாம் பாதிக்கபடாத மக்களா இப்ப பாதிக்க படுறாங்க.

  1. முதலில் அவர்  ஊழல் செய்யாதவர் என நிருபிக்கடும். அப்புறம் போராடடும்.

-          ஒரு திருடன் (வால்மீகி) எழுதின ராமாயணத்தை ஏத்துக்குறோம். ராமாயணத்தை பார்த்த நாம் வால்மீகியின் வாழ்கையை கண்டுகொள்ளவில்லை. அவன் திருடனாகவே இருந்தாலும் அவன் சொன்ன கருத்தை பார்த்தோம்.

  1. ஊழலுக்கு எதிராக போராட இவர் என்ன காந்தியா ?

-          காந்தி மட்டும் தான் போராட வேண்டுமா? . இப்ப காந்தியே வந்தாலும் அவர் மேல ஊழல் சொல்லுவாங்க.

-          தவறே செய்யாதவந்தான் ஊழலுக்கு எதிரா போராடவேண்டுமெனில் பிறந்த குழந்தைதான் போராடவேண்டும்.

  1. சட்டதை இயற்றவேண்டியது நாடாளும் மன்றமும், அமைசரவையும் தான். தனிமனிதன் சொல்லுவதை  சட்டமாக்க முடியாது.

-          போங்கடா கொய்யாலுங்கலா.. இப்ப உள்ள சட்டமே ஆங்கிலயேர்களிடம் இருந்து சுட்டது.

-          அமைச்சரவையில் உள்ள பாதிபேர் தீகார்ல இருக்காங்க. மீதி உள்ளவங்களும் விரைவில் போவாங்க போல.. இவர்கள் எப்படி ஊழலுக்கு (தனக்கு)எதிரா சட்டம் ஏற்றுவார்கள்?


“அன்னா ஹசாரே செய்வது தவறு என சொல்பவர்களே உங்கள் மனசாட்சிய தொட்டு சொல்லுங்கள். நீங்கள்(என்னையும் சேர்த்து) நல்லவரா? நீங்கள் தெரிவு செய்த மக்கள் பிரதிநிதிகள் நல்லவர்களா?”


இவை என் சொந்த கருத்துகள். தவறு எனில் பிண்னுட்டத்தில் குறிப்பிடவும்.