நீங்கள் ஒரு ஆபத்தில் மாட்டியுள்ளிர்கள் யாரும் காப்பாற்ற வராத நிலையில் ஒருவர் வருகிரார். அவர் நல்லவரா , கெட்டவரா என உங்களுக்கு தெரியவில்லை. பலர் நல்லவர் என்றும் சிலர் கெட்டவர் என்றும் சொல்லுகின்றனர். அந்த நிலையில் நீங்கள் என்ன செய்விற்கள்?
அப்படி ஆபத்தில் உள்ளது இந்தியா. காப்பாற்ற பாடுபடுபவர் அன்ணா ஹசாரே. ஊழலுக்கு அதிராக அவர் போராட துவங்கியதும் அவரை பற்றிய சர்ச்சைகளும் துவங்கிவிட்டது. அவரை பற்றி குறை மற்றும் குற்றம் சுமத்தும் சிலருக்கும் , அவர் போராட்டதை தடுக்க நினைக்கும் அரசுக்கும் என் மனதில் தோன்றிய சில கேள்விகள்…
- அவர் 20 வருடமாக தனது இயக்கத்தின் வரவு செலவு கணக்கை காட்டவில்லை.
- நாதாரிகளா.. 20 வருடமாக என்ன புடுங்கிகொண்டா இருந்திங்க? அவர் போராட்டம் நடத்த போகிறார் என்றதும் தான் நியாபகம் வந்ததா?
- உண்ணாவிரதம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறார்.
- தங்கபாலுக்கும் அந்த கட்சியில உள்ள ஒருத்தருக்கும் சண்டைனா ரோட்டுல வந்து சாலைய மறைக்கிறனுங்க, நில அபகரிப்புனு கைது பன்னினா அதுக்கு மறியல், அப்பலாம் பாதிக்கபடாத மக்களா இப்ப பாதிக்க படுறாங்க.
- முதலில் அவர் ஊழல் செய்யாதவர் என நிருபிக்கடும். அப்புறம் போராடடும்.
- ஒரு திருடன் (வால்மீகி) எழுதின ராமாயணத்தை ஏத்துக்குறோம். ராமாயணத்தை பார்த்த நாம் வால்மீகியின் வாழ்கையை கண்டுகொள்ளவில்லை. அவன் திருடனாகவே இருந்தாலும் அவன் சொன்ன கருத்தை பார்த்தோம்.
- ஊழலுக்கு எதிராக போராட இவர் என்ன காந்தியா ?
- காந்தி மட்டும் தான் போராட வேண்டுமா? . இப்ப காந்தியே வந்தாலும் அவர் மேல ஊழல் சொல்லுவாங்க.
- தவறே செய்யாதவந்தான் ஊழலுக்கு எதிரா போராடவேண்டுமெனில் பிறந்த குழந்தைதான் போராடவேண்டும்.
- சட்டதை இயற்றவேண்டியது நாடாளும் மன்றமும், அமைசரவையும் தான். தனிமனிதன் சொல்லுவதை சட்டமாக்க முடியாது.
- போங்கடா கொய்யாலுங்கலா.. இப்ப உள்ள சட்டமே ஆங்கிலயேர்களிடம் இருந்து சுட்டது.
- அமைச்சரவையில் உள்ள பாதிபேர் தீகார்ல இருக்காங்க. மீதி உள்ளவங்களும் விரைவில் போவாங்க போல.. இவர்கள் எப்படி ஊழலுக்கு (தனக்கு)எதிரா சட்டம் ஏற்றுவார்கள்?
“அன்னா ஹசாரே செய்வது தவறு என சொல்பவர்களே உங்கள் மனசாட்சிய தொட்டு சொல்லுங்கள். நீங்கள்(என்னையும் சேர்த்து) நல்லவரா? நீங்கள் தெரிவு செய்த மக்கள் பிரதிநிதிகள் நல்லவர்களா?”
இவை என் சொந்த கருத்துகள். தவறு எனில் பிண்னுட்டத்தில் குறிப்பிடவும்.
Tweet |
அமைச்சரவையில் உள்ள பாதிபேர் தீகார்ல இருக்காங்க. மீதி உள்ளவங்களும் விரைவில் போவாங்க போல.. இவர்கள் எப்படி ஊழலுக்கு (தனக்கு)எதிரா சட்டம் ஏற்றுவார்கள்?
ReplyDeleteசரியான கேள்வி
>>மனசாட்சிய தொட்டு சொல்லுங்கள். நீங்கள் நல்லவரா?
ReplyDeleteஹி ஹி இல்லை
அண்ணா ஹஜாரேவுக்கு எதிரான கருத்துக்கள் எல்லாமே ஊழலுக்கு ஆதரவான கருத்துக்கள் என்று பலர் ஆவேசப்படுவதைப் பார்க்கிறேன். :-)
ReplyDeleteஊழல் ஒழிய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு சட்டத்தால் ஒட்டுமொத்தமான ஊழலையும் ஒழிக்க முடியாது என்று அண்ணா ஹஜாரேயை விமர்சிக்கிற நான் மட்டுமல்ல; சட்ட வல்லுனர்களே தெரிவித்திருக்கிறார்கள்.
பிரச்சினை ஊழலை ஒழிப்பது மட்டும் என்றால் சரி. பத்துப் பேர் சேர்ந்து ஒரு சட்டத்தைத் தயார் செய்து "இதைத்தான் நீ அமல்படுத்த வேண்டும்; இல்லாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம்," என்றெல்லாம் டிராமா நடத்துவது, பல மொழிப்பிரச்சினைகள், மதப்பிரச்சினைகள், ஜாதீயவாதங்கள், பிராந்தீய தீவிரவாதம் ஆகியவை நிரம்பிய இந்தியாவில் ஒரு அபாயகரமான முன்னோடியைத் தோற்றுவிக்கும்.
அப்புறம், ’என் ஒரு சட்டத்தை நிறைவேற்ற நான் நாட்டிலிருக்கிற எல்லா சட்டத்தையும் மீறுவேன்," என்று மார்தட்டுவது போக்கிரித்தனம்.
எல்லாவற்றையும் விட, "சாகும்வரை உண்ணாவிரதம்," என்று ஆரம்பித்து பிறகு "காலவரையற்ற உண்ணாவிரதம்,’ என்று சமாளித்து, இப்போது கடைசியாக "உடல்நிலை சரியாக இருக்கும்வரை உண்ணாவிரதம்’ என்றளவுக்கு கேலிக்கூத்துகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கிற புண்ணியவான்கள், தங்களது பேச்சுக்களை நம்பி தெருவில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான தொண்டர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இறுதியாக, எந்த அடிப்படைக் காரணங்களுக்காக அரசின் லோக்பாலை எதிர்த்தார்களோ, அதே காரணங்களோடு சமரசம் செய்துகொண்டபிறகும், மக்களை இன்னும் இருட்டில் வைத்திருக்க முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
விமர்சனம் செய்பவன் அயோக்கியனாக இருந்தாலும், அவனுக்கு வாக்குரிமை இருக்கிறது. அதே போல அவனுக்குக் கருத்துரிமையும் இருக்கிறது.
அருமை
ReplyDelete//20 வருடமாக என்ன புடுங்கிகொண்டா இருந்திங்க? அவர் போராட்டம் நடத்த போகிறார் என்றதும் தான் நியாபகம் வந்ததா?//
ReplyDeleteஇவர் 40 வருடங்களாக லோக்பால் சட்டம்பற்றிப் பேசாமல் இருந்தது ஏன்? ராஜீவ் காந்தியிடமிருந்தும், ஷரத் பவாரிடமிருந்தும் விருது வாங்கியபோதெல்லாம் சும்மாயிருந்தவருக்கு இப்போது என்ன வந்தது? - என்று பலர் கேட்கிறார்கள். :-)
வட இந்தியாவில் அண்ணாவின் போராட்டத்துக்குக் கூடுகிற கூட்டம் தென்னிந்தியாவில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல வட இந்தியாவில் தான் அதிகமாக அண்ணாவுக்கு எதிரான கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. மக்கள் போராட்டம் என்று ஒருவர் அறிவித்தால், அது குறித்த விமர்சனங்கள் எழத்தான் செய்யும்.
ReplyDeleteசில கருத்துக்களைப் பகிர வாய்ப்பளித்ததற்காக நன்றி நண்பரே!
மக்களைத் திசைதிருப்பும் அண்ணா ஹஜாரேயைக் குறித்துத் தொடர்ந்து (விமர்சித்து) எழுதுவேன். :-)) எனது சமீபத்திய இடுகை கூட விமர்சனம் தான்:
பல்பு வாங்கலியோ பல்பு!
http://settaikkaran.blogspot.com/2011/08/blog-post_2217.html
காரமான பதிவு தான்
ReplyDeleteதமிழ் மணம் 5
ReplyDelete@சேட்டைக்காரன்
ReplyDeleteஉங்கள் கருத்தில் பலவற்றை ஏற்று கொள்கிறேன்
@M.R
ReplyDeleteநன்றி
@சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteஉண்மைய ஒத்துகொண்ட தல வாழ்க
@சேட்டைக்காரன்
ReplyDelete@ //சேட்டைக்காரன்//
யார் ஆரம்பிபது எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமலே பல விஷயங்கள் மூழ்கி போகின்றன. எனவே முன்னெடுத்து செல்லும் ஒருவரை ஆதரிப்பதே என் போன்ற சாமானியரின் கடமை. இப்போது நாம் குரல் கொடுக்கல என்றால் எப்போதுமே நம் இந்தியாவை காப்பாற்ற முடியாது. உங்கள் கருத்துக்களில் நியாயம் இருந்தாலும், நாம் கண்மூடித்தனமாக எப்படி ஓட்டளிக்கிறோமோ அதேபோல இந்த நேரத்தில் ஹசாரேவுக்கு ஆதரவளிக்கனும் என்பது என் கருத்து.
வணக்கம் பாஸ்,
ReplyDeleteகாத்திரமான ஒரு விவாதத்தினை முன் வைத்திருக்கிறீங்க.
ஹசாரேயின் போராட்டம் பற்றிய தெளிவு எனக்குப் போதாமையால்,
மெதுவாக எஸ் ஆகிறேன்.
காரமான விவாதம்...
ReplyDeleteஎது எப்படியோ
ஊழலுக்கு எதிரா சட்டம் வந்தா சரி
//யார் ஆரம்பிபது எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமலே பல விஷயங்கள் மூழ்கி போகின்றன. எனவே முன்னெடுத்து செல்லும் ஒருவரை ஆதரிப்பதே என் போன்ற சாமானியரின் கடமை. இப்போது நாம் குரல் கொடுக்கல என்றால் எப்போதுமே நம் இந்தியாவை காப்பாற்ற முடியாது. உங்கள் கருத்துக்களில் நியாயம் இருந்தாலும், நாம் கண்மூடித்தனமாக எப்படி ஓட்டளிக்கிறோமோ அதேபோல இந்த நேரத்தில் ஹசாரேவுக்கு ஆதரவளிக்கனும் என்பது என் கருத்து//
ReplyDeleteஉங்கள் கருத்தை மதிக்கிறேன் நண்பரே! ஆனால், அதை ஏற்க முடியாது. நன்றி. :-)
அருமை
ReplyDeleteசவுக்கடி பதிவு..
ReplyDeleteஅசத்தல்
ReplyDeleteநீங்க சொன்னதில் தவறு ஏதும் இல்லை.நல்ல கருத்தைதான் சொல்லியிருக்கீங்க..
ReplyDeleteஅருமையான பதிவு....வாழ்த்துக்கள்
ReplyDeleteயோசிக்கவைக்கும் பதிவு...ஏண்டா வந்தோம்னு இல்ல...ஹிஹி
ReplyDeleteஅசத்தல் கேள்விகள்
ReplyDelete//
ReplyDelete- அமைச்சரவையில் உள்ள பாதிபேர் தீகார்ல இருக்காங்க. மீதி உள்ளவங்களும் விரைவில் போவாங்க போல.. இவர்கள் எப்படி ஊழலுக்கு (தனக்கு)எதிரா சட்டம் ஏற்றுவார்கள்?//
யோசிக்க வேண்டிய விஷயம்....
கலக்கல்...கலக்கல்
ஹைலைட் பண்ணின கமெண்ட்ஸ் எல்லாம் சூப்பர்!
ReplyDeleteசவுக்கடி பதிவு...கலக்கல்...
ReplyDeleteநல்ல காட்டமான பதிவுதா. ஊழலுக்கு எதிராக
ReplyDeleteயாராவது குரல் கொடுத்துதானே ஆகனும்.
மக்களின் தேவை என்னவென்பதே மக்கள் இயக்கங்கள் தான் முடிவு செய்யும். ஓட்டுப் பெற்று ஆட்சிக் பீடத்தில் அமர்ந்தவுடன் அனைவரும் தம் (குடும்ப) மக்களை தான் நினைவுக் கூறுகின்றனரே தவிர பொதுமக்களை அல்ல.
ReplyDeleteஎவர் முன்னெடுக்கின்றனர் என்பதை பின்னர் ஆய்வோம். எந்நோக்குடன் முன்னெடுக்கின்றனர் என்பதறிந்து வழிமொழிவோம்.
அவர் யார் என்பது இப்போது முக்கியமில்லை. அவர் என்ன செய்ய நினைக்கிறார் என்பதுதான் முக்கியம். நல்லது செய்ய நாம் தேர்ந்தெடுத்த அனைவரும் திருடர் ஆகிவிட்ட நிலையில் இவரை மாதிரி பொதுநலன் கருதி ஒருவர் போராடும்போது அவருக்கு நமது ஆதரவை தெரிவிப்பது நாகரீகம் நமது கடமையும் கூட.
ReplyDeleteநல்ல கருத்தான விஷயங்கள் .என்னை பொறுத்தவரை எல்லோருமே சுயநல வாதிகள் தான் ,
ReplyDeletevala vetti illaya? anna asaraku
ReplyDeleteஅப்படி போடு தல காங்கிரஸ் கவிழ்க்க போராடு..........
ReplyDeleteGood one.
ReplyDelete