> என் ராஜபாட்டை : jayalalitha

.....

.
Showing posts with label jayalalitha. Show all posts
Showing posts with label jayalalitha. Show all posts

Monday, October 31, 2011

விஜய் படத்திற்க்கு தடை : ஜெ. அதிரடி





வேலாயுதம் படத்தில் “ரத்ததின் ரத்தமே.. “ பாடலில் “சென்னை சங்கமத்தில் தங்க மெடல் வாங்கி வந்தேன்” என ஒரு வரி வருகிறது. சென்னை சங்கமம் கனிமொழி நடத்தியது எனவே அந்த வார்த்தையை நீக்க வேண்டும் அல்லது படத்தை தடை செய்வேண். ஜெயலலிதா.   # இமாஜினிஷன்.


மங்காத்தா படத்தில் அதிகமாக புகைபிடிக்கும் காட்சிகள் உள்ளது எனவே அந்த படத்தை தடை செய்யவேண்டும் அன்புமணி # சாரி கொஞ்ச நாள் தூங்கிடேன்.

7 ஆம் அறிவு படத்தில் தமிழர்கள் திருப்பி அடிக்க வேண்டும் என சூரியா கூறுவது வன்முறையை தூண்டும் வசனம் எனவே அந்த படத்தை தடை செய்ய வேண்டும்.- தங்கபாலு  # ஏன்பா நான் சரியா பேசுறேனா?

“சோனியா, சோனியா சொக்கவைக்கும் சோனியா” என பாடி எங்கள் தலைவிய கிண்டல் செய்த ரஹ்மானை கைது செய்ய வேண்டும் # ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


“வ- குவார்டர் கட்டிங்” என பெயர் வைத்தது என்னை கிண்டல் செய்வது போல் உள்ளது  # விஜய்காந்த்



“ஜில்லாக்” பாடலில் “நாட்டு கட்டை, டவுனு கட்டை இரண்டும் கலந்த செம கட்டை..” என மரத்தை பற்றி பாடி எங்களை கிண்டல் செய்கிறார் விஜய். # ராமதாஸ்.






விஜய் வேலாயுதத்தில்  “ஜில்லாக்” பாடலில் "சூரியனே தேவையில்லை .." என பாடியதால் தான் நாங்கள் தோற்றோம் ..  # கருணாநிதி




Saturday, August 13, 2011

ஜெயலலிதா உண்ணாவிரதம்




காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதம்.

நடுவர் மன்றம் 1991 ம் ஆண்டு ஜீன் மாதம் 25 ம் தேதி “ஆண்டுதோறும் கர்னாடகா தமிழ் நாட்டிர்க்கு  205 டி.எம்.சி தண்ணிர் தர வேண்டும் “ என தீர்ப்பு கூறியது. ஆனாலும் கர்நாடகா தண்ணிர் தரவில்லை. தமிழக அரசு பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை.

இந்த பிரசனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த கர் நாடகாவை நீர்பந்திக்க வேண்டும் என ஜெயலலிதா தலமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தீர்மாணம் நிறவேற்றப்பட்டது.

எம்.ஜி.ஆர் சமாதியில் உண்ணாவிரதம்

இந்த உண்ணவிரதம் மறந்த புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் சமாதியில் எதிரே நடைபெற்றது. காலை 9.15 க்கு துவங்கியது. உண்ணாவிரத செய்தி யாருக்கும் தெரியபடுத்தபடவில்லை. போராட்டம் துவங்கியபின்தான் பலரும் அதன் பின் உண்ணாவிரத போராட்டதில் கலந்துகொண்டனர்.

கவர்னர் சென்னாரெட்டி வேண்டுகோள் விடுத்தும் ஜெயலலிதா மறுத்துவிட்டார். தி.க. தலைவர் வீரமணி, பழ.நெடுமாறன், ஆர்.வெங்கட்ராமன் என பல அரசியில் தலைவர்கள் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

மத்திய நீர்வள துறை அமைச்சர் வி.சி.சுக்லா நேரில் வந்து 3 கமிட்டி அமைத்து தீர்ப்பு கண்கானிக்கபடும் என உறுதி அளித்ததை தொடர்ந்து 4 நாள் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

டிஸ்கி 1 : எப்பொழுதோ நடந்ததை இப்ப ஏன் எழுதினேன் என்றால் நேற்று தினதந்தியின் வரலாற்று சுவடுகள் புத்தகம் படித்தேன். இந்த விஷயம் அதில் இருந்தது.

டிஸ்கி 2: சில நாட்களுக்கு முன் பதிவர் அரசகுளத்தான் திரு ரஹீம் கஃஸாலி எழுதிய ஒரு பதிவின் தாக்கதால் அதுபோல ஒனறு எழுதினேன்.
(நன்றி : திரு ரஹீம் கஃஸாலி)

டிஸ்கி 3: தலைப்பை பாத்து எமாந்து இருந்தால் அதற்க்கு சங்கம் பொறுப்புஇல்லை. (இப்படிக்கு : சங்கம் இருக்க கூடாது என நினைப்போர் சங்கம்)