> என் ராஜபாட்டை : July 2012

.....

.

Tuesday, July 31, 2012

Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

நாம் நமது கணினியில் பல முக்கியமான கோப்புகளை வைத்திருப்போம் . நாம் கஷ்டபட்டு சேமித்த பல மென்பொருள்கள் நமது கணினியில் வைத்திருப்போம் .இந்நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் HARD DISK பார்மட் ஆகலாம் . அல்லது தவறாக நாமே அழித்துவிடலாம் . அல்லது வைரஸ் பிரச்சனையில் அழியலாம். இது போன்ற சூழலில் நாம் அழிந்த கோப்புகளை திரும்ப பெற உதவும் மென்பொருள் MiniTool Power Data Recovery Software. இது ரூபாய் 2000 மதிப்புடையது .நமது ராஜபாட்டை வாசகர்களுக்காக இலவசமாக வழங்குவதில் பெருமை அடைகிறோம் .
1. கிழே உள்ள டவுன் லோட் லிங்க்இல MiniTool Power Data Recovery Software தரவிறக்கி கொள்ளவும் .

2. அதில் SETUP.EXE முலம் INSTALL செய்யவும் .

 
3. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் உங்களுக்கு தேவையான பகுதியை தெரிவு செய்யவும் .



4. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் நீங்கள் தவறுதலாக அழித்த கோப்புகள் தெரியும் .

5. இந்த மென்பொருளை முழுமையான பயன்பாடுகளுடன் பயன்படுத்த அதை REGISTER செய்ய வேண்டும் . கீழே  உள்ள SERIAL KEY FOR MiniTool Power Data Recovery Software என்ற WORD DOCUMENT இல உள்ள SERIAL KEY பயன்படுத்துங்கள் .





மென்பொருள் தரவிறக்க (For Download ) : MiniTool Power Data Recovery


Serial Key Download :   Serial key for Minitoll Data Recover


டிஸ்கி : இந்த பதிவு பிடித்திருந்தால் G+, FACEBOOK, TWITTER இல் பகிரவும் .


டிஸ்கி : முன்பு ஒருமுறை FOLDERLOCK 7 இதுப்போல வெளியிட்டேன் . சமிபத்தில் கூகிள்காரன் ஒரு கடிதம் அனுப்பி அதை எடுக்க சொன்னான் . எனவே இதையும் எடுக்க சொல்லலாம் எனவே உடனே பதிவிறக்கி கொள்ளவும்

Saturday, July 28, 2012

கண்ணை நம்பாதே ...

உங்கள் கண்களை கட்டி போடும் அருமையான 3 D படங்கள்  


டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

சினிமா ........சினிமா ....

நெல்லை - பதிவர்கள் செய்த அழும்புகள்

 

உங்களுக்கு வயதாகிவிட்டதா ? ஒரு டெஸ்ட்.

 

 



இதையும் படிக்கலாமே :

Wednesday, July 25, 2012

சினிமா ........சினிமா ....


 
தன் கேரியரையே புரட்டிப் போட்ட படம் என்று கமல்ஹாசன் சொன்ன அபூர்வ சகோதரர்கள் படத்தில் - அவருக்கு அம்மாவாக முதலில் நடித்தது காந்திமதிதான். அவருடன் ஒரு பாடல் காட்சியே ஷூட் செய்த பிறகு திரைக்கதையை மாற்றிய கமல், காந்திமதிக்கு பதில் மனோரமாவை அம்மாவாக மாற்றினார்.

கமல்
இதற்காக காந்திமதியிடம் பகிரங்கமாய் மன்னிப்பு கேட்டார். ஆனால் காந்திமதி இதற்கெல்லாம் வருத்தப்படவில்லை. அவர் இறக்கும் வரை, கமல் தன்னுடைய மகன் போல என்றே சொல்லி வந்தார். எல்லா சினிமா பிரமுகர்களிடமும் அன்பாய் நேசிக்கும் வெகுளி மனசு அவருக்கு என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்
 
"வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படம் வெளியாகும் வரை, நாடகமாக மட்டும் 100 முறை மிகமிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திரைப்படம் வெளிவந்து ஓடிமுடிந்தபின்பும் ஒரு 12 முறை நடத்தப்பட்டது.

இந்த
112 முறையில், இந்நாடகத்தின் அபார வசூல் மூலம் நடிகர் திலகம் பல்வேறு ஸ்தாபனங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் பல்வேறு நற்செயல்களுக்கும் அள்ளி அளித்துள்ள நன்கொடை மட்டும் ரூபாய் முப்பத்து இரண்டு லட்சம். இத்தொகை இன்றைய பொருளாதார மதிப்பீட்டில் பற்பல கோடிகளுக்குச் சமம்.

வீர
பாண்டிய கட்ட பொம்மன் நாடகத்தில் வீர வசனம் பேசும் நடிகர் திலகத்தின் புகைப்படம் உங்களுக்காக மேலே .


"முத்த காட்சிகளை அனுமதிப்பதா வேண்டாமா என்று தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்று நடிகர் திலகத்திடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது 1967 வருடம்.

அதற்க்கு
"முத்தம் கொடுப்பதை காட்டவே கூடாது. ஆனா நாம முத்தம் கொடுத்துகிட்டதா ஜனங்க நினைக்கணும். அந்த மாதிரிதான் நடிக்கணும். மூடி காட்டுவதுதான் கலை. பச்சையா, உள்ளதை அப்படியே காட்டினா அது கலை ஆகாது. அதனால முத்த்ம் கொடுப்பதை எல்லாம் திரையிலே காட்ட கூடாது என்பதுதான் என் தாழ்மையான வேண்டுகோள்" என்று பதில் அளித்திருக்கிறார் நடிகர் திலகம்.

இந்த
கேள்வியை கேட்டவர் யார் தெரியுமா ???? நம்முடைய இப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. 1967-ம் வருட பொம்மை ஆண்டு மலர் பேட்டியில் "பொம்மை" முதலாம் ஆண்டு மலரில் 'நக்ஷத்திரம் கண்ட நக்ஷத்திரம்' என்கிற புதுப் பகுதிக்காக இந்த சிறப்பு நேர்காணல் நடத்த பட்டுள்ளது.


"ஒரு கைதியின் டைரி " படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிக்க "ஆக்ரி ராஸ்தா" என்கிற பெயரில் எடுக்கப்பட்டது. அதன் இயக்குனர் பாக்யராஜ். அப்போது ஒரு காட்சியில், ஒரு முழு நீள வசனத்தை ஆங்கிலத்தில் பேசுமாறு அமிதாபிடம் சொல்லி இருக்கிறார் பாக்யராஜ். ஆனால் அதற்க்கு கடும் மறுப்பு தெரிவித்த அமிதாப், ஆங்கிலத்தில் பேசி நடித்தால் ஹிந்தி ரசிகர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும் சொல்லி விட்டாராம். இதையடுத்து இருவருக்குமிடயே ஒரு நீண்ட விவாதம் நடந்து , இறுதியில் பாக்யராஜ் சொல்படி ஆங்கிலம் பேசி நடித்துள்ளார் அமிதாப்.

படம்
வெளியாகி அந்த குறிப்பிட்ட காட்சிக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்க, அதிகாலை இரண்டு மணிக்கு பாக்யராஜுக்கு போன் செய்து பாராட்டியிருக்கிறார் அமிதாப். தன்னுடைய படங்களில் இரண்டு வரி கூட ஆங்கிலம் பேசி இராத அமிதாப், ஒரு நீண்ட காட்சியில் ஆங்கிலம் பேசியது உங்களால் மட்டுமே என்று பாக்யராஜை பாராட்டி இருக்கிறார்கள் ஹிந்தி திரையுலகின் பிரபல வசனகர்த்தாக்கள் சலீம் , ஜாவீத் இருவரும்.

ஒரு
இயக்குனராக தான் நினைப்பதை கொண்டு வர வேண்டும் என்பதில் எத்தனை பிடிவாதம் தனக்கு உண்டு என்பதை ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறியுள்ள பாக்யராஜ், இந்த சம்பவத்தையும் தெரிவித்துள்ளார்.

நன்ன கண்ட எல்லி (என் கணவன் எங்கே) என்ற கன்னடப் படத்தில் ஒரே பாடலில் 14 மொழிகளில் பாடியிருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி.


தகவல் உதவி : Facebook Group   

Monday, July 23, 2012

ஒரு காதலன் , ஒரு காதலி



காதலன் : நேற்று உன் வீட்டுக்கு போயிருந்தேன் .. நம்ம திருமணம் நடக்காதுன்னு நினைக்கிறன் .

காதலி : ஏன் எங்க அப்பாவை பாத்தியா ?

காதலன் : இல்லை , உன் தங்கச்சிய பார்த்தேன் .

=========================================================


காதலி : நேற்று நம்ம காதலி பற்றி எங்க வீட்டுல மெதுவா சொன்னேன் .

காதலன் : ஒ .. என்ன சொன்னாங்க ?

காதலி : மெதுவா சொன்னதாலா யார் காதுளையும் விழலாயாம் .

=========================================================


காதலி : கள்ள காதல்னா என்னா ?

காதலன் : ஏன் கேட்குற ?

காதலி : சும்மா தெரிஞ்சு வச்சுக்க தான் .

காதலன் : சீ .. தெரியாமா வச்சுகுரதுதான் கள்ள காதல்

============================================================

தத்துவம் :

பொண்ணுங்க மனசு தோசை போல ஒரு பக்கம் வெள்ளை ஒரு பக்கம் கருப்பு

ஆனா பசங்க மனசு இட்லி போல எப்படி பார்த்தாலும் வெள்ளைதான்


காதலன் : உனக்காக நான் பெத்தவங்களை விட்டு விட்டு வந்துள்ளேன் .

காதலி : போடா .. உனக்காக நான் பெத்ததுகளையே விட்டுடு வந்துருக்கேன் .

===============================================================
பேஷன்ட் : நர்ஸ் நீங்க ஏன் இதையத்தையே திருடிடிங்க ..

நர்ஸ் : போடா லூஸ் .. டாக்டர் உன் கிட்னியயே திருடிட்டார் .

==================================================================
தத்துவம் :

லவ்வுல
ஒன் சைடு இருக்கலாம்
டூ சைடு இருக்கலாம் ஆனால்

சூசைடு மட்டும் இருக்கவே கூடாது .

=======================================================

முத்தி போன காதல் கவிதை :

சோதித்த மருத்துவர் அதிர்ந்தே போனார்
அவர் ஸ்டெதஸ்கோப்பில்
கேட்டது
உன் பெயர் .

===================================================================

மனைவி : ஏன்ங்க .. சனி பெயர்சிக்கும் , குறு பெயர்சிக்கும் என்ன வித்தியாசம் ?

கணவன் : நீ ஊருக்கு போனா அது சனி பெயர்ச்சி , அதுவே நீ உன் தங்கையுடன் திரும்பி வந்தா அது குறு பெயர்ச்சி .


Thursday, July 19, 2012

கேரட் : தெரியுமா உங்களுக்கு ?



கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.

கேரட் ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது. பல நூற்றாண்டுகளில் பலவித மாறுதல்களுக்குள்ளான காரட் துவர்ப்பு நீக்கப்பட்டு, இனிப்புடன் கிடைக்கக்கூடிய காய் வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

கேரட் செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது. கேரட் பச்சையாகக் கூட சாப்பிடக்கூடியது.

பொதுவாக அனைத்து வீடுகளில் சமைக்கக் கூடிய கேரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி விவரங்களை இப்போது பார்ப்போம்.

100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்:

  • சக்தி 41 கலோரிகள்
  • கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்
  • சர்க்கரை 5 கிராம்
  • நார்சத்து 3 கிராம்
  • கொழுப்புச் சத்து 0.2 கிராம்
  • புரோட்டின் 1 கிராம்

  • வைட்டமின் A - 93% (835 மைக்ரோ கிராம்)
  • பீட்டா கரோட்டின் - 77% (8285 மைக்ரோ கிராம்)
  • வைட்டமின் B1 - 3% (0.04 மில்லி கிராம்)
  • வைட்டமின் B2 - 3% (0.05 மில்லி கிராம்)
  • வைட்டமின் B3 - 8% (1.2 மில்லி கிராம்)
  • வைட்டமின் B6 - 8% (0.1 மில்லி கிராம்)
  • வைட்டமின் B9 - 5% (9 மைக்ரோ கிராம்)
  • வைட்டமின் C - 12% (7 மில்லி கிராம்)
  • கால்சியம் - 3% (33 மில்லி கிராம்)
  • இரும்புச் சத்து - 5% (0.66 மில்லி கிராம்)
  • மங்கனீஷ் - 5% (18 மில்லி கிராம்)
  • பாஸ்பரஸ் - 5% (35 மில்லி கிராம்)
  • பொட்டாசியம் - 5% (240 மில்லி கிராம்)
  • சோடியம் 2.4 மில்லி கிராம்

இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. 
        
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் "ஏ" விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள பாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா பெர்ணாண்டஸ் கூறியதாவது: இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார்.
நன்றி  : மெயில் அனுப்பிய நண்பனுக்கு

Tuesday, July 17, 2012

T.N.P.S.C தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் ....


அன்பு நண்பர்களே ..

நம்மில் பலர் அரசு தேர்வு துறை நடத்தும் தேர்வுகளுக்குதயாராகி கொண்டு இருப்போம் . பலர் பல புத்தகங்களை படிப்பிர்கள் . ஆனால் ஒரு மாதிரி (Model Exam) எழுதுங்கள் என்றால் அலுப்பாக அல்லது பிடிக்காமால் போகலாம் . இணையத்தில் இது போல தேர்வு எழுத சில தளங்கள் உள்ளது . இவற்றில் சில நேரடியாக தேர்வுகளை எழுதலாம் , சில நீங்கள் அதில் உறுப்பினர் ஆனால் தான் எழுதலாம் .

இதில் நீங்கள் தேர்வு எழுதி உங்கள் மதிப்பென்னையும் , சரியான விடைகளையும் தெரிந்து கொள்ளுங்கள் . உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரிய படுத்துங்கள் . விரைவில் பழைய கேள்விதாள்கள் மற்றும் மாதிரி வினா தட்கல் தொகுப்பை வழங்குகிறேன் .

உங்கள் திறமையை இங்கே சோதித்து பாருங்கள் :

பொதுஅறிவு டெஸ்ட் 1 



பொதுஅறிவு டெஸ்ட் 2 



பொதுஅறிவு டெஸ்ட் 3  




பொதுஅறிவு டெஸ்ட் 4 



பொதுஅறிவு டெஸ்ட் 5  



பதிவு செய்து தேர்வு எழுத 



ஜெயம் அகதமி யில் டெஸ்ட் எழுத 




ONLINE TEST IN TAMIL 


நான்  பார்த்தவரையில் மிக சிறந்த தளம் இது :




டிஸ்கி : இதுபோல வேறு ஏதாவது தளங்கள் இருந்தால் பின்னுடத்தில் சொல்லலாம் .

Friday, July 13, 2012

இலவசம் ..இலவசம் ..(மென்பொருள்கள் )


நாம் இணையத்தில் உலவும் போது நமக்கு பல மென்பொருள்கள் பயன்படுகின்றது . இணையம் இல்லாத கணினியிலும் மென்பொருள் கண்டிப்பாக தேவை . மென்பொருள்களை பணம் கொடுத்து வாங்கும் கெட்ட பழக்கம் நமக்கு கண்டிப்பாக இருக்காது .( முக்கியமா எனக்கில்லை ). என்னை போல உள்ள பலருக்கு பயன்படும் வகையில் இலவசமாக பல மென்பொருள்களை தரும் தளங்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன் .


        இங்கு பலவகைபட்ட மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கும் .
       இங்கு செல்ல :  Click Here


         இங்கு ஆண்டி வைரஸ் முதல் அனைத்து விதமான மென்பொருளும் 
       கிடைக்கும் . பயன்படுத்தி பாருங்கள் :

        இங்கு செல்ல :  Click Here 


       இதுவும் பல மென்பொருள்களை இலவசமாக தரும் ஒரு தளம் 
         இங்கு செல்ல :  Click Here 

          
       உங்கள் கணினிக்கு தேவையான பல மென்பொருள்கள் இங்கே உள்ளது .

      இங்கு செல்ல :  Click Here  

         
     இங்கு குவிந்து இருக்கும் மென்பொருள்களுக்கு அளவே இல்லை . போய் பாருங்கள் , மலைத்து போவிர்கள் ..

      இங்கு செல்ல :  Click Here  


இங்கு சொன்னது ஒரு துளிதான் இன்னும் பல தளங்கள் உள்ளது .. விரைவில் அதைப்பற்றியும் பார்ப்போம் .

Wednesday, July 11, 2012

அமெரிக்காவை ஆச்சரிய படுத்திய தமிழன் : கே.ஆர். ஸ்ரீதர் (K.S.SRIDHAR)


கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமேஇவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது . இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? 
கே.ஆர். ஸ்ரீதர்....திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தி ல் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தி ல் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப்பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகள ைக் கண்டுபிடிப்பது எப்படி?என்பது பற்றி ஆராய்ச்சிசெய்வதே ஸ்ரீதரின் வேலை.முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்தஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டத ு. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை . அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்கு ள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர்பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
 
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர்போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக் கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக் கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்து க்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை க் கொண்டு குறைவான செலவில்மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார். 

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளேஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம ். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள் ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆ ப்பிரிக்காவில் ஏதோ ஒருகாட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால்அவர்கள் மின் இணைப்புக்கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல்ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படு வதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில்அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில ் கையெழுத்திட்டது . 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தை ப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தை ப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்த ு ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது . இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிற தாம் E bay.
 
இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000டாலருக்குள் இருக்கும்''என்கிறார் ஸ்ரீதர். அந்தஅளவுக்கு விலை குறையுமாஎன்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தகவல் உதவி : FACEBOOK

Monday, July 9, 2012

அஜித் : நடிகனா ? மனிதனா ?

இப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் இப்போது இவருக்கு வந்திருக்கும் இந்த திடீர் செல்வாக்கு ரஜினி, எம்.ஜி.ஆர் போல் ‘திரையில் முகம் காட்டினாலே படம் ஓடிவிடும்’ என்பது போன்ற செல்வாக்கா? ஒரு மிகச்சிறிய எனக்குத்தெரிந்த விதத்தில் அஜித்தின் செல்வாக்கை அனுகியிருக்கிறேன். பார்க்கலாம்..
சுமார் எட்டு வருடங்களுக்கு முன், அதாவது அஜித்தின் ஜனா என்கிற படம் ரிலீசான ஏப்ரல் 17, 2004, விஜய்யின் கில்லி ரிலீசான ஏப்ரல்14, 2004ம் நாளில் இருந்து ஆரம்பிப்போம். வில்லன் என்கிற வெற்றிப் படத்துக்குப் பிறகு கார் ரேஸ் மோகத்தில், அதில் சாதிக்க வேண்டும் என்கிற வெறியில் சினிமாவை கொஞ்ச காலம் மறந்து இருந்தார் அஜித். ரசிகர்களின் வற்புறுத்தலுக்காகவும் தன் கார் ரேஸ் செலவுக்காகவும் சரியா கதையை தேர்ந்தெடுக்காமல், ‘ஆஞ்சனேயா’, ‘ஜனா’ என்று வரிசையாக சறுக்க ஆரம்பித்தார். வில்லன் படம் கொடுத்த வெற்றியை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
இந்த நேரத்தில் தான் வசீகரா, பகவதி என்று மிகவும் சுமாரான படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த விஜய் ‘திருமலை’ என்று ஒரு ஹிட் கொடுத்தார். சொல்லப்போனால் அவர் தந்தை, விஜய்க்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார், தொடர்ந்து 4 படங்கள் 100நாட்களை கடந்து ஓடின என்று (ப்ரண்ட்ஸ் - 175 நாள், குஷி - 150 நாள், ப்ரியமானவளே - 125 நாள், பத்ரி - 100 நாள்).. அதற்குப் பின் தான் விஜய் சறுக்க ஆரம்பித்தார் வசீகரா, தமிழன், புதிய கீதை என்று.. கட்டாய வெற்றி தேவை என்கிற சூழலில் அவருக்கு இயக்குனர் ரமணா மூலம் அமைந்தது திருமலை வெற்றி. திருமலை ரிலீஸ் ஆன அதே நாளில் வந்தது தான் ஆஞ்சநேயா.. ‘வில்லன்’ பட வெற்றியை அஜித்துக்கு தக்க வைத்துக்கொள்ளத்தெரியவில்லை. அப்போது அவர் பேட்டிகளும் மிகவும் ‘ரா’வாக இருக்கும். ’நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், ‘எனக்கு சினிமாவ விட ரேஸ் தான் முக்கியம்’ என்று மனதில் பட்டதை எல்லாம் சொல்லி செமத்தியாக தன் இமேஜை கெடுத்துக்கொண்டார். இது நடந்தது 2003 தீபாவளியில்.
பின் 2004 சித்திரையில் தான் அந்த மாபெரும் வெற்றியும் படு மோசமானா தோல்வியும் நடந்தன. விஜய்க்கு கில்லி, அஜித்துக்கு ஜனா. ”ஜனா - the power machine னு பேர் வச்சதுக்கு பதிலா, ஜனா - the xerox machineனு வச்சிருக்கலாம்” என்று ஒரு பத்திரிகை ஓபனாகவே அசிங்கப்படுத்தியது. எல்லா சேனல் பத்திரிகைகளில் விஜய் பேட்டி, கில்லி டீம் பேட்டி என்று கலைகட்ட ஆரம்பித்தது. அஜித்தை சீண்டுவாரில்லை. அதே வருடத்தில் விஜய்க்கு உதயா என்றொரு ஃப்ளாப் வந்தாலும், கில்லியின் வெற்றி அதை மறைத்துவிட்டது. வருட கடைசியில் ‘மதுர’ படம் வந்து ரசிகர்களை திருப்திப்படுத்தி ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனால் அஜித்துக்கு அந்த வருட தீபாவளிக்கு வந்த ‘அட்டகாசம்’ ரசிகர்களை கூட சற்று ஏமாற்றிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நேரத்தில் தான் விஜய்க்கு என்று ஒரு மாஸ் உருவானது. அவர் என்ன நடித்தாலும் படம் ஹிட் என்கிற பெயர் வந்தது. 2005ல் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த 3 படங்களும் (திருப்பாச்சி, சச்சின், சிவகாசி) வெற்றி பெற்றன. சச்சின் சுமாரான வெற்றி தான். ஏன்னா அது சந்திரமுகியோடு போட்டி போட்டது.  அஜித் நடித்து இந்த வருடம் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வந்த “ஜீ” அட்டர் ஃப்ளாப் ஆனது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக அஜித்துக்கு ஒரு படம் கூட ஹிட் இல்லை. விஜய்க்கு கிட்டத்தட்ட அனைத்துப்படங்களும் ஹிட். அடுத்த ரஜினி, வசூல் மன்னன் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித்துக்கு எப்பவுமே இருக்கும் “ஓப்பனிங் கிங்” என்கிற பட்டம் கூட ஆட்டம் காண ஆரம்பித்தது.
2006ல் இருவரும் தைப்பொங்களில் பரமசிவன், ஆதி என்று மோதினார்கள். இரண்டு படங்களுமே தோல்வி என்றாலும், ஆதியை விட பரமசிவன் நன்றாக ஓடியது. 2006ல் ஆதியே சறுக்கியதால் விஜய் அந்த வருடம் அடுத்து படம் நடிக்காமல் காத்திருந்தார். அஜித்துக்கு இதே வருடத்தில் வந்த திருப்பதி ஏ.வி.எம். என்கிற பேனர் தயாரித்த காரணத்தால் 100நாட்கள் ஓட்டப்பட்டது. வருமா வராதா என்று காக்கவைத்த ‘வரலாறு’ தீபாவளிக்கு வந்து சக்கை போடு போட்டது. தான் ஒரு அஜித் ரசிகன் என்று கூறவே வெட்கப்பட்டவர்கள் இப்போது தான் கொஞ்சமாக வெளியே தைரியமாக சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த முறையும் அஜித் சறுக்கும் போது கே.எஸ். ரவிக்குமார் தான் வெற்றி கொடுத்து காப்பாற்றினார்.
ஆனால் அஜித்தால் இந்த வெற்றியையும் தக்க வைக்க முடியவில்லை. 2007 தைப்பொங்கலில் அஜித் ஆழ்வாராக வந்து, வந்த சுவடே தெரியாமல் போய்விட்டார். விஜய் போக்கிரியாக வந்து ரெக்கார்ட் பிரேக் ஹிட் கொடுத்தார்.
இந்த சூழலில் தான் சூர்யா வரிசையாக கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வேல் என்று வித்தியாசமான கதைகளில் நடித்து ’விஜய்க்கு நான் தான் சரியான போட்டி’ என்று வேகமாக முன்னேறினார். அஜித்தை அவர் ரசிகர்களைத்தவிர எல்லாரும் மறந்து விட்டார்கள். விஜய் மேலும் “ஒரே மாதிரி நடிக்கிறார்” என்கிற குற்றச்சாட்டும் வலுக்க ஆரம்பித்தது. 2007ல் பொங்களுக்கு வந்த வேல் என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அந்த வருடம் முழுக்க தாங்குவது போன்ற ஹிட்டை கொடுத்தார் சூர்யா. விஜய் தன் நடிப்புத்திறமையை (!!!!) காட்ட அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்தார். விஜய்யின் “என்ன நடித்தாலும் ஓடும்” என்கிற பிம்பம் இந்த இடத்தில் தான் உடைய ஆரம்பித்தது.
அஜித் வருடத்தின் முடிவில் பில்லா என்னும் பிளாக்பஸ்டர் கொடுத்து தப்பித்துவிட்டார். ஆனால் விஜய் அழகிய தமிழ் மகன் என்கிற ஒரே படத்தின் மூலம் எஸ்.எம்.எஸ் ஜோக் வரை வம்புக்கு இழுக்கப்பட்டார். 
2008, 2009, 2010ல் வரிசையாக குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று விஜய் அடுத்தடுத்து ஃப்ளாப்களை கொடுத்து, ஒரு காலத்தில் அஜித் ரசிகர்கள் தங்களை அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்ள எப்படி கூச்சப்பட்டார்களோ, கிண்டலுக்கு பயந்தார்களோ அதே நிலை இப்போது விஜய்க்கு வந்துவிட்டது. அதுவும் எந்த ஒரு நடிகனும் தன்னுடைய 50வது படத்தை சுறா மாதிரி கொடுக்க மாட்டான். அஜித் வழக்கம் போல பில்லா வெற்றியை தக்க வைக்க முடியாமல் ஏகன், அசல் என்று ஃப்ளாப் கொடுத்தாலும், அவருக்கு என்று இருக்கும் கூட்டம் தைரியமாகவே இருந்தது. ஏன்னா, விஜய்யும் இப்போ ஃப்ளாப் லிஸ்டில் தானே இருக்கிறார்.
இரு முக்கிய ஹீரோக்கள் தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்தாலும் “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற இடம் ஒருவருக்கு போய்த்தானே ஆக வேண்டும். அது இப்போது இருந்தது சூர்யா கையில். விஜய்க்கு எப்படி 2004, 2005 உச்சத்தில் இருந்ததோ சூர்யாவுக்கு 2008ல் இருந்து 2010 வரை அதே உச்சம் இருந்தது. விஜய் படத்துக்கு அஜித் ரசிகர்களும் அஜித் படத்துக்கு விஜய் ரசிகர்களும் பெரும்பாலும் போக மாட்டார்கள். ஆனால் அஜித், விஜய் இருவரின் ரசிகர்களும் சூர்யா படத்துக்கு போனார்கள். சூர்யாவிற்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் கம்மி என்றாலும் அவருக்கு,  குடும்ப ரசிகர்கள் நிறைய இருந்தனர். குடும்பம் குடும்பமா அவர் படத்தை பார்க்க ஆரம்பித்தனர். அவரும் வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் என்று பாக்ஸ் ஆபிஸை சிதறடித்துக்கொண்டிருந்தார். 

ஆனாலும் சூர்யாவுக்கும் அந்த “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற நீர்க்குமிழ் உடைய ஆரமபித்தது. அவரே அதற்கு காரணம். எல்லா வாரமும் எதாவது ஒரு பத்திரிகையில் பேட்டி, ஊறுகாய், தேங்காய் எண்ணெய், துணிக்கடை என்று எதையும் விட்டு வைக்காமல் விளம்பரம், தன்னடக்கம் என்கிற பெயரில் சுயபுகழ்ச்சி என்று வழமையான ஒரு நடிகன் தான் தானும் என்பதை நிரூபிக்க ஆரம்பித்தார். ”சூர்யா முகம் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது”,  என்று மக்களே வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கம் படத்துக்குப்பிறகு அவர் 2001 தீபாவளிக்கு நடித்த ஏழாம் அறிவு எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
சரி, இப்போது சூர்யாவிடமும் “என்ன நடிச்சாலும் ஹிட்” பட்டம் இல்லை. அஜித்தும் ஃப்ளாப் கொடுத்துவிட்டார். விஜய், காவலன் என்று ஒரு சுமாரான வெற்றிப்படத்தில் நடித்திருந்தாலும், வேலாயுதம் மறுபடியும் பழைய மாதிரி எஸ்.எம்.எஸ் ஜோக்குகளுக்கு அவரை ஹீரோவாக்கியது. அந்தப்பட்டம் அடுத்த லெவலில் இருக்கும் விக்ரமுக்கோ, சிம்புவுக்கோ தனுஷுக்கோ போகாமல் யாருமே எதிர்பாரா வண்ணம் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு சென்றது.
கார்த்தி நடித்திருப்பது இது வரை ஆறே ஆறு படம் தான். ஆனாலும் தன்னுடைய மூன்றாவது படத்தில் இருந்தே அவர் என்ன நடித்தாலும் ஓடும் என்கிற பிம்பம் வர ஆரம்பித்துவிட்டது. மக்களுக்கும் அவரின் அசால்ட்டான அலட்டல் இல்லாத நடிப்பு மிகவும் பிடித்துப்போய் விட்டது. 2011ல் அவர் நடித்த சிறுத்தை அனைவரையும் கவர்ந்து அவரையும் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் சேர்த்தது. 
கிட்டத்தட்ட தன் அண்ணன் செய்த அதே தவறை தம்பி கார்த்தியும் செய்ய ஆரம்பித்தார். எல்லா மேடைகளிலும் தோன்றி “என்ன மாமா சௌக்கியமா?” என்று நியூஸ் வாசிக்கும் பெண் “இன்றைய முக்கியச்செய்திகள்” என்று சொல்வதை போல் திரும்ப திரும்ப சொல்லி வந்தார். பேச்சிலும் கொஞ்சம் அலட்டல் தெரிய ஆரம்பித்தது. முன்னணியில் இருக்கும் நான்கு நடிகர்களுக்கும் (அஜித், விஜய், சூர்யா, கார்த்தி) 2011 ஓரளவு நல்ல வருடமாகவே இருந்தது. கார்த்தி வருட ஆரம்பத்தில் சிறுத்தை நடித்திருந்தார். ஆனல் வருடத்தின் பின் பகுதியில் வந்த மற்ற மூவரின் படங்கள் சிறுத்தையின் ஆக்ரோஷத்தை குறைத்தன. அதுவும் அஜித்தின் மங்காத்தா, எந்திரனுக்கு அடுத்தபடியாக வசூலில் சாதனை புரிந்தது.
விஜய், சூர்யா, கார்த்தி என்று அனைவரும் மறக்கடிக்கப்பட்டு எங்கு பார்த்தாலும் “தல”, “அஜித்” என்றே எல்லா பக்கமும் பேச்சுக்கள் வந்தன. மங்காத்தாவில் அஜித்தின் இமேஜ் பார்க்காத நடிப்பும், அவரின் இயல்பான உண்யான சுபாவமும் பலருக்கும் பிடித்திருந்தது. அஜித் என்கிற நடிகனை விட பலரும் அஜித் என்கிற மனிதனை ரசிக்க ஆரம்பித்திருந்தார்கள். இவை அனைத்திற்கும் மூல காரணம் ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக் தான். பலரும் அஜித்தைப் பற்றி அதிரிபுதிரியாக தங்களுக்குத்தெரிந்த உண்மைகளை பேச ஆரம்பித்தார்கள். அது ஒவ்வொரும் share செய்து share செய்து பரவலாக அனைவருக்கும் அவரின் குணம் புரிந்தது. இது போக கலைஞரின் பாராட்டு விழாவில் தைரியமாக “உங்க functionக்கு வரச்சொல்லி எங்கள மிரட்டுறாங்க ஐயா” என்று அவர் பேசியது, இத்தனை நாள் அவர் மீது காரணமே இல்லாமல் வெறுப்பை உமிழ்ந்த பத்திரிகைகளுக்கு கூட அவரை பாராட்ட ஒரு காரணமாய் அமைந்தன. இது அவருக்கும் பொது மக்களிடம் இருந்து கூட மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது. 
ரசிகர் மன்றத்தை கலைத்தது, அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தது, பேட்டி கொடுக்க மாட்டேன், விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன், படத்தை விளம்பரப்படுத்தி பேச மாட்டேன் என்று அவர் அடம் பிடித்தது, என்று அவர் செய்யும் ஒவ்வொன்றும் பொது மக்களிடம் அவரை உண்மையாக கொண்டு சேர்த்தன. ஒரு காலத்தில் திமிராக இருக்கிறார் என்று அவரை வெறுத்தவர்கள், இன்று அதே திமிருக்காக அவரை விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அஜித் என்று பேசினால் அவரைப் பிடிக்காதவர்கள் கூட அவரின் நல்ல பண்புகளைப் பற்றி பேசும் சூழல் தான் கடந்த ஒன்னரை ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இது வரை அவரின் கேரியரில் பார்த்தால், “என்ன நடித்தாலும் ஹிட்டு” என்கிற வட்டத்திற்குள் அவர் வந்ததே இல்லை. ஆனால் எப்போதும் முன்னணி நடிகர் லிஸ்டில் இருந்து கொண்டே இருப்பார். அவரின் படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆனாலும், அவரின் அடுத்த படத்துக்கு முந்தைய படத்தை விட அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். அது அஜித் என்கிற நடிகனுக்காக இல்லை. அஜித் என்னும் நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத ஒரு உண்மையான மனிதனுக்காக. பில்லா 2 ட்ரைலர் வெளியிட்ட ஒரே நாளில் 3லட்சம் ஹிட்ஸ் வந்துள்ளது. எந்திரனுக்கு கூட இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை படம் ஓடாமல் போனாலும் யாரும் முன்பு மாதிரி அஜித்தை குறை சொல்லவோ கிண்டல் செய்யவோ மாட்டார்கள். அவரின் பக்குவம் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் கூட வந்துவிட்டது. அஜித், படமே நடிக்காமல் போனாலும் அவர் மீது மக்களுக்கு இதே அபிப்பிராயம் தொடரும். அவர் நடிகன் என்கிற படியை தாண்டி பக்குவமான மனிதன் என்கிற இடத்தில் அனைவரும் ஆதர்சமாக பார்க்கும் ஒரு இடத்தில் இருப்பதாகவே கருதுகிறேன். அதனால் மற்ற நடிகர்களுக்கு இருந்தது போல், இவருக்கு இப்போது வந்திருக்கும் பாப்புலாரிட்டி “நீர்க்குமிழி” இல்லை. அவரின் எதிர்நீச்சலுக்கு கிடைத்த வைர கிரீடம். அதை யாராலும் உடைக்கவும் முடியாது, அழுக்குப்படுத்தவும் முடியாது.. அஜித் ஆரம்பித்தில் இருந்து இப்போது வரை தன் குணத்தையோ செயல்பாடுகளையோ மாற்றிக்கொண்டதே இல்லை. ஆனால் மக்களை அவர் மாற்றிவிட்டார். தன்னுடைய வெளிப்படையான பேச்சிற்காக கிண்டலும் அசிங்கமும் செய்த மக்களே, இன்று அதே வெளிப்படையான பேச்சுக்காவே அவரை ரசிப்பது, நிஜமாகவே அஜித் என்ற மனிதனுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி. ஒரு படம் வெற்றி அடைவதை விட, ஒரு மனிதன் என்கிற அளவில் அஜித் பெற்றிருக்கும் இந்த வெற்றி இதுவரை சம காலத்தில் எந்த நடிகருக்கும் கிடைக்காதது. அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.
 நீ எப்பவும் டாப் தான் ‘தல’.... 
நன்றி  : இந்த பதிவை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்த நண்பர் ராம்குமார்க்கு நன்றி , அவரது பதிவை பார்க்க   சிவகாசிக்காரன்

Friday, July 6, 2012

Mobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..




சில நாட்களுக்கு முன் என் தோழி ஒருவருக்கு நடந்த நிகழ்ச்சி இது . அவர் வைத்திருக்கும் மொபைல்க்கு தேவை இல்லாத SMS மற்றும் தவறான கால்கள் வந்துள்ளது. இவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வந்துள்ளது. வீட்டில் சொன்னால் நீ இனி மொபைல் பயன்படுத்தாதே என சொல்லி விடுவார்கள் என பயந்து இவர் வேறு என் மாற்றி விட்டார் . ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே என்னில் இருந்து பிரச்னை.நம்பர் மாற்றியும் எப்படி இதுபோல கால் , SMS வருகிறது என குழம்பி போனார். என்னிடம் வந்து என்ன செய்யலாம் என கேட்டார் . அவருக்காக எனது நண்பர்கள் துணையுடன் விசாரித்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

இவர் வழக்கமாக ரீ- சார்ஸ் செய்யும் இடத்தில் இவர் நம்பரை குடுத்து விட்டு E.C பண்ண சொல்லிவிட்டு போய் விடுவார் . இந்த நம்பரை வைத்து அங்கு உள்ள சிலர் செய்த செயல்தான் இது .இதுபோல ஆபத்தில் நீங்கள் மாட்டாமல் இருக்க சில வழிமுறைகள் .

  1. முடிந்த வரை ரீ சார்ஸ் கார்ட் வாங்கி ரீ சார்ஸ் செய்யுங்கள் .
  2. E.C செய்யவேண்டிய நிலை வந்தால் முடிந்த வரை நன்றாக தெரிந்த கடையில் மட்டும் செய்யவும் .
  3. இல்லை என்றால் உங்கள் சகோதரர்களை அல்லது ஆண் நண்பர்களை விட்டு செய்ய சொல்லவும்
  4. பேருந்தில் அல்லது கூட்டமாக உள்ள இடத்தில் சத்தமாக உங்கள் நம்பரை சொல்லாதிர்கள் .
  5. தெரியாத நபர்களிடம் நம்பர் தராத்திர்கள் .
  6. உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் நண்பர்கள் உங்கள் நம்பரை யாரிடமும் குடுக்க கூடாது என சொல்லுங்கள் .
  7. தவறான SMS வந்தால் யார் என கேட்டு பதில் அனுப்பாதிர்கள் . அப்படி அனுப்பினால் அதுமுலமாக உங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொள்ள பார்ப்பார்கள் .
  8. WRONG CALL வந்தால் உடனடியான துண்டித்து விடுங்கள் . அடிகடி வந்தால் வீட்டில் உள்ளவர்களை அல்லது உங்களுக்கு நம்பிக்கையான ஆண்களை பேச சொல்லுங்கள்
  9. பேருந்தில் அமர்ந்து SMS அனுப்பினால் சுற்றுபுறம் பார்த்து அனுப்புங்கள் . நீங்கள் அனுப்பும் செய்தியை அடுத்தவர்கள் படிக்க வாய்ப்புள்ளது .
  10. மொபைல்லை பழுது பார்க்க கொடுத்தால் அதில் உள்ள SIM CARD மற்றும்  Memory Card இரண்டையும் கழட்டிவிட்டு கொடுக்கவும்.
  11. மெமெரி கார்ட்களில் பாடல் பதிவு செய்ய கொடுப்பதாக இருந்தால் நன்றாக தெரிந்த இடத்தில் மட்டும் கொடுக்கவும் . இல்லை எனில் நீங்கள் அழித்த புகைப்படங்கள் , வீடியோக்கள் அனைத்தையும் திருப்ப எடுத்துவிடுவார்கள் .


இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும் .
 பட உதவி : கூகிள் 
 


இதையும் படிக்கலாமே :

வாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்

 

உங்களுக்கு வயதாகிவிட்டதா ? ஒரு டெஸ்ட்.

 

உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா ? அப்ப இது உங்களுக்கு தான்

 

 

Wednesday, July 4, 2012

தனியார் பள்ளி ஆசிரியர் என்றால் மட்டமா ?




சில தினங்களுக்கு முன்பு பேருந்தில் ஒரு பழைய நண்பரை பார்க்க நேர்ந்தது , அவர் இப்போது ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றார். நீ என்ன செய்கிறாய் என கேட்டார் . நான் கணினி ஆசிரியர் என சொன்னேன். எந்த பள்ளி என கேட்டார் . பள்ளியின் பெயரை கேட்டதும் ஒ மெட்ரிக் பள்ளியா? என கேட்டுவிட்டு இப்ப கல்வித்தரம் குறைய இதுபோல உள்ள தனியார் பள்ளிதான் காரணம் என பேச ஆரம்பித்துவிட்டார் .அவருடன் விவாதம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை காரணம் அவர் மெரிட்டில் வேலைக்கு சேரவில்லை பணம் குடுத்து சேர்ந்தார். இவரை போல பலர் தனியார் பள்ளி ஆசிரியர் என்றால் மட்டமாக பார்க்கின்றனர் . அவர்கள்ளிடம் சில கேள்விகள் ..

  1. இரண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்தால் எப்பொழுதாவது மாணவர்கள் படிப்பை பற்றி பேசி பார்த்து இருகின்றிகளா ? அரியர்ஸ் , முன்பணம் , சம்பளம் பற்றி மட்டும்தான் இருக்கும் .ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சந்தித்தால் அதில் கண்டிப்பாக மாணவர்களை பற்றி பேச்சு இருக்கும்
  2. 1500 முதல் சம்பளம் வாங்கும் ஆசிரியர் கூட மாணவன் மேல் காட்டும் அக்கறையை 30000 சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் காட்டுவதில்லை .
  3. எந்த தனியார் பள்ளி ஆசிரியரும் 10 அல்லது 12 வகுப்பு போது தேர்வு விடைத்தாள் திருத்தும் இடங்களில் போராட்டம் நடத்துவதில்லை .
  4. இதுவரை மாணவர்கள் நலனுக்காக ஏதாவது போராட்டம் நடத்தி உள்ளார்களா ?
  5. எங்களிடம் படிக்கும் அனைத்து மாணவர்களின் குடும்ப விவரம் முதற்கொண்டு எங்களுக்கு தெரியும் . தன்னிடம் படிக்கும் அனைத்து மாணவனின் பெயர்களும் பல ஆசிரியர்களுக்கு தெரியாது .
  6. தனியார் பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம் தவறாக நடந்தால் அவரை வேலையை விட்டு நீங்க முடியும் ஆனால் அரசு பள்ளியில் அவருக்கு இடம் மாற்றம் மட்டுமே , இங்கு செய்த தவறை வேறு இடத்தில் தொடரபோகிறார் .
  7. பல வருடங்களுக்கு முன் படித்த மாணவன் கூட எங்களிடம் தொடர்பில் இருப்பான் , கல்லூரியில் நடக்கும் பாடத்தில் வரும் சந்தேகங்களை கூட போனில் கேட்பான் . அரசு பள்ளியில் இதற்க்கு வாய்ப்பில்லை .
  8. மாணவன் வீட்டில் நடக்கும் சுக துக்கங்களில் நாங்கள் கலந்து கொள்வோம் . ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் தகுதி பார்ப்பார்கள் .
  9. TET (ஆசிரியர் தகுதி தேர்வு ) க்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் . காரணம் பணம் கொடுத்து வேலை வாங்கிவிட்டோம் இனி எப்படி தேர்வு எழுதுவது என .
  10. 5 வருடத்திற்கு ஒருமுறை அனைத்து ஆசிரியர்களுக்கு ஒரு தகுதி தேர்வு வைத்து அதில் வெற்றி பெற்றால்தான் ஆசிரியர் பணியில் தொடரலாம் என ஒரு சட்டம் வந்தால் இங்கு உள்ள ஆசிரியர்களில் 90 % அதை எதிர்ப்பார்கள் .

டிஸ்கி : இது பெரும்பாலான அரசு ஆசிரியர்களுக்கு பொருந்தும் . இதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன. பல ஆசிரியர்கள் உண்மையில் அர்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்

டிஸ்கி : இதில் ஏதேனும் தவறு இருந்தால் அல்லது வேறு கருத்து இருந்தால் பின்னுட்டத்தில் சொல்லுங்கள்

இதையும் படிக்கலாமே :

வாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்

எனக்கு ஒரு சந்தேகம் ...


நான் அழகா பொறந்தது என் தப்பா ?