> என் ராஜபாட்டை : பாக்யராஜ்

.....

.
Showing posts with label பாக்யராஜ். Show all posts
Showing posts with label பாக்யராஜ். Show all posts

Monday, January 26, 2015

கதம்பம் 26-1-15



கடந்த ஒரு மாதமாக ஒரு பதிவு கூட எழுத முடியவில்லை . ஏன் எழுதவில்லை என நேரிலும் , போனிலும் , மின் அஞ்சலிலும் வருத்தபட்ட கோடானகோடி நல்உள்ளங்களுக்காக இனி அடிகடி எழுதுவேன் .(எப்படிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு !!!)


யார் அந்த பதிவர் ?


    மார்ச் மாதம் ஒரு பிரபல தொழில்நுட்ப பதிவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. அவர் உங்கள் அனைவருக்கும் தெரிந்த பதிவர்தான் . பிளாக்கர் பலருக்கும் இவர் நல்ல நண்பர். என்னை போல அமைதியான நல்ல மனிதர் (!!!). அவர் யார் என தெரிய கடைசி வரை படிக்கவும் .
===================================================
ரசித்த படம் :

   :ஐ” எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் மோசமில்லை . விக்ரமின் அர்பணிப்பு மிகவும் அலாதியானது . பாடி பில்டராக வரும்போதும் சரி, வைரசால் கொஞ்சம் கொஞ்சமாக இளைக்கும் போதும் மனிதர் வாழ்த்துள்ளார். ஒரு சாதாரண கதைக்கு வித்தியாசமான , பிமாண்டமான ட்ரிட்மென்ட் ஷங்கரால் மட்டுமே முடியும்.

  எந்த எதிபார்ப்பும் இல்லாமல் பார்த்த “ டார்லிங் “ காமெடியில் பட்டையை கிளப்பியது. இப்போலாம் பேய் படங்களை பார்த்து பயம் வருவதை விட சிரிப்பு வருகிறது . மனம் விட்டு சிரித்துவிட்டு வர நல்ல படம்

 .
================================================================
படித்தது .


   பாக்யா புத்தகம் வாங்கியதும் (முன்பு...) முதலில் படிப்பது பாக்யராஜ் பதில்கள்தான் . எல்லா பதிலிலும் ஏதாவது ஒரு அழகான குட்டி கதை வைத்திருப்பார் . அந்த கதைகளை வகுப்பில் சொந்தகதை போல பலதடவை சொல்லியுள்ளேன் . அவரின் கேள்வி பதில் நூல் ஒன்று “ கண்ணதாசன் பதிப்பகத்தில் “ வாங்கினேன் . 206 பக்க புத்தகம் 85 ரூபாய்க்கு கிடைத்தது . பல அருமையான கதைகளும் , சில தத்துவங்களும் கிடைத்தது . கிடைத்தால் படித்துபாருங்கள்
.
=======================================================================
என்னாச்சு?

nhm.in இல் முன்பு விமர்சனத்துக்காக புத்தகங்கள் இலவசமாக வழங்கினர். ஆனால் இப்போது அதுபோல அளிப்பதில்லை என நினைக்கிறேன் . ஏன் ? என்னாச்சு ? விவரம் அறிந்தவர்கள் செப்பலாமே .(ஓசி புக் படிப்பது தனி சுகம் #மனசாட்சி , ஊசின்னு சொல்லாதிங்க , விலையில்லா புக்னு சொல்லுங்க # ராசா )
==============================================
ரசித்த நகைசுவை:

அப்பா : டேய் நைட்ல போனை சார்ஜ் போடாத , பேட்டரி சூடாக்கி வெடிச்சுடும் .
மகன் : தெரியும்பா , அதான் சார்ஜ் போடும்போதே பேட்டரியை கழட்டி வச்சுடுவேன்

===========================================================
யார் அடிச்சா
பொறி கலங்கி
பூமி அதிருதோ
.
.

.
.
அவதான் பொண்டாட்டி

========================================
ஆச்சர்ய மனிதன் :


சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் இல் உள்ள ஒரு கடைக்கு சென்றேன். அங்கு வேலைபார்க்கும் ஒருவர் மிகவும் கவர்ந்துவிட்டார். பலரும் பல வித பொருள்கள் கேட்க அனைத்துக்கும் கொஞ்சமும் அசராமல் விலையை சொல்லி , பொருளை எடுத்துகொடுத்து அவர்களை சந்தோஷமாக செல்ல உதவினார் . 4 மணிக்கு பாஸ் இரண்டே நிமிடம் சாப்பிட்டுவறேன்னு போனார் சரியா இரண்டு நிமிடத்தில் திரும்பினார் . மீண்டும் அதே போல் படப்படவென வேலை . விடுமுறை நாளில் கூட இப்படி வேலைபார்க்கும் ஒருவரை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது . நாமெல்லாம் இப்படி வேலைபார்த்தால் இரண்டே நாளில் ஊரைவிட்டு ஓடிடுவோம் .

டிஸ்கி : அந்த பதிவரின் வலைதளத்தின் பெயர் அந்த பத்தியிலேயே இருக்கு கண்டுபிடியுங்கள் .


Wednesday, July 25, 2012

சினிமா ........சினிமா ....


 
தன் கேரியரையே புரட்டிப் போட்ட படம் என்று கமல்ஹாசன் சொன்ன அபூர்வ சகோதரர்கள் படத்தில் - அவருக்கு அம்மாவாக முதலில் நடித்தது காந்திமதிதான். அவருடன் ஒரு பாடல் காட்சியே ஷூட் செய்த பிறகு திரைக்கதையை மாற்றிய கமல், காந்திமதிக்கு பதில் மனோரமாவை அம்மாவாக மாற்றினார்.

கமல்
இதற்காக காந்திமதியிடம் பகிரங்கமாய் மன்னிப்பு கேட்டார். ஆனால் காந்திமதி இதற்கெல்லாம் வருத்தப்படவில்லை. அவர் இறக்கும் வரை, கமல் தன்னுடைய மகன் போல என்றே சொல்லி வந்தார். எல்லா சினிமா பிரமுகர்களிடமும் அன்பாய் நேசிக்கும் வெகுளி மனசு அவருக்கு என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்
 
"வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படம் வெளியாகும் வரை, நாடகமாக மட்டும் 100 முறை மிகமிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திரைப்படம் வெளிவந்து ஓடிமுடிந்தபின்பும் ஒரு 12 முறை நடத்தப்பட்டது.

இந்த
112 முறையில், இந்நாடகத்தின் அபார வசூல் மூலம் நடிகர் திலகம் பல்வேறு ஸ்தாபனங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் பல்வேறு நற்செயல்களுக்கும் அள்ளி அளித்துள்ள நன்கொடை மட்டும் ரூபாய் முப்பத்து இரண்டு லட்சம். இத்தொகை இன்றைய பொருளாதார மதிப்பீட்டில் பற்பல கோடிகளுக்குச் சமம்.

வீர
பாண்டிய கட்ட பொம்மன் நாடகத்தில் வீர வசனம் பேசும் நடிகர் திலகத்தின் புகைப்படம் உங்களுக்காக மேலே .


"முத்த காட்சிகளை அனுமதிப்பதா வேண்டாமா என்று தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்று நடிகர் திலகத்திடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது 1967 வருடம்.

அதற்க்கு
"முத்தம் கொடுப்பதை காட்டவே கூடாது. ஆனா நாம முத்தம் கொடுத்துகிட்டதா ஜனங்க நினைக்கணும். அந்த மாதிரிதான் நடிக்கணும். மூடி காட்டுவதுதான் கலை. பச்சையா, உள்ளதை அப்படியே காட்டினா அது கலை ஆகாது. அதனால முத்த்ம் கொடுப்பதை எல்லாம் திரையிலே காட்ட கூடாது என்பதுதான் என் தாழ்மையான வேண்டுகோள்" என்று பதில் அளித்திருக்கிறார் நடிகர் திலகம்.

இந்த
கேள்வியை கேட்டவர் யார் தெரியுமா ???? நம்முடைய இப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. 1967-ம் வருட பொம்மை ஆண்டு மலர் பேட்டியில் "பொம்மை" முதலாம் ஆண்டு மலரில் 'நக்ஷத்திரம் கண்ட நக்ஷத்திரம்' என்கிற புதுப் பகுதிக்காக இந்த சிறப்பு நேர்காணல் நடத்த பட்டுள்ளது.


"ஒரு கைதியின் டைரி " படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிக்க "ஆக்ரி ராஸ்தா" என்கிற பெயரில் எடுக்கப்பட்டது. அதன் இயக்குனர் பாக்யராஜ். அப்போது ஒரு காட்சியில், ஒரு முழு நீள வசனத்தை ஆங்கிலத்தில் பேசுமாறு அமிதாபிடம் சொல்லி இருக்கிறார் பாக்யராஜ். ஆனால் அதற்க்கு கடும் மறுப்பு தெரிவித்த அமிதாப், ஆங்கிலத்தில் பேசி நடித்தால் ஹிந்தி ரசிகர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும் சொல்லி விட்டாராம். இதையடுத்து இருவருக்குமிடயே ஒரு நீண்ட விவாதம் நடந்து , இறுதியில் பாக்யராஜ் சொல்படி ஆங்கிலம் பேசி நடித்துள்ளார் அமிதாப்.

படம்
வெளியாகி அந்த குறிப்பிட்ட காட்சிக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்க, அதிகாலை இரண்டு மணிக்கு பாக்யராஜுக்கு போன் செய்து பாராட்டியிருக்கிறார் அமிதாப். தன்னுடைய படங்களில் இரண்டு வரி கூட ஆங்கிலம் பேசி இராத அமிதாப், ஒரு நீண்ட காட்சியில் ஆங்கிலம் பேசியது உங்களால் மட்டுமே என்று பாக்யராஜை பாராட்டி இருக்கிறார்கள் ஹிந்தி திரையுலகின் பிரபல வசனகர்த்தாக்கள் சலீம் , ஜாவீத் இருவரும்.

ஒரு
இயக்குனராக தான் நினைப்பதை கொண்டு வர வேண்டும் என்பதில் எத்தனை பிடிவாதம் தனக்கு உண்டு என்பதை ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறியுள்ள பாக்யராஜ், இந்த சம்பவத்தையும் தெரிவித்துள்ளார்.

நன்ன கண்ட எல்லி (என் கணவன் எங்கே) என்ற கன்னடப் படத்தில் ஒரே பாடலில் 14 மொழிகளில் பாடியிருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி.


தகவல் உதவி : Facebook Group