> என் ராஜபாட்டை : December 2012

.....

.

Sunday, December 30, 2012

Facebook கலாட்டா




சமிபத்தில்  நான் முக புத்தகத்தில் ரசித்தவை. உங்கள் பார்வைக்கும் 



கைபேசியில்  துவங்கிய 
நம்  காதல் - உன் அண்ணன் 
கை பேசியதால் 
முறிந்தது .

# என்னா அடி ????
=======================================================================

கடவுள் : உனக்கு என்ன வரம் வேண்டும் ?

பக்தன் : அழகான மனைவி வேண்டும்.

கடவுள் : நி முஸ்லிம்னா கத்ரினா தாரேன், இந்துனா அனுஷ்கா தாரேன், கிருத்துவன்னா ஜெனிலியா தாரேன். உன் பெயர் என்ன?

பக்தன் : அப்துல் நாராயன பெர்ணாட்டஸ்

கடவுள் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!

====================================================================

அம்மா : ஹிட்லர்னா யாரு ?

மகன்  : தெரியாது..

அம்மா : கொஞ்சம் படிப்புல கவனமா இரு.

மகன் : பிரியா ஆண்டினா யாரு?

அம்மா : தெரியாது..

மகன் : கொஞ்சம் அப்பா மேல கவனமா இரு.
========================================================================

OFFICER : யோவ்… உன் வீட்டுல பீஃஸ் போயி ஒரு மாசம் ஆகுது இப்பதான் வந்து COMPLIANT பன்னுற ?

சதிஷ் : சாரி  சார் .. நான் வழக்கமான POWER CUT ணு நினைத்தேன்.

(சதிஷ் தமிழ் நாட்டுகாரர் என்பது குறிப்பிடதக்கது)
===============================================================

கவிதை  :

அருகம்புல் போல நாம் வளர்த்த காதலை
உங்க அப்பன்
எருமை மாடு போல மேய்த்து விட்டான் ..

=====================================================================



இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.

#நீங்களும் உங்க பழைய இளைய ஆதினம் நித்தியும் மூடிக்கிட்டு இருந்தாலே பாதி பிரச்சினை பெண்களுக்கு இருக்காது
===================================================================
கருணாநிதி சொன்னதுபோல் விரைவில் பிரதமராவேன் -ப.சிதம்பரம்.

என்னது கருணாநிதி சொன்னது போல விரைவிலா?அய்யயோ மன்மோகன்ஜி இனி தனியா வாக்கிங் போகாதிங்க.எதோ ப்ளான் இருக்கு.
======================================================================


அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ்
விளையாட்ட
பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ
வேனும்ன எதாவது கேட்டு பாரு

இந்தியன் : சொல்லு டென்னிஸ்
நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?

அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம -்
நல்ல சாவே வராதுடா !
======================================================================================

ஹலோ சூரியன் FM ஆ..??

வணக்கம் சார்.. நான் செங்கோட்டைல இருந்து வரதராஜன் பேசுறேன்..!!

சொல்லுங்க சார் நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??

என் பொண்டாட்டி என் கூட சண்டை போட்டுட்டு கதவை பூட்டிட்டு கோச்சிக்கிட்டு உள்ள இருக்கா சார்.. அவளை கதவை திறக்க சொல்லுங்க..

அப்புறம் அவளுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுங்க..!!
==========================================================================

இஸ்லாமியர்களைப் போல அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதீனம்

#முதல ...நீ சட்டை போடுய்யா ....
=====================================================================================
 
சர்வர்: சார்...என்ன சாப்பிடுறீங்க?

சாப்பிட வந்தவர்: நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா...
 
சர்வர்: ?.....!.....?.
==================================================================================

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 
  இதையும் படிக்கலாமே :

தண்ணி அடிப்பவர்கள் கவனத்திற்கு ...

 


உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.":


அஜித்தின் அடுத்த படம் ? விஜய் 25":

Saturday, December 29, 2012

தண்ணி அடிப்பவர்கள் கவனத்திற்கு ...


மது அருந்துபவர்கள் தெரிந்து கொல்லோவேண்டியவை  , அருந்தாதவர்கள் மற்றவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய தகவல் இது 

நாம் மது (இனி ஆல்கஹால் அல்லது சாராயம் என்று சொல்வோம்) அருந்தும்பொழுது சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். பெரும்பாலான அளவை சிறுகுடல் உறிஞ்சிக்கொள்ளும். அதனால்தான் உணவு உண்டபின்னர் மது அருந்தினால் போதை ஏற சற்று நேரமாகின்றது.

சாராயத்தின் செறிவினைப் பொறுத்து அது எத்தனை வேகத்தில் நம் உடல் உறிஞ்சிக்கொள்கின்றது என்பது மாறுபடும். உதாரணமாக பீரை விட விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்றவைகள் அதிவேகமாக உறிஞ்சிக்கொள்ளப்படும்.

உறிஞ்சப்பட்ட சாராயம் உடனடியாக நம் ரத்தத்தில் கலந்து உடலெங்கும் ஓடத் துவங்கும். அதே சமயத்தில் நம் உடலும் அதனை வெளியேற்ற சற்று பிரயத்தனப்பட்டு வேலை செய்யத் துவங்கும். சிறுநீரகம் தன் பங்கிற்கு ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும். நுரையீரல் தன் பங்கிற்குச் சில அளவை மூச்சுக்காற்றில் வெளியேற்றும். (அதனால்தான் Breath Analyserல் கண்டு பிடிக்கின்றார்கள்)

கல்லீரல் தன் பங்கிற்கு பெரும்பாலான அளவை ஆல்கஹாலை உடைத்து அசிட்டிக் அமிலமாக மாற்றும். இத்தனை பேர் சேர்ந்து அந்த ஆல்கஹாலை வெளியேற்றப் போராடிக்கொண்டிருக்கையில் நாம் அதனை விட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால்... என்னாகும்?

அதனால்தான் அவைகள் விரைவில் தம் இயல்பில் குன்றி வலுவிழந்து செயலிழந்து போகின்றன. இதுவே ஒரு வகையில் மெதுவான தற்கொலை முயற்சி மாதிரிதான்.

சரி, இனி ஆல்கஹாலின் செயல்பாடு மூளையினை எப்படிப் பாதிக்கின்றது. இரத்தத்தில் கலந்து உடலில் பயணிக்கும் ஆல்கஹால் நம் மூளைக்கும் ஒரு பயணம் போகும்.

அதன் அளவை BAC என்பார்கள். அதாவது Blood Alcohol Concentration. இரத்தத்தில் ஆல்கஹாலின் செறிவு.

BAC 0.03ல் இருந்து 0.12 சதவீதம் இருக்கையில், தான் ஒரு பெரிய பலசாலி, தன்னால் எதுவும் முடியும் என்று ஒரு எண்ணம் வரும். உலகில் எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் தன்னிடம் உள்ளது என்று தோன்றும். இந்நிலையில் சரியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது. ஏனெனில், மனதில் முதலில் எது படுகின்றதோ அதுவே சரியானதாகத் தெரியும். அந்தச் சூழ்நிலையில் யாராவது எதாவது சொன்னாலும், அதற்கேற்றவாறே மனம் செயல்படத் தோன்றும்.

BAC 0.9ல் இருந்து 0.25 சதவீதம் இருக்கையில், தூக்கம் தூக்கமாக வரும். நினைவுகள் மழுங்கும். சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது. வேகமாக இயங்க முடியாது. கையில் இருக்கும் மதுவைத் தடுமாறிக் கொட்டிவிட்டு அதனை வெறித்துப் பார்ப்பார்கள். உடல் ஒத்திசையாது. நிலை தடுமாறும். நடக்கையில் உடல் தள்ளாடும். கண் பார்வை மங்கும். கேட்கும் திறன், சுவை உணர்தல், தொடுதல் போன்ற உணர்வுகளில் தடுமாற்றம் அல்லது இல்லாமல் போய்விடும்.

BAC 0.18ல் இருந்து 0.30 சதவீதம் இருக்கையில், தான் என்ன செய்கின்றோம் என்று அவருக்கே தெரியாது. குழப்பமாக இருக்கும். ஒன்று அதீத பாசக்காரராக மாறி விடுவார் அல்லது அதீத கோபக்காரராக மாறிவிடுவார். அதிகம் உணர்ச்சிவசப்படுவார். பார்வை தெளிவாக இருக்காது. பேச்சுக் குளறும். உடலின் Reflex செயல்படாது. தொடு உணர்வு நன்கு மழுங்கிவிடும். எதையேனும் எடுக்க வேண்டும் என்றால் கை அந்தப் பொருளின் பக்கத்தில் போய்த் துழாவிக்கொண்டிருக்கும். காரணம் பார்வை, மூளை, கை இவற்றிற்கிடையேயான ஒத்திசைவு இல்லாமல் போயிருக்கும். வலி தெரியாது.

BAC 0.25ல் இருந்து 0.4 சதவீதம் இருக்கையில், மட்டையாகி விடுவார். எந்தவொரு வெளித்தூண்டல்களும் அவரைப் பாதிக்காது. எழுந்து நிற்க முடியாது, நடக்க முடியாது. வாந்தி எடுக்கலாம். நினைவு தப்பிவிடலாம்.

BAC 0.35ல் இருந்து 0.50 சதவீதம் இருக்கையில், நினைவு முழுவதும் தப்பிவிடும். Reflex சுத்தமாகப் போய்விடும். கருவிழிகூட வெளிச்சத்தில் சுருங்காது விரியாது. உடல் சில்லிட்டுப் போகும். மூச்சு விடுதல் குறைந்து போகும். இதயத் துடிப்பு குறைந்து விடும். இறந்து போக அதிக வாய்ப்புள்ளது.

 நன்றி : திரு. Babu Pk FACEBOOK நண்பர்

Tuesday, December 25, 2012

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.





நம்து வாழ்கையில் நாம் ரசித்த, எந்த கவலையும் இன்றி துள்ளிதிரிந்த காலம் என்றால் அது பள்ளி பருவம் தான். இப்போதும் பள்ளி காலங்களையும், பள்ளி பருவ நண்பர்களையும் நாம் அசைபோடாமல் இருக்கமாட்டோம். அந்த காலத்தில் பன வசதி காரணமாகவோ,அல்லது எதேனும் காரனத்தால் பள்ளியில் எடுத்த புகைபடங்கள்களை வாங்காமல் இருந்திருபோம்.

இப்போது பணம் இருக்கும் ஆனால் புகைபடம் கிடைகாது. நமது பள்ளி புகைபடம் மற்றும் நம்து நண்பர்களுடன் நாம் இருந்த புகைபடங்களை நமக்காக வழங்குகிறது ஒரு இனையதளம்.

வெளி நாட்டில் மட்டுமே இருந்த இந்த வசதியை இப்போது இந்தியாவிற்க்கும் வழங்கி உள்ளது.இந்த வசதியை பெற கிழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும்.

  1. கிளிக் http://www.worldschoolphotographs.com/
  2. உங்கள் நாடு, மாநிலம், மாவட்டத்தை தெரிவு செய்யவும்.
  3. உங்கள் பள்ளி பெயர், படித்த வருடம் தெரிவு செய்யவும்
  4. ஒகே பட்டனை கிளிக் செய்யவும்.

உங்களுக்கு லக் இருந்தால் , உங்கள் பள்ளி புகைபடம் இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.


இதையும் படிக்கலாமே :

அஜித்தின் அடுத்த படம் ? விஜய் 25


இது ஒரு மீள் பதிவு

Monday, December 24, 2012

அஜித்தின் அடுத்த படம் ? விஜய் 25


அஜித்தின் அடுத்த படம் ? 


விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜீத், அப்படம் முடித்த உடனே தனது அடுத்த படத்தினை துவங்க திட்டமிட்டு இருக்கிறார்.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி என பெரிய பட்டாளத்தை வைத்து விஷ்ணுவர்தன் ஒரு படத்தினை இயக்கி வருகிறார். இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. நடுவில் அஜீத்திற்கு காலில் ஏற்பட்ட காயத்தால் சிறிது காலம் படப்பிடிப்பு தடைப்பட்டது. இப்போது சென்னையில் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.

எப்போதுமே ஒரு படத்தினை முடித்தவுடன் சிறிது கால ஒய்விற்கு பின்னரே தனது படத்தினை துவங்குவார் அஜீத். ஆனால் இம்முறை விஷ்ணுவர்தன் படப்பிடிப்பு முடிந்தவுடனேயே 'சிறுத்தை' சிவா இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் முதன் முறையாக அஜீத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தமன்னா.

இப்படம் குறித்து இயக்குனர் 'சிறுத்தை' சிவா " என்னுடைய இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு கதாநாயகி தேடல் முடிந்துவிட்டது. இப்படத்தில் முதன்முறையாக அஜீத்துடன் தமன்னா ஜோடி சேர்கிறார். மற்றும் விதார்த், பாலா, முனீஷ், சோஹில் என இளம் நாயகர்களும் அஜீத்தோடு இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தில் ஜெயராம், சந்தானம் கூட்டணியில் நகைச்சுவை களைகட்டும். ஜெயப்பிரகாஷ், இளவரசு ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள்.
இப்படம் குறித்து அஜித்திடம் ஒவ்வொரு முறை பேசும்போதும், அவரது கதாபாத்திரத்தின் தன்மை வலுவாகிக் கொண்டே இருக்கிறது. இந்த படம் நிச்சயமாக அஜித் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் ! " என்று கூறியுள்ளார்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை தேவி ஸ்ரீபிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.  படத்திற்கான வேலைகள் மும்முரமாக தொடங்கி விட்டன.


========================================================================

விஜய் பாடவிருக்கும் 25வது பாட்டு!



'துப்பாக்கி' தியேட்டர்களில் வசூலை குவித்துக் கொண்டிருக்க, அப்படத்தின் பாடல்களைப் பொருத்தவரை  விஜய் பாடிய ' GOOGLE GOOGLE ' பாடல் தான் அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பு பெற்று இருக்கிறது.
பல படங்களில் விஜய் பாடினாலும் 'சச்சின்' படத்திற்கு பின் 7 ஆண்டுகள் கழித்து 'துப்பாக்கி' படத்தில் தான் பாடினார். 'GOOGLE GOOGLE' பாடல் விஜய் பாடிய 24வது பாடலாகும்.

இயக்குனர் விஜய் - விஜய் இணைந்திருக்கும் படத்திலும் விஜய் ஒரு பாடலை பாட சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இப்பாடலை நா.முத்துகுமார் எழுதி இருக்கிறார்.

விஜய்யிடம் பாடல் வரிகளையும் பாடலுக்கான டியூனையும் கொடுத்து விட்டார்கள். விஜய் எப்படி பாட வேண்டும் என்று தற்போது பயிற்சி எடுத்து வருகிறாராம். அடுத்த வாரம் மும்பையில் ஒரு ஸ்டூடியோவில் இப்பாடல் பதிவு நடைபெற இருக்கிறது.

நன்றி : விகடன்

Thursday, December 20, 2012

FACEBOOK இல் ரசித்தவை ....

 
 
 
பொது இடங்களில் பெண்களை தரக் குறைவாக திட்டக் கூடாது - உயர்நீதி மன்ற நீதிபதி.

# அப்போ எங்கேயாவது சந்து, பொந்துல வச்சித் திட்டலாமா யுவர் ஹானர்?!

============================================================================================

சிக்கன் 65 பக்கத்தில்
வைக்கப்படும் வட்ட வட்ட
வெங்காயம், இறந்து போன
கோழிக்கு வைக்கப்படும்
மலர்வளையம்...

போதைத்தத்துவம்
===================================================================================
 தியேட்டர் ல நின்னு டிக்கெட்
கூட வாங்கிடலாம்
போல.சனிகிழமை பெருமாள்
கோவில் ல பொங்கல் வாங்க
முடியறது இல்ல
என்னா கூட்டம்??
என்னா கூட்டம்?
============================================================================
 துரைதயாநிதி நீதிமன்றத்தில்
ஆஜர்..!

தனது வேற்றுகிரக
அனுபவத்தை பற்றி பயணக்
கட்டுரை ஒன்றை விரைவில்
எழுதுவாரென பேசப்படுகிறது.
============================================================================
 
கவிதை எழுத நினைத்த என் கற்பனை குதிரையை தட்டி எழுப்பினேன்.

கொலை வெறியோடு உதைத்து விட்டு சொன்னது

"மடப்பயலே நான் கழுதை"!!
(கொய்யால என்னா அடி )
=============================================================================
பொண்ணுங்க கிட்ட லவ்
பண்றியான்னு கேக்குறதும் கண்டக்டர்
கிட்ட சில்லறை கேக்குறதும் ஒன்னுதான்

இருந்தாலும் இல்லைன்னு தான் சொல்லுவாங்க ..!!
 
==========================================================================
 
வெற்றிக்கான முதல் படி, எப்படி வெல்வது என்று அடுத்தவனிடம் ஆலோசனை கேட்காமல் இருப்பதே
===========================================================================
 #ஒரு முறை பவர்ஸ்டார் வீட்டு காலண்டரை கரையான் அரித்து டிசம்பர் 21க்கு மேல் தேதிகள் இல்லாமல் போயின,பவர்ஸ்டார் புது காலண்டர் வாங்கி மாட்டி விட்டு அந்த பழைய காலண்டரை தூக்கி போட்டார்.

அதுவே நாளடைவில் மாயன் காலண்டர் எனப்பட்டது ;-)
 
================================================================================
 #சரக்கு வாங்கி வைத்து கால் பண்ணினால் மிக்சிங்குக்கு வாட்டர் பாட்டில் கூட வாங்காமல் வெறும் கையுடன் வரும் நண்பன் கர்நாடககாரனை விட மோசமானவன்.
=================================================================================
#ஏழு கோடி இந்தியர்களுக்கு வேலை இல்லை-மத்திய அரசு.

எங்க ஊரு பிரதமரே வேலை இல்லாமல் தான் இருக்காரு,நாங்க எதாவது சொன்னோமா?
======================================================================================== 
இதையும் படிக்கலாமே :

FACEBOOK TRICKES

Monday, December 17, 2012

FACEBOOK TRICKES




நாம் அனைவரும் தினமும் பாட புத்தகம் படிக்கிரோமோ இல்லையோ முகபுத்தகம் பார்க்கிறோம் . நமக்கு தெரிந்த , அறிந்த , படித்த , ரசித்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் . அந்த முக புத்தகத்தில் சில TRICKS உள்ளன . அவை உங்களுக்கு தெரிந்தவையாக கூட இருக்கலாம் . எனக்கு தெரிந்தவைகளை இங்கு பட்டியல் இட்டுள்ளேன் .


1. FACEBOOK இல் உள்ளஉங்கள்மற்றும் உங்கள் நண்பர்கள் புகைப்படங்களை DOWNLOAD செய்ய .

FacePAD: Facebook Photo Album Downloader     

இது ஒரு ADD-ON . இதை FIREBOX இணைத்துகொண்டால் நீங்கள் விரும்பும் நபரின் கணக்கில் உள்ள புகைப்படங்களை DOWNLOAD செய்யலாம் .


2. FACEBOOK  இல்லாமல் FACEBOOK பயன்படுத்த ..

Ping.fm மற்றும்  seesmic.com 

இந்த இரண்டு தளங்களும் முகபுத்தகம் இல்லாமல் அதில் நீங்கள் STATUS போட உதவுகிறது . முகபுத்தகம் தடை செய்ய பட்ட இடங்களில் இதை பயன்படுத்தலாம் .

3.  FACEBOOK  இல் Schedule MESSAGE அனுப்ப ..

http://sendible.com/

நமது மொபைல் இல் குறுப்பிட்ட நேரத்தில் செல்லும்மாறு நாம் SMS SET செய்யலாம் . அது போல நீங்கள் முகபுத்தகத்தில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட நேரத்தில் போக வேண்டும் என SET செய்ய இது உதவுகிறது .

4. FACEBOOK இல் வரும் விளம்பரங்களை தடுக்க 

Facebook: Cleaner

நாம்  முகபுத்தகம் பயன்படுத்தும் போது விளம்பரங்கள் வந்து  தொல்லை தரும் . அதை தடுக்க இது உதவும் .

5. EMPTY STATUS போட..

FACEBOOK இல் வித விதமாக STATUS போட்டிருப்பிர்கள் வித்தியாசமாக EMPTY STATUS போட்டாஎப்படி இருக்கும் ? ALT  KEY அழுத்தி கொண்டு 0,1,7,3 அழுத்தவும் . இப்போது POST பட்டனை கிளிக் செய்யவும் .


Wednesday, December 12, 2012

உங்கள் வாழ்த்தை எதிர்பார்க்கிறோம் ...

எனது அருமை மகன் R.S . சரணுக்கு இன்று( 12-12-12) பிறந்த நாள் . நல்ல உள்ளங்கள் வாழ்த்தினால் அவன் நன்றாக நாடு போற்ற வாழுவான் . எனவே அன்பு நண்பர்களே உங்கள் வாழ்த்தி எதிர்பார்க்கிறேன் . உங்கள் அன்பு வாழ்த்தால் அவன் மேலும் மேலும் வளர வேண்டும் .  அவனது சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு ...









உங்கள் வாழ்த்தை எதிர்பார்க்கும் :

K. ராஜா 
R. சக்தி பிரியதர்ஷினி 

Friday, December 7, 2012

இந்தி மங்காத்தாவில் அஜித்! ??


 
 
இந்தி மங்காத்தாவில் அஜித்! : வெங்கட்பிரபு திட்டம்!!

மங்காத்தாவின் இந்திப் பதிப்பில் அஜித்தை நடிக்க வைக்க டைரக்டர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். அஜித்தின் 50வது படம் மங்காத்தா. வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித் நெகட்டிவ் ஹீரோ பாத்திரத்தில் கலக்கியிருந்தார். அர்ஜூன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். த்ரிஷா நாயகியாக நடித்திருந்தார். பிரேம்ஜி அமரன், மகத், வைபவ் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்திருந்தனர். லட்சுமி ராய்க்கு கவர்ச்சிகரமான பாத்திரம். இப்படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் வெங்கட் பிரபு. இதிலும் அஜித்தை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாராம். இதை அஜித்திடம் தெரிவித்துவிட்ட நிலையில், வெங்கட் பிரபுவின் விருப்பத்திற்கு அஜித் என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை. இருப்பினும் அடுத்து, தான் நடிக்கப் போகும் புதிய படத்தை முடித்த பிறகே அஜித் வர முடியும் என்று தெரிகிறது. வெங்கட் பிரபுவும் பிரியாணி படத்தில் பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு இந்தி மங்காத்தா தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.

ஒரு பாடலுக்கு ஆடும் தனுஷ்

நடிகைகள் ஒரு பாடலுக்கு ஆடுவது சாதாரணம். இந்தியில் நடிகர்களும்கூட ஒரு பாடலுக்கு ஆடுவதுண்டு. சமீபத்தில் வெளியான அஜய் தேவ்கானின் சன் ஆஃப் சர்தார் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார் சல்மான்கான். ஆனால் தமிழில்…? இரண்டு பேர் சேர்ந்து நடிக்க யோசிக்கும் சூழலில் ஒரு பாடலுக்கு ஆடுவது என்பது நடவாத காரியம். ஆனால் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் இந்த அபூர்வம் நிகழ்வதுண்டு. தனுஷ் தயாரிக்கும் முதல் படமான எதிர்நீச்சலில் சிவ கார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிக்கின்றனர். வெற்றிமாறனின் உதவியாளர் செந்தில் படத்தை இயக்குகிறார், அனிருத் இசை. படத்தின் ஸ்டார் மற்றும் மார்க்கெட் வேல்யூவை அதிகரிக்கும் பொருட்டு ஒரு குத்துப் பாடலுக்கு ஆடுகிறார் தனுஷ். ஏற்கனவே பாடல் எழுதுவது, பாடுவது என்று எதிர்நீச்சலில் ஆஃப் ஸ்கிரீனில் பங்களிப்பு செலுத்தியவர் ஒரு பாடலுக்கு ஆடுவதன் மூலம் ஆன் ஸ்கிரீன் பங்களிப்பையும் செய்கிறார்..
டிஸ்கி  : facebook ல படிச்சது ..
இதையும் படிக்கலாமே :



Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள் ...!

 

உறவுகள்  வலு பெற ..

மாதம் மாதம் இலவச RECHARGE செய்ய வேண்டுமா ?


Wednesday, December 5, 2012

ஆயிரகணக்கான ருபாய் மதிப்புள்ள மென்பொருள்கள் இலவசமாக ...



நாம்நமது கணினியில் பல மென்பொருகள் வைத்திருப்போம் . அவை அனைத்தும் இலவச பதிப்பாகத்தான் இருக்கும் . நல்ல மென்பொருள்கள் அதிக விலை இருப்பதால் நாம் வாங்குவதில்லை . ஆனால் கட்டன மென்பொருள்களில் உள்ள வசதிகள் இலவச மென்பொருள்களில் இருப்பதில்லை .  சில மென்பொருள்கள் குறிபிட்ட காலம் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் . இதில் வைரஸ் இருக்கும் அபாயம் அதிகம் .

இது போன்ற நிலையில் எந்த மென்பொருள் நல்ல மென்பொருள் அது எப்படி இலவசமாக கிடைக்கும் என தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் , அந்தக்க மென்பொருள்களை இலவசமாக தரவிறக்க விரும்பும் என்னை போன்ற நண்பர்களுக்காக தான் இந்த பதிவு .

இன்று நாம் பதிவில் பார்க்கும் தளத்தில் இணைத்தால் போதும் . தினமும் ஒரு கட்டண மென்பொருளை நமக்கு அனுப்புவார்கள் . நாம் விரும்பினால் அதை தரவிறக்கி பயன்படுத்தலாம் . வேண்டாம் என்றால் பயன்படுத்தாமல் விட்டுவிடலாம் . இதில் நாம் அறியாத , பயன்படுத்த விரும்பும் , விலை மதிப்பற்ற நிறைய மென்பொருள்கள் கிடைக்கும் .

அந்த தளத்தின் லிங்க்http://www.giveawayoftheday.com 



பலன்கள் :

  • பல கட்டண மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கும் .
  • நிங்கள்  அறியாத மென்பொருளை கூட தெரிந்து கொள்ளலாம் .
  • வைரஸ் தொல்லை இல்லை .

நிபந்தனைகள் ;

1. உங்களுக்கு வரும் மெயிலில் உள்ள மென்பொருளை மட்டுமே தரவிறக்க
    முடியும் .

2. தரவிறக்கிய மென்பொருளை அன்றே INSTALL செய்ய வேண்டும . மறுநாள்
     INSTALL செய்ய முடியாது .

3. தரவிறக்கிய மென்பொருளை யாருக்கும் அனுப்ப முடியாது .


டிஸ்கி : இன்றைய ஸ்பெஷல்   :  CLICK HERE

இதையும் படிக்கலாமே :

Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள் ...!

 

உறவுகள்  வலு பெற ..

மாதம் மாதம் இலவச RECHARGE செய்ய வேண்டுமா ?

Monday, December 3, 2012

Google- தெரிந்ததும் , தெரியாததும்


கூகுள் இன்று இணையத்தின் தூண் என்றால் அது மிகையாகாது. இணையத்தின் அனைத்து பகுதிகளிலும் தனது வேர் பரப்பி நிற்கும் மிகப் பெரிய ஆலமரம் தான் அது. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஜிமெயில், கூகுள் பிளஸ், பிளாக்கர்,  என பலவற்றை பற்றி தெரியும். இன்னும் தெரியாத பல உள்ளன. 




Google search


கூகுள் தனது கடையை விரித்த போது விற்ற முதல் பொருள் இதுதான். இன்றுவரை இதில் அது தான் கிங் என்றும் நிரூபித்து வருகிறது. சில சமயங்களில் Google.com, google.lk என்று பார்த்து இருப்பீர்கள், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு டொமைனில் இயங்கி வரும் இது மொத்தம் 198 டொமைன்களில் உள்ளது.


வெறும் Search என்ற வார்த்தையோடு நின்று விடாமல் இதில் பல வசதிகளை வழங்குவது தான் இதன் சிறப்பு.


Accessible Search - பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு



Google Alerts - நீங்கள் அடிக்கடி ஒரு விஷயத்தை தேட

விரும்பினால், அதன் தற்போதைய தேடுதல் முடிவுகளை மின்னஞ்சலில் பெற.



Blog search - வலைப்பூக்களில் தேடி தரும்.



Google Books - புத்தகங்களை தேட.




Google Custom Search - குறிப்பிட்ட தளங்களில் இருந்து தேடுதல் செய்ய. http://www.google.com/cse/


Google Image Search - படங்களை தேட



Google News - செய்திகளை தேட/ அறிந்து கொள்ள.



Knowledge Graph - பல தேடுதல்களில் முக்கிய தகவல்களை முகப்பிலேயே காட்டும் வசதி.



Google Doodle - பலரை, பல விசயங்களை நினைவு கூறும் கூகுள் நினைவகம்.



இது மட்டும் இன்றி Experimental Search, Google Finance, Google Groups, Hotpot, Language Tools, Movies, Google News archive, Google Patent Search , Google Schemer, Google Scholar, Google Shopping, SMS, Suggest, Google Video (Closed), Voice Local Search , Web History போன்ற அனைத்தும் இதன் Search Tools..



Advertising


விளம்பரங்கள் தான் கூகுள்க்கு பிரியமான ஒன்று. அதற்காக நிறைய உழைக்கிறது. ;-)


AdMob - மொபைல் வழி விளம்பரங்கள்.



Google AdSense - தளத்துக்கு சம்பந்தமான விளம்பரங்களினை காட்டும் தயாரிப்பு.



Google AdWords - கூகுள் மூலம் விளம்பரம் செய்ய.



Adwords Express - லோக்கல் AdWords என்று சொல்லப்படும் இது பெரும்பாலும் இடம் சார்ந்த விளம்பரங்களுக்கு. (ஹோட்டல், தியேட்டர் போன்று)



DoubleClick - Publisher, Advertiser, User என எல்லோரையும் ஒருங்கிணைக்கும் ஒரு வசதி.


இதில் DoubleClick for Publishers by Google, Google Grants, TV Ads, Google Website Optimizer, Meebo போன்றவையும் அடக்கம்.



Communication and Publishing


இங்கே தான் நாம பயன்படுத்தும் நிறைய வரும்.


Gmail - கூகுள் வழங்கும் மின்னஞ்சல் சேவை.


FeedBurner - News Feed உருவாக்க உதவும் வசதி.



YouTube - காணொளிகளை காண.


Blogger - கூகுள் வழங்கும் வலைப்பூ சேவை.



Google Docs - Word, Excel, Presentation போன்றவற்றை ஆன்லைன் மூலம் செய்ய.



Google Drive - ஆன்லைன் storage வசதி.



Google+ - கூகுளின் சமூக வலைத்தளம்.



Orkut - காணாமல் போன சமூக வலைத்தளம்.



Google Buzz - தமிழர்களின் விருப்பான இடமாக இருந்தது. இப்போது இல்லை


Picasa Web Albums - படங்களை பகிர உதவும் தளம்.



Google Sites - குருந்தளம் என்று சொல்லலாம்.



SMS Channels -பல வகைகளில் குறுஞ்செய்திகளை பெற உதவும் தளம்.



Google Apps - சொந்த டொமைன் மூலம் கூகுளின் பல வசதிகளை பயன்படுத்தும் வசதி.



இதில் Google 3D Warehouse, Google Bookmarks, Google Business Solutions, Google Calendar, Google Friend Connect (Closed), iGoogle (Closed), Marratech e-Meeting, Panoramio, Picnik (Closed), Google profile, Google Reader, Speak To Tweet, Google Voice (USA), Web Fonts போன்றவையும் உள்ளன.


Development


Webmaster Tools - உங்கள் Website கூகுளில் எப்படி உள்ளது என்பது பற்றிய தகவல்களுக்கு.



Google Page speed - உங்கள் தளம் லோட் ஆகும் நேரம், மார்க், மற்றும் பல தகவல்களை தரும்.



இதில் AngularJS, Google App Engine, Google Closure Tools, Google Code, Dart, Google Go, OpenSocial, Google Swiffy, Google Web Toolkit போன்றவையும் உள்ளன.


Map


கீழே உள்ள அனைத்தும் Map என்ற ஒன்றுக்காக உள்ளவை. http://maps.google.com/


Google Maps - இடங்களை தேட.

Google Maps Coordinate

Google Mars

Google Moon

Google Sky

Google Transit

Google BodyG

Google Map Maker

Google Building Maker


Statistics

தகவல்களை திரட்டி, அதை அலசி தருவது. அந்த வசதிகள் தான் கீழே உள்ளவை.


Google Analytics - தளங்களின் Traffic தகவல்களை சில உபரிகளுடன் சேர்த்து தரும்.http://www.google.com/analytics/


இதில் Correlate, Google Fusion Tables, Google Insights for Search, Google Refine, Trendalyzer, Google Trends, Zeitgeist.


Operating systems


ஆம் இயங்கு தளங்களிலும் கால் பதித்துள்ளது கூகுள்.


Android - Samrtphone Operating System



Google Chrome OS - லினக்சை அடிப்படையாக கொண்டது. முழுக்க முழுக்க இணையம் சார்ந்து இயங்கும்...http://www.google.com/intl/en/chrome/devices/

இதில் Google TV யும் உள்ளடக்கம்.


Software / Appications

இவை கணினிகளில் இயங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டவை.


AdWords Editor

Google Chrome

Google Earth

Gmail Notifier

IME

Google Japanese Input

Picasa

Picasa Web Albums Uploader

Google Pinyin

Quick Search Box

Wireless access

SketchUp

Google Toolbar

Visigami


Mobile applications


மேலே உள்ள பல வசதிகளை மொபைல் மூலமும் பயன்ப்டுத்தம் முடியும். Youtube, Gmail, Calender, என பல.


Hardware

இவை கூகுள் உருவாக்கி இருக்கும் சாதனங்கள்


Motorola Mobility - Motorola நிறுவனம்.

Nexus One - கூகுள் போன்

Nexus S - கூகுள் போன்

Galaxy Nexus - கூகுள் போன்

Project Glass - ஒரு கண்ணாடி இணையத்தோடு நம்மை ஒருங்கிணைக்க

Nexus 7 - Tablet Computer


Google Mini, Google Search Appliance, Nexus Q போன்றவையும் இதில் உள்ளடக்கம்.


Services


இதில் Google Crisis Response, Google Fiber, Google Public DNS போன்றவை இருக்கின்றன.


இதில் பலவற்றில் கூகுள் தோல்வி அடைந்து அவற்றின் சேவைகளை நிறுத்து இருக்கிறது. Google Buzz, Friend connect போன்றவை போல பல.


இதனால்தான் Google ஐ "Google ஆண்டவர்" என்று மக்கள்ஸ் அழைக்கிறார்கள். :


நன்றி : தகவல் தொழில்நுட்பம் FACEBOOK PAGE