> என் ராஜபாட்டை : அஜித்தின் அடுத்த படம் ? விஜய் 25

.....

.

Monday, December 24, 2012

அஜித்தின் அடுத்த படம் ? விஜய் 25


அஜித்தின் அடுத்த படம் ? 


விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜீத், அப்படம் முடித்த உடனே தனது அடுத்த படத்தினை துவங்க திட்டமிட்டு இருக்கிறார்.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி என பெரிய பட்டாளத்தை வைத்து விஷ்ணுவர்தன் ஒரு படத்தினை இயக்கி வருகிறார். இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. நடுவில் அஜீத்திற்கு காலில் ஏற்பட்ட காயத்தால் சிறிது காலம் படப்பிடிப்பு தடைப்பட்டது. இப்போது சென்னையில் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.

எப்போதுமே ஒரு படத்தினை முடித்தவுடன் சிறிது கால ஒய்விற்கு பின்னரே தனது படத்தினை துவங்குவார் அஜீத். ஆனால் இம்முறை விஷ்ணுவர்தன் படப்பிடிப்பு முடிந்தவுடனேயே 'சிறுத்தை' சிவா இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் முதன் முறையாக அஜீத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தமன்னா.

இப்படம் குறித்து இயக்குனர் 'சிறுத்தை' சிவா " என்னுடைய இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு கதாநாயகி தேடல் முடிந்துவிட்டது. இப்படத்தில் முதன்முறையாக அஜீத்துடன் தமன்னா ஜோடி சேர்கிறார். மற்றும் விதார்த், பாலா, முனீஷ், சோஹில் என இளம் நாயகர்களும் அஜீத்தோடு இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தில் ஜெயராம், சந்தானம் கூட்டணியில் நகைச்சுவை களைகட்டும். ஜெயப்பிரகாஷ், இளவரசு ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள்.
இப்படம் குறித்து அஜித்திடம் ஒவ்வொரு முறை பேசும்போதும், அவரது கதாபாத்திரத்தின் தன்மை வலுவாகிக் கொண்டே இருக்கிறது. இந்த படம் நிச்சயமாக அஜித் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் ! " என்று கூறியுள்ளார்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை தேவி ஸ்ரீபிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.  படத்திற்கான வேலைகள் மும்முரமாக தொடங்கி விட்டன.


========================================================================

விஜய் பாடவிருக்கும் 25வது பாட்டு!'துப்பாக்கி' தியேட்டர்களில் வசூலை குவித்துக் கொண்டிருக்க, அப்படத்தின் பாடல்களைப் பொருத்தவரை  விஜய் பாடிய ' GOOGLE GOOGLE ' பாடல் தான் அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பு பெற்று இருக்கிறது.
பல படங்களில் விஜய் பாடினாலும் 'சச்சின்' படத்திற்கு பின் 7 ஆண்டுகள் கழித்து 'துப்பாக்கி' படத்தில் தான் பாடினார். 'GOOGLE GOOGLE' பாடல் விஜய் பாடிய 24வது பாடலாகும்.

இயக்குனர் விஜய் - விஜய் இணைந்திருக்கும் படத்திலும் விஜய் ஒரு பாடலை பாட சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இப்பாடலை நா.முத்துகுமார் எழுதி இருக்கிறார்.

விஜய்யிடம் பாடல் வரிகளையும் பாடலுக்கான டியூனையும் கொடுத்து விட்டார்கள். விஜய் எப்படி பாட வேண்டும் என்று தற்போது பயிற்சி எடுத்து வருகிறாராம். அடுத்த வாரம் மும்பையில் ஒரு ஸ்டூடியோவில் இப்பாடல் பதிவு நடைபெற இருக்கிறது.

நன்றி : விகடன்

5 comments:

 1. விகடனுக்கு மிகவும் நன்றி...!

  வாத்திக்கும் ஒரு நன்றியை சொல்லிருவோம், நன்றிய்யா....

  ReplyDelete
 2. பயனுள்ள தகவல்

  ReplyDelete
 3. ம்.... விஜய் 24 பாட்டு பாடிட்டாரா...

  ரைட்டு...

  ReplyDelete
 4. சார் உங்கள வச்சு தன நான் தலைப்பு பிடிக்கிறேன் ம்ம் கலக்குங்க நானும் போடுறேன் சினிமா நியூஸ்

  ReplyDelete
 5. டெம்ப்ளேட் சூப்பரா இருக்கே

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...