மூன்று தனி தனி கதைகள் இறுதியில் எப்படி ஒன்றாக இணைகிறது என்பதுதான் முதல் கதையின் ஹீரோ அஸ்வின்அவரது காதலி சுவாதிக்கும் இடையில் நடக்கும் சண்டையில் இவர் ஒரு விபத்தை செய்ய அதில் பாதிக்கபட்ட பெண்ணுக்கு ரத்தம் வேண்டும் . அதை எப்படி பெற்றார் என்பது ஒரு கதை .
இரண்டாவதில் சுமார் மூஞ்சி குமார் என செல்லமாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி அவரது (ஒருதலை ) காதலி நந்திதாக்கு காதல் வரவழைக்க செய்யும் கோமாளித்தனங்களும் , கலோபரங்களும் .
முன்றாவது கதையில் ஒரு பெண் (பொம்பளை ) தனது கள்ள காதலர்களுடன் (கவனிக்கவும் காதலனுடன் இல்லை காதலர்களுடன் ) இணைந்து தனது கணவனை போட்டு தள்ளிகிறார் . இவர்கள் கையில் சேதுபதியின் செல் கிடைகிறது .
இந்த மூன்று கதையும் கடைசியில் எப்படி எங்கே இணைகிறது என்பதை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள் .
+ பாயிண்ட்ஸ் :
விஜய் சேதுபதியின் நடிப்பு . படத்துக்கு படம் நடிப்பு மெருகேறுகிறது .
தனக்கு அதிகம் ஸ்கோப் இல்லாத படம் என்றாலும் ஒத்துக்கொண்டு நடத்ததுக்கு சேதுபதிக்கு பாராட்டலாம் .
கட்டபஞ்சாயத்து ஆளாக வரும் சுகர் பேஷன்ட் பசுபதி . நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல வேடம் .
கடைசி 25 நிமிடங்கள் அதிரடி காமெடி .
அஸ்வினின் அலட்டல் இல்லாத நடிப்பு
சுவாதியின் புன்னகை (!!!!!!!)
போஸ்டர் டிசைன்
சிந்திக்க துண்டாத தொடர் காமெடி
வில்லனாக இருப்பவர்களுடன் ஆண்டி நடத்தும் உரையாடல்
சிந்திக்க துண்டாத தொடர் காமெடி
வில்லனாக இருப்பவர்களுடன் ஆண்டி நடத்தும் உரையாடல்
- பாயிண்ட்ஸ் :
நெறைய காட்சிகளில் டாஸ்மாக்கில் தண்ணி அடிப்பது போல காட்டுவது . ஏற்கனவே நாட்டில் தன்னியாடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிட்டு .( அதுக்கு பிரதிபலனா கடைசியில் குடி குடியை கெடுக்கும்னு மெசேஜ் சொல்லிடாங்க )
ரோபோ சங்கரை கொஞ்ச நேரம் மட்டும் வைத்துகொண்டது , (அண்ணன் வந்தா ஸ்க்ரீனே பத்தமாட்டுது )
பாடல்கள் சுமார்தான் .
பின்னணி இசை பரவாயில்லை ரகம் ( காமெடி படத்திற்கு இதற்க்கு மேல் தேவையில்லை என நினைத்து விட்டார்கள் போல )
மலையாளியை காட்டிகொடுப்பவர்கள் போல காட்டியது . மலையாளத்தில் டப் பண்ணுனா தமிழன் காட்டி கொடுப்பதுபோல மாத்திடுவானுங்க .
இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் ஸ்லொவ்
ஆனந்த விகடன் மார்க் : 43
குமுதம் : ஓகே
ராஜபாட்டை : 6.5/10
மொத்தத்தில் :
"மனசுவிட்டு சிரித்துவிட்டு ஏன் சிரித்தொம்னு யோசிக்க வேண்டாம்னு நினைப்பவர்கள் பார்க்கலாம் . கொடுத்த காசுக்கு நஷ்டம் இல்லை "
இதையும் படிக்கலாமே
FREE CALL AND SMS APPLICATIONS FOR ANDROID
FREE CALL AND SMS APPLICATIONS FOR ANDROID
FREE CALL AND SMS APPLICATIONS FOR ANDROIDTweet |
அவ்ளவு தான விஜய் சேதுபதி
ReplyDeleteசுவையான விமர்சனம்! நன்றி!
ReplyDeleteசுவையான விமர்சனம்! நன்றி!
ReplyDeleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான விமர்சனம்
ReplyDeleteஅந்த படத்த பாத்துட்டு தூங்கிட்டேன் ன்னு என் ப்ரென்ட் சொன்னாங்க, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட்...
ReplyDelete