> என் ராஜபாட்டை : சினிமா விமர்சனம்

.....

.
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Friday, March 11, 2016

மாப்ள சிங்கம் - சினிமா விமர்சனம்






                 விமல் , அஞ்சலி, சூரி  மற்றும் பலர் நடிப்பில் N.ராஜசேகர் இயக்கத்தில்  நேற்று இணையத்திலும் இன்று திரையரங்கிலும் வெளிவந்த படம் தான் "மாப்ள சிங்கம் ". சில வருடங்களுக்கு முன் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் செல்ல குழந்தையாக இருந்த விமல், அடுத்தடுத்து சில படங்கள் சொதப்ப தன்னை நிலை நிறுத்த காத்திருக்கும் படம் இது . வாங்க விமர்சனம் பாப்போம்.



கதை :

                     1980 களில் வந்த பலபடங்களில் உள்ள அதே கதைதான். தேர் இழுப்பது முதல் , கோவில் முதல் மரியாதையை யாருக்கு அழிப்பது என்பது வரை ராதாரவிக்கும் குறுப்புக்கும்  , முனிஸ்காந்த்க்கும்  குருப்புக்கும் பல வருடங்களாக தகராறு. ராதாரவியின் தங்கை பையன் விமல். படிக்காமல் ஊரில் கட்டை பஞ்சாயத்து செய்து காதலர்களை பிரிப்பது இவரது முக்கியவேலை. இதுக்கு துணையாக சூரி அண்ட் கோ.

               ஒரு கேஸ் விஷயமாக அறிமுகமாகும் அஞ்சலியை பார்த்ததும் காதல். அஞ்சலியின் அண்ணன் விமலின் தங்கையை காதலிக்க, விமல் காதலி ஏற்றாரா அல்லது வழக்கம் போல பிரித்தாரா, அஞ்சலி விமல் காதல் என்னாச்சு? ஊர் பகை தீர்ந்ததா? இதுதான் கதை.


+ பாயின்ட்.

* சூரியின் காமெடி. கத்தி கத்தி காமெடி பண்ணாமல் ஒரு வரி வசனத்தில் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறார்.

* படத்தை சீரியசாக கொண்டுபோகாமல் காமெடியாக கொண்டுபோனது.

* நீண்ட நாட்களுக்கு பின் மெலிந்த அஞ்சலி .

* விமல் அறிமுக பாடல்



- பாயின்ட் 

* அஞ்சலி மெலிந்தது சரி. விமலுக்கு என்னாச்சி? ஒரு காட்சியில் சிகப்பு சட்டையில் வருவார் அப்பது விவேக் நடிச்ச "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" என்ற போஸ்டர் தான் நினைவுக்கு வருது.

* காமெடின்னு நினைத்து பல இடங்களில் வசனம் கடுப்பெத்துது.

* முனிஸ்காந்த் டயலாக் டெலிவரி கொடுமை.

* நல்ல நடிகர் ஜெயபிரகாஷை வீணடித்தது .

* பாடல்கள்.

* விமல் - அஞ்சலி காதல் வருவதும் , அவர்கள் பிரிய காரணமும் ஐந்து பைசா புரோஜனம் இல்லாதது.

* சிவகார்த்திகேயன், அனிருத் சேர்ந்து பாடிய பாடலை வீணடித்தது.

* அஞ்சலியில் கேவலாமா ஹேர் ஸ்டைல்.



கடைசியா :

    பார்த்தே ஆகவேண்டிய படம்னு சொல்லமுடியாது ரொம்ப மொக்கையான படம்னும் சொல்லமுடியாது , டிவியில் போட்டா பார்க்கலாம்.

Saturday, July 11, 2015

பாகுபலி - சினிமா விமர்சனம்




               நீண்டகால தயாரிப்பாகவும், இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கபட்டதுமான ,தமிழ் தெலுங்கு என பலமொழில் ஒரே நேரத்தில் வெளியான படம்தான் பாகுபலி. தொடர் வெற்றிகளை குவித்துவரும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தின் அடுத்த பிரமாண்ட வெற்றிபடைப்பி இது.

கதை :


    சகோதர யுத்தம்தான் முக்கியகளம் . மகிழ்மதி என்ற நாட்டை ஆளும் ரானாவுக்கும் அதன் உண்மையான அரசனான ஆனால் குழந்தையிலேயே ஆதிவாசிகளிடம் வளரும் பிரபாஸ்க்கும் இடையில் நடப்பதுதான் கதை. இடையில் தமனாவின் காதல் , போர் என செல்கின்றது. முழுகதையும் யாராலும் சொல்ல முடியாது சொல்ல முடியாது  காரணம் படமே பாதிதான்.

+ பாயிண்ட்ஸ் :

பிரமாண்டம் , பிரமாண்டம், பிரமாண்டம். ஆரம்ப காட்சியில் வரும் அருவிகள் ஆகட்டும் இறுதியில் நடக்கும் போர்கால காட்சிகளாகட்டும் எதிலும் பிரமாண்டம்.

துணைநடிகர்கள் தேர்வு.


சத்தியராஜின்அசத்தலான நடிப்பு. கடப்பா என்ற பாத்திரத்தில் மனுஷன் பின்னிருகார். இரண்டாம் பாகத்தில் அவர் பாத்திரம் இன்னும் வலுவாக இருக்கும் போல. 

பெரிய நடிகர் என்றஈகோ இல்லாமல் சத்தியராஜ் தன தலையில் பிரபாஸ் காலை வைக்க ஒத்துகொண்டது. ஒரு அருமையான நடிகரை தமிழில் வீணடிக்கிறோம்.

ரம்யா கிருஷ்ணனின் அசத்தல் நடிப்பு. 

போர்களகாட்சியில் CG WORK செம. திரை முழுவதும் கூட்டம் , சண்டை , அனா கடைசி அரைமணி நேரம் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைத்துவிட்டனர்.

கண்களை கொஞ்சம் கூட அகலவிடாத ஆர்ட் டைரக்டரின் கடின உழைப்பு.

தெளிவான திரைகதை. சாதாரண கதையைஇப்படியு சொல்லலாம் என காட்டியது இயக்குனரின் திறமை.

அனுஷ்கா , மொத்தமே பத்து வார்த்தைதான் பேசியிருப்பார். ஆனால் அவர் பார்வை பல வார்த்தை பேசுகிறது. இரண்மாம் பாகத்தில் முக்கிய பாத்திரம் இவர்தான்.


- பாயிண்ட் .

வீரமான பெண் பாத்திரத்துக்கு குழந்தமுகம் தமணா பொருந்தவில்லை. 

பாடல்கள் சுமார்.

சில காட்சிகளில் கிராபிக்ஸ் துருத்திக்கொண்டு தெரிவது. ராணா மோதும் அந்தகாட்டுஎருமை .

மொத்தத்தில் :

அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான பொழுதுபோக்கு படம். பிரமாண்டம் என்னும் சொல்லுக்கு இனி இந்த படத்தை உதாரணமாக சொல்லலாம். ஆனால் முழுப்படத்தை பார்க்க ஆசைபடுபவர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும். படம் பாதிதான் ஓடும். மீதி 2016 இல் இரண்டாம் பாகமாக வரும்.


Saturday, July 19, 2014

சதுரங்க வேட்டை : விமர்சனம்





www.rajamelaiyur.blogspot.com



நடிகர் , இயக்குனர் மனோ பாலாவின் தயாரிப்பில் , லிங்குசாமியின் வெளியிட்டில் வந்திருக்கும் படம் சதுரங்க வேட்டை . தனுஷின் வேலையில்லா பட்டதாரிக்கு போட்டியாக வந்த இந்த படம் போட்டியில் வெல்லுமா என பார்ப்போம் .

கதை :

நாம் எல்லாரும் எதோ ஒருதடவையாவது யாரிடமாவது ஏமாந்து இருப்போம் . அப்படி நமை ஏமாற்றியவரின் புத்திசாலித்தனத்தை பாராட்டாமல் இருக்கமுடியாது. அதுபோலதான் இந்த படத்தின் ஹீரோ. ஹீரோ காந்திபாபுவாக மிளகாய் படத்தில் நடித்த நட்டு என்கிற நடராஜன் . இவர் சிறந்த ஒளிபதிவாளரும் கூட . சீக்கிரம் பணக்காரனாக துடிக்கும் பேராசை கொண்ட மக்களின் பலவினத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது இவரின் தொழில் . ஈமு கோழி முதல் மண்ணுளி பாம்பு வரை இவர் விளையாடு செல்கிறது . 
www.rajamelaiyur.blogspot.com

இந்த குற்றத்திற்காக போலீசிடம் மாட்டி வெளிவரும் பாபு கடத்தப்பட , பணம் என்ன ஆனது , ஏன்  கடத்தல் , இதன் இடையே வரும் காதலி இஷாரா என்ன ஆனார் , கடைசியில் நட்டு திருந்தினாரா இல்லை எதிரிகளால் கொள்ளபட்டாரா என்ற சதுரங்க ஆட்டத்தின் முடிவை திரையில் பாருங்கள் .

www.rajamelaiyur.blogspot.com


+ பாயின்ட் 

* நடராஜின் அலட்டல் இல்லாத நடிப்பு . இதுல வேறு யாராவது பெரிய  
  நடிகரைபோட்டு கேரட்டரை கொல்லாமல்விட்டது நல்லது .

* வசனங்கள் மிக பெரிய பலம் (நல்லவனா இருந்த செத்தபின்புதான் 
  சொர்கத பார்க்கலாம் ஆனா கெட்டவனா இருந்தா வாழும்போதே 
  பார்க்கலாம் ..)

* மக்களை ஏமாற்றும் திட்டங்கள் . சமிபத்தில் நடந்த நிகழ்வுகளை 
 கதையில் காட்டியது (MLM Plan)

* வழக்கம் போல இளவரசுவின் நடிப்பு அருமை .

* புதுமுக இயக்குனர் என சொல்லமுடியாத அளவுக்கு கலக்கி உள்ள 
  இயக்குனர் வினோத்

* பின்னணி இசை

* வேகமான திரைகதை


-    
   -   பாயின்ட் :

பாடல்கள் சுமார்தான் . இசை ஷான் ரோல்டன்
மற்றபடி பெரிய குறைகள் ஒன்றும் தெரியவில்லை (எனக்கு )

முடிவா !!!
கண்டிப்பா பார்க்கலாம் , ஜாலியா குடும்பத்துடன் பார்க்கலாம்



Saturday, June 14, 2014

முண்டாசுபட்டி : திரைவிமர்சனம்



இது குறும்படமாக வந்து பெரும் வரவேற்பையும் , பாராட்டையும் பெற்ற ஒரு காமெடி படம் , அதை முழுநீள படமாக எடுத்துள்ளனர் . குறும்படத்தில் இருந்த வேகம் , காமெடி இதில் இருந்ததா, இயக்குனர் ராம்குமார் வெற்றி பெற்றாரா  என பார்ப்போம் .

   கதை 1982 வருடம் நடைபெறுகிறது , போட்டோ எடுத்தாலே இறந்துவிடுவோம் என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் வாழும் மக்களை கொண்டது “முண்டாசுபட்டி “. இறந்தவர்களை மட்டுமே போட்டோ எடுப்பது இவர்கள் வழக்கம் . அப்படி போட்டோ எடுக்க வரும் ஹீரோ விஷ்ணு அங்கு உள்ள நந்திதாவை காதலிக்க இவர்கள் காதல் என்ன ஆனது என்பதை சைட்டிஷ் வைத்துகொண்டு காமெடியை மெயின்ஆக வைத்து கொண்டு விளையாடியுள்ளனர் .

விஷ்ணு காமெடியில் நன்றாக நடிக்க முயர்சிசெய்துளார் . நந்திதா அந்த கணங்கள் மட்டுமே பல பாஷை பேசுது . இவரின் நடிப்பில் பெரிய அளவில் சொல்ல ஒன்றும் இல்லை . படத்தில் இரண்டு துணை நடிகர்கள் தான் பெரிய அளவில் பெயர் வாங்குகிறார்கள் , பெயர் மட்டுமல்ல கைதட்டலுக்கும் இவர்கள்தான் காரணம் . ஒன்று காளி இவர் விஷ்ணுவின் நண்பராக படம் முழுவதும் வருகிறார் . இவர் அடிக்கும் பல சந்தானம் ஸ்டைல் டயலாக்க்கு செம ரெஸ்பான்ஸ் தியட்டரில்.
 மற்றவர் முனிஸ் கான் என வரும் ராமதாஸ் . இவர் வந்த பின்தான் படம் வேகம் பிடிகிறது . பல காட்சிகள் காமெடி சரவேடி . போட்டோவை பார்த்து புலம்புவது நச் . ஆனந்த ராஜ் வருகிறார் , போகிறார் .

+ பாயிண்ட்ஸ் :
·         காமெடி காட்சிகள்
·         நகைசுவை வசனங்கள்
·         கலை இயக்குனரின் உழைப்பு
·         குடும்பத்துடம் பார்ப்பது போல அமைக்கபட்ட திரைகதை
·         ஓவர் சென்டிமென்ட் போட்டு புழியாதது
·         காளி , ராமதாசின் நடிப்பு
·         நந்திதா கண் (!!!)

பாயிண்ட்ஸ் :

·         பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்
·         படத்தின் நீளம் .
·         முதல் பாதியில் ஆரம்பம் .



கடைசியாக :

     ரொம்ப எதிர்பார்க்காம போனா கண்டிப்பா சிரித்துவிட்டு வரலாம் . குடும்பத்துடன் பார்க்கலாம் .



Wednesday, October 2, 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - விமர்சனம்



மூன்று தனி தனி கதைகள் இறுதியில் எப்படி ஒன்றாக இணைகிறது என்பதுதான் முதல் கதையின் ஹீரோ அஸ்வின்அவரது காதலி சுவாதிக்கும் இடையில் நடக்கும் சண்டையில் இவர் ஒரு விபத்தை செய்ய அதில் பாதிக்கபட்ட பெண்ணுக்கு ரத்தம் வேண்டும் . அதை எப்படி பெற்றார் என்பது ஒரு கதை .

இரண்டாவதில் சுமார் மூஞ்சி குமார் என செல்லமாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி அவரது (ஒருதலை ) காதலி நந்திதாக்கு காதல் வரவழைக்க செய்யும் கோமாளித்தனங்களும் , கலோபரங்களும் .

முன்றாவது கதையில் ஒரு பெண் (பொம்பளை ) தனது கள்ள காதலர்களுடன் (கவனிக்கவும் காதலனுடன் இல்லை காதலர்களுடன் ) இணைந்து தனது கணவனை போட்டு தள்ளிகிறார் . இவர்கள் கையில் சேதுபதியின் செல் கிடைகிறது .

இந்த மூன்று கதையும் கடைசியில் எப்படி எங்கே இணைகிறது என்பதை சிரிக்க  சிரிக்க சொல்லியிருக்கிறார்கள் .


+ பாயிண்ட்ஸ் :

விஜய் சேதுபதியின் நடிப்பு . படத்துக்கு படம் நடிப்பு மெருகேறுகிறது .

தனக்கு அதிகம் ஸ்கோப்  இல்லாத படம் என்றாலும் ஒத்துக்கொண்டு நடத்ததுக்கு சேதுபதிக்கு பாராட்டலாம் .

கட்டபஞ்சாயத்து ஆளாக வரும் சுகர் பேஷன்ட் பசுபதி . நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல வேடம் .

கடைசி 25 நிமிடங்கள் அதிரடி காமெடி .

அஸ்வினின்  அலட்டல் இல்லாத நடிப்பு

சுவாதியின் புன்னகை (!!!!!!!)

போஸ்டர் டிசைன்

சிந்திக்க துண்டாத தொடர் காமெடி

வில்லனாக இருப்பவர்களுடன் ஆண்டி நடத்தும் உரையாடல் 



- பாயிண்ட்ஸ் :

நெறைய காட்சிகளில் டாஸ்மாக்கில் தண்ணி அடிப்பது போல காட்டுவது . ஏற்கனவே நாட்டில் தன்னியாடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிட்டு .( அதுக்கு பிரதிபலனா கடைசியில் குடி குடியை கெடுக்கும்னு மெசேஜ் சொல்லிடாங்க )

ரோபோ சங்கரை கொஞ்ச நேரம் மட்டும் வைத்துகொண்டது , (அண்ணன் வந்தா ஸ்க்ரீனே பத்தமாட்டுது )

பாடல்கள் சுமார்தான் .

பின்னணி இசை பரவாயில்லை ரகம் ( காமெடி படத்திற்கு இதற்க்கு மேல் தேவையில்லை என நினைத்து விட்டார்கள் போல )

மலையாளியை காட்டிகொடுப்பவர்கள் போல காட்டியது . மலையாளத்தில் டப் பண்ணுனா தமிழன் காட்டி கொடுப்பதுபோல மாத்திடுவானுங்க .

இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் ஸ்லொவ் 

ஆனந்த விகடன் மார்க் : 43

குமுதம் : ஓகே

ராஜபாட்டை :  6.5/10

மொத்தத்தில் :

"மனசுவிட்டு சிரித்துவிட்டு ஏன் சிரித்தொம்னு யோசிக்க வேண்டாம்னு நினைப்பவர்கள் பார்க்கலாம் . கொடுத்த காசுக்கு நஷ்டம் இல்லை "


இதையும் படிக்கலாமே 

FREE CALL AND SMS APPLICATIONS FOR ANDROID
FREE CALL AND SMS APPLICATIONS FOR ANDROID
 FREE CALL AND SMS APPLICATIONS FOR ANDROID

Monday, July 22, 2013

Facebook இல் Account வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..







இன்று மிக பெரிய சமுக வலைத்தளம் என்றால் அது Facebook தான். தினம்தோறும் பலர் அதில் இணைத்து வருகின்றனர். தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் , தனது பழைய நண்பர்களை தேடி கண்டுபிடிக்கவும் , தனது ரசனையுடன் ஒத்துபோகும் நண்பர்களை கண்டுபிடிக்கவும் இது உதவுகிறது. இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளது .

குறிப்பாக பெண்கள் இந்த Facebook இல் படும்பாடு சொல்லிமாலாதது . Facebook ஆல் வாழ்க்கையை தொலைத்த , பல கஷ்டங்களை அனுபவித்த பெண்கள் பலர் உள்ளனர் . சமுகத்திற்கு பயந்து அவர்கள் சொல்லுவதில்லை . பிறரால் நீங்கள் கஷ்டப்பட்ட கூடாது என நினைத்தால் , உங்களுக்காக சில யோசனைகள் ...


  1. தயவு செய்து உங்கள் புகைப்படங்களை பதிவேற்றாதிர்கள் . அந்த படங்கள் சில சமுக விரோதிகளால் ஆபாச படமாக மாற்ற வாய்ப்புள்ளது .


  1. எக்காரணத்தை முன்னிட்டும் உங்கள் உண்மையான முகவரி , தொலைபேசி எண்ணை கொடுக்காதீர்கள் .


  1. குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் உங்கள் கடவு சொல்லை (Password) மாற்றி கொண்டே இருங்கள் .

  1. கடவு சொல் எளிதில் யூகிக்க முடியாததாக வையுங்கள் . உங்கள் பிறந்த நாள் , மொபைல் நம்பர் , பெற்றோர் பெயரை வைக்காதீர்கள் .

  1. என்ன நெருங்கிய உறவினராக இருந்தாலும் , நன்பர்களாக இருந்தாலும் கடவு சொல்லை கொடுக்காதீர்கள் . திருமணம் நிச்சயமான பெண்கள் கூட கொடுக்காதீர்கள் .

  1. நன்றாக தெரிந்தவர்களின் Friend Request மட்டும் Accept செய்யுங்கள் .

  1. உங்கள் நண்பர்கள் புகைப்படங்களில் உங்களை Tag செய்வதை தடுங்கள். அப்படி Tag செய்தாலும் அது உங்கள் அனுமதி கிடைத்த பின்தான் உங்கள் Wall இல் தோன்ற வேண்டும் என Setting கில் மாற்றம் செய்யுங்கள் .

மாற்றம் செய்ய :Home -> Privacy setting ->Timeline and Tagging 

  1. தவறான படங்கள் அல்லது ஆபாசமான Status போடும் நண்பர்களை உடனே Unfriend செய்யுங்கள் .

  1. உங்கள் கணக்கில் Mobile Notification option Enable செய்யுங்கள் .
Enable செய்ய : Home -> Account setting ->security setting -> login notification

  1. மற்றவருடன் Chat செய்யுன் போது உங்களின் உண்மை தகவல்களை சொல்லவேண்டாம் . அதுபோல உங்களின் பலவினங்களை சொல்லாதீர்கள் .

  1. இதையும் மீறி எதாவது தவறு வந்தால் உடனடியாக உங்கள் Account ஐ அழித்துவிடுங்கள் .


ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கபடுவதால் இந்த பதிவு .

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

Friday, July 19, 2013

மரியான் : விமர்சனம்








ஆஸ்கர் மூவிஸ் வழங்கும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படன் தான் மரியான் . நீண்ட இடைவெளிக்கு பின் ரகுமானும் , இயக்குனர் பரத் பாலாவும் இணைந்த படம் . வந்தே மாதரம் ஆல்பம் இயக்கிய பரத் பாலாதான் இயக்குனர் . பார்வதி மேனேன் கதாநாயகியாக நடித்துள்ளார் .

கதை :

ஒரு கடலோர கிராமத்தில் வசிக்கும் தனுஷ் , பார்வதி இவர்கள் காதலில் ஏற்படும் சிக்கல்களும் , அதற்காக தனுஷ் சூடான் நாட்டிற்கு வேலைக்கு செல்ல அங்கிருந்து மீண்டும் வரும் பொழுது சில தீவிரவாதிகளால் கடத்த படுகிறார் . அதன் பிறகு தனுஷ் தப்பித்தாரா , தனது காதலியை கரம் பிடித்தாரா என்பதுதான் கதை .


+ பாயின்ட் :

தனுஷின் நடிப்பு . வரவர அனைத்து படங்களிலும்  தனுஷின் நடிப்பு மெருகு ஏறி வருகிறது . இதில் அவரின் உடல் மொழி அருமை .

கதாநாயகி பார்வதியின் அழகான நடிப்பு .

இருவரின் காதல் எபிசொட் .

A.R. ரஹ்மான் இசை படத்திற்கு மிக பெரிய பலம் .

பின்னணி இசையில் கலக்கி உள்ளார் . கிராமத்தில் நடக்கும் ஒரு சண்டைகாட்சியில் பின்னணி இசை பிரமாதமாக இருக்கும் . அது போல கிளைமாக்ஸ் காட்சியில் பின்னணி இசையில் பின்னி எடுத்து இருக்கிறார் .

பாடல்கள் ஏற்கனவே ஹிட் . அதிலும் நெஞ்சே எழு பாடல் படமாக்கபட்ட விதம் அருமை .

ஒளிபதிவு கண்ணை உறுத்தாத வண்ணம் உள்ளது .


- பாயின்ட் :

ஆரம்பத்தில் வரும் தனுஷின் காதல் காட்சிகள் நீட்டி முழங்கபட்டு இருக்கு .

இருவர்குள்ளும் காதல் வருவது மிகவும் செயற்கையாக உள்ளது ( ரவுடியை அடிச்சா காதல் வரும்னு எவன் கண்டுபிடிச்சான்னு தெரியல .)

ஹிட் ஆன பாடல்கள் திரையில் சில சரியில்லை .

மீனவர் பிரச்சனை பற்றிய படம்னு பேப்பர்ல சொன்னாங்க ஆனால் அது பற்றி இதில் மூச்சு விட வில்லை .

தீவிரவாதிங்க என்னமோ லோக்கல் ரவுடி போல உள்ளனர் .

திவிரவாதிங்களிடம் மொத்தமே 3 அல்லது 4 ஜீப் தான் இருக்கு போல , பாவம் எதிர்கட்சி தீவிரவாதியோ ?

படத்தின் ஆரம்பம் மிக மெதுவாக உள்ளது .


ஆனந்த விகடன் மார்க் : 42

குமுதம் : பார்க்கலாம் 

ராஜபாட்டை மார்க் : 5/10

குறிப்பு : சிங்கம் 2  நன்றாக ஓடுவதால் மரியான் ஓடுவது கொஞ்சம் சிக்கல்தான் . ஆனாலும் படம் பார்க்கும் வகையில் தான் உள்ளது .