ஒரு கவிதை படித்து அழுகை வரலாம் , அல்லது ஒரு கதை அல்லது பாடலை கேட்டு அழுகை
வரலாம் . ஆனால் ஒரு புத்தகத்தின் முன்னுரையை படித்து அழுகை வருமா ? கண்டிப்பாக
வரும் . திரைப்படங்களில் சென்டிமென்ட் காட்சிகள் வந்தால் சிரிப்பை அடக்கமுடியாமல்
பார்ப்பேன் . என் தங்கை திருமணமாகி கிளம்பும்போது அனைவரும் அழுவ , நான் கவலைபடாமல்
தூங்கிவிட்டேன் . அப்படி பட்ட என்னை உலுக்கிய , இரவு தூக்கத்தை கெடுத்த ஒரு நூலின்
முன்னுரையை தான் உங்களுடன் பகிரபோகிறேன் .
இதை எழுதியவர் யார் என தெரியவில்லை . எதோ ஒரு கிருத்துவ பள்ளியில் வேலை பார்த்த
ஆசிரியை , அவர் இப்போது பல அறிவியல் கதைகள் எழுதுகிறார் . அவர் இப்படி எழுத
தூண்டிய, காரணமான அவரது வாழ்கையை புரட்டிபோட்ட ஒரு மாணவியின் கதையை முன்னுரையாக
சொல்லியுள்ளார் .
இன்றைய மதிப்பெண் உலகில் மதிப்பெண் மட்டுமே மாணவர்களின் அறிவை மற்றவர்களுக்கு
பறைசாற்றுகிறது . புத்தகத்தில் , நோட்ஸில் உள்ளதை கரைத்து குடித்து தேர்வில்
வாந்தி எடுபவர்களைதான் இந்த சமுதாயம் பாராட்டுகிறது . சொந்தமாக எழுத
முயர்ச்சிபவர்களை முளையிலேயே கிள்ளி எறிகின்றது .
6 வகுப்பில் தமிழில் “கஷ்டபட்டு முன்னேறினார் “ என்பதை
சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுத சொன்னார்கள் . ஒரு மாணவன் “என் தந்தை சொந்த
தொழில் செய்து கஷ்டபட்டு முன்னேறினார் “ என எழுதியதை என் சக ஆசிரியர் தவறு
போட்டார் . ஏன் என கேட்டதுக்கு புத்தகத்தில் “ஜி.டி நாயுடு கஷ்டபட்டு
முன்னேறினார்” என புத்தத்தில் இருக்கு இவன் எப்படி மாத்தி எழுதலாம் என்றார். ரொம்ப
நேரம் வாதிட்டும் ஒத்துக்கொள்ளவில்லை.
இன்றைய கல்விமுறையும் , சமுக பார்வையும்
இப்படிதான் உள்ளது . இதை பற்றி தனியாக
ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன் .
கிழே அந்த ஆசிரியை எழுதிய முன்னுரையை இணைத்துள்ளேன் .சாதாரண ஆசிரியரை
எப்படி அறிவியல் நூல்கள் எழுதும் எழுத்தாளராக ஒரு மாணவி மாற்றினார் , ஆனால் அந்த
மாணவியின் நிலை இப்போது என்ன ? என்ற கேள்விகளுக்கு பதில் இந்த முன்னுரையில் உள்ளது . தரவிறக்கி படித்து பாருங்கள் . மொபைலில்
படிப்பவர்கள் எப்படியாவது தரவிறக்கி பிடிக்க முயற்சி செயுங்கள் . கண்டிப்பாக
உங்கள் கண்ணில் கண்ணீர் வரும் . இதை படித்த பின் கண்டிப்பாக ஆசிரியர்கள் மனதில்
மாணவர்கள் பற்றிய எண்ணத்தில் மாற்றம் வரும் .
(அனைத்தும் ஒரே
கோப்புதான் , UPLOAD SITE மட்டும் வேறு வேறு ...)