> என் ராஜபாட்டை : அலட்சியம்

.....

.

Thursday, June 5, 2014

அலட்சியம்





          "இன்றைய அ (லட்சியம் )
           நாளைய ஏ (மாற்றம் )"     என்பார்கள் அதுபோல , சில அலட்சியங்கள் சிலரின் தலைவிதியையே மாற்றிவிடுகிறது . ஒரு பேருந்து ஓட்டுனரின் அலட்சியம் சில உயிர்கள் போக காரணமாக உள்ளது , ஒரு காவலரின் அலட்சியம் பல திருடர்கள் உருவாக காரணம் , ஒரு அரசின் அலட்சியம் நாடு கெட்டு குட்டிசுவராக காரணம் . 

இந்த பதிவில் நாம பார்க்க போவது அலட்சியமாக பேப்பர் திருத்திய சில ஆசிரியர்களின் அலட்சிய நடவடிக்கைகளை . முதலில் கீழே உள்ள படத்தை பாருங்கள் இது ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனின் கணினி அறிவியல் பொது தேர்வு விடைத்தாள் . இதில் மதிப்பெண்  எப்படி போடபட்டுள்ளது என பாருங்கள் .



54 + 20  = 64 என கூட்டி போட்டுள்ளனர் . இதை போட்டவரை விட இதை சரிபார்த்து ஒப்புதல் அளித்த இருவரை என்ன சொல்வது ? 10  மதிப்பெண்கள் என்பது சும்மாவா ?


அதே மாணவனின் ஆங்கில தேர்வு தாளின் முதல் பக்கம் இது ...



இதிலும் 29+33+26+4  = 82 என போடபட்டுள்ளது . இதிலும் பத்து மதிப்பெண் குறைவு . இதை திருத்த ஒருவர், அதை சரிபார்க்க ஒருவர் , கடைசியில் இருவர் செய்ததையும் சரிபார்த்து கையெழுத்து போட ஒருவர் என மூவர் பார்த்து போட்ட மதிப்பெண் இதுதான் . இது இரண்டும் ஒரே மாணவனுக்கு நிகழ்ததுதான் சோகம் .  இப்போது அந்த மாணவர்க்கு கூடுதலாக 20 மதிப்பெண் வருகிறது .

சில கேள்விகள் :

அந்த மாணவர் விடைத்தாள் நகல் கேட்டதால் இது தெரிந்தது , கேட்காமல் விட்டுருந்தால் என்னவாகும் ?


விடைத்தாள் கேட்காத மாணவர்களில் பலருக்கு இது நிகழ வாய்ப்புள்ளதே ?


இந்த விடைத்தாள் பெற 500 ரூபாயும் , மீண்டும் சரியான மதிப்பெண் பெற 510 ரூபாயும் கட்டவேண்டும் , யாரோ ஒருவர் செய்த தவறுக்கு ஏன் மாணவன் தண்டம் அழ வேண்டும் ?


மதிப்பெண் குறைவாக வந்ததால் அந்த மாணவன் ஏதாவது தவறான முடிவெடுத்தால் யார் பொறுப்பு ?


இப்போது திருத்தியவர்கள் மேல்தான் தவறு என அப்பட்டமாக தெரிகிறது , மாணவனின் பணம் திரும்ப கிடைக்குமா ?


இவ்வாறு தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு என்ன தண்டனை தர பட்டது என ஏன் எந்த அறிவிப்பும் இல்லை ? குறைந்த பட்சம் அந்த மாணவனுக்காவது தெரியபடுத்தலாமே ?


இதுபோல திருத்தியவர் செய்த தவறுக்கு மாணவனிடம் பணம் வாங்ககாமல் மதிப்பெண்ணை மாற்றி தரலாமே ?

 


7 comments:

  1. Replies
    1. //என்னதிது//
      அவுங்க கணக்குல "வீக்" காம்

      Delete
  2. கடைசியா சொன்னீங்களே, அது கரெக்ட்... மதிப்பெண் மாறும் பட்சத்தில் டெப்பாசிட் தொகையை திருப்பித் தரலாம்....

    ReplyDelete
  3. அடடே.. இப்படி எல்லாம் பண்ணலாம்னு எனக்கு முன்னமே தெரியாம போயிடுச்சே.. ஒரு அம்பது அறுபது மார்க்கு சேர்த்து வந்திருக்குமே.. வட போச்சே!

    ReplyDelete
  4. எழுத்தறிவித்தவன் இறைவன் இதன் அர்த்தத்தை இந்த மாதிரியான ஆசிரியர்களுக்கு விளக்குவது யார் ?
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  5. அலட்சிய போக்குதான் காரணம்! கட்டணத்தை ஆசிரியரிடம் வசூலித்து மாணவருக்குத்திருப்பித் தரவேண்டும்!

    ReplyDelete
  6. ஒரு ஆசிரியர் என்ற முறையில் வேதனை அடைகின்றேன் நண்பரே

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...