“மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் “ என்பார்கள். அது 100/100 சரியான கருத்து. சரியில்லாத மனைவியால் அழிந்த குடும்பங்கள் பல, நல்ல மனைவியால் சாதித்த கணவர்கள் பலர். என்னடா திடிர்னு மனைவியை பற்றி தத்துவம்லாம் சொல்றானேன்னு பார்கின்றிர்களா ? ஒண்ணுமில்ல நாளை (22-8-14) எனது அன்பு மனைவியை கைபிடித்த நாள் .
வெற்றிகரமான வாழ்வில் ஐந்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம்.
நான் அதிகமாக செலவு செய்கிற ஆள் இல்லை. வெளியில் சென்றால் டீ குடிக்க கூட யோசிப்பேன். நூறு ரூபாய் கொடுத்துபார்த்தாலும் அதே சினிமாதான் ஐம்பது ரூபாய் கொடுத்தாலும் அதே சினிமாதான் என குறைந்த கட்டண டிக்கெட் தான் எடுப்பேன். ஆயிரம் ரூபாய் போட்டு ஒரு சட்டை எடுப்பதைவிட இருநூறு ரூபாய் என ஐந்து சட்டை எடுக்கலாமே என யோசிப்பேன். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அடிகடி என்னிடம் சொல்வது (சபிப்பது ) “நீ செய்ற கஞ்ச தனத்துக்கு உனக்கு வாய்ப்பவள் பயங்கர செலவுகாரியா இருப்பாள் பாரு “ என்றுதான். ஆனால் கடவுள் நல்லவர்களை கை விடமாட்டார் என்ற கொள்கையின் அடிப்படையில் என்னையும் கைவிடவில்லை .
சிக்கனமாக இருப்பதில் எனக்கு சமமானவள். இதுவரை தனக்கு என எதையும் (நகை , புடவை ) கேட்டதில்லை. என்னையும் வீண் செலவு செய்ய வைத்ததில்லை. அதுபோல வீட்டில் உள்ளவர்களுக்கு செலவு செய்வதை என்றுமே தடுத்ததில்லை , ஏன் என கேட்டதும் இல்லை.
“கட்டுன பொண்டாடி கண்ணுல தண்ணி வந்தா
அவன் ஆம்பளையே இல்லை “ என்ற சூப்பர் ஸ்டாரின் வரிகளை இன்றுவரை கடைபிடிக்கிறேன். அவளும் இதுவரை எனக்கு கண்ணிர் வர அளவு அடித்ததில்லை ( அய்யயோ உண்மைய உளறிடேனா ??). இனியும் இது தொடரும் என நெனைக்கிறேன்.
நிம்மதியான , சந்தோஷமான வாழ்க்கைக்கு ...
- விட்டு கொடுங்கள்
- மனம்விட்டு பேசுங்கள்
- ஆபிஸ் கோவத்தை வீட்டில் காட்டாதிங்க
- அவளையும் ஒரு குழந்தையா நினையுங்கள்
- அருமையான தோழியாக பாருங்கள்
- இரண்டாவது தாயாக பாவியுங்கள்