> என் ராஜபாட்டை : புதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை

.....

.

Wednesday, September 2, 2015

புதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை


நவ கிரகங்களில் இரண்டு எங்கள் ஊர் அருகிலேயே உள்ளது . பலமுறை சென்று இருந்தாலும் ஏனோ அதைப்பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம வந்ததில்லை . சென்ற வாரம் புதன் ஸ்தலம் சென்றேன் . அதைபற்றிய பதிவே இது .


நாகை மாவட்டம் , சீர்காழி வட்டத்தில் உள்ளது திருவெண்காடு . மயிலாடுதுறையில் இருந்து 25 KM , சீர்காழியில் இருந்து 13 KM தூரமும் உள்ளது இந்த கோவில் .சுவேதாரண்யா சுவாமிகள் கோவிலுடன் இணைந்து இந்த ஸ்தலம் உள்ளது .


திருமதி வித்யாம்பாள் சன்னதியின் அருகில் உள்ளது புதன் ஸ்தலம் . மூன்று களங்கள் உள்ள ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று .

பலன்கள் :

 • கல்வியில் மேன்மை
 • உடல்நலம்
 • குடும்ப சந்தோசம் அதிகரிப்பு
 • செல்வம் பெருக
 • தொழில் வளர்ச்சி


வழிப்பாட்டு முறைகள் :


 • அகல்விளக்கு வைத்து வழிபடலாம்
 • வில்வ இலையால் பூஜை
 • துளசி வழிபாடுபார்க்கவேண்டியவை :

நீங்கள் எங்கு நின்று பார்த்தாலும் ரயில் உங்களை நோக்கி வருவதுபோல வரையபட்ட ஓவியமவாயிலில் உள்ள நந்திசந்திர தீர்த்தம் (புதன் ஸ்தலம் எதிரே உள்ளது )திருமதி வித்யாம்பாள் சன்னதி
ஆனந்த தாண்டவம் ஓவியம்


சுவேதார்ணய சுவாமிகள் ஆலயம்


பிரகாரம்

சகித்து கொள்ளமுடியாத விஷயம் :


புதனுக்கு அர்ச்சனை செய்ய டிக்கெட் 15 ரூபாய் என்று வாங்குகின்றனர் .ஆனால் டிக்கெட் விலை 5  மட்டுமே , மீதி 10 க்கு கொஞ்சம் வில்வ இலையை கொடுக்கின்றனர் . இந்த 10 ரூபாய் எந்த கணக்கில்வரும் , யார் யார்க்கு போகும் , இது அரசு அனுமதியுடன் நடக்கிறது என்பது அந்த புதனுக்கே வெளிச்சம் .


இதையும் படிக்கலாமே :

4 comments:

 1. இதுவரை சென்றது இல்லை! ஒரு முறை செல்லவேண்டும். வித்தியாசமான முறையில் தல அறிமுகம்! நன்றி!

  ReplyDelete
 2. lot for sharing this useful post with us, keep it up

  great
  photos
  nice
  thanku
  sara

  ReplyDelete
 3. I really enjoy reading your website. The content is great and informative. I have bookmarked your website because I’ll visit it regularly after this. Keep up this great work.
  India . india jobs

  ReplyDelete
 4. Thanks on your marvelous posting! I seriously enjoyed reading it, you happen to be a great author. When it comes to psychology centres in Chennai, Serene Life Hospital is one of the leading establishments rehab center in chennai in the field.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...