> என் ராஜபாட்டை : தொலைதொடர்பு துறையா ? கள்ள தொடர்பு துறையா ?

.....

.

Sunday, August 2, 2015

தொலைதொடர்பு துறையா ? கள்ள தொடர்பு துறையா ?





           சமிபத்தில் வோடபோன் கம்பெனியில் இருந்து ஒரு SMS வந்தது . அதில் " என் பெயர் நிஷா ,எங்கள் வீட்டில் யாரும் இல்லை , என்னிடம் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். உடனே கால் செய்யவும். கட்டணம் ரூபாய் 9 / நி." என இருந்தது . 

            நம்ம ஊரில் ஊர் மேயும் ஆட்கள், விபசாரம் செய்பவர்கள், அறிபெடுத்து அலையும் ஆட்கள் , வீனாபோனதுகள், பிஞ்சில் பழுத்ததுகள் போன்றவைதான் இதுபோல யாரும் இல்ல கால் பண்ணி என்னவேனாலும் பேசுன்னு சொல்லும். ஆனால் ஒரு தொலைதொடர்பு துறை வைத்து நடத்தும் கம்பெனி இவ்வளவு கேவலமாக எப்படி நடப்பார்கள் என தெரியவில்லை. இதுக்கு கிராமத்தில் "மாமா" வேலை பார்ப்பது என்று சொல்வார்கள். இவர்கள் தொலைதொடர்பு துறை நடத்துகின்றார்களா ? இல்லை கள்ளதொடர்புதுரை நடத்துரானுங்களா ?

         இதுபோலவே சில கேள்விகள் கேட்கின்றார்கள் , சரியான பதில் சொன்னால் கார், பைக், தங்கம் , லட்ச ரூபாய் வெல்லலாம் என SMS  வருது. ஆனால் இதுவரை ஒருத்தன் கூட ஜெய்ததாக SMS  வரவில்லை. எத்தனை பேர் கலந்துகொண்டனர், யார் செய்தவர் என்ற விவரம் இதுவரை வந்ததில்லை .

         இவர்கள் கேட்கும் கேள்விகளும் "ரொம்ப, ரொம்ப கஷ்டமான " கேள்வியா இருக்கும். 

உதாரணம் :  2 + 3 = ?

ஒரு நாணயத்துக்கு எத்தனை பக்கம் ?

தல என அழைக்கப்படும் நடிகர் யார்?

மாறி படத்தின் ஹீரோ யார் ?

தஞ்சை பெரியகோவில் எங்கே உள்ளது ?


இந்த கேள்விக்கெல்லாம் L.K.G குழந்தையே பதில் சொல்லும். இதுக்கு லட்சகணக்கில் பரிசாம். இந்த பதிலை சொல்ல ஒரு SMS  5 ரூபாயாம் . 

என்னுடைய கேள்வி என்னானா ?

1.  இதுபோல கேள்வி கேட்டு பதில் வாங்க இவர்களுக்கு சட்டபடி உரிமை உண்டா /

2. இது சூதாட்டம் கணக்கில் சேராதா ?

3.  போட்டியில் பங்குபெற்றவர்களுக்கு வெற்றி பெற்றவர்கள் பற்றிய விவரம் ஏன் தரபடுவதில்லை ?

4. ஆபாசமாக பேச தூண்டுவது சட்டபடி தவறல்லவா ?

5 TRAI இதை கவனிக்காமல்  என்னத்தை கிழித்துக்கொண்டு உள்ளது .

இதுபோல தொல்லைகள் , டென்ஷன்கள் வேண்டாம் என்றால் உங்கள் போனில் இருந்து "START DND " என டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். ( எல்லா நெட்வொர்க்கும் இது பொதுவானது )

4 comments:

  1. தொ(ல்)லை தொடர்புத் துறை தான்... நாம வேலையா இருக்கும்போதுதான் சரியா போன போடுவானுங்க... நால அழுத்து மூண அழுத்துனு. சிலநேரம் அழுத்தாமலே பணம் பறிபோயிடும்...

    www.thamizhmozhi.net

    ReplyDelete
  2. DND பண்ணாலும் சில சமயம் தொல்லை தொடருது! இந்த தொல்லை பொறுக்க மாட்டாமல் ஒரு சிம்முக்கு ரீசார்ஜ் செய்யாமலே விட்டுவிட்டேன்!

    ReplyDelete
  3. இதெல்லாம் விளம்பர யுத்திதான் .திருந்தவே மாட்டார்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...