> என் ராஜபாட்டை : April 2016

.....

.

Saturday, April 30, 2016

மனிதன் - திரைவிமர்சனம்





          ரெட்ஜெயின்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து கதாநாயகனாக "நடித்து " இருக்கும் படம் இது. இவருடன் ஜோடியாக ஹன்சிகா , பிரகாஷ்ராஜ், ராதாரவி, விவேக் என ஒரு நட்சதிரபட்டாலமே நடித்துள்ளது. இசை சந்தோஷ் நாராயணன். இயக்கம் அஹமது. இவர் ஏற்கனவே என்றென்றும் புன்னகை என்ற படத்தை இயக்கியவர்.

கதை :

             சாதாரண மொக்க வக்கீலாக உள்ள உதயநிதி தனது முறை பெண் ஹன்சிகா மேல் காதல் கொள்கிறார். ஏதாவது பெயர் சொல்லும் அளவு ஒரு கேசில் செய்துவிட்டுதான் திருமணம் என இருக்கிறார். ஆனால் அவருக்கு அமைவது எல்லாம் காங்கிரஸ் போல மொக்க கேஸ்தான். இந்த சமயத்தில் கார் ஏற்றி பிளாட்பாரத்தில் இருந்தவர்களை கொன்ற வழக்கில் ஆஜராகிறார்.

         இவருக்கு எதிராக ஆஜராவது இந்தியாவில் பிரபல வழக்கறிஞ்சர் பிரகாஷ்ராஜ். அவருடன் மோதி உதயநிதி ஜெய்தாரா? உதயநிதி-ஹன்சிகா காதல் என்னானது ? வழக்கின் தீர்ப்பு பாதிக்கபட்டவர்க்கு சாதகமாக வந்ததா இல்லை வழக்கம் போல சல்மான்கான் தீர்ப்பு போல வந்ததா என்பதை திரையரங்கில் பாருங்கள்.




+ பாயிண்ட் :



முதல் முதலா உதயநிதி நடித்துள்ளார். மொக்க வக்கீலாக வரும்போதும் தனது வழக்கில் ஜெய்க்க வேண்டும் என்ற வெறியுடன் அலையும்போதும் நல்லநடிப்பு.

வழக்கம் போல பிரகாஷ்ராஜ் தான் ஒரு நடிப்பு களஞ்சியம் என காட்டுகிறார். கோர்ட்டில் வாதாடும்போதும், உதயநிதியை நக்கலாக பார்க்கும்போதும், வேகமாக பேசிவிட்டு உடனே கூல் ஆவதும் செம நடிப்பு.

ராதாரவி நடிப்பும் அருமை. நல்ல நடிகர் வாயை கொஞ்சம் அடக்கினால் இன்னும் ஒரு ரவுண்ட் வரலாம்.

வழக்கம் போல விவேக் & கோ இதிலும் உள்ளனர். சில இடங்களில் காமெடி ஒர்கவுட் ஆகிறது. ஆனாலும் விவேக்கை முன்பு ரசித்த அளவு இப்போது ரசிக்கமுடியவில்லை.

வசனங்கள் பட்டையை கிளப்புது. கோர்ட் சீனில் பிரகாஷ்ராஜ், உதயநிதி, ராதாரவி பேசும்காட்சிகள் கைதட்டலை அள்ளுகிறது.

ஹன்சிகா வழக்கமான சினிமா ஹிரோயினுக்கு உள்ள எல்லா குணத்துடனும் வந்துபோகிறார்.

இயக்குனர் அஹமத் தனது திறமையை முழுவதும் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியையும் ,திரைக்கதையையும் தெளிவாக அமைத்துள்ளார்.




ஒளிபதிவு அருமை.

-பாயின்ட்ஸ் :

பாடல்கள் சுமார்தான். சந்தோஷ் நாராயணன் ஏமாற்றிவிட்டார் என்றே சொல்லலாம். ஆனால் மனுஷன் பின்னணி இசையில் கொடியை நாட்டிவிட்டார்.

ஒரு சாதாரண வக்கீல் பெரிய வக்கிலை மடக்கி ஜெய்பது எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் .

எதிர்பார்க்க கூடிய முடிவு ஆனாலும் நல்ல முடிவு.




மொத்தத்தில் :

குடும்பத்துடன் பார்க்க சிறந்த கோடைகால சிறப்பு திரைப்படம் இந்த மனிதன்.

Thursday, April 14, 2016

தெறி : விமர்சனம்





இளைய தளபதி விஜய் நடிப்பில் , அட்லி இயக்கத்தில் , கலைபுலி தாணு தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையில் சமந்தா, நைனிதா, எமி , மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளி வந்த படம் தெறி. படம் எப்படி என பாப்போம்.

              தெறிக்கும் அதிரடியோடு தேவையான செண்டிமெண்ட் - களின் காக்டெய்ல் கலவையாய் வெளி வந்திருக்கும் விஜய் படம்.நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் விஜய் ஒரு வலுவான வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.




              இந்த படத்தின் ஒரு காட்சியில் வில்லன் புகைப்பிடித்து கொண்டிருக்கும் போது அதை அவரது உதட்டிலிருந்து பிடிங்கி எறிந்து "புகை பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும்" - ன்னு விஜய் பேசும் வசனம் சமூக அக்கறையின் வெளிப்பாடு. பாடல் காட்சியில் கூட ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை ஜாலி ஹோலியாக சொல்லி செல்வது கூடுதல் அழகு.
மது அருந்தாத, சிகரெட் புகைக்காத, இரட்டை அர்த்த மற்றும் வீண் சவடால்கள் விடும் வசனங்கள் பேசாத ஹீரோவாக விஜய் ஜொலித்திருக்கிறார்.

            குற்றவாளிகள் உருவாவதற்கு பெற்றோர்களின் வளர்ப்பு முறைகளே காரணம் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தினை இந்த திரைப்படம் பதிவு செய்ய முயன்று இருக்கிறது. கொஞ்சம் கூட தொய்வில்லாத விறுவிறுப்பான திரைக்கதையோடு ஒரு Family + Action + Youth Entertainment திரைப்படத்தை கொடுத்தற்காக இயக்குனர் அட்லிக்கும், பிண்ணனி இசையில் பட்டையை கிளப்பிருக்கும் G.v.பிரகாஷ்குமாருக்கும் ஒரு தெறிக்கும் சபாஷ் போடலாம்..!!
தெறி ...


‪#‎நம்பி_போங்க‬....!!
‪#‎சந்தோஷமா_வாங்க‬....!!!

விமர்சனம் : மலேசியாவில் இருந்து நண்பர் துரை  கோபி



Monday, April 11, 2016

24 (A.R. ரஹ்மான் + சூர்யா ) பாடல்கள் டவுன்லோட் செய்ய

              

யாவரும் நலம் என்ற அருமையான படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில்A.R.ரஹ்மான் இசையில் சூர்யாவின் நடிப்பில் வெளிவர உள்ள படம் 24. தலைப்பை போலவே படமும் வித்தியாசமாக இருக்கும் என நம்பலாம். இந்த படத்தின் பாடல்கள் இன்று வெளியிடபட்டன. ஏற்கனவே ஒரு பாடல் வெளிவந்து பட்டையை கிளப்பியது. இப்போது அனைத்து பாடல்களும் பட்டையை கிளப்ப வருகிறது . கேட்டு பாருங்கள் .






1. Naan Un
Singers: Arijith Singh, Chinmayi Sripadha
Lyrics: Madan Karky

2. Mei Nigara
Singers: Sid Sriram, Sanah Moidutty, Jonitha Gandhi
Lyrics: Madan Karky



3. Punnagaye
Singers: Haricharan Seshadhri, Shashaa Tirupati
Lyrics: Vairamuthu

4. Aararoo
Singers: Sakthishree Gopalan
Lyrics: Madan Karky



5. My Twin Brother
Singers: Srinivasa Krishnan, Hriday Gattani

6. Kaalam En Kadhali
Singers: Benny Dayal, Shashwat Singh, Abhay Jodhpurkar
Lyrics: Vairamuthu



Sunday, April 10, 2016

தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!







என்னடா எல்லாரும் , எல்லா ஊடகமும் மறக்காம நாளை ஓட்டு போடுங்கனு கத்திக்கிட்டு இருக்கு நீ ஓட்டு போடாதிங்கனு சொல்ற என்ன ஆச்சு உனக்குன்னு பார்கின்றிர்களா ? மேலே படியுங்கள் ..


தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

  •  நம்ம சாதி , மதத்தை சார்த்தவர்னு சொல்லி யாருக்கும் தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

  • கட்சிமேல் பாசம் இருக்கட்டும் , அதுக்காக அந்த கட்சி எவ்வளவு ஊழல் செய்தாலும் பரவாயில்லை அவனுக்கு தான் என் ஓட்டு என எண்ணி தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

  • கடவுள் இருக்குனு சொல்றவனை நம்பலாம் , இல்லைன்னு சொல்றவனையும் நம்பலாம் , அதுபோல தான் மதமும் . இந்த மதசார்பின்மையை பேசி ஒரு குறிபிட்ட மதத்திற்கு ஜால்ரா அடிக்கும் கட்சிக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

  • எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிகொள்ளுங்கள் ஆனா அவர்களுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!




  • முன்பே உங்கள் தொகுதில் வெற்றிபெற்றவராக இருந்தால் அவர் செய்த நன்மைகளை எண்ணிப்பாருங்கள் , அப்படி ஒண்ணுமே செய்யலைனா அவருக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

  • தன் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காமல் அடுத்தவரை குறைசொல்லியே ஒட்டுகேட்கும் , கேட்ட கட்சிகளுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

  • நமக்கு பிடிக்காத முடிவு என்றாலும் அதில் உறுதியா உள்ள கட்சியை நம்புங்கள் , ஆனா டெல்லியில் ஒரு முடிவு , இங்கே வந்தா பல்டி என இருக்கும் கட்சிகளுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

  • நமது தொகுதியில் நிற்பவர் யாரும் சரியில்லை என எண்ணி நோட்டாவுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

  • நோட்டாவுக்கு பதில் சுயேட்சைக்கு போடுங்கள் , இரண்டுமே வீணாகத்தான் போகும் , ஆனால் சரியில்லாத வேட்பாளர்க்கும் மட்டும் தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!





நமது ஓட்டை நல்லவர்களுக்கு போட்டு நாட்டை நல்வழி படுத்துவோம் . மறக்காமல் ஓட்டு போடுங்கள் .


Wednesday, April 6, 2016

2 GB 4G airtel internet இலவசமாக வேண்டுமா ?(100% working)




நண்பர்களே உங்களுக்கு AIRTEL வழக்கும் 2GB  4G இன்டர்நெட் சேவையை எவ்வாறு இலவசமாக பெறுவது என்பதை இப்போது பார்க்கலாம். இது முற்றிலும் இலவச சேவை. பயன்படுத்தி பாருங்கள் .

வழிமுறைகள் :

* முதலில் இந்த லிங்கில் கிளிக் செய்யவும்.

* அதில் வரும் படிவத்தை கவனமாக நிரப்பவும்.

* வழிமுறைகள்படி சரியாக நிரப்பபட்டு இருந்தால் AIRTEL கம்பெனியில் இருந்தே அழைப்பார்கள் .

நிபந்தனைகள் :


* முழுமையான நிபந்தனைகள் படிக்க CLICK HERE