> என் ராஜபாட்டை : அன்னையர் தினம்

.....

.
Showing posts with label அன்னையர் தினம். Show all posts
Showing posts with label அன்னையர் தினம். Show all posts

Sunday, May 13, 2012

யார் தெய்வம் ?




இந்த உலகை படைத்தவன் இறைவன் என நாம் நம்புகின்றோம். ஒரு உயிரை படைக்கும் எவரும் இறைவன் தான். அதுபோல நம்மை படைத்த தாய் கூட ஒரு தெய்வம்தான். கண்ணில் தெரியா தெய்வத்துக்கு ஏதேதோ செய்யும் நாம் , நம் கண்ணிதேரில் வாழும் தெய்வத்திற்கு என்ன செய்கின்றோம் ?

உலகில் கலப்பிடம் இல்லாத இரண்டு பொருள் :
  1. தாய் அன்பு
  2. தாய் பால்

நேர்முக தேர்வு சென்று வந்தேன்
அப்பா கேட்டார் வேளை கிடைக்குமா ?
தங்கை கேட்டால்  எவ்வளவு சம்பளம் ?
அண்ணன் கேட்டான் பர்மனேநட் வேலையா ?
தம்பி கேட்டான் எப்ப வேளையில் சேரனும் ?

ஆனால்

அம்மா கேட்டால் மதியம் சாப்பிடியா ?

தான் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் நம்மை சாப்டாயா ? என அன்புடன் கேட்பவள் தாய் ..

உங்கள் மனசாட்சியை கேளுங்கள் ...:

  1. திபாவளி , பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் எந்தனை பேர் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றோம் ?
  2. அவர் பிறந்த நாள் தெரியுமா ?
  3. அவருக்கு பிடித்த நிறம் , உணவு எது ?
  4. உங்கள் பிறந்த நாள் அன்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி இருகின்றிர்களா ?
  5. கடந்த வாரத்தில் எத்தனை முறை அவரிடம் சாப்ப்ட்டியாமா ? என கேட்டுஉள்ளிர்கள் ?
  6. கடைசியாக அவர்களுக்கு என்ன வாங்கி குடுத்திர்கள் ?
  7. அவரின் மிக பெரிய ஆசை என்ன ?


யோசித்து பாருங்கள் , மேலே உள்ள அனைத்துக்கும் நமக்கு பதில் தெரியுமா என்று .. சந்தேகம் தான் . எதையும் எதிர்பாராமல் பாசம் வைக்கும் அன்னையை இன்று மட்டுமல்ல என்றுமே கொண்டாடுவோம் .


தான் படிக்க முடியவில்லை என்பதால் கஷ்டபட்டு என்னை படிக்க வைத்து , நான் வாங்கிய கோல்ட் மெடலை அனைவரிடமும் காட்டி சந்தோசபட்ட ...

இதுவரை உன் சம்பளம் என்ன என்று கேட்காத ..

ஏன் பையில் பணத்தை பார்த்தாலும் தம்பி பஸ்க்கு காசு வேணுமா ? என பாசத்துடன் கேட்க்கும் ...

டீ கடையில் தான் சம்பாதித்த பணத்தில் நகை வாங்கி கொண்டு இது ஏன் பையன் வாங்கியது .. என பெருமையாக சொல்லும் ..

என் அன்பு அம்மாவுக்கு

  இனிய அன்னையர் தின வாழ்த்துகள்