> என் ராஜபாட்டை : உள்ளாட்சி தேர்தல்

.....

.
Showing posts with label உள்ளாட்சி தேர்தல். Show all posts
Showing posts with label உள்ளாட்சி தேர்தல். Show all posts

Tuesday, October 11, 2011

அரசியலில் இறங்கிவிட்டால் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை எல்லாம் போய்விடுமா?



உள்ளாட்சி தேர்தல் களைகட்ட துவங்கிவிட்டது. வீதிதோறும் பிட் நோட்டீஸ் வினியோகம், வீடு, வீடாக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு என தூள் பறக்கின்றது.
யார் எந்த கட்சி, எந்த சின்னம் என்ன பதவி என்று தெரிந்துகொள்ளுவதற்குள் தேர்தல் முடிந்துவிடும் போலஉள்ளது.

கடந்த தேர்தலில் எங்கள் தெருவில் உள்ள ஒருவர் கவுன்சிலர்க்கு நின்றார். அவர் நின்ற கட்சியே எனக்கு பிடிக்காது. இருந்தாலும் நம்ம தெருவை சார்ந்தவர், ஐய்யப்ப பக்தர் , அமைதியானவர் என்ற (தவறான)எண்ணத்தில் அவருக்கு ஒட்டு போட்டேன், மற்றவர்களையும் போட சொன்னேன். நல்ல ஒட்டு வித்தியாசத்தில் ஜெயித்தார்.

சில நாட்களில் அவர் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. ஒரு முறை என் தம்பிக்கும், ஊரில் உள்ள சில இளைஞ்சர்களுக்கும் சண்டை. இருவர்மீதுமே தவறுஉள்ளது. சண்டை பெரிதாக மாறுவது போல் இருந்ததால் அவரிடம் சென்று “நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள், நீங்கள் வந்து சமாதானம் செய்யுங்கள் “ என்றேன்.

அதற்க்கு அவர் “முடியாது” என்றோ , “ என் பேச்சை கேட்க்கமாட்டார்கள் “ என்றோ சொல்லியிருந்தால் பரவாயில்லை. அவறோ “ நீ வேற சாதிகாரன், அவர்கள் என் சாதிகாரன். அவர்கள் சொல்லுவதை நீ கேளு, உன் பேச்சை நான் கேட்க்கமுடியாது” என்று. ஓட்டு கேட்க்கும் போது வராத சாதி, சண்டை என்றதும் வருகிறது.

இப்போது மீண்டும் அவர் தேர்தலில் நிற்க்கின்றார். நேற்று வீட்டுக்கு வந்து ஒரு துண்டு போட்டு “தம்பி மறக்காம ஓட்டுபோடுங்க, நாமலாம் ஒரே தெரு, ஒன்னுகுள்ள ஒன்னு” என சொல்கிறார். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் காலில் விழுகின்றார்.

அன்று வந்த சாதி , தேர்தல் வந்ததும் எங்கே போனது ? என் சாதிகாரன் ஓட்டு மட்டும் போதும் என சொல்ல வக்கில்லை, இவர்கள் ஜெய்யித்து இன்ன கிழிக்க போகின்றார்கள். அரசியலில் இறங்கிவிட்டால் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை எல்லாம் போய்விடுமா?