> என் ராஜபாட்டை : நடிகர்

.....

.
Showing posts with label நடிகர். Show all posts
Showing posts with label நடிகர். Show all posts

Monday, April 21, 2014

ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்





           நேற்று மாலை மயிலாடுதுறையில் உள்ள கென் பிரிட்ஸ் பள்ளி ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார் . அவர் இப்போது வளரும் நடிகராகவும் , மாஸ் நடிகர் பட்டியலில் முக்கியமானவராகவும் இருப்பதாலும் , கல்லூரி மாணவ, மாணவியர் முதல் குழந்தைகள் வரை பலதரபட்ட ரசிகர்கள் இருப்பதாலும் கூட்டம் அதிகம் வரும் என கணிக்கபட்டது .

ஐந்து மணிக்கு துவங்க ஆரம்பித்தது விழா சிவா இல்லாமல் . அப்போதே பயங்கர கூட்டம் . என் வாழ்க்கையில் இவ்வளவு கூட்டத்தை பார்த்ததில்லை . வண்டியை நிறுத்த இடம் இல்லாமல் வயலில் நிறுத்தினோம் .

மாணவிகள் கலை  நிகழ்ச்சி ,தலைமையுரை என மேடையில் பேச அதை யாரும் கவனித்தது போல தெரியவில்லை . சிவாவுக்காகதான் வெய்டிங் . அவர் வர ஒரு பாதை அமைத்து இருந்தனர். இருபக்கமும் செம கூட்டம் , அவர் அதில் நடந்து வர வாய்பில்லை என தெரிந்தது . எப்படி அழைத்து வர போகிறார்கள் என ஆவலுடன் காத்திருந்தோம் .


திடிரென ஒரு கார் கூட்டத்திற்குள் வந்தது , அனைவரும் ஓடிபோய் அந்த காரை சூழ்ந்து கொண்டார்கள் . காரில் இருந்து மெதுவாக ஒருவர் இறங்கினார் . அவர் யாரோ தெரியவில்லை , கூட்டம் ஏமாற்றத்தில் திரும்ப , மேடையில் பார்த்தால் சிவா. இங்கு ஒரு காரை காட்டி ஏமாற்றிவிட்டு அவரை வேறு காரில் மேடைக்கு அழைத்து சென்றுவிட்டனர் .

ஏமாற்றிய சிவா பேச்சு :

மேடையில் சிவா பேசியது ..

"இங்கு உள்ள அனைவருக்கும் , பள்ளி நிருவாகம், ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் . நான் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை . நான் இந்த அளவு வளர நீங்கள்தான் காரணம் . எனக்கு மாயவரம் புதிதில்லை . எனது உறவினர்கள் இங்குதான் உள்ளார்கள் . இங்கு உள்ள விஜயா, ரத்னா தியட்டரில்தான் அடிகடி படம் பார்ப்பேன் .

முன்பு கொஞ்சம் உறவினர்கள் இருந்தார்கள் . இபோது உங்களையும் சேர்த்து எனக்கு நெறைய உறவினர்கள் . என் வளர்ச்சிக்கு உங்கள் கைதட்டல்தான் காரணம் . நிறைய பேசவேண்டும் என நினைத்தேன் . ஆனால் முடியவில்லை .

வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் இருந்து முதல் பாடலை நாலு வரி பாடுகிறேன் நீங்களும் பாடுங்கள் .(பாடுகிறார் ). அனைவருக்கும் நன்றி ."


சிவா பலகுரல் மன்னன் என்பது அனைவருக்கும் தெரியும், அதுமட்டுமல்ல நகைசுவையாக பேசுவதில் வல்லவர் . நேற்று அவரிடம் இதைதான் பலர் எதிர்பார்த்தார் . குறைந்த பட்சம் அரைமணி நேரமாவது பேசுவார் என மக்கள் நினைத்தார்கள் ஆனால் ஐந்து நிமிடத்தில் முடித்துவிட்டார் . மற்றும் அவர் பேசும் போது நேரடி ஒளிபரப்பும் வேலை செய்யாததால் பலர் அவரை சரியாக பார்க்க முடியவில்லை . எதோ எட்ட இருந்து பார்த்ததே போதும் என பலர் உடனே கிளம்பிவிட்டனர் . 


மொத்தத்தில் அவர் ரசிகர்களுக்கு கொஞ்சம் சந்தோசம் , கொஞ்சம் கஷ்டம் , நெறைய ஏமாற்றம் .

Tuesday, April 30, 2013

அஜித் : தல போல வருமா ? (BIRTHDAY SPECIAL)



தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அஜித் .இவர் நடிகர் என்பதையும் தாண்டி இவரின் பண்பாலும் , அன்பாலும் ஈர்க்க பட்ட பலர் இவரின் ரசிகர்களாக உள்ளனர் . தனது படம் வெற்றி பெற்றாலும் , தோல்வி அடைந்தாலும் கலங்காத நமது தலையை கண்டு ஆச்சர்யபடாத நடிகர்களே இல்லை .

ரசிகர் மன்றத்தை கலைத்து ரசிகனும் ஒரு மனிதன்தான் என அவனை உணர செய்த பெருமை இவரை சாரும் . தனது பிறந்த நாள் மற்றும் பட வெளியிட்டு அன்று கட அவுட் வைக்க கூடாது என சொல்லி ரசிகனின் பணத்தை மிச்சபடுத்தியவர் .

இவரை பற்றி நமது ராஜ பாட்டையில் வந்த சில பதிவுகள் ..


அஜித் Vs அரசியல்வாதிகள்

 

மனதில் பட்டத்தை மறக்காமல் சொல்வதில் அஜித் ஒரு ஜென்டில் மேன் .  சேவை வரிவிதிப்பு எதிர்த்து கடந்த 7ம் தேதி சென்னையில் திரை உலகினர் உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்திற்கு அஜீத் வரவில்லை. ஆனாலும் வரிவிதிப்பை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.வரி விதித்து மக்களை வாட்டுவதை விட அரசியல்வாதிகள் ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பயன்படுத்தலாம் என்று நடிகர் அஜீத் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : 

அஜித் Vs அரசியல்வாதிகள்

 

அஜித் : நடிகனா ? மனிதனா ? 

 

 

 இப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் இப்போது இவருக்கு வந்திருக்கும் இந்த திடீர் செல்வாக்கு ரஜினி, எம்.ஜி.ஆர் போல் ‘திரையில் முகம் காட்டினாலே படம் ஓடிவிடும்’ என்பது போன்ற செல்வாக்கா? ஒரு மிகச்சிறிய எனக்குத்தெரிந்த விதத்தில் அஜித்தின் செல்வாக்கை அனுகியிருக்கிறேன். பார்க்கலாம்..

மேலும் படிக்க :

 அஜித் : நடிகனா ? மனிதனா ? 

 

 

அஜித் : தல போல வருமா ? 

 


இன்று தமிழ் சினிமாவின் முக்கிய எதிர்பார்ப்பு எது என்றால் அது கண்டிப்பாக பில்லா 2 தான். அஜித்தின் முந்தய பில்லா , மங்காத்தா இரண்டின் பிரமாண்ட வெற்றிக்கு பின் திரைக்கு வர இருக்கின்றது. நாம் இப்போது பார்க்கபோவது படத்தை பற்றி அல்ல அஜித்தின் உண்மையான சில குணங்களை ..

 மேலும் படிக்க :

அஜித் : தல போல வருமா ?

 

 

 

அஜித் : THE REAL HERO 

 

 

 நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.


மேலும் படிக்க :

அஜித் : THE REAL HERO

  MAY 1

நம்ம தல க்கு பெரிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்கள்  பார்ப்போம் 

Thursday, September 27, 2012

ரசித்து படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 1







சினிமாவில் பலர் வந்து போய் உள்ளனர். ஆனால் சிலர் மட்டும் தான் நம்மை கவர்கின்றனர். சினிமாவில் எந்த வேடம் கொடுத்தாலும் அதில் தனது முத்திரையை பாதிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ .

அவர் தனது வாழ்க்கை வரலாற்றை , தான் கடந்து வந்த பாதையை சொல்லும் புத்தகம்தான் நான் பிரகாஷ் ராஜ். எளிமையான எழுத்து நடையில் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் .


அதில் அவர் சொன்ன சில வரிகள் :

அருவா ஆபாசம் என்று குப்பை படன் எடுத்து பணம் சம்பாதிப்பதைவிட , மொழி , கண்ட நாள் முதல் ,அழகிய தீயே போன்ற படம் எடுப்பதை பெருமையாக நினைக்கிறேன்



கஷ்டம் என வருபவர்களிடம் ஐந்து நிமிடம் உங்கள் மனதையும் காதையும் குடுங்கள் , பண உதவியை விட அவர்கள் சொல்லவதை கேட்பது முக்கியமானது


என் உலகம் அழகா இருந்தா நானும் அழகா இருப்பேன் என்பது தான் நிஜம


உண்மையை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் தான் வாழ்கை


பெண்களை நேசிக்காமால் ஒரு ஆண் மிக சிறந்த படைப்பாளியாக மாற முடியாது


இந்த நூலை தரவிறக்கம் செய்ய :

(FOR DOWNLOD )    CLICK HERE




டிஸ்கி : நூலை தரவிரக்குவதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் rrajja.mlr@gmail.com மெயில் பண்ணுங்கள் , இந்த புத்தகம் இ-புக் ஆக உங்களுக்கு அனுப்பப்படும் .




 இதையும் படிக்கலாமே :


இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?