> என் ராஜபாட்டை : சிவகார்த்திகேயன்

.....

.
Showing posts with label சிவகார்த்திகேயன். Show all posts
Showing posts with label சிவகார்த்திகேயன். Show all posts

Monday, April 21, 2014

ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்





           நேற்று மாலை மயிலாடுதுறையில் உள்ள கென் பிரிட்ஸ் பள்ளி ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார் . அவர் இப்போது வளரும் நடிகராகவும் , மாஸ் நடிகர் பட்டியலில் முக்கியமானவராகவும் இருப்பதாலும் , கல்லூரி மாணவ, மாணவியர் முதல் குழந்தைகள் வரை பலதரபட்ட ரசிகர்கள் இருப்பதாலும் கூட்டம் அதிகம் வரும் என கணிக்கபட்டது .

ஐந்து மணிக்கு துவங்க ஆரம்பித்தது விழா சிவா இல்லாமல் . அப்போதே பயங்கர கூட்டம் . என் வாழ்க்கையில் இவ்வளவு கூட்டத்தை பார்த்ததில்லை . வண்டியை நிறுத்த இடம் இல்லாமல் வயலில் நிறுத்தினோம் .

மாணவிகள் கலை  நிகழ்ச்சி ,தலைமையுரை என மேடையில் பேச அதை யாரும் கவனித்தது போல தெரியவில்லை . சிவாவுக்காகதான் வெய்டிங் . அவர் வர ஒரு பாதை அமைத்து இருந்தனர். இருபக்கமும் செம கூட்டம் , அவர் அதில் நடந்து வர வாய்பில்லை என தெரிந்தது . எப்படி அழைத்து வர போகிறார்கள் என ஆவலுடன் காத்திருந்தோம் .


திடிரென ஒரு கார் கூட்டத்திற்குள் வந்தது , அனைவரும் ஓடிபோய் அந்த காரை சூழ்ந்து கொண்டார்கள் . காரில் இருந்து மெதுவாக ஒருவர் இறங்கினார் . அவர் யாரோ தெரியவில்லை , கூட்டம் ஏமாற்றத்தில் திரும்ப , மேடையில் பார்த்தால் சிவா. இங்கு ஒரு காரை காட்டி ஏமாற்றிவிட்டு அவரை வேறு காரில் மேடைக்கு அழைத்து சென்றுவிட்டனர் .

ஏமாற்றிய சிவா பேச்சு :

மேடையில் சிவா பேசியது ..

"இங்கு உள்ள அனைவருக்கும் , பள்ளி நிருவாகம், ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் . நான் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை . நான் இந்த அளவு வளர நீங்கள்தான் காரணம் . எனக்கு மாயவரம் புதிதில்லை . எனது உறவினர்கள் இங்குதான் உள்ளார்கள் . இங்கு உள்ள விஜயா, ரத்னா தியட்டரில்தான் அடிகடி படம் பார்ப்பேன் .

முன்பு கொஞ்சம் உறவினர்கள் இருந்தார்கள் . இபோது உங்களையும் சேர்த்து எனக்கு நெறைய உறவினர்கள் . என் வளர்ச்சிக்கு உங்கள் கைதட்டல்தான் காரணம் . நிறைய பேசவேண்டும் என நினைத்தேன் . ஆனால் முடியவில்லை .

வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் இருந்து முதல் பாடலை நாலு வரி பாடுகிறேன் நீங்களும் பாடுங்கள் .(பாடுகிறார் ). அனைவருக்கும் நன்றி ."


சிவா பலகுரல் மன்னன் என்பது அனைவருக்கும் தெரியும், அதுமட்டுமல்ல நகைசுவையாக பேசுவதில் வல்லவர் . நேற்று அவரிடம் இதைதான் பலர் எதிர்பார்த்தார் . குறைந்த பட்சம் அரைமணி நேரமாவது பேசுவார் என மக்கள் நினைத்தார்கள் ஆனால் ஐந்து நிமிடத்தில் முடித்துவிட்டார் . மற்றும் அவர் பேசும் போது நேரடி ஒளிபரப்பும் வேலை செய்யாததால் பலர் அவரை சரியாக பார்க்க முடியவில்லை . எதோ எட்ட இருந்து பார்த்ததே போதும் என பலர் உடனே கிளம்பிவிட்டனர் . 


மொத்தத்தில் அவர் ரசிகர்களுக்கு கொஞ்சம் சந்தோசம் , கொஞ்சம் கஷ்டம் , நெறைய ஏமாற்றம் .

Friday, June 1, 2012

சிவகார்த்திகேயன் : காமெடி நாயகன்

 சிவகார்த்திகேயன் இந்த பெயரை தெரியாத தமிழ் மக்கள் இருக்க மாட்டார்கள். கலக்கபோவது யாரு ? நிகழ்ச்சியில் ஆரம்பித்த இவரது பயணம் இந்து மனம் கொத்தி பறவை வரை கோடி கட்டி பறக்கின்றது .வெறும் மொக்கை ஜோக் அல்லது இயத்திரம் போல நிகழ்சிகளை தொகுத்தவர்கள் மத்தியில் தனது timing  காமெடி முலம் தொலைகாட்சி வரலாற்றில் புது சாதனை படைத்தார். சின்னத்திரை மட்டுமல்லாது இப்போது பெரிய திரையிலும் கலக்குகிறார் ( மூனு படம் இவரால்தான் கொஞ்சமாவது ஓடியது ) . இப்போது இன்னும் பல படங்களில் நடித்து வருகின்றார். இவரை பற்றிய சில வீடியோகள் உங்கள் பார்வைக்கு .



நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் ..



அதே நிகழ்ச்சியில் நமிதா போல 

TCS விழாவில் ...


சிரிக்கவைக்க மட்டுமல்ல .. அழவைக்கவும் முடியும் என நிருபித்த நிகழ்ச்சி

இதையும் படிக்கலாமே:

தமிழர் வரலாற்றை மறைக்கும் மத்திய அரசு - பூம்புகாரின் உண்மை வரலாறு என்ன ?

 

நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி

 

யார் தெய்வம் ?