> என் ராஜபாட்டை : அஜித் : தல போல வருமா ?

.....

.

Sunday, April 29, 2012

அஜித் : தல போல வருமா ?
இன்று தமிழ் சினிமாவின் முக்கிய எதிர்பார்ப்பு எது என்றால் அது கண்டிப்பாக பில்லா 2 தான். அஜித்தின் முந்தய பில்லா , மங்காத்தா இரண்டின் பிரமாண்ட வெற்றிக்கு பின் திரைக்கு வர இருக்கின்றது. நாம் இப்போது பார்க்கபோவது படத்தை பற்றி அல்ல அஜித்தின் உண்மையான சில குணங்களை ..

தினமும் காலயில் கடவுளைள வேண்டும் போது  என் ரசிகர்களு க்காகவும் வேண்டிக்கிறன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன் நாளைக்கு இல்லா மல்  போவன் . ஆனா, ஒரூ அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரூ  வேண்டுகோள் .  உங்க தன்மானத்தை  யாரூக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க . உங்க வேலைய 100 சதவிகிதம் ரசிச்சு  செய்யுங்க. நல்லாப் படிங்க . நான் பத்தாவது  வைரக்கும்தான் படிச்சேன் . வாழ்க்கையில்கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்கைளக் கத்துக்கிட்டேன் . ஆனா, படிச்சிரூந்தா இவ்வளவு  அடிபட்டு  வந்திரூக்க வேண்டிய அவசியம் இரூந்திருக்காதே . அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்முடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க . மத்தவன் கால மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்ரேன்... வாழு... வாழவிடு ..

இது கடந்த வாரம் விகடனில் வந்த அஜித்தின் பேட்டி. உங்களுக்காக நான் இருக்கின்றேன் , உங்களை கைவிட மாட்டேன் , உங்களுக்காக உயிரையும் குடுப்பேன் என வசனம் பேசும் நடிகர்கள் மத்தியில் யாரையும் கண்முடித்தனமா நம்பாதீங்க என உண்மையை பேசும் தைரியம் ரஜினிக்கு பின் அஜித்துக்கு மட்டும்தான்.

சினிமா மட்டும் இன்றி விளையாட்டுத்துறையிலும் ஆர்வம உள்ளவர் அஜித். இவர் ஒரு கார் ரேஸ் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். ஹெலிகாப்டர் ஓட்ட உரிமம் வைத்துள்ள முதல் தமிழ் நடிகர் இவர்தான். விருது வழங்கும் விழாவுக்கு மட்டும் மனைவிகளை அழைத்து வரும் நடிகர்கள் மத்தியில் , தன மனைவியில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்குவிதமாக அவரை பூபந்தாட்டத்தில் கலந்து கொள்ள செய்தார்.

ஒரு டப்பா படத்தில் நடித்தாலே அது என்னமோ உலக பட ரேஞ்சுக்கு இருக்குனு பில்டப் குடுப்பது நமது பல ஹீரோக்களின் பழக்கம். படம் வந்த அன்றே ஏதாவது டிவி சன்னலில் இப்படி நடிச்சேன் , அப்படி நடிச்சேன் , பயங்கர ஹிட்னு கதைவிட்டு பேட்டி கொடுப்பார்கள் .(ஆனா படம் இரண்டு நாள்ல காணாம போய்டும் ). ஆனால் தன படங்களை மக்கள் மட்டும்தான் பார்த்து கருத்து சொல்ல வேண்டும் , நான் எந்த மீடியாவிலும் பேசமாட்டேன் , தன படம் சம்பந்த பட்ட எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்ற கருத்தில் தீவிரமாக உள்ளவர் தல.

இறுதியாக எந்த நடிகனும் செய்ய துணியாத செயல் , தனது ரசிகர் மன்றங்களை கலைத்தது. நீ ரசிகனாக இரு ஆனால் முதலில் உன் குடும்பத்திற்கு நல்ல பிள்ளையாக இரு அதுதான் முக்கியம் என மன்றதை கலைத்த பெருமை தலைக்குதான் உண்டு.டிஸ்கி : இளையதளபதி ரசிகர்கள் கூட மேலே உள்ள கருத்தை ஒத்துகொள்வார்கள் என நம்புகின்றேன்.


இதையும் படிக்கலாமே :

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

 

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

 

அஜித் : THE REAL HERO

 

 

21 comments:

 1. நான் அஜித் குமார் அவர்களின் ரசிகன். அவருடைய படத்தை முதல் ஷோ பார்க்க வேண்டும் என்கிற அளவிற்க்கான ரசிகன். கரணம் அவரின் உள்ள மனிதன் என்பவனை எனக்கு பிடிக்கும் என்பதால்.

  விகடனில் அந்த கட்டுரையை நானும் படித்தேன்.

  தற்போது தங்கள் எழுத்துக்களில் படிக்கும் பொழுது இன்னும் மகிழ்ச்சியாக இருகின்றது.

  வாழ்த்துக்கள்.
  # எனக்கு பிடிக்காத நடிகர்கள் என்று யாரும் கிடையாது

  ReplyDelete
 2. எனக்கும் அஜித் புடிக்கும்.........

  ReplyDelete
 3. ஒரு காலத்தில் அஜித் என்ற நடிகருக்கென்று ஆரம்பித்த ரசிகர் கூட்டம் இன்று ஒருபடி மேலே போய் எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அஜித் என்ற மனிதரை நேசிக்கத்தொடங்கிவிட்டது.... அதனால்தான் எதிரிகள் வெட்ட நினைக்கும்போதும் கோடரியை உடைக்கும் அளவுக்கு காட்டுமரம்போல் விருட்சமாய் வளர்ந்துகொண்டே இருக்கிறார்..

  ReplyDelete
 4. ரைட்டு.... ரைட்டு..... தொடரட்டும் உங்கள் சேவை.

  ReplyDelete
 5. நீங்கள் கூறுவது உண்மை, அவரை ஒரு நடிகராக மட்டும் பார்க்காமல், ஒரு அண்ணனாக,நண்பனாக பார்க்கும் ரசிகர்கள் தான் அவர் இதுவரை சேர்த்த பெரிய சொத்து. அதற்காக அவர் கொடுத்த விலைகளும் அதிகம்.

  ReplyDelete
 6. போலியாக, மாய கனவுலகில் ஒரு நடிகனாக மட்டும் வாழாமல் , சராசரி மனிதனாக கனமில்லாத " தலை" யுடன் திகழ்கிறார்.

  ReplyDelete
 7. நான் அஜித் ரசிகனோ அல்லது விஜய் ரசிகனோ கிடையாது. நான் எல்லாருடைய படத்தையும் பார்ப்பேன்.தனது சக நடிகருக்கு பின்னால் ஒரு பெரிய கூட்டம் கூடுது என்ற காரணத்தினால்தான் "யாரையும் கண்முடித்தனமாநம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க" இந்த வார்த்தையை சொல்லி இருக்கிறார். முதலில் அனைவரும் ரஜினி ரசிகர்கலாகத்தான் இருந்தார்கள் விஜய் அஜித் உள்பட.அவர்களெல்லாம் எதில் குறைந்து விட்டார்கள். ரஜினிக்கு இன்றைக்கும் ரசிகர் மன்றம் இருக்கு. அதனால ரஜினி தனது ரசிகர்களுக்கு கெடுதல் செய்து விட்டார் என்று சொல்ல முடியுமா? அஜித் தனது ரசிகர்களுக்கு நல்லா படி என்று அட்வைஸ்மட்டும்தான் செய்தார். விஜய் சொல்வது மட்டுமல்லாமல், மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். சூர்யா தனது அகரம் மூலம் உதவி செய்கிறார். விருது வழங்கும் விழாவுக்கு மட்டும் மனைவிகளை அழைத்து வருவதில் என்ன தவறு இருக்கு. நான் எந்த மீடியாவிலும் பேசமாட்டேன் , "தன படம் சம்பந்த பட்ட எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்ற கருத்தில் தீவிரமாக உள்ளவர் தல". அசல் படத்தின் கேசட் வெளியீட்டு விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொண்டாரே. இப்படி நடிச்சேன் , அப்படி நடிச்சேன் என்று இதே பேட்டியில் சொன்னார்.ஹெலிகாப்டரில் இருந்து ரிஸ்க் எடுத்து குதித்தேன். என்று கூறினாரே.தயவுசெய்து அஜித் ரசிகர்கள் யாரும் பின்னூட்டம் இடாதீர்கள்.

  ReplyDelete
 8. நல்ல நடிகரையும் தாண்டி, நல்ல மனிதராக அனைவரது மனதிலும் இடம்பிடித்து விட்டார் தல

  ReplyDelete
 9. படத்தை விளம்பரபடுத்த ரசிகர்கள் முன் தோன்றுவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்

  ReplyDelete
 10. இன்னாரின் இரசிகன்/இரசிகை என்ற அடையாளம் இல்லாத நடுநிலைவாதிகள் அனைவருக்கும் பிடித்த தற்கால நடிகர் அஜித் மட்டுமே...

  ReplyDelete
 11. அஜித் உண்மையிலே சிறந்த மனிதர்... நல்ல பதிவு

  ReplyDelete
 12. தன் படத்தில் மலையாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார் என்ற குற்றசாட்டு அஜித் மேல் இருப்பதாக அறிகிறேன்..! உண்மையா அன்பரே ..?

  ReplyDelete
 13. //டிஸ்கி : இளையதளபதி ரசிகர்கள் கூட மேலே உள்ள கருத்தை ஒத்துகொள்வார்கள் என நம்புகின்றேன்.//

  i like it...bcz i am a Vijay fan..

  ReplyDelete
 14. ரொம்ப நன்றீங்க THALA IS GREAT MAN THALAPOLVARUMA. jaleel thanks for comment ask in tamil வந்தவரா நீங்க விஜய் FAN தானே நீங்கஃரொம்ப நன்றீங்க ராஜா அண்ணா தல பற்றீ சொன்னதற்க்கு நான் தலயோட மிக பெரிய ரசிகன் தல பத்தி இன்னும் சிலர் சரியாய் தெரிந்து கொள்ளவில்லை நாம் என்ன செய்ய

  ReplyDelete
 15. ஒவ்வொரு மனிதனுக்கும் தல ஒண்ணுதான்
  அதே போல சினிமாவுக்கும் எங்க தல ஒருத்தர்தான்

  ReplyDelete
 16. நடிகரை தாண்டி நல்ல மனிதராக அவரை பிடிக்கும்..

  ReplyDelete
 17. தல போல வருமா ?
  நிச்சயம் வராது...

  நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை..

  மனதை நெருடிய ஒரே விடயம்: ரஜினியுடன் அஜித்தை ஒப்பிட்டது.

  காவிரி பிரச்சனையின் போது ஒன்று பேசி விட்டு, தனது படம் குசேலம் கர்நாடகாவில் வெளியாக வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக கன்னடத்தினரிடம் மன்னிப்பு கேட்டவர் ரஜினி. இந்த ஒரு செயலின் மூலமே தன்னைக் கண்மூடித்தனமாக நம்பியவர்களுக்குப் பாடம் புகட்டி விட்டார்.

  அஜித் என்கிற நல்ல மனிதரைப் போய் இப்படிப்பட்டவருடன் ஒப்பிடலாமா?

  டிஸ்கி: இது என் சொந்த கருத்தே!

  ReplyDelete
 18. திரையில் மட்டுமே நடிகர் அவர் சொன்ன உரையால் நல்ல மனிதர் என்பது புலனாகின்றது!நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 19. ஜலீல் இங்கையும் வந்து வாந்தி எடுக்கணுமா? @ஆளுங்க ரஜினி அதை அவருக்காக பண்ணவில்லை என்று நினைக்கிறேன் , பாவங்க அவரு அவர்மேல் இருக்கும் சுமை யார் மேல் இருந்தாலும் இப்படிதான் பண்ணவேண்டியது இருக்கும்... இருந்தாலும் குசேலன் விவாகாரத்தால் அவர் பல ரசிகர்களை இழந்துவிட்டார் ....

  ReplyDelete
 20. enkku ethanio nadigar pidikkum anall ajith sir sonna oru vartha vazhu vazavidu

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...