> என் ராஜபாட்டை : FACEBOOK STATUS

.....

.
Showing posts with label FACEBOOK STATUS. Show all posts
Showing posts with label FACEBOOK STATUS. Show all posts

Thursday, December 19, 2013

TOP 10 FACEBOOK STATUS



இந்த வருடத்தின் TOP 10 FACEBOOK STATUS உங்கள் பார்வைக்காக தொகுத்து வழங்குகிறேன் . இது யாருடைய டாப் 10 என நீங்கள் குழம்ப வேண்டாம் . இது உங்கள் மனம் கவர்ந்த ஒரு பதிவரைடையது தான் . அந்த பிரபல பதிவர் யார் என்பது பதிவை படிக்க ஆரம்பித்ததும் நீங்களே கண்டுபிடித்து விடுவிர்கள் .


விசில் அடிக்கலாம் வாங்க



 ====================================================================

 கொடுமையான விஷயம் :

மயிலாடுதுறையை சுற்றி வசிக்கும் மக்களுக்கு ஒரு கொடுமையான விஷயம் . இன்று இரவு 8 to 9 உள்ளூர் தொலைக்காட்சியான T C U சேனலில் நான் பங்கு பெரும் நேரடி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது . மாணவர்கள் இதில் தொலைபேசி மூலம் கலந்து கொண்டு சந்தேகங்களை (பாட சம்பந்தமாக ) கேட்கலாம் . எனக்கு தெரிந்தால் (!!!) சொல்கிறேன் . நிகழ்ச்சி முடிந்த பின் உங்கள் கருத்தை சொல்லுங்கள்




 ======================================================================
COMPUTERSCIENCE இல் முதல் முறையாக எனது மாணவன் நடராஜன் 200 / 200
வாழ்த்துக்கள் ..
# சந்தோஷமான தருணம்



 =======================================================================
 நாகை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ROTARY CLUB MATRIC . HSC பள்ளியின் மாணவர்
M.A.சிவராம் கார்த்திக்கு வாழ்த்துக்கள் .

1173 




 ========================================================================
மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றதை விட மகிழ்ச்சியானது. .

அணைத்து மாணவர்களும் தேர்வு அடைந்தது.

#எல்லா குழந்தையும் எங்கள் குழந்தைதான்


 =======================================================================

  "எங்கள் பள்ளியில் 380 மார்க்கு மேல உள்ள மாணவர்களை மட்டும் தான் சேர்ப்போம். உங்க பள்ளி போல அட்டம்ப்ட் கேஸா இருந்தாலும் பரவாயில்லைனு சேர்க்கமாட்டோம்" அப்படினு ஒருத்தர் சொன்னார்.

நான் சொன்னேன் " ஏற்கனவே நல்ல படிக்கிறவனை நல்ல மார்க் எடுக்க வைப்பது சாதனையுமில்லை அது தான் நல்ல ஸ்கூல்/ ஆசிரியர் என அர்த்தமில்லை. படிக்காதவனை கூட உன்னால் முடியும் என நம்பிக்கையூட்டி நல்ல மார்க் எடுக்க வைபதுதான் சாதனை. அதுதான் நல்ல ஸ்கூல்/ ஆசிரியர். " என்றேன்.

##நான் சொன்னது சரியா????



 =====================================================================
கடந்த வருடம் +2 இல் மாவட்ட அளவில் மதிப்பெண் பெற வைத்தமைக்கு ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா இன்று பள்ளியில் நடைப்பெற்றது. அப்போது வழங்கபட்ட பரிசு.




======================================================================

 இனியாது திருந்துவார்களா??
=====================
நேற்று - மதியம் 2:30 பஸ் பயணத்தின்போது..
சபரி மலையில் இருந்து வேலூர் திரும்பும்
ஒரு அய்யப்ப பக்தர் அருகில்
நின்று கொண்டிருந்த ஒரு முஸ்லிம்
பெரியவருக்கு இருக்க
இடமளித்து எழும்பி நின்றார்...
அந்த பெரியவர் நீங்க இருங்க தம்பி மலையில்
இருந்த இறங்கி களைப்பாக வந்திருப்பீங்க என
கூறி இருக்க மறுத்தார்...
நான் ரெயிலில் வரும்போதே நல்லா ரெஸ்ட்
எடுத்துட்டேன் நீங்க நோன்பு பிடிசிருப்பீங்க
காலைல இருந்தே எதுவும் சாப்பிடாம
களைப்பா இருப்பீங்க... நீங்க உக்காருங்க
என்று சொல்லி உக்கார வைத்தார்...
எங்கள் வாழ்கை பயணத்தின்
ஒவ்வொரு நொடியும் இப்படிதான் கழியுது...
இப்படித்தான் நாங்க வாழ்கிறோம், இனியும்
வாழ்வோம் !
Thanks to Sulthan Salahudeen



 ====================================================================




 நேர்மைக்கு பரிசு இடமாற்றம். மயிலாடுதுறையில் போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் திரு நெப்போலியன் பதவியேற்றபின் மாயிலாடுதுறையே மாறியிருந்தது. டிராபிக் ஜாம் இல்லை. வாகன விபத்து குறைவு, ரோட்டில் கண்னை மூடிகொன்டு வன்டிஓட்டுபவர்கள் குறைவு, பஸ்ஸில் படியில் பயணம் செய்ய பயந்த மாணவர்கள் என நன்றாக இருந்தது. நேற்று திடிரென அவரை மாற்றிவிட்டார்கள். இனி மயிலை ட்ராபிக் ஜாமில் சிக்கி தவிக்கட்டும் என நினைத்து இடம் மாற்றம் செய்ய அந்த"புண்ணியவான்" வாழ்க.

#என்ன_உலகம்டா_இது??



  ====================================================================

தாத்தா வீட்டிக்கு போகும் குஷியில் சரண். .

 ====================================================================
  
இதுதான் இந்தியா
===============

ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய விஜய்
மல்லையா தற்கொலை செய்து கொள்ளவில்லை...
அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க
எவனும் தற்கொலை பண்ணிக்கல..
அந்த கடனைக் கொடுக்கச்சொன்ன நம்ம
நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல..
ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்..
எங்கள் ஏழை உழவன்..
சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட
முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்..
ஏனெறால் இவனுக்கு மானம் தான் பெரிது..
- இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.
நம்மாழ்வார்


  ====================================================================

  டாக்டர் விஜய், டாக்டர் கமல்னு இனி யாரும் பெருமையா சொல்லிகாதிங்க.

காரணம்:
நடிகை தேவயானிக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் நேற்று வழங்கியது.






 டிஸ்கி : அந்த பதிவர் ...... போங்க பாஸ் இன்னுமா தெரியாம இருக்க 
                  போறிங்க ?

டிஸ்கி : இதுபோல நீங்களும் உங்கள் FACEBOOK இல் உங்கள் TOP 10 STATUS அறிந்துகொள்ள 

https://www.facebook.com/yearinreview/  இதை உங்கள் FACEBOOK URL இல் COPY & PASTE செய்யவும் .