> என் ராஜபாட்டை

.....

.

Friday, October 21, 2011

நாஞ்சில் மனோவை கலாய்ப்போர் சங்கம்




இந்த பதிவு முழுவதும் நம்ம அண்ணன், தலைவர், சகலகலா(யார் அந்த கலானு கேட்ககூடாது) வல்லவர், “பார்” புகழும் தங்க(சரி ..முறைக்காதீங்க,  பித்தளை) மகன் மனோ அவர்களை கலாய்த்து எழுதப்பட்டது.

மனோ பள்ளியில் படிக்கும் போது..:

ஆசிரியர் : ஏண்டா பிளம்பர்(plumber) கூப்பிட்டுகிட்டு வந்துருக்க?

மனோ : Qestion Paper லீக் ஆகுதானு செக் பன்ன..

( ஆசிரியர் அவுட்)

…………………………………………………………………………………….

ஆசிரியர் : முதல் மாசம் பிப்ரவரினா, 10 வது மாசம் என்ன ?

மனோ : டெலிவரி

………………………………………………………………………………….

ஆசிரியர் : உனக்கு எது மிகவும் பிடிக்கும் ? தமிழ் மொழியா? ஆங்கில மொழியா?

மனோ : இரண்டும் இல்லை.

ஆசிரியர் : பின்பு?

மனோ : உங்க பொண்னு கனிமொழியை தான் பிடிக்கும்

------------------------------------------------------------

மனோ தனது விடைதாளில் அணைத்து பதில்களுக்கும் ||||||||||||||||| என போட்டிருந்தார் அதன் கீழே அவர் எழுதினார்..

“ விடைகளை சுரண்டி தெரிந்து கொள்ளவும்”

…………………………………………………………………………..

காட்டில் சிபியும் மனோவும் சுற்றிபார்க்கும் போது ஒரு சிங்கம்( நான் இல்லப்பா..) வந்தது,

சிபி : மனோ Shoot பன்னு.. Shoot பன்னு..

மனோ : இருப்பா .. இப்பதான் கேமராவில் பேட்டரி போடுறேன்.

(மனோ புத்திசாலி…)

…………………………………………………………………………….

மனோவின் மகன்: அப்பா 5 + 3 எத்தனை ?

மனோ : முட்டாள் பய மகனே, அறிவில்லதவனே, இந்த சின்ன கணக்கு கூட தெரியில்ல நி படிச்சு என்ன கிழிக்க போற? இதுகூட தெரியாத நீ கருன் போல வாத்தியாராதான் போவ… சரி .. சரி போய் Calculator எடுத்துவா போட்டுகாட்டுறேன்.

………………………………………………………………………………..

மனோவின் மகன்: அப்பா.. முட்டாள் என்றால் யார்ப்பா?

மனோ : ஒரு விஷயத்தை மிக எளிதாக சரியான விளக்கத்துடன் எடுத்து கூறி ஒரு குழந்தை கூட  புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்ல வேண்டும். அப்படி புரியவைக்க முடியாதவந்தான் முட்டாள் .. புரிந்ததா?

மனோவின் மகன்: ஒன்னுமே புரியவில்லை


விக்கி : அந்த சைனீஷ் பொண்னுகிட்ட I Love You  சொன்னியே என்ன ஆச்சு ?

மனோ : வேஸ்ட்.. அவ ஏற்கனவே இரண்டு பேர லவ் பண்றா போலிறுக்கு..


விக்கி : எப்படி சொல்லுற?

மனோ : I Love You too( 2) னு சொன்னாலே..


மனோ , விக்கி, சசிகுமார் மூவரும் ஒரு வங்கிக்கு செல்கின்றனர். எதிர்பாராதவிதமாக அங்கு கொள்ளை நட்க்கின்றது. கொள்ளைகாரனில் ஒருவன் விக்கியிடம்..

கொள்ளைகாரன் : இந்த கொள்ளையை நீ பாத்தியா?

விக்கி : ஆமா…( டூமில்.. விக்கி காலி)

கொள்ளைகாரன்( மனோ விடம்) : இந்த கொள்ளையை நீ பாத்தியா?

மனோ : இல்லை.. ஆனா சசி பார்த்தார்.

( என்ன ஒரு கொலைவெறி)
 ஒரு குருப்பாத்தான் இருக்கோம் 

Wednesday, October 19, 2011

நடிகர் விஜய் பய(ங்கர) டேட்டா



பெயர்                        :  விஜய்

ரசிகர்களுக்கு             : இளைய தளபதி

ஜெயலலிதாவுக்கு          : அணில்

தொழில்                      : நடிப்பு

உபதொழில்                 : அரசியல்

நீண்டகால எரிச்சல்      : ராகுல் பேச்சு( இளைஞ்சர் அணியில் சேர வயது
கடந்துவிட்டது என்றது)

சமிபத்திய எரிச்சல்       : சன் டீ.வி

நீண்டகால போட்டி        : தல

சமிபகால போட்டி         : சூர்யா

பலம்                          : நடனம்

பலவீனம்                     : “பன்ச்” டயலாக்

மறக்க நினைப்பது         : முன்பு      : சங்கவி

இப்போது  :சுறா, வேட்டைகாரன்

மறக்கமுடியாதது          : காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக


நிறைவேறிய ஆசை       : சினிமாவில் முதலிடம்

நிராசை                      : அரசியலில் முதலிடம்

விரும்புவது                  : ரீ-மேக் படங்களை

நம்புவது                     : பெரிய இயக்குனர்களை.

நம்ப முடியாமல் தவிப்பது        :  அப்பாவின் அரசியல் பேச்சை

எதிர்பார்ப்பு                 : வேலாயுதம் வெற்றியை..

அதிக எதிர்பார்ப்பு        : 7 அறிவு தோல்வியை..


Tuesday, October 18, 2011

தமிழ்மணம் எங்களுக்கு SOLANUM TORVUM



சமிபகாலமாக  பிளாக்கர்களுக்குள் நடக்கும் விவாதம் டமில்மணம்( தப்பா அடிக்கவில்லை). அதுவும் நம்ம பண்னிகுட்டி அண்னன் பதிவு போட்டபின் இன்னும் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. டமில்மணத்திற்க்கும் எனக்கும் நடந்த சண்டை பற்றி போடலாம வேண்டாமா என யோசித்துகொண்டிருக்கும் போது நல்ல நேரம் சதிஷ் பதிவும், நண்பர் நக்கீரன்(நாய்-நக்ஸ்) அவர்கள் தொலைபேசியில் சொன்ன தகவல்களும் , இன்னும் பல பதிவர்கள் எழுதிய பதிவும் இதை எழுத துண்டின.

கடந்த மாதம் “ தமிழ்மணத்தில் பதிவே எழுதாமல் முதலிடம் பெறுவது எப்படி?” என மொக்கை பதிவு போட்டேன். அதுக்கு அந்த பெயரிலி( அறிவிலி ?) வந்து டஸ்சு, புஷ்னு இங்கிலிஷ்ல கமெண்ட் போட கடுப்பான நான் அதை Delete செய்துவிட்டேன். கோபப்பட்ட அது உங்களை டமில்மணத்தில் இருந்து விலக்கிவைக்கிறேன் என மெயில் பன்னியது.(மனசுல நாட்டாமைனு நினைப்பு..).

கடந்த மாதமே இப்ப டமில்மணத்திற்க்கு சொம்பு தூக்கும் ஐடியா மணிக்கு ஒரு பகிரங்க கடிதம் என்னும் பதிவில் “ தமிழ்மனம் இல்லை எனில் பதிவுலகமே நடக்காதா ?” என கேட்டேன். இப்போ அந்த அறிவிலி சாரி பெயரிலி தானே வந்து வாயகுடுத்து மாட்டிகிட்டு.

பல நண்பர்களின் வேண்டுகோளுக்காகவும், மனம் வருந்தும் பதிவர்களின் வருத்ததில் பங்கு கொள்ளவும், டமில்மனத்தின் கொட்டத்தை அடக்கவும் தமிழ்மணம் ஓட்டு பட்டையை என் தளத்தில் இருந்து நீக்குகிறேன்.



SOLANUM TORVUM என்றால் சுண்டைகாய் என அர்த்தம்



Monday, October 17, 2011

இவருடன் போட்டி போட யார் தயார் ?



நகைசுவை திலகம்

காமடி பிசாசு

சிரிப்பு டாக்டர் ( விஜய் இல்லை )


நமது உள்ளம் கொள்ளைகொண்ட நகைசுவை புயல் சாம் ஆண்டர்சன் அவர்களின் வீடியோ தொகுப்பு  உங்களுக்காக ..



நடிப்பு திறமை வளர்ப்பது எப்படி ?


நடனம் ஆடுவது எப்படி ?


ரஜினிக்கு போட்டியாக ..



மைகேல் ஜாக்சண்க்கு இணையாக ..



டிஸ்கி : விக்கியுடன் சேர்ந்து ரொம்ப கெட்டுபோய்டேன் ..
அதான் ஒரே வீடியோ பதிவா இருக்கு ..




Sunday, October 16, 2011

கண்களை நம்பாதே


நாம் பார்பது ஒன்று , ஆனால் படத்தில் இருப்பது வேறு. இப்படி நம் கண்களுடன் கண்னாமூச்சி ஆடும் படங்களின் தொகுப்பு உங்களுகாக..







மேலே உள்ள படம் உங்கள் கன்னைதான் கட்டும், அடுத்து வர போவது உங்கள் மூச்சை நிருத்தி விடும்… ஜாக்கிரதை…