ஒரு கட்டிடத்தில் நமது பதிவர்கள் சந்திப்பு நடக்கிறது. அந்த சமயத்தில் ஒரு தீவிரவாதி உள்ளே புகுந்து அனைவரையும் பிடித்து கொள்கிறான். அந்த நேரத்தில் அவர்கள் ரியாக்ஷன் அப்படி இருக்கும் என ஒரு கற்பனை.
சீனா : நாம வேனா வாரம் ஒருத்தரை தீவிரவாதியிடம் பேச்சுவார்த்தை
நடத்த அனுப்பலாமா?
சித்ரா : ஐயா.. இது வலைசரம் இல்லை.. கொலை சரம்.
சீனா : நீ போய் ஒரு டான்ஸ் ஆடு. அதை பார்த்து அவன் பயத்துல
செத்துடுவான். நாம தப்பிச்சுடுலாம்.
கூடல் பாலா: அய்யோ ! வேண்டாம்.. பில்டிங் கொஞ்சம் பழசு.. நான் வேணா
தீவிரவாதிக்கு எதிரா ஒரு போராட்டம் நடத்தட்டா?
சீனா : 2 நாளாதான் போராட்டம் நடத்தாம இருக்க.. வேண்டாம் விடு.
வேடந்தாங்கல் கருன் : நான் வேனா ஒரு கவிதை சொல்லட்டா?
சீனா : கவிதை வேண்டாம் . அவங்கிட்ட போய் ஒரு 2 மணி நேரம் வகுப்பு
எடு. அவன் தானே ஒடிடுவான்.
வேடந்தாங்கல் கருன் : நம்ம சி.பி எங்கே ?
சீனா : புதுசா “கண்னடிக்கும் கன்னி” னு ஒரு கில்மா படம் வந்து இருக்கு. அத பார்த்து விமர்சனம் எழுத போயிருக்கார். வாங்க பலே பிரபு நீங்க என்ன செய்யலாம்னு சொல்லுங்க ?
பலே பிரபு : நான் அந்த தீவிரவாதியின் பயோடேட்டா வை வாங்கி என்
வலையில் போடவா ?
சீனா : நீ ஒன்னும் போடவேண்டாம். அதோ வந்தேமாதரம் சசி வாரார்
அவர்கிட்ட கேட்போம்.
சசி : வைரஸ்களிடம் இருந்து தப்பிபது எப்படி தெரியுமா ?
கருன் : முதலில் தீவிரவாதியிடம் இருந்து தப்பிபது எப்படினு சொல்லு ?
சசி : ஆண்டி வைரஸ்…….
சி.பி : என்னது ஆண்டியா ? எங்கே?
சசி : யோவ்.. நான் சொன்னது ANTI VIRUS…
சி.பி ; அதோ விக்கி தக்காளி வாரான். அவங்கிட்ட கேட்போம்.
விக்கி : என் குட்டிசுவர் தொடரை படிக்க சொல்லுவோம். அத படிச்சுடு
அவன் எப்படி உயிரோடு இருப்பானு பார்கிறேன்.
ரமேஷ் : நம்ம டெர்ரர் கும்மி குருப்பை விட்டு கலாய்க சொல்லலாமா?
சி.பி : 4 நாள் கழித்து கொல்லுரவன் உடனே கொன்னுடுவான்.
நாஞ்சில் மனோ : நான் என் லேப்டாப் வச்சு எதாவது பண்ணடா ?
கவிதைவீதி சௌந்தர் : வேண்டாம் . அப்புறம் நான் கவிதை சொல்லி உன்னை கொன்னுடுவேன் .
சரி எங்கே நம்ம தமிழ்வாசி ?
நாஞ்சில் மனோ : அவர் எப்பவோ ஆதிவாசியா போய்டார் .
கவிதைவீதி சௌந்தர் : சரி பன்னிகுட்டி ராமசாமி எங்கே ?
நாஞ்சில் மனோ : அவர் பூமிய தேடி போய்டார் .
கருன் : அங்க பாருங்க.. நம்ம FOOD திவிரவாதிக்கு எதோ குடிக்க குடுத்தார் . அவன் மயங்கி விழுந்துடான்.
சி.பி. : வெரி குட், FOOD. எப்படி உனக்கு மயக்க மருந்து குடுக்குற ஐடியா
வந்தது ?
FOOD : ஐயோ ! ! நான் மயக்க மருந்து குடுக்கல….
கருன் : பின்னே என்ன குடுத்த ?
FOOD : நான் தயாரிச்ச சூப்பைதான் குடுத்தேன்.
எல்லாரும் மயக்கம் அடித்து விழுகின்றனர்.
டிஸ்கி 1: சீனா ஐயா கோவித்துகொள்ள கூடாது.
டிஸ்கி 2: சிரிப்பு வரலைனா நான் பொருப்பு இல்லை
டிஸ்கி 3: இதில் இடம்பெற்ற பதிவர்கள் தவறாக எடுத்துகொள்ளகூடாது.
இப்படிக்கு : டிஸ்கி மேல டிஸ்கி போடும் சங்கம்.