> என் ராஜபாட்டை

.....

.

Friday, October 19, 2012

சிவாஜிராவ் முதல் சிவாஜி வரை : ரசித்து படிக்க வேண்டிய புத்தகங்கள் பகுதி 3





ரஜினி , இது ஒரு மந்திர வார்த்தை . இதை உச்சரிக்காத தமிழனே இருக்க முடியாது . குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஸ்டையில் மன்னன . சாதாரண பேருந்து நடத்துனராக துவங்கி , துணை நடிகராக மாறி , பின் வில்லனாக நடித்து அதில் பெயர் பெற்று பின்பு உலகம் போற்றும் சூப்பர் ஸ்டார் ஆனவர் . மொழியே புரியாத ஜப்பானில் கூட இவருக்கு ரசிகர்கள் உண்டு என்பதே இவர் சிறப்பு .

இவரை பற்றி பல புத்தகங்கள் வந்துள்ளது ஆனால் இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியசமானது . அவரி பற்றி யாருக்கும் தெரியாத பல தகவல்கள் இதில் உள்ளது . அவரின் ஆரம்பகால வாழ்கை முதல் இப்போ உள்ளது வரை விரிவாக அலசபட்டு உள்ளது


உங்களுக்குகாக சில வரிகள் :


ரஜினி என்றால் இருட்டு , மஞ்சள் , மங்கலன் என பொருள் .


ரஜினிகாந்த் என்றால் இரவின் நாயகன் என பொருள்


ஆரம்பகால விலாசம் : புதுபேட்டை கார்டன்
இப்போ              : போயஸ் கார்டன்



ஆரம்பல்கால வீட்டு வடக்கை : 115


ரஜினியின் 100 வது படம் ராகவேந்திரர் . இது ரஜினி விரும்பி கேட்டதால் எடுக்கபட்டது .


கமல் , ரஜினி நட்பு ஆழமாக ஆரம்பித்தது நினைத்தாலே இனிக்கும் படம் எடுக்கும் போதுதான் .



ரஜினியின் மானசீக குரூ பாலசந்தர்





டிஸ்கி : இந்த புத்தகத்தை DOWNLOAD செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் rrajja.mlr@gmail.com க்கு  Mail பண்ணவும். .E-Book  விரைவில் அனுப்பப்படும் .




Tuesday, October 16, 2012

மாற்றான் : விமர்சனம்






முன்குறிப்பு : இதுதான் என் முதல் விமர்சனம்




தான் ஒரு மசாலா இயக்குனர் என்பதை மீண்டும் நிருப்பித்து உள்ளார் கே .வி ஆனந்த் . இந்தமுறையும் இவருக்கு துணை நின்றது எழுத்தாளர்கள் சுபா . கொஞ்சம் சஸ்பென்ஸ் , கொஞ்சம் காமெடி , கொஞ்சம் சென்டிமென்ட் , கொஞ்சம் அக்ஷன் , சில பாடல் என்ற கலவையில் படம் இருக்கிறது .

ஒட்டி பிறந்த இரட்டையர்கள் அகிலம் , முகிலன் . இவர் தந்தை குழந்தைகள் குடிக்கும் பால் பவுடர் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் நடத்துகிறார் . அதில் நடக்கும் முறைகேடுகளை கண்டுபிடிக்கும் உளவாளி கொல்லபட அதை தெரிந்த காரணத்தால் அகிலன் கொல்லப்பட ஒரு சூர்யா மட்டும் இருக்கிறார் . இவர் எப்படி அந்த முறை கேடுகளை கண்டுபிடித்தார் , வில்லனை எப்படி கொன்றார் என்பதை (தில் இருந்தா ) வெள்ளி திரையில் பார்க்கவும் .


முதல் பாதி விறுவிறுப்பாக செல்கின்றது . இரருவரும் சேர்ந்து செய்யும் ரகளை . காஜல் அகர்வாலை இருவரும் கரக்ட் செய்ய முயல்வது , ஒருவர் தண்ணி அடித்தல் இருவருக்கும் கிக் ஏறுவது என ரகளையாகவும் , பால் பவுடர் சீக்ரட் பற்றி உள்ள பென்டிரைவரை கைபற்ற நடக்கும் சண்டை எனவும் விறுவிறுப்பாக நகரும் படம் இரண்டாம் பாதியில் அண்ணா ஹசாரே போராட்டம் போல தடுமாறுகிறது .

லாஜிக் என்ற ஒன்றை மறந்து விட்டுதான் படம் பார்க்க வர வேண்டும் என ஒரு விளம்பரம் கொடுத்தால் நன்றாக இருக்கும் . இதயமாற்று அறுவை சிகிச்சை முடித்தவர் எவ்வளவு வேகமாக ஓட , சண்டை போடா முடியுமா ?

காஜல் தான் காதலித்த சூரிய இறந்ததும் எந்த வருத்தமும் இன்றி அடுத்த சூர்யாவுடன் டுயட் படுவது எப்படி ?

இதயத்தை மாற்றினால் ஒருவனின் நினைவுகள் மற்றவர்களுக்கு வந்து விடுமா ?

நினைவுகள் இதயத்தில் store ஆகுமா அல்லது மூளைல store ஆகுமா ?

பல படங்களில் பயன்படுத்திய அதே பின்னணி இசையை இதற்கும் படன்படுத்துவது ஏன் ? ( சூர்யா அடிபட்டு ஆஸ்பத்திரி செல்லும் போது வரும் இசை நண்பன் படத்தில் ஜீவா அடிபட்டு ஆஸ்பத்திரி செல்லும் வழியில் வரும் இசை போலவே உள்ளது )


படம் முழு மொக்கை என ஒதுக்க முடியாது . அருமையான படம் என தலையில் தூகி வைத்து கொண்டாட முடியாது . ஒருதடவை பார்க்கலாம் .


டிஸ்கி : ஆனந்த விகடன் மார்க் போடா நான் ஒன்னும் சிபி
         இல்லை

டிஸ்கி : கதாநாயகி பற்றி வர்ணிக்கவில்லை காரணம் காஜால்
        ரசிகர்மன்ற தலைவர்கள் பிரபா மற்றும் மயிலன்
        வருத்தப்பட கூடாது என்று .



Tuesday, October 9, 2012

அஜித் , சிம்பு இணையும் தர்மத்தின் தலைவன் ரீ - மேக்




தமிழ் சினிமாவில் சில நடிகர்களை மட்டும் தான் பிற நடிகர்கள் தங்கள் படங்களில் அவர்களின் ரசிகர்கள் என சொல்லி கொண்டாடுவார்கள் . அவர்களில் முதன்மையானவர் ரஜினி . அடுத்த இடத்தை பிடிப்பவர் நமது தா அஜித் தான் . பல படங்களில் பல நடிகர்கள் அஜித் ரசிகராக நடித்துள்ளனர் , இதில் பலர் நிஜமாகவே அவர் ரசிகர்கள் கூட . இப்படிபட்ட நடிகர்களில் முக்கியமானவர் , முதன்மையானவர் சிம்பு . இவர் அஜித்தின் ரசிகர் என்பதை விட வெறியர் என சொல்லலாம் . நண்பன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை அஜித் ரசிகர்களுக்காக வேண்டாம் என உதறிதள்ளியவர் .








இவர் அஜித்துடன் இணைந்து ஒரு படம் நடிக்க போகிறார் என்பதுதான் இப்போதைய ஹாட் நியூஸ் . அஜித் தற்பொழுது விஷ்ணு வர்த்தனுடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார் . அது முடிந்த உடன் இந்த படத்தில் நடிக்கலாம் என தெரிகிறது .

ஏற்கனவே ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீ மேக் இல் அஜித் நடித்து அது பெறும் வெற்றி பெற்றதால் மீண்டும் ஒரு ரஜினி படத்தை ரீ மேக்  பண்ணலாம் என சிம்பு நினைப்பதாக தகவல் . இதனால் ரஜினி பிரபு இணைந்து நடித்து பெறும் வெற்றி பெற்ற தர்மத்தின் தலைவன் படத்தை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளதாக கேள்வி.







சிம்பு கூட தனது டுவிட்டரில் நாங்கள் இணைந்து நடிப்போம் என சொல்லியுள்ளார் . இப்படத்தை சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்க உள்ளார் என புதிய தலைமுறை செய்தி சேனல சொல்லியுள்ளது .
இன்னும் சில நாட்களில் முழு விவரம் வரும் என எதிர்பார்க்கிறோம் .





டிஸ்கி : பி . வாசு இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க அஜித்துடன் பேச்சு வார்த்தை நடப்பதாக ஆனந்த விகடன் செய்தி வெளியிட்டு உள்ளது .


 இதையும் படிக்கலாமே :


இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?