முன்குறிப்பு : இதுதான் என் முதல் விமர்சனம்
தான் ஒரு மசாலா இயக்குனர் என்பதை
மீண்டும் நிருப்பித்து உள்ளார் கே .வி ஆனந்த் . இந்தமுறையும் இவருக்கு துணை நின்றது
எழுத்தாளர்கள் சுபா . கொஞ்சம் சஸ்பென்ஸ் , கொஞ்சம் காமெடி , கொஞ்சம் சென்டிமென்ட்
, கொஞ்சம் அக்ஷன் , சில பாடல் என்ற கலவையில் படம் இருக்கிறது .
ஒட்டி பிறந்த இரட்டையர்கள் அகிலம்
, முகிலன் . இவர் தந்தை குழந்தைகள் குடிக்கும் பால் பவுடர் தயாரிக்கும் முன்னணி நிறுவனம்
நடத்துகிறார் . அதில் நடக்கும் முறைகேடுகளை கண்டுபிடிக்கும் உளவாளி கொல்லபட அதை
தெரிந்த காரணத்தால் அகிலன் கொல்லப்பட ஒரு சூர்யா மட்டும் இருக்கிறார் . இவர்
எப்படி அந்த முறை கேடுகளை கண்டுபிடித்தார் , வில்லனை எப்படி கொன்றார் என்பதை (தில்
இருந்தா ) வெள்ளி திரையில் பார்க்கவும் .
முதல் பாதி விறுவிறுப்பாக
செல்கின்றது . இரருவரும் சேர்ந்து செய்யும் ரகளை . காஜல் அகர்வாலை இருவரும் கரக்ட்
செய்ய முயல்வது , ஒருவர் தண்ணி அடித்தல் இருவருக்கும் கிக் ஏறுவது என ரகளையாகவும்
, பால் பவுடர் சீக்ரட் பற்றி உள்ள பென்டிரைவரை கைபற்ற நடக்கும் சண்டை எனவும்
விறுவிறுப்பாக நகரும் படம் இரண்டாம் பாதியில் அண்ணா ஹசாரே போராட்டம் போல
தடுமாறுகிறது .
லாஜிக் என்ற ஒன்றை மறந்து
விட்டுதான் படம் பார்க்க வர வேண்டும் என ஒரு விளம்பரம் கொடுத்தால் நன்றாக
இருக்கும் . இதயமாற்று அறுவை சிகிச்சை முடித்தவர் எவ்வளவு வேகமாக ஓட , சண்டை போடா
முடியுமா ?
காஜல் தான் காதலித்த சூரிய
இறந்ததும் எந்த வருத்தமும் இன்றி அடுத்த சூர்யாவுடன் டுயட் படுவது எப்படி ?
இதயத்தை மாற்றினால் ஒருவனின்
நினைவுகள் மற்றவர்களுக்கு வந்து விடுமா ?
நினைவுகள் இதயத்தில் store ஆகுமா அல்லது மூளைல store ஆகுமா ?
பல படங்களில் பயன்படுத்திய அதே
பின்னணி இசையை இதற்கும் படன்படுத்துவது ஏன் ? ( சூர்யா அடிபட்டு ஆஸ்பத்திரி
செல்லும் போது வரும் இசை நண்பன் படத்தில் ஜீவா அடிபட்டு ஆஸ்பத்திரி செல்லும்
வழியில் வரும் இசை போலவே உள்ளது )
படம் முழு மொக்கை என ஒதுக்க
முடியாது . அருமையான படம் என தலையில் தூகி வைத்து கொண்டாட முடியாது . ஒருதடவை
பார்க்கலாம் .
டிஸ்கி : ஆனந்த விகடன் மார்க் போடா நான் ஒன்னும் சிபி
இல்லை
டிஸ்கி : கதாநாயகி பற்றி வர்ணிக்கவில்லை காரணம் காஜால்
ரசிகர்மன்ற தலைவர்கள் பிரபா மற்றும்
மயிலன்
வருத்தப்பட கூடாது என்று .
Tweet |
அட,, இது கொஞ்சம் புதுசா இருக்கே,,
ReplyDeleteஅட.. எத்தனை கேள்விகள்...?
ReplyDelete//முன்குறிப்பு : இதுதான் என் முதல் விமர்சனம் //
ReplyDeleteஅடடே.. ஆச்சர்யக்குறி..
:-)
இது தான்் முதல்் விமர்சனம். நம்மவில்லை உங்கள் அதவு தேவை.இப்பக்கு p.செல்வம்
ReplyDelete