தமிழ் சினிமாவில் சில நடிகர்களை
மட்டும் தான் பிற நடிகர்கள் தங்கள் படங்களில் அவர்களின் ரசிகர்கள் என சொல்லி
கொண்டாடுவார்கள் . அவர்களில் முதன்மையானவர் ரஜினி . அடுத்த இடத்தை பிடிப்பவர் நமது
தா அஜித் தான் . பல படங்களில் பல நடிகர்கள் அஜித் ரசிகராக நடித்துள்ளனர் , இதில்
பலர் நிஜமாகவே அவர் ரசிகர்கள் கூட . இப்படிபட்ட நடிகர்களில் முக்கியமானவர் ,
முதன்மையானவர் சிம்பு . இவர் அஜித்தின் ரசிகர் என்பதை விட வெறியர் என சொல்லலாம் . நண்பன்
படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை அஜித் ரசிகர்களுக்காக வேண்டாம் என உதறிதள்ளியவர்
.
இவர் அஜித்துடன் இணைந்து ஒரு படம்
நடிக்க போகிறார் என்பதுதான் இப்போதைய ஹாட் நியூஸ் . அஜித் தற்பொழுது விஷ்ணு
வர்த்தனுடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார் . அது முடிந்த உடன் இந்த
படத்தில் நடிக்கலாம் என தெரிகிறது .
ஏற்கனவே ரஜினி நடித்த பில்லா
படத்தின் ரீ மேக் இல் அஜித் நடித்து அது பெறும் வெற்றி பெற்றதால் மீண்டும் ஒரு
ரஜினி படத்தை ரீ மேக் பண்ணலாம் என சிம்பு
நினைப்பதாக தகவல் . இதனால் ரஜினி பிரபு இணைந்து
நடித்து பெறும் வெற்றி பெற்ற “தர்மத்தின் தலைவன் “
படத்தை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளதாக கேள்வி.
சிம்பு கூட தனது டுவிட்டரில்
நாங்கள் இணைந்து நடிப்போம் என சொல்லியுள்ளார் . இப்படத்தை
சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்க உள்ளார் என புதிய தலைமுறை செய்தி சேனல
சொல்லியுள்ளது .
இன்னும் சில நாட்களில் முழு
விவரம் வரும் என எதிர்பார்க்கிறோம் .
டிஸ்கி : பி . வாசு இயக்கத்தில் “ சந்திரமுகி “ இரண்டாம் பாகத்தில் நடிக்க அஜித்துடன் பேச்சு வார்த்தை
நடப்பதாக ஆனந்த விகடன் செய்தி வெளியிட்டு உள்ளது .
இதையும் படிக்கலாமே :
இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?
Tweet |
சுவையான செய்திகள்.
ReplyDeleteரைட்டு...
ReplyDeleteநடக்கட்டும்-நல்லபடியாக...
ReplyDeleteகெளப்புங்க கெளப்புங்க காத்து கூட உள்ளே வராம கெளப்புங்க ஹி ஹி ...
ReplyDeleteமிக அருமையான பதிவு
ReplyDeleteவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது
தினபதிவு திரட்டி