> என் ராஜபாட்டை

.....

.

Wednesday, March 4, 2015

விஜய் ரசிகர்கள் வாழ்க ....








                         இன்றைய தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் , அடுத்த சூப்பர் ஸ்டார் என தனது ரசிகர்களால் கொண்டாடப்படும் இளைய தளபதி "விஜய் " தான். இவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகிறது அதே சமயம் பல பிரச்சனைக்குள்ளலாகிறது . அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என குழம்பி இருப்பதில் அடுத்த ரஜினி இவர் .

                  இவருக்கு தமிழ் நாட்டில் பல கோடிகணக்கான ரசிகர்கள் இருகின்றனர் . பல்லாயிரகணக்கான ரசிகர் மன்றங்கள் இருக்கிறது. தனது ரசிகர்களை வெறும் கைதட்டலுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள கூடாது என்ற எண்ணத்தில் விஜய் மக்கள் இயக்கம் என ஒன்று துவங்கி அதன் மூலம் பல மக்கள் நல திட்டங்களை செய்துவந்தார், வருகிறார் .


          இப்போது தமிழகத்தில்விவசாய மாவட்டமான தஞ்சை டெல்டா பகுதியில் மீதேன் என்னும் அரக்கனை களமிறக்க அரசு முயல்கிறது . இதை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் போராட்டங்கள் , கடையடைப்புகள் , கவன ஈர்ப்பு என நடத்தி வருகிறது என்பது நமக்கு தெரியும் .

             இந்த மக்களில் வாழ்வாதார போராட்டத்திற்கு இதுவரை எந்த நடிகரும் குரல் கொடுக்கவில்லை , முதன் முதலாக விஜயின் ரசிகர் மன்றத்தினர் இரண்டு தினகளுக்கு முன்பு மீதேன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர் . போலீசார் அவர்களை கைது செய்து பின்பு விடுதலை செய்தனர் .

               வெறும் சினிமா ரசிகனாக இல்லாமல் மக்கள் நலனுக்கு தேவையான ஒரு விஷயத்தில் போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை . வெறும் விசிலடிச்சான் குஞ்சுகள் என இனி யாரும் அவர்களை கிண்டல் செய்ய முடியாது . 35  பேர் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் இது ஆரம்பம்தான் .


               விஜயின் மற்றரசிகர்களும் போராட்டத்தில் இறங்கினால் , அவர்களுடன் அஜித் , ரஜினி, கமல் ,விக்ரம் என அனைத்து ரசிகர்களும் களம் இறங்கி போராடினால் மீதேன் திட்டத்தை ஒரேயடியாக நிறுத்தலாம் . நடக்குமா ?


இதையும் படிக்கலாமே :  

இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையதளம்

Tuesday, March 3, 2015

இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையதளம்







இன்று மொபைல் போன் பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் . அனைவரும் எபோழுதும் போனும் கையுமாகத்தான் உள்ளனர். போன் வைத்திருப்பதில் மிக பெரிய கஷ்டமே அதுக்கு ரீ சார்ஜ் செய்வதுதான் . இபோழுது நெட், மெசேஜ் , கால் கட்டணம் என அனைத்தும் உயர்ந்துவிட்டது . இந்த நிலையில் இலவசமாக கொஞ்சம் கிடைத்தால் நன்றாக தானே இருக்கும் .இதோ உங்களுக்காக ஒரு தளம் .


நன்மைகள் :

 * மிக எளிதான இதில் இணையலாம் . நீங்களும் இணைய இங்கே கிளிக்கவும் .



* சின்ன சின்ன விளையாட்டுகள் , போட்டிகள் , பொது அறிவு தகவல்கள் மூலம் உங்கள் கணக்கில் பணத்தை ஏற்றிக்கொள்ளலாம் .


* சேர்ந்த உடன் 9000 பாயின்ட் கிடைக்கும் .



* நூறு  பாயின்ட் என்பது ஒரு ரூபாய் .

* உங்கள் நண்பர்களை இணைப்பது மூலம் ஒவ்வொரு நபருக்கும் தலா 5 ரூபாய் கிடைக்கும் .


* குறைந்த பட்சம் ஒருவர் இணைந்தால் போதும் நீங்கள் அந்த பணத்தை எடுத்துகொள்ளலாம் .



* எல்லா தொலைதொடர்பு நிறுவனத்திலும் ரே சார்ஜ் செய்துகொள்ளலாம் .

* உடனே பணம் ஏறுகிறது .



* சில இணையதளங்களில் இணைவதன் மூலம் குறைந்தது 5 ரூபாய் முதல் பெறலாம் .



* இலவசமாக sms அனுப்பும் வசதியும் உண்டு .

* ஜோதிடம் பார்க்கும் வசதியும் உண்டு .


இந்த தளத்தில் இணைய |: CLICK HERE TO JOIN

Monday, February 16, 2015

பேஸ்புக்கை நம்பாதீர்கள்







இன்று என்னைபோல , நம்மை போல பலருக்கு பகுதிநேர தொழிலே பேஸ்புக்தான். எது நடந்தாலும் அதை ஸ்டேட்ஸாக போடும் சிலர் , அடுத்தவன் சாக கிடந்தாலும் , அல்லது சாவு வீட்டில் இருந்தாலும் அதை போட்டோ எடுத்துபோடும் சிலர் , கவிதை என்ற பெயரில் கடித்து துப்பும் சிலர் , இங்கும் வந்து மத வியாபாரமும் , சாதி மத சண்டையும் போடும் சிலர் .அடுத்தவன் எது செய்தாலும் அதில் குறை மட்டுமே கண்டுபிடிக்கும் சிலர் , தன கட்சி தனக்கு விஷம் கொடுத்தால் கூட அதை பெருமையாய் பிரசாரம் பண்ணும் கட்சிகாரர்கள் சிலர் என கலந்து கட்டி இயங்குகிறது .

இப்போலாம் பலர் செய்தித்தாள் பார்பதைகூட விடுவிட்டனர் காரணம் முக்கிய செய்திகள் அனைத்தும் சுட சுட பேச்புகில் வந்துவிடுகிறதே.டிவி , ரேடியோ , செய்தித்தாள் அனைத்தின் வேலையையும் முகநூலே செய்துவிடுகிறது. கூடவே டீ கடை , மரத்தடி , குழாயடி கூட்டம் போலவும் செயல்படுகிறது இது .

முகநூலில் வரும் அனைத்தையும் உண்மை என்று நம்பும் அப்பாவியா நீங்கள் ? இந்த பதிவு உங்களுக்காகத்தான். இதில் வரும் செய்திகள் எவ்வளவு உண்மையானவை எவ்வளவு நம்பிக்கையானவை என பார்த்தால் கொஞ்சம் அதிர்சியாகதான் இருக்கும். இதில் 50 % உண்மை எனில் 50% பொய் கலந்துள்ளது.


சிலவருடங்களுக்கு முன் ஈழ தமிழ் பிரச்சனை கொழுந்துவிட்டு எரியும் போது ஒருத்தன் “அஜித் , அர்ஜுன் இருவரும் தனி ஈழத்துக்கு ஆதரவில்லை “ என அறிவிப்பு என்று ஒரு செய்தி போட அந்த இருவரையும் அவர்கள் குடும்பத்தையும் படுகேவலமாக திட்டி தீர்த்தது ஒரு கூட்டம். இது உண்மையா என கூட ஆராயாமல் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்திருந்தனர். ஆனால் ஈழ தமிழர்க்கு ஆதரவான போராட்டத்தில் உடைந்த காலுடன் முழுநாளும் உட்கார்ந்திருத்தது அஜித்தான் .


காரைகாலில் ஆசிட்வீச்சில் வினோதினி என்னும் பெண் பாதிக்கப்பட அவருக்கு நெறைய பேர் உதவி செய்தார்கள். அந்த பெண்ணுக்கு உதவ என திரட்டபட்ட நிதியில் கூட பிரச்சனை என படித்தேன். நேற்று ஒருவர் பதில் அந்த பெண்ணுக்கு உதவேண்டும் என கேட்டு வங்கி எண்ணை கொடுத்துள்ளார். இது உண்மையா அவருக்கு திரட்ட படுகிறதா ,அவருக்கு கொண்டு சேர்க்கபடுகிறதா என்பதை அறிய வழியில்லை .

மத்திய அரசு வெளிநாடு வாழ இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணத்திற்கான சேவை கட்டணத்தில் ஒரு குறிபிட்ட சதவிதம் உயர்த்தியது (12.5% என நினைகிறேன் ). அதாவது 1,00,000 க்கு 200 ரூபாயாக இருந்த கட்டம் 12.5% உயர்ந்து (200 * 12.5= 25) 225 ஆக மாற்றபட்டது . ஆனால் ஒரு கூட்டம் இதை சரியாக தெரியாமல் 1,00,000 க்கு 200 ரூபாயில் இருந்து 12500 ரூபாயாக உயர்த்திவிட்டார்கள் என செய்தி பரப்ப மோடியும் , மோடிக்கு ஓட்டுபோட்ட நம்மையும் பாரபட்சமின்றி திட்ட துவங்கியது ஒரு கூட்டம் .  இதை சரியா விசாரிக்காமல் ஷேர் செய்தது ஒரு கூட்டம் .

முகநூலில் பெண்கள் தங்கள் முழு படங்களை போடாதீர்கள் என சொன்னால் ஆணாதிக்கவாதி , பெண்களில் எதிரி என ஒரு கூட்டம் திட்டி தீர்கிறது . ஆனால் அந்த படங்களை தவறாக பயன்படுத்த ஒரு கூட்டமே இருக்கிறது என தெரிந்தும் அதை ஏற்றுகொள்ள மாறுகிறார்கள். பாதிக்கபட்ட பின்தான் உணருகிறார்கள். பலரது பேஸ்புக் புரோபைல் போட்டோ பலவருடங்களுக்கு முன் எடுக்க பட்டதாகவோ அல்லது எதுல கொஞ்சம் அழகா தெரிகிரர்களோ அந்த போட்டோதான் இருக்கும். போட்டோவை பார்த்து புரொபைலில் உள்ள விவரத்தை வைத்து ஒருத்தரை நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம் . ஆனால் பலர் அப்படிதான் நம்புகிறார்கள். இது கடைசியில் ஸ்க்ரீன் ஷாட் அல்லது போலிஸ் கேசில் முடிகிறது .

எனவே நண்பர்களே முகநூலில் நல்ல நண்பர்களை மட்டும் இணைப்போம் , நாம் பகிரும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொண்டு பின்பு ஷேர் செய்வோம்.

Saturday, February 14, 2015

இவர்கள் சொல்வதை கேளுங்கள்.







ரொம்ப பிஸியாக இருப்பதால் இப்போலாம் அடிகடி பதிவு போட முடியல .(இதுக்கு நீங்க சந்தொஷபடுவிங்கனு தெரியும் ...) அப்போப்ப நானும் பதிவர்தான் (!!!!) என நினைவுபடுத்த சில பதிவுகளை தூசி தட்டி போடலாம்னு இருக்கேன் . முதல் தூசி சாரி பதிவு இது .

உழைப்பு வறுமையை மட்டுமல்ல, தீமையையும் அது விரட்டுகிறது.

-                      வால்டேர்

புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.

-                      எமர்சன்

தான் செல்ல வேண்டிய வழியில் மனிதன் முதலில் தன்னை செலுத்த வேண்டும். அதற்க்கு பின்பே பிறர்க்கு போதனை செய்யவேண்டும்.

-                      புத்தர்

சாதியின் அடிப்படையில் அன்பை வளர்க்க முடியாது.

-                      அம்பேத்கார்.

கண்டனத்தை தாங்கி கொள்ளும் உறுதியான மனம் இல்லையெனில் கடமையை நிறைவேற்ற முடியாது.

-                      அண்ணா

தவறான லட்சியங்கள் உடனடியாக பலன் அளித்தாலும் முடிவில் நிலையான வெற்றியை தருவதில்லை.

-                      நேரு
கல்வியும் , செல்வமும் அடக்கம் இல்லாத இடத்தில் பதிப்பு இழக்கும்.

-                      இராஜாஜி.

வீடு கட்டும் போது ஆகாது என்று ஒதுக்கிய கல் சமயத்தில் கோவில் சிலையாக கூட மாறலாம்

-                      ஏசு

கர்வம் வெற்றியின் புதைசேறு.

-                      ஸென்கா
-                       
உண்மையை பேசுங்கள், அது ப்க்திக்கும், சொர்கத்திர்க்கும் அழைத்து செல்கின்றது.

-                      நபிகள் நாயகம்



நடந்ததையே நினைத்து கவலைப்படுவது நோக்கிய 1100 போனில் போட்டோ எடுக்கமுடியவில்லையே என கவலைபடுவதுக்கு சமம் .
                    
                   #சுவாமிஜி ராஜானந்தா (ஹீ ஹீ நான்தான் )

Monday, January 26, 2015

கதம்பம் 26-1-15



கடந்த ஒரு மாதமாக ஒரு பதிவு கூட எழுத முடியவில்லை . ஏன் எழுதவில்லை என நேரிலும் , போனிலும் , மின் அஞ்சலிலும் வருத்தபட்ட கோடானகோடி நல்உள்ளங்களுக்காக இனி அடிகடி எழுதுவேன் .(எப்படிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு !!!)


யார் அந்த பதிவர் ?


    மார்ச் மாதம் ஒரு பிரபல தொழில்நுட்ப பதிவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. அவர் உங்கள் அனைவருக்கும் தெரிந்த பதிவர்தான் . பிளாக்கர் பலருக்கும் இவர் நல்ல நண்பர். என்னை போல அமைதியான நல்ல மனிதர் (!!!). அவர் யார் என தெரிய கடைசி வரை படிக்கவும் .
===================================================
ரசித்த படம் :

   :எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் மோசமில்லை . விக்ரமின் அர்பணிப்பு மிகவும் அலாதியானது . பாடி பில்டராக வரும்போதும் சரி, வைரசால் கொஞ்சம் கொஞ்சமாக இளைக்கும் போதும் மனிதர் வாழ்த்துள்ளார். ஒரு சாதாரண கதைக்கு வித்தியாசமான , பிமாண்டமான ட்ரிட்மென்ட் ஷங்கரால் மட்டுமே முடியும்.

  எந்த எதிபார்ப்பும் இல்லாமல் பார்த்த டார்லிங் காமெடியில் பட்டையை கிளப்பியது. இப்போலாம் பேய் படங்களை பார்த்து பயம் வருவதை விட சிரிப்பு வருகிறது . மனம் விட்டு சிரித்துவிட்டு வர நல்ல படம்

 .
================================================================
படித்தது .


   பாக்யா புத்தகம் வாங்கியதும் (முன்பு...) முதலில் படிப்பது பாக்யராஜ் பதில்கள்தான் . எல்லா பதிலிலும் ஏதாவது ஒரு அழகான குட்டி கதை வைத்திருப்பார் . அந்த கதைகளை வகுப்பில் சொந்தகதை போல பலதடவை சொல்லியுள்ளேன் . அவரின் கேள்வி பதில் நூல் ஒன்று கண்ணதாசன் பதிப்பகத்தில் வாங்கினேன் . 206 பக்க புத்தகம் 85 ரூபாய்க்கு கிடைத்தது . பல அருமையான கதைகளும் , சில தத்துவங்களும் கிடைத்தது . கிடைத்தால் படித்துபாருங்கள்
.
=======================================================================
என்னாச்சு?

nhm.in இல் முன்பு விமர்சனத்துக்காக புத்தகங்கள் இலவசமாக வழங்கினர். ஆனால் இப்போது அதுபோல அளிப்பதில்லை என நினைக்கிறேன் . ஏன் ? என்னாச்சு ? விவரம் அறிந்தவர்கள் செப்பலாமே .(ஓசி புக் படிப்பது தனி சுகம் #மனசாட்சி , ஊசின்னு சொல்லாதிங்க , விலையில்லா புக்னு சொல்லுங்க # ராசா )
==============================================
ரசித்த நகைசுவை:

அப்பா : டேய் நைட்ல போனை சார்ஜ் போடாத , பேட்டரி சூடாக்கி வெடிச்சுடும் .
மகன் : தெரியும்பா , அதான் சார்ஜ் போடும்போதே பேட்டரியை கழட்டி வச்சுடுவேன்

===========================================================
யார் அடிச்சா
பொறி கலங்கி
பூமி அதிருதோ
.
.

.
.
அவதான் பொண்டாட்டி

========================================
ஆச்சர்ய மனிதன் :


சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் இல் உள்ள ஒரு கடைக்கு சென்றேன். அங்கு வேலைபார்க்கும் ஒருவர் மிகவும் கவர்ந்துவிட்டார். பலரும் பல வித பொருள்கள் கேட்க அனைத்துக்கும் கொஞ்சமும் அசராமல் விலையை சொல்லி , பொருளை எடுத்துகொடுத்து அவர்களை சந்தோஷமாக செல்ல உதவினார் . 4 மணிக்கு பாஸ் இரண்டே நிமிடம் சாப்பிட்டுவறேன்னு போனார் சரியா இரண்டு நிமிடத்தில் திரும்பினார் . மீண்டும் அதே போல் படப்படவென வேலை . விடுமுறை நாளில் கூட இப்படி வேலைபார்க்கும் ஒருவரை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது . நாமெல்லாம் இப்படி வேலைபார்த்தால் இரண்டே நாளில் ஊரைவிட்டு ஓடிடுவோம் .

டிஸ்கி : அந்த பதிவரின் வலைதளத்தின் பெயர் அந்த பத்தியிலேயே இருக்கு கண்டுபிடியுங்கள் .