> என் ராஜபாட்டை

.....

.

Friday, October 5, 2012

கதம்பம் 05/10/2012






யாருக்காக போராட்டம் ?

சமிபத்தில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பல கட்சிகள் போராட்டம் நடத்தின . ஒரே காரணத்துக்காக போராட கூட இந்த கட்சிகள் ஒன்று இனையாதது வருத்தமாக உள்ளது . ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு நாள் என சாலை மறியல் செய்த்ததில் பெட்ரோல் விலை உயர்வை  கூட பொறுத்து கொள்ளலாம் என தோன்ற ஆரம்பித்து விட்டது . போராட்டம் என்ற பெயரில் சாலையை உடைப்பது பேருந்துகளை அடிப்பது , அதில் செல்லும் பெண்களை கிண்டல் செய்வது என வந்த வேளையை விட பிற வேளைகளில் கவனம் செலுத்துபவர்கள் தான் அதிகம் .

மக்களுக்காக என சொல்லி மக்களை கஷ்டபடுத்தாதிர்கள்


சந்தோஷம் :

கடந்த வாரம் எங்கள் பள்ளியில் மிக பெரிய புத்தக கண்காட்சி நடைப்பெற்றது . நிறைய பதிப்பகங்கள் வந்து இருந்தன . (நிறைய கல்லுரி பெண்கள் வந்தார்கள் ஆனால் அவர்களை நான் பார்க்காவில்லை ). தினமும் ஒரு களை நிகழ்ச்சி என கொண்டாடினர் . கடைசி நாள் அன்று தான் புத்தகங்கள் வாங்கினேன் .

வாங்கிய புத்தகங்கள் :

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்   - மதன்

கேள்வி பதில்கள்               - சுகி சிவம்

நேர் நேர் தேமா                - கோபிநாத்

டாலர் தேசம்                  - பா. ராகவன்

அனிதாவின் காதல்கள்          - சுஜாதா

திசை கண்டேன் வான் கண்டேன்       - சுஜாதா

நேதாஜியின் வீர வரலாறு             - சிவலை இளமதி


தேடி கிடைக்காதது :

துளசி தளம்   - என்டமுறி வீரேந்திரநாத்

என் இனிய இயந்திரா  - சுஜாதா


Facebook இல் ரசித்தது :

மங்குனி அமைசர் போட்ட ஸ்டேடஸ் :

அனைத்து காற்றாலை மின்சார தயாரிப்பு விசிறிகளுக்கு ஜென்றேடேர் மூலம் மின்சாரம் அளித்து ஓடவிட்டால் நிறைய மின்சாரம் தயாரிக்க முடியும் அல்லவா ?


# பேசாம உங்களை மின்துறை அமைச்சராக ஆக்கிவிடலாம் .

ரசித்த படம் :

சாட்டை :

எங்கள் பள்ளி மாணவர்கள் ( +1 , +2) 450 பேருடன் மயிலாடுதுறை விஜயா தியட்டரில் படம் பார்த்தோம் . மாணவர்களுக்கு மட்டுமல்ல நிறைய ஆசிரியர்களும் இந்த படத்தில் பல விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும் . கிளைமாக்ஸ் நாடக பாணியில் இருந்தாலும் ஒரு அருமையான முயற்சி . இயக்குனர் அன்பழன் , தயாரிப்பாளர் பிரபு சாலமன் , நடிகர் சமுத்திர கனி , தம்பி ராமையாவுக்கு கண்டிப்பாக பாராட்டை தெரிவிக்க வேண்டும் . இது கொக்கை படம் என விமர்சனம் போட்டவர்களை கருட புரானம்படி லத்திகா படம் பார்க்க வைக்கலாம் .


ரசித்த கவிதை :

மனைவியின்
மறைவுக்காக
கணவன்
கட்டிய
வெள்ளை சேலை
தாஜ்மகால் .


சந்தேகம் :

ஆ.தி.மு.க போடும் வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ளுவோம் ஓடி ஒழிய மாட்டோம்  # கருணாநிதி

பொன்முடி தலைமறைவு

அழகிரி மகன் தலை மறைவு


# அய்யா இதுக்கு பெயர் ஏன்னா ?


 இதையும் படிக்கலாமே :



தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி?





இலவசமாக உங்கள் mobile க்கு ரீ-சார்ஸ் செய்ய வேண்டுமா ?




Wednesday, October 3, 2012

ரொமான்ஸ் ரகசியங்கள் - ரசித்து படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 2






மனித வாழ்க்கையில் உணவு , காற்று , நீர் எப்படி முக்கியமோ அப்படி முக்கியமான ஒன்று ரொமான்ஸ் .  வெறும் காமம் என்ற அர்த்தத்தில் பார்த்தால் இது கெட்ட வார்த்தையாக தான் தோன்றும் . அனால் அன்பு , பாசம் , நேசம் , உறவு , சந்தோசம் என பல அர்த்தம் கொண்டது இது .


கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் இன்றி வாழவும் , பிரச்னை வந்தால் எப்படி தீர்ப்பது என்பதை பற்றியும் மிக அழகாக , நுணுக்கமாக சொல்லியுள்ளார் இந்த புத்தகத்தில் . எல்லா வயதினரும் படிக்கலாம் .

இதில் இருந்து சில வரிகள் :


வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு தேவை காதலில் விழுவதுதான் , ஒவ்வொருமுறையும் அதே நபருடன்



உறங்கும் போது மட்டும் அல்ல , இமைக்கும் போதெல்லாம் வந்து போகும் புயல் வேக கனவு நீ


இந்த உலகத்தில் நீ யாரோ ஒருவன் என நினைக்காதே , யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்கலாம்


நீயின்றி நான் இல்லை என்பதல்ல காதல் ,
எது இல்லை என்றாலும் நான் இருக்கிறேன்
என்பதுதான் காதல்


திருமணங்கள்  தோல்வியில் முடிய காரணம் காதல் குறைபாடு அல்ல , நட்பு குறைபாடே

பல திருமணங்கள் முறிந்து போக காரணம் பிரச்சனைகள் அல்ல , அந்த பிரச்னையை எதிர்கொள்ள தெரியாதது தான் காரணம்


 







டிஸ்கி : நூலை தரவிரக்குவதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் rrajja.mlr@gmail.com மெயில் பண்ணுங்கள் , இந்த புத்தகம் இ-புக் ஆக உங்களுக்கு அனுப்பப்படும் .

Monday, October 1, 2012

அகரத்தில் ராமாயணம் - தெரியுமா உங்களுக்கு ?


ராமாயண கதை முழுதும் ''  என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
அனந்தனே அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான்.
அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ?
http://devotionalonly.com/wp-content/uploads/2010/04/anjaneya.jpg
அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்!
அயோத்தி அடலேறு,அம்மிதிலை அரசவையில் அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை
அடைந்தான் .
http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/284319_10150383514614148_508402_n.jpg
அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ !
அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள்.
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-snc6/268748_10150384442754148_7080197_n.jpg
அங்கேயும் அபாயம்!அரக்கர்களின் அரசன் ,  அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்
http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/184059_10150395679214148_3475116_n.jpg
அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு அளவேயில்லை. அயோத்தி அண்ணல் , அன்னை அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும்  அளவில்லை.
அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.
http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/228902_10150399681504148_5731314_n.jpg
அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை அரசனாக அரியணையில் அமர்த்தினர்.
 அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையைஅடைந்தான்.
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash4/283911_10150401626304148_1749733_n.jpg
அசோகமரத்தின் அடியில் ,அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை அடி பணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான்
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-snc6/284247_10150401626269148_8227419_n.jpg
அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன.அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.
அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின் அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான அதிசாகசம்.
http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/205921_10150402882534148_4497382_n.jpg
அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி ,அதிசயமான அணையை அமைத்து,அக்கரையை அடைந்தான்.
 http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/252019_10150401626534148_3877536_n.jpg
 அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான்.
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash4/301268_10150405827299148_7382688_n.jpg
அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash4/294157_10150407768814148_4366885_n.jpg
அன்னையுடன் அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான்
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash4/301077_10150407794024148_7014848_n.jpg
அண்ணல் . அனந்த ராமனின் அவதார அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே.
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-snc6/198740_10150402841664148_310657_n.jpg

  டிஸ்கி : நமக்கு ராமாயணம் எல்லாம் தூரம்  .. நண்பன் அனுப்பிய மெயில் இது 


இதையும்  படிக்கலாமே :


இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

 

Friday, September 28, 2012

தயவுசெய்து இதை படிக்காதீங்க ..






உலகிலேயே மிக எளிமையான செயல் அட்வைஸ் செய்றது , மிகவும் கடினமானது அதை கேட்பது மற்றும் பின்பற்றுவது. கீழே உள்ள கதைகள் சிறியவையாக இருந்தாலும் அதில் மிகபெரியகருத்து அடங்கயுள்ளது . அட்வைசை விரும்பாதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் .(ஆனா ஓட்டு , கமென்ட் போட்டுடனும் இல்ல , நக்ஸ் சார் கிட்ட சொல்லி போன் பன்ன சொல்லிடுவேன் )


சின்ன விஷயங்களுக்குக்கூடப் பெரிதாய் அலட்டிக் கொள்ளும் பிரச்சினையிலிருந்து மீள மனவியல் நிபுணரை சந்திக்கச் சென்றார் ஒரு மனிதர். சிறிது நேரம் கண்களை மூடச் செய்துவிட்டு பெரிய கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் இருந
்த பழத்தைக் காண்பித்து இது என்ன பழம்என்றார்.
சாத்துக்குடிஎன்று பதில் வந்தது. கண்ணாடிச் சட்டத்தை அகற்றிவிட்டு இப்போது சொல்லுங்கள்என்றதும் எலுமிச்சைஎனறார் . இடையில் வைக்கப்பட்டிருக்கும் லென்ஸ்தான் உங்கள் மனம். எல்லாவற்றையும் பெரிதாக்கிக் காட்டுகிறது. பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்என்று அறிவுரை சொன்னார் மருத்துவர்.

#########################################

ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார் இளைஞர்.புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய் என்றெல்லாம்தான் சொல்லப்போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு. நேர நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார்…… “உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்என்று.

################################################

வனங்களில் விறகு சேகரித்து வயிற்றைக் கழுவி வந்த அந்த மனிதனின் எதிரே ஒரு முனிவர் வந்தார். இன்னும் முன்னால் போஎன்றார். போன இடத்தில் நிறைய சந்தனக் கட்டைகள் கிடைத்தன. அவற்றை விற்றதில் காசு நிறைய கிடைத்தது.
மீண்டும் அந்த முனிவர் எதிரே வந்தார். இன்னும் முன்னால் போஎன்றார். இப்போது நிறைய சுரங்கங்கள் தட்டுப்பட்டன. அவற்றை அள்ளிச் சென்று பெரும் செல்வந்தனாக மாறினான். நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி! உங்களை முன்னேற்றப் போகிற முத்திரை வாசகம்…..  இன்னும் முன்னால் போஎன்பதுதான்!!

############################################
அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள் இணைந்தே திரியும். பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும். நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது. கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை. இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார். ஆனால் மிக வித்தியாசமாக ஒன்றைச் செய்தார். கண்தெரிகிற குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டியிருந்தார். மணிச்சத்தம் கேட்டு ஊனமுற்ற குதிரை, அடுத்ததைத் தொடரும். அந்த உரிமையாளர் செய்ததைத்தான் கடவுளும் செய்கிறார். ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை மறக்காமல் செய்துள்ளார்.

டிஸ்கி : இது மெயிலில் வந்த அட்வைஸ் .

இதையும்  படிக்கலாமே :


ரசித்து படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 1 

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?