> என் ராஜபாட்டை : கதம்பம் 05/10/2012

.....

.

Friday, October 5, 2012

கதம்பம் 05/10/2012






யாருக்காக போராட்டம் ?

சமிபத்தில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பல கட்சிகள் போராட்டம் நடத்தின . ஒரே காரணத்துக்காக போராட கூட இந்த கட்சிகள் ஒன்று இனையாதது வருத்தமாக உள்ளது . ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு நாள் என சாலை மறியல் செய்த்ததில் பெட்ரோல் விலை உயர்வை  கூட பொறுத்து கொள்ளலாம் என தோன்ற ஆரம்பித்து விட்டது . போராட்டம் என்ற பெயரில் சாலையை உடைப்பது பேருந்துகளை அடிப்பது , அதில் செல்லும் பெண்களை கிண்டல் செய்வது என வந்த வேளையை விட பிற வேளைகளில் கவனம் செலுத்துபவர்கள் தான் அதிகம் .

மக்களுக்காக என சொல்லி மக்களை கஷ்டபடுத்தாதிர்கள்


சந்தோஷம் :

கடந்த வாரம் எங்கள் பள்ளியில் மிக பெரிய புத்தக கண்காட்சி நடைப்பெற்றது . நிறைய பதிப்பகங்கள் வந்து இருந்தன . (நிறைய கல்லுரி பெண்கள் வந்தார்கள் ஆனால் அவர்களை நான் பார்க்காவில்லை ). தினமும் ஒரு களை நிகழ்ச்சி என கொண்டாடினர் . கடைசி நாள் அன்று தான் புத்தகங்கள் வாங்கினேன் .

வாங்கிய புத்தகங்கள் :

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்   - மதன்

கேள்வி பதில்கள்               - சுகி சிவம்

நேர் நேர் தேமா                - கோபிநாத்

டாலர் தேசம்                  - பா. ராகவன்

அனிதாவின் காதல்கள்          - சுஜாதா

திசை கண்டேன் வான் கண்டேன்       - சுஜாதா

நேதாஜியின் வீர வரலாறு             - சிவலை இளமதி


தேடி கிடைக்காதது :

துளசி தளம்   - என்டமுறி வீரேந்திரநாத்

என் இனிய இயந்திரா  - சுஜாதா


Facebook இல் ரசித்தது :

மங்குனி அமைசர் போட்ட ஸ்டேடஸ் :

அனைத்து காற்றாலை மின்சார தயாரிப்பு விசிறிகளுக்கு ஜென்றேடேர் மூலம் மின்சாரம் அளித்து ஓடவிட்டால் நிறைய மின்சாரம் தயாரிக்க முடியும் அல்லவா ?


# பேசாம உங்களை மின்துறை அமைச்சராக ஆக்கிவிடலாம் .

ரசித்த படம் :

சாட்டை :

எங்கள் பள்ளி மாணவர்கள் ( +1 , +2) 450 பேருடன் மயிலாடுதுறை விஜயா தியட்டரில் படம் பார்த்தோம் . மாணவர்களுக்கு மட்டுமல்ல நிறைய ஆசிரியர்களும் இந்த படத்தில் பல விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும் . கிளைமாக்ஸ் நாடக பாணியில் இருந்தாலும் ஒரு அருமையான முயற்சி . இயக்குனர் அன்பழன் , தயாரிப்பாளர் பிரபு சாலமன் , நடிகர் சமுத்திர கனி , தம்பி ராமையாவுக்கு கண்டிப்பாக பாராட்டை தெரிவிக்க வேண்டும் . இது கொக்கை படம் என விமர்சனம் போட்டவர்களை கருட புரானம்படி லத்திகா படம் பார்க்க வைக்கலாம் .


ரசித்த கவிதை :

மனைவியின்
மறைவுக்காக
கணவன்
கட்டிய
வெள்ளை சேலை
தாஜ்மகால் .


சந்தேகம் :

ஆ.தி.மு.க போடும் வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ளுவோம் ஓடி ஒழிய மாட்டோம்  # கருணாநிதி

பொன்முடி தலைமறைவு

அழகிரி மகன் தலை மறைவு


# அய்யா இதுக்கு பெயர் ஏன்னா ?


 இதையும் படிக்கலாமே :



தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி?





இலவசமாக உங்கள் mobile க்கு ரீ-சார்ஸ் செய்ய வேண்டுமா ?




3 comments:

  1. கவிதை சூப்பர்ப்...

    நல்ல கதம்பங்கள்...

    முக்கியமாக புத்தகங்கள்...

    ReplyDelete
  2. மச்சி சூப்பர் பா அசத்தலா இருக்கு

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...