நான் பிறக்கும் பொது பிரசவம் பார்த்தது ஒரு பெண் டாக்டராம் . பிறந்த உடனே என்னை கையில் எடுத்து நீ அழகு செல்லம்டா என கொஞ்சி உள்ளார் . அது மட்டுமில்லாமல் அங்கு பணிபுரியும் நர்ஸ்களும் இவ்வளவு அழகா ஒரு குழந்தையை நாங்கள் பார்த்ததில்லை என ஆச்சர்யபட்டார்கலாம் . வளர வளர அழகும் சேர்ந்து வளந்தது . எண்கள் ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் கட்டுனா என்னைத்தான் கட்டுவேன் அல்லது சாமியார போய்டுறேன் என்று சொல்வார்கள் . பள்ளியில் கூட நான் இருக்கும் வகுப்பில் சேரத்தான் மாணவிகள் போட்டி போடுவார்கள் .
## டேய் நிறுத்து நிறுத்து .. எதுக்கு இப்படி ஓவரா பில்டப் குடுக்குற ? பொய் சொல்றதுக்கு ஒரு அளவு வேண்டாமா ?
## வீடு சுரேஷ் ###
அன்பு வாசகர்களே !! சுரேஷ் பொறாமையில் புலம்புகிறார் . நான் சொல்வதை நீங்கள் நம்புங்கள் .எனக்கு திருமனமாய் விட்டது என்று தெரிந்து இன்றும் எத்தனை காதல் கடிதம் வருகிறது தெரியுமா ? அதில் இரண்டை உங்களுக்கு சாட்சியாக சமர்பிக்கிறேன் .
கடிதம் 1 :
"ஹலோ செல்லம் என் பெயர் binta உள்ளது உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல். binta முத்தம்."
என்ன ஒன்னும் புரியலையா ? இதோட ஒரிஜினல் இங்கிலீஷ் லெட்டர் ..
கடிதம் 2 :
" வணக்கம் அன்பே என் பெயரை நான் இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் மற்றும் நான் என் படத்தை அனுப்ப சொல்கிறேன் என்று (stellampka@yahoo.com~~V) நீங்கள் என் மின்னஞ்சல் முகவரி மூலம் என்னை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர் மிஸ் ஸ்டெல்லா உள்ளது என்னை பற்றி மேலும். .
இதுவும் புரியலையா ? இதோட ஒரிஜினல் இங்கிலீஷ் லெட்டர் ..
Hello Dear my name is miss Stella i saw your profile today and became interested to know more about you i will like you to contact me through my Email address at(stellampka@yahoo.com)so that i will send you my picture and tell you more about me. "
இப்பவாது நம்புறிங்களா ? என்னை காதலிக்க , அடைய (!!!) வெளிநாட்டு பெண்கள் எல்லாம் போட்டி போடுறாங்கன்னு ...
"கடவுளே என்னை ஏன்டா அழகா படைச்ச ?"
டிஸ்கி 1 : மேலே உள்ள கடிதம் தமிழ் 10 முலமாக யாரோ அனுப்பியது . இங்கிலீஷ் அப்படியே Google translate மூலம் மொழி மாற்றம் செய்துள்ளனர் .
டிஸ்கி 2: இது போல வந்தா நம்பி யாரும் எமாறாதிங்க ..

