> என் ராஜபாட்டை : அஜித் Vs ஆர்யா மற்றும் சன் டிவி

.....

.

Saturday, January 19, 2013

அஜித் Vs ஆர்யா மற்றும் சன் டிவிஒவ்வொரு 8 மாதத்திற்குள்ளும் ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்திற்கு செல்லவேண்டும் என்று அஜீத் முடிவு செய்துள்ளார். இந்த முடிவை அவர் மங்காத்தாவில் இருந்தே பின்பற்றி வருகிறார். மங்காத்தாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, பில்லா 2விலும் நடித்தார். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கும் படமும் முடியும் தருவாயில் உள்ளது. இதன்பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். விருதுகள் வாங்கி குவிப்பதில் ஆசை இல்லை எனவும், ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்தாலே போதும் எனவும் அஜீத் கூறியுள்ளார்.

============================================================


அஜித்துக்கும், ஆர்யாவுக்கும் உக்கிரமான சண்டை
எல்லோருமே கேள்விப்பட்டிருக்கலாம். சமீபத்துல அஜித்தும், ஆர்யாவும் சண்டை போடற சீன் ஒன்றை விஷ்ணுவர்தன் எடுத்ததை. அப்போதான் நடந்தது இந்த சம்பவம்.

சம்பவம், சம்பவம்னா ஏதோ சீரியஸ் சம்பவம்னு நினைச்சு பதற்றப்பட வேண்டாம். அஜித்துக்கும், ஆர்யாவுக்கும் உக்கிரமான சண்டையை ஸ்டன்ட் மாஸ்டர் கிரியேட் பண்ணியிருக்கார். அதுல அஜித்தை, ஆர்யா அடிக்கிற மாதிரியும் சீன் இருக்காம்.

ஆனா அஜித் ரசிகர்கள் என்ன சொல்வாங்களோன்னு ஆர்யா தயங்க, “அதெல்லாம் என் ரசிகர்களை நான் சமாதானப் படுத்திக்கிறேன். நீ தயங்காம நடி. அப்பதான் சீன் நல்லா வரும்..!”ன்னு அஜித் தைரியம் கொடுத்திருக்கார்.

அதேபோல அடுத்து ஆர்யாவை அஜித் வெளுக்கிற சீன். அப்போ ஆர்யாகிட்ட அஜித், “உங்க ரசிகர்கள் இதை எப்படி எடுத்துப்பாங்க..?”ன்னு கேட்க, “அது ஒரு நாலு பேர்தான் சார்… நான் சொல்லிக்கிறேன்..!”ன்னதுல அஜித்தே சிரிச்சுட்டாராம்.

‘தல’ யையே சிரிக்க வச்ச தயாளன் ஆர்யா..!

தல யை பெருமைபடுத்திய சன்   டிவி


நன்றி : Thala always amarkalam FACEBOOK PAGE

2 comments:

  1. தல பற்றிய தகவல்கள் கலக்கல்கள்! நன்றி! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

    ReplyDelete
  2. தல பற்றிய செய்திகள் அருமை. ஆர்யாவின் கமெண்ட்டும் நன்று.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...