நண்பர்களே பதிவிற்குள் போகும் முன் உங்கள் கருத்தை (VOTE)SIDE இல் உள்ள ஓட்டு படையில் செலுத்தவும் .
விஸ்வருபம் படத்தை பற்றிதான்கடந்த இரண்டு நாளாக இணையத்திலும் , வெளியிலும் அதிகம் விவாதிக்கபடுகிறது . முஸ்லிம் நண்பர்கள் இந்த படம் தங்களை , தங்கள் மதத்தை கேவலபடுத்துகிறது எனவும் அதனால் இதை தடை செய்தது சரி எனவும் வாதிடுகிறனர் .
மற்றவர்கள் (பல முஸ்லிம் நண்பர்களையும் சேர்த்து ) இந்த படத்துக்கு தடை விதிப்பது சரியல்ல . இது கருத்து சுததிரகுத்தை பறிப்பது எனவும் அதனால் இதை தடை செய்தது தவறு எனவும் கூறுகின்றனர் .
பொதுவான சிலர்( படத்தை பார்த்து விட்டு) இதில் முஸ்லிம் நண்பர்கள் ஆட்சேபம் செய்யும் அளவுக்கு ஒன்றும் இல்லை என சொல்கின்றனர் . படம் அருமை அல்லது மொக்கை என சொல்லும் நண்பர்கள் இதில் அடக்கம் .
படம் எடுக்க எத்தனையோ கதை இருக்க இதை என் எடுக்க வேண்டும் என சிலரும் , தாலிபானை தடை செய்ய சொல்லி போராடாமல் படத்தை தடை செய்ய சொல்வது நியாயமா என கேட்கின்றனர் .
எனது ( நமது ) வருத்தம் எல்லாம் நண்பர்களாக , அண்ணன் தம்பியாக பழகிய நாம் ஒரு படத்தால் எதிர் எதிர் துருவமாக மாறுவது வருத்தமாக உள்ளது . படம் சாதரணமாக வந்திருந்தாள் இவ்வளவு விளம்பரம் கிடைத்திருக்காது . பார்ப்போம் நாளை கோர்ட் என்ன சொல்கிறது என்று .
Tweet |
ஒட்டு போட்டச்சிங்க
ReplyDelete////எனது ( நமது ) வருத்தம் எல்லாம் நண்பர்களாக , அண்ணன் தம்பியாக பழகிய நாம் ஒரு படத்தால் எதிர் எதிர் துருவமாக மாறுவது வருத்தமாக உள்ளது ./////
ReplyDeleteஒரு சினிமாவால் நம் நட்பு மாறாது நண்பா ! படம் பற்றி விட்டு தள்ளுங்கள் நம் நட்பை உயிர் போல் நினைப்போம் ...அதுவே இப்ப தேவை இல்லை எப்பவும் தேவை ...
நட்புடன் நான் இல்லை நாம்
நட்பை பத்தி நீங்க கவலைப்படாதீங்க...சீனு சீக்கிரம் படம் எடுக்கபோகிறான்...நாம எல்லாம் ஒண்ணா நடிச்சிட்டா அப்புறம் யார் எதிர்ப்பார்? என்னது ஹீரோயின் வேசமா? அது உமக்குத்தான் .....ஓட்டு போடலாமே.....
ReplyDeleteதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் விஸ்வரூபம் அடுத்தது என்ன? என்ற தலைப்பில் விஷரூபத்திற்கு
ReplyDeleteபாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன்,
விஷகருத்துகள் முறைதனா?
மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் உரை.
இங்கே சொடுக்கவும் >>>>> விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் விஷகருத்துகள் முறைதனா? விஷ்வரூபம் கருத்து சுதந்திரமா?
.
ithu patri...!
ReplyDeleteVISHA-ROOPAM...1,2,3,4,
thodar ullathu padiththu paarungal!
seeni-kavithaigal.blogspot.com
கருத்து சுதந்திரம் பற்றி கூறும் திரைப்பட துறைனருக்கு ஒரு கேள்வி :
ReplyDelete2009 ஆண்டு அக்டோபர் 4 தேதி தினமலரில் சினிமா நடிகைகள் செய்யும் விபச்சாரம் சம்பந்தமாக ஒரு கட்டுரை வெளியிட்டதே ! அதை பார்த்து கருத்து சுதந்திரம் என்று இருந்தீர்களா..? மறுநாளே மேடை போட்டு கட்டுரை வெளியிட்டவர் குடும்பத்தையே தகாத வார்த்தைகளால் கிழி கிழி என்று கிழித்தீர்களே.! இதை போலவா நாங்கள் செய்கிறோம்..கட்டுரையாளரை கைது (?)செய்தபின்தானே அடங்கிநீர்கள். உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா மில்க் சேக்கா .. !
சகோ. அந்த " இவர் தீயென்று தெரிகிறதா." படத்திருக்கு கமலுக்கு பதிலாக இஸ்லாமிய அமைப்புகளின் படங்களை போட்டால் நியாயமாக இருக்கும் !!!
ReplyDeleteGood comedy
Deleteஓட்டு போட்டாச்சு.. 3 மணிநேர பொழுது போக்கும் ஒரு சினிமாவை வைத்து எவ்வளவு அரசியல்??!!
ReplyDeleteஎனக்குத் தெரிந்து
ReplyDeleteஎல்லாமே படத்தின்
விளம்பரத்திற்குத் தான்.!
(குரங்கு கையில் பூமாலை கிடைத்தால்....
பூக்களை எப்படி கொட்டியப்பிறகு
மாலையாக்கிக் கொள்ளுமாம்....இது பழமொழிங்க)
படத்திற்கு பின்னால் இருப்பது தீவிரவாதமோ, மதமோ அல்ல, அரசியல்.
ReplyDeleteஇன்னும் ஒரு முடிவு வரலையே ராஜா!
ReplyDeleteநம் தமிழ் நாட்டில் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்து இருப்பது பற்றி எல்லோருக்கும் தெரியும், திரை படம் எப்போது திரைக்கு வரும் என்பது தான் நம்மில் பலருக்கும் இப்போது இருக்கும் கவலை, ஆவல், ஏக்கம் ஆனால் இந்த திரை படம் நமக்கு ஒரு பாடத்தை சொல்லி இருப்பதாக கற்று தந்து இருபதாக நான் நினைக்கிறேன்.
ReplyDeleteநாம் ஒன்றை இங்கு கவனிக்க வேண்டும். முஸ்லிம் நண்பர்கள் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த படத்திற்கு தடை விதித்ததாக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்கள், அதற்கு அவர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சுழல் இருந்ததாக சொல்லி இருந்தார் . படம் 526 தியேட்டர்களில் திரை இட இருந்ததாகவும் , அதற்கு சமமான போலீஸ் காவலாளி நம்மிடம் இல்லை என்று கூறி உள்ளார் மற்றும் பல காரணம் சொல்லி இருந்தார். நான் அவர் கூறியதை தவறாக சொல்லவில்லை.
டாஸ்மாக் எனும் நிறுவனம் 1983 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அமரர் M .G ராமசந்திரன் அவர்களால் தொடங்கபட்டது. பல சில மாற்றம் கண்டு இன்று பெரிய ஆலமரம் போல வளர்ந்து நிற்கிறது. இதன் கடந்த ஆண்டு 2011-2012 இல் வருட வருமானம் 18,081.16 கோடி ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு வருமானமான 14,965.42 கோடியை தாண்டி இருக்கிறது .
ஒரு முன்று மணி நேரம் ஓடும் திரைப்படத்திற்கு , அந்த படம் திரை இடப்பட்டால் ஒரு சமுக மக்களிடம் ஒரு அசாதாரண சுழல் வரும் என்று கருதி அதை அரசால் தடை செய்யப் பட்டு இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் பயன் படுத்தும் இந்த மதுவின் தீங்கு பற்றி அனைவருக்கும் தெரிந்து இருந்தும் அதற்கு எதிராக நாம் , நம் மக்கள் , நம் தலைவர்கள் இன்னும் ஏனைய மரியாதைக்கு உரிய மேன்மை பொருந்திய மாமனிதர்கள் ஏன் முன் வர கூடாது? மது இல்லா தமிழ் நாட்டை காண ஆவலில் இருக்கும் ஒரு தமிழனின் கனவு நினைவாகும் நாள் என்று ?
மக்கள் சக்தி மிகப்பெரிய சக்தி என்னும் வாக்கியத்தை விஸ்வரூபம் திரை படம் நம் மக்களுக்கு உணர்த்தி இருக்க வேண்டும்!
இது நம் அரசு, நமக்கான அரசு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் அரசு. நாம் கேட்பதை நமக்கு தர விரும்பும் அரசு, ஆனால் நம்மில் சிலர் மட்டுமே மது இல்லா தமிழ் நாடு கேட்கிறோம் , பலர் மதுவை கேட்கிறார்கள். மாற்றம் முதலில் நம்மில் இருந்து வர வேண்டும் .
விஸ்வரூபம் திரைப்பட போரட்டங்கள் நம் மனதில் இந்த மாற்றத்தை உண்டாக்கட்டும்.
தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
ReplyDeleteஅனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com